Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்கு போடக்கூடாது என்பதில் தமிழ் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும்.

Featured Replies

 தேர்தலில் யாருக்கு வாக்கு போட வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கலாம். ஆனால் யாருக்கு போடக்கூடாது என்பதில் தமிழ் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும்.

தமிழ்மக்கள் ஜ..தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றுக்கு ஒருபோதும் வாக்கு போடக்கூடாது.

மாறி மாறி ஆட்சி புரிந்த இவ்விரு கட்சிகளும் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வையும் வழங்காது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வந்துள்ளன.

யாழ் மாவட்டத்தில் இம்முறை ஜ.தே.க கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கக் கூடாது. ஆம், தமிழ் மக்கள் ஜ.தே.க சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்கு போடக்கூடாது.

விஜயகலாவுக்கு அளிக்கும் வாக்கு,

(1)ஜ.தே.க யாழ் நூலகத்தை எரித்தமையை சரி என்று ஏற்றுக் கொள்வதற்கு ஒப்பாகும்

(2)ஜ.தே.க 1983ல் ஏற்படுத்திய இனக் கலவரத்தை சரி என்று ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும்.

(3)தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தமை சரி என்று பொருள் ஆகும்

(4) சிறையில் 53 தமிழர்களை கொன்றமை சரி என்று பொருள் ஆகும்.

(5) ஜ.தே.க மேற்கொண்டு வரும் தமிழ் இன அழிப்பை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும்.

கடந்த 100 நாள் ஆட்சியில்,

• கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை

• காணாமல் போனோர் பிரச்சனை தீhக்கப்படவில்லை

• அகதிகள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை

இந் நிலையில் எந்த முகத்துடன் ஜ.தே. க சார்பில் விஜயகலா மகேஸ்வரன் தமிழ்மக்களிடம் வாக்கு கேட்கிறார்?

கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கவும,; சம்பாதித்த பணத்தை கட்டிக் காக்கவுமே விஜயகலா மகேஜ்வரன் போட்டீ போடுகிறார். தமிழ் இனத்திற்கு துரோகம் இழைக்கிறார்.

எனவே தமிழ் மக்கள் இம் முறை விஜயகலா மகேஸ்வரனுக்கும் அவரது ஜ.தே. க கட்சிக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

Balan tholar இன் புகைப்படம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதே கொள்கை வகுப்பாளர்களின் கருத்துப்படி கொழும்பில் இத்தனைக்கும் காரணமாக யூஎன்பி சீட்டில் மனோ கணேசன் போட்டியிடலாமாம். விஜயகலா தீவுப்பகுதி மக்களின் தெரிவாக இருப்பாரானால் அதைத் தடுக்க எவராலும் முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசன் பெருபான்மை சிங்கள பகுதியில் வாக்கு கேட்பவர். விஜயகலா தமிழ் பகுதியில் வாக்கு கேட்பவர். நிறைய வித்தியாசம் உண்டு.

ஒரு தனிக் கட்சியைப் பதிவு செய்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்கும் ஒரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்று அந்தக் கட்சியின் அங்கத்தவராகப் போட்டியிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அத்துடன் கூட்டணியை முறித்துக் கொண்டு கட்சியாக வெளியேறுவதற்கும் சுயமாக இயங்குவதற்குமான வாய்ப்புகள் கூட்டணிக் கட்சிகளுக்கு உண்டு. ஆனர்ல கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் அங்கத்தவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைமைக்கு உண்டு

பலரின் பதிவுகள் திருமா ராஜபக்சாவை சந்தித்து விட்டு கொடுத்த பதில் தான் நினைவு வருகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனோ கணேசனின் கட்சியுடன் இணைந்து போட்டியிடவே விரும்பியது அப்படிப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் கொழும்பில் ஆகக் குறைந்தது 2 உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் யூஎன்பியின் தீவிர விசுவாசியான மனோ அதற்கு விரும்பவில்லை. தற்போதைய நிலையில் மனோ கணேசன் வெற்றி பெறுவதே கடினமாக இருக்கும். சிலரின் இரட்டை நிலைப்பாடு குறித்துச் சிரிப்பாக இருக்கிறது!:grin:

  • கருத்துக்கள உறவுகள்

:grin:

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

மனோ விரும்பவில்லையா?  அல்லது UNP க்கு எதிராக நிற்க சம்சும் கும்பல் விரும்பவில்லையா? மனோவுடன் கூட்டணி இல்லாமல் கேட்டிருந்தாலே ஒரு ஆசனம் தேசியப் பட்டியல் ஆசனமாகவாவது கிடைத்திருக்கும்

  • தொடங்கியவர்

சங்கரியரை காதுக்குள் குசுகுசுத்து அனுப்பியதே சம்சுங் கும்பல் தான்??????

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.