Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும் :இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாறமுடியும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் சரிசமமான பிரதிநிதிகளைப் பெறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

sammanthan_1.jpg

அவ்வாறு ஏற்பட்டால் நாம் பாராளுமன்றத்தில் ஆட்சியைதீர்மானிக்கும் சக்தியாக  மாறுவோம் என்றும் கூறினார்.

திருகோணமலையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

 

 

http://www.virakesari.lk/articles/2015/07/14/கூட்டமைப்பின்-வெற்றிக்காக-அனைவரும்-உழைக்க-வேண்டும்-இராசம்பந்தன்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அ.அமிர்தலிங்கம் ஐயாவையே (அப்ப) எதிர்க்கட்சித் தலைவராக்கூட வர அனுமதிக்காத சிங்களம் உங்களப் பேரம்பேசும் சக்தியா வர அனுமதிக்குமா? வந்தால் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பின் வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும் :இரா.சம்பந்தன்

 இவ்வளவுகாலமும் கூத்தமைப்பின் வெற்றிக்கு உழைச்ச சனத்தை பலியெடுத்ததுதானே உங்கடை பிரதிபலன்.......
இனியென்ன ஒட்டுமொத்த தமிழினத்தையும் பலியெடுக்கவா?????

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்புக்குத் தான் தமிழர்கள் எப்போதும் வாக்களிக்க வேண்டுமென்பது... அவர்களது செஞ்சோற்றுக் கடனா, சம்பந்தன் ஐயா?

இவ்வளவு காலமும்.. தமிழர்களது போராட்டங்களை மலினப் படுத்தி..உங்களது குடும்பங்களை மட்டும் வளர்த்து விட்டதை விட...வேறு எதைத் தான் சாதித்து உள்ளீர்கள்?

உங்களை நம்பி... நாடிழந்து...வீடிழந்து... நிற்பவனுக்கு.. மாற்று வழியேதும் இல்லாமல் வைத்திருப்பதில் தானே.. உங்கள் வெற்றி தங்கியிருக்கின்றது!

புலம் பெயர் தமிழர்களை துண்டாட எப்படி உலகத்தமிழரின் எதேச்சாதிகாரப் போக்கு காரணமாயிருந்ததோ......அதே நிலை இலங்கையில் தமிழருக்கு வருவதற்கு கூட்டணியின் எதேச்சாதிகாரப் போக்கே தான் காரணம்.1958லிருந்து மக்கள் உங்களை நம்பிக் களைத்துவிட்டார்கள்.இன்று சிங்களம் எப்படித்துண்டாடப்பட்டு உள்ளது.அத்துடன் ஒப்பிடும் போது தமிழர்களின் நிலையும் அதே தான்.இப்போ தேசியத்தலைவர் ஏன் எந்த நாட்டையும் நம்பாமல் இருந்தார் என்று அனைவருக்கும் புரிந்திருக்கும். என்னுடைய நேற்றைய பதிவு இதோ

http://www.yarl.com/forum3/topic/160218-தேர்தல்-திருவிழாவில்-குரு-அமிர்தலிங்கத்தை-மறந்த-சிஷ்யன்-சம்பந்தர்-அய்யா/

 இவ்வளவுகாலமும் கூத்தமைப்பின் வெற்றிக்கு உழைச்ச சனத்தை பலியெடுத்ததுதானே உங்கடை பிரதிபலன்.......
இனியென்ன ஒட்டுமொத்த தமிழினத்தையும் பலியெடுக்கவா?????

அண்ணை நீங்கள் சம்பந்தரை திட்டிற அவசரத்தில பிழையான குற்றச்சாட்டை அந்தாளில வைக்கிறியள்.
நம்பி கூட போன சனத்தை பலி குடுத்தது சம்பந்தரில்லை அது வேற ஒருத்தர். 

 

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பின்.... பருப்பு, இனி தமிழ் மக்களிடம் வேகாது..... 
அதுக்கு... வேறை ஆக்களை பாரு, சம்பந்தா......

• சம்பந்தர் அய்யா மேய்ப்பனாக இருக்க ஆசைப்படலாம். ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் செம்மறி ஆடுகளாக இருக்க மாட்டார்கள்!

சம்பந்தர் அய்யாவின் மனட்சாட்சிக்கு (அப்படி ஒன்று இருந்தால்) சமர்ப்பணம்!

