Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவருக்கே நாட்டை ஒப்படைக்க வேண்டும்

Featured Replies

Nimal%20Siripala%20De%20Silva.jpg

யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவருக்கே நாட்டை ஒப்படைக்க வேண்டும். மாறாக நாட்டை பிரிவினைக்கு கொண்டு செல்லும் தலைவரை தெரிவசெய்வது ஆபத்தானது என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். வடக்கில் தமிழ் மக்கள் சுதந்திரகமாக வாழ்வதும் நாட்டில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதும் மஹிந்தவால் என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் வெற்றி தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் தற்போது நிலவும் மோசமான ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும். இந்த ஆட்சியை உருவாகியது மக்கள் அல்ல. மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஒன்று நடைபெற்றிருக்குமாயின் மக்கள் மீண்டும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக கொந்தளிக்க மாட்டார்கள். ஆனால் எமது முதலாவது மக்கள் கூட்டத்தில் மக்கள் அலைகடல் போல் திரண்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் முதல் கூட்டத்தில் மக்கள் எண்ணிக்கை என்னவென்பதை பார்த்தால் தெரிந்திருக்கும்.

அரசாங்க பேருந்துகளில் மக்களை கொண்டு வந்து தமது பலத்தினை காட்டினர். ஆனால் நாம் அவ்வாறு எதையும் செய்யாது தானாக மக்கள் கூட்டத்தை வரவளைத்துள்ளோம். மக்கள் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்தனர். எமது தலைவர் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிக்க இந்த மக்கள் கூட்டம் கூடியது. அன்றைய கூட்டத்துடன் எமது வலிமையையும் மக்கள் யாரை நேசிக்கின்றனர் என்பதையும் ஐக்கிய தேசயக் கட்சியும் ஏனைய கட்சிகளும் விளங்கிக் கொண்டிருப்பார்கள். நாம் யாருக்கும் அஞ்சி செயற்படவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிறிது காலம் நாம் அமைதியாக இருந்ததை இவர்கள் தப்புக் கணக்கு போட்டுள்ளனர். எமது மீள் வருகை எவ்வாறு என்பதை இப்போது இவர்களால் விளங்கிக்கொள்ள முடியும்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலமான ஆட்சியை அமைப்பதே நாம் எதிர்பார்க்கும் ஒரே நோக்கமாகும். அதற்கான போராட்டத்தில் தான் நாம் களமிறங்கியுள்ளோம். இப்போது நாம் தலைமைத்துவம் தொடர்பில் சிந்தித்து கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அவர் ஒருசில சந்தர்ப்பங்களில் கட்சிக்கு முரணாக கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் கட்சியை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இல்லை. ஆகவே அனைவரும் ஒன்றிணைத்து மீண்டும் எமது ஆட்சியை அமைக்க முடியும்.

மக்களின் ஆணைக்கு நாம் மதிப்பளிக்ன்றோம். மக்கள் தமது தலைவரை சரியாக தெரிவு செய்ய வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் நாட்டுக்கும் மக்களுக்கும் பொருந்தக் கூடியது அல்ல. அவர்களது திட்டங்கள் அனைத்தும் சர்வதேச நலன் சார்ந்தவை மட்டுமேயாகும்.

அதேபோல் பிரிவினைக்கு துணைபோகும் வகையில் தான் அவர்கள் செயற்படுகின்றனர் ஆனால் நாம் அவ்வாறு அல்ல. கடந்த காலத்தில் எமது செயற்பாடுகள் அனைத்தும் நாட்டையும் மக்களையும் பலப்படுத்தும் வகையில் தான் அமைந்திருந்தது. ஆகவே அதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த தலைவர் மஹிந்த என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் இல்லை என்றால் இன்று வடக்கில் விடுதலை ஏற்பட்டிருக்காது. நாட்டில் அபிவிருத்தியும் நிம்மதியும் ஏற்பட்டிருக்காது. இதை தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/articles/2015/07/20/யுத்தத்தை-வெற்றிகொண்ட-தலைவருக்கே-நாட்டை-ஒப்படைக்க-வேண்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிங்களா.. அப்படின்னா.. உங்கட சிறீலங்காவை சோனியா காந்தி.. கருணாநிதி மற்றும் பிளேக்கிடம் கையளியுங்கள். அவர்கள் தான் யுத்தத்தை வென்றார்கள். இந்திய இராணுவத்தின் அமெரிக்க இராணுவத்தின் நேரடிப் பங்களிப்பில்லாமல் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டிருக்கவே முடியாதுங்க சார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றர்கள் எப்போதும் தோல்வியை ஏற்றுக் கொள்வதில்லை! பலநாடுகள் எதிராக வந்தது என்றால் அது சிங்களத்தின் இராஜதந்திர வெற்றி! உலக அறிவோ அரசியல் இராஜ தந்திரமோ அவர்களுக்குப் பூச்சியம்தான். அதனால் தான் கைகளிலே இருந்த நல்லதொரு வீணையினை நலங்கெட புழுதியில் வீசி எறிந்தார்கள்! 

தனக்கு எதிராக போர் செய்ய ஆயுதம் ,பயற்சி ,இருப்பிடம் கொடுத்தவர்களை திருப்பி அடிக்க அதே ஆட்களை பாவித்தவன் சிங்களவன் .இதையெல்லாம் பார்த்துத்தான் அந்த நேரமே அந்த பட்டத்தை சூ ட்டினோம் .

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரமே அந்த பட்டத்தை சூ ட்டினோம்

 

சிலர் மற்றவர்களுக்கு பட்டம் வைத்ததை தான் தாங்கள் போராட்டத்துக்கு சென்றதாக இங்கே பல வருடங்களாக எழுதி வருகிறார்கள்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் கிட்டத்தட்ட ஒரு அரை சதாப்தமாக போராட்டம் நடத்தியவர்கள் அரசியல் முட்டாள்கள்.. தென்னிலங்கையில் உறவை வைச்சுக் கொண்டவை.. பெரிய அறிவாளிகள். போங்கையா.. நீங்களும் உங்கட அறிவு மட்ட அறிவிப்புக்களும்.. அளவுகோல்களும்.. விண்ணானங்களும்.:grin:

தொழில்நுட்பங்கள் வென்றன. அவற்றை எம் போராளிகளுக்கு அளிக்கக் கூடிய வசதி இருக்கவில்லை. அதனால் அவர்கள் தோற்றார்கள். தொழில்நுட்பங்களை சிங்களவனுக்கு வழங்கியவர்கள் எமது அரசