Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்பமேளா: 5.40 லட்சம், காண்டம் சப்ளை… சாதுக்கள் கொதிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5.40 lakhs condom supply annoys Kumbh Mela planners

கும்பமேளா: 5.40 லட்சம், காண்டம் சப்ளை… சாதுக்கள் கொதிப்பு.

நாசிக்: கும்பமேளா திருவிழாவை ஒட்டி, நாசிக் நகரத்திற்கு 5.40 லட்சம் காண்டம் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு கும்பமேளா அமைப்பாளர்களும், சாமியார்களும் கண்டித்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற கும்பமேளா மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வரும் 14 ம் தேதி தொடங்குகிறது. இரண்டரை மாதகாலம் நடைபெறும் இந்த விழாவில் பல லட்சம் சாதுக்களும், பக்தர்கள் கோதாவரி நதியில் புனித நீராடுவர்.

இதனிடையே மகாராஷ்டிர எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு வழக்கத்துக்கு மாறாக 5.40 லட்சம் காண்டம்களை வரவழைத்துள்ளது. கும்பமேளா நடக்கும் நிலையில், அதிகளவு அளவில் காண்டம்கள் வரவழைக்கப்படுவது விழா அமைப்பாளர்களை அதிர வைத்துள்ளது.

இந்துக்கள் விழா நடக்கும் நிலையில், இப்படி அதிக அளவில் காண்டம்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது தவறான முன்மாதிரியை ஏற்படுத்தி விடும்' என்று சாதுக்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கமாக இந்த மாதங்களில் சப்ளை செய்யப்படும் 2.50 லட்சம் காண்டம்கள் தான் நாசிக் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 5.40 லட்சம் காண்டம்கள் என்று கூறுவது தவறான தகவல். கும்பமேளாவை ஒட்டி நாங்கள் இந்த ஏற்பாட்டை செய்யவில்லை' என்று விளக்கம் அளித்துள்ளது.

எனினும் கும்பமேளா விழா மூலம் சுகாதார பாதிப்பு யாருக்கும் வரக்கூடாது என்ற காரணத்தால் தான் இப்படி அதிக அளவில் காண்டம்கள் வரழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி தற்ஸ் தமிழ்.

கோயிலுக்குப் போகின்றவர்கள்.... வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை வாங்காமல், காண்டத்தை... வாங்கவா போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காகத்தின்ர கூட்டுக்குள்ள.. முட்டையிட்டுப் போட்டுக்.. ஹாய் ..என்று திரியிற குயிலுகளுக்குக் கோபம் வரத்தான் செய்யும்!

 

இருந்தாலும்....சாந்தி....சாந்தி....சாந்தி !

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரகாண்ட பாராயண பலன்கள்
1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.

11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு "ஜெய பஞ்சகம்'' என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. பெண்கள் வேதத்தை சொல்லக் கூடாது என்பது விதி. எனவே சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம்

24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில்

33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10.jpgHow to Use Male Condoms

பாஞ்ச் அண்ணை,  சுந்தர காண்டம். வேறு.
அவர்கள்.... விநியோகிக்க, இருக்கும் காண்டம்... வேறு.
உங்களுக்கு...இதை, எப்பிடி... விளங்கப் படுத்துறதெண்டு, எனக்குத் தெரியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம், நான் பாஞ்சிடம்  கிஷ்கிந்தா காண்டத்தின் பலன் என்ன வென்று கேட்க இருந்தேன்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம், நான் பாஞ்சிடம்  கிஷ்கிந்தா காண்டத்தின் பலன் என்ன வென்று கேட்க இருந்தேன்...!

Bildergebnis für கிஷ்கிந்தா காண்டம்-Rama+Sita+wedding.jpg

சுவி, 
பாஞ்ச்சிற்கு..... உலகத்தில்  உள்ள எல்லாக் காண்டமும், தெரியும்.
ஆனால்... கும்ப மேளாவுக்குள், வந்த காண்டத்தைப் பார்த்து.... "கன்ஃ புயூஸ்" ஆகிட்டாரு. 

 

10.jpgHow to Use Male Condoms

பாஞ்ச் அண்ணை,  சுந்தர காண்டம். வேறு.
அவர்கள்.... விநியோகிக்க, இருக்கும் காண்டம்... வேறு.
உங்களுக்கு...இதை, எப்பிடி... விளங்கப் படுத்துறதெண்டு, எனக்குத் தெரியவில்லை.

 

இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.எந்த ஒரு சமயமானாலும் அதை கெளரவிக்க வேண்டும்.சுந்தர காண்டத்துக்கு அருகில் ஆணுறை வைத்தது தவறு.இப்படியொரு புத்தகத்தை தொகுக்க இனிமேல் யாரும் பிறந்து வர மாட்டான்.எப்படியும் வாழலாம் என்று வாழாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாகவிருக்கும்.சிறி அண்ணா புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.