பிரதேச சபை தேர்தல் நடக்கும்போதும், மாகாணசபை தேர்தல் நடக்கும்பொதும், பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போதும், ஏன் ஜனாதிபதி தேர்தல் நடக்கும்போதும் நீங்கள் கூறும் ஓரே விடயம் "தமிழ் மக்கள் ஒற்றுமையாக கூட்டமைக்கு வாக்கு போடவேண்டும். நாங்கள் உங்களுக்கு தீர்வு பெற்று தருவோம்" என்பதே.

நீங்கள் கேட்டுக்கொண்டபடி தமிழ் மக்களும் ஒற்றுமையாக உங்களுக்கு வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் இதுவரை பெற்றுக்கொடுத்தது என்ன?

ஒவ்வொரு தேர்தலுக்கும் " இந்திய பிரதமர் தொலைபேசியில் பேசினார். அமெரிக்க ஜனாபதி பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே தமிழ் மக்களே தீர்வு பெறுவதற்கு கூட்டமைப்பிற்கு வாக்கு போடுங்கள்" என்று ரீல் விட்டு வருகிறீர்கள்.

பூமி சுற்றுகிறதோ இல்லையோ ஆனால் தேர்தலில் வென்ற பின்பு நீங்களும் உங்கள் கட்சி எம்.பி களும் உலகைச் சுற்றுகிறீர்களேயொழிய தொகுதிப் பக்கம் சுற்றுவதில்லை.

தேர்தல் வந்தால்தான் தொகுதிப் பக்கம் வருகிறீர்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் வயதான பெண்களையும் கட்டிப் பிடிக்கிறீர்கள். நடிப்பில் நீங்கள் எம்.ஜி ஆரையும் மிஞ்சிவிட்டீர்கள் போங்கள்.

11755123_1610787985859594_89009652808941

10 வருடமாக அகதிகளாக இருக்கும் சம்பூர் மக்களை ஒருமுறைகூட சென்று பாhக்கவில்லை. ஆனால் இப்போது நீதிமன்ற தீர்ப்பை உங்கள் வெற்றி என்று உரிமை கொண்டாடுகிறீர்கள். எப்படி அய்யா கொஞ்சம்கூட கூச்சமின்றி உங்களால் இப்படி நடந்து கொள்ள முடிகிறது?

11742998_1610788102526249_40831248437165

இதோ இந்த குழந்தையை கொஞ்சம் பாருங்கள்!

இந்த குழந்தை தமிழ் இனத்தில் பிறந்ததை தவிர வேறு என்ன பாவம் செய்தது?

இந்த குழந்தைக்கு நடந்த கொடுமைக்கு என்ன நியாயம் கூறப் போகிறீர்கள்?

ஓ! கூட்டமைப்பு நியாயன்மாரே!

உரத்து கேட்கிறோம். உங்கள் காது என்ன செவிடா?
நாங்கள் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?
நாங்கள் கேட்பதற்கு யாருமற்ற பரதேசிகளா?

https://www.facebook.com/pages/Balan-tholar/1528490507422676

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அண்ணை நீங்கள் சம்பந்தரை திட்டிற அவசரத்தில பிழையான குற்றச்சாட்டை அந்தாளில வைக்கிறியள்.
நம்பி கூட போன சனத்தை பலி குடுத்தது சம்பந்தரில்லை அது வேற ஒருத்தர். 

 

நீங்கள் முள்ளிவாய்க்கால் தாய்க்கட்டையை உருட்டுறதிலையே நிக்கிறியள்......அதுக்கு முந்தி தொங்கல் பிரச்சனையளை சீராட்டி பாராட்டி சீர்தூக்கி பாத்தியளெண்டால் ஊமையாய் இருக்கிற உண்மையள் வெளியிலை தெரியும் கண்டியளோ.

 

கடந்த காலங்களில் சிங்கள அரசின் மீதான எங்கள் காதலை வெளிக்காட்ட நான் சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்தேன். எதிர்வரும் தேர்தலில் எமக்கு பெருமளவில் வாக்களித்து எம்மை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் அந்தக் காத லகல்யாணம் வரை கொண்டு செல்வதற்கு ஏற்றவிதமாய் பௌத்த கொடியையும் ஏந்த பின்னிற்க மாட்டேன் என உறுதி சொல்கிறேன்

இப்படிக்கு

சம்பந்தன் :grin::grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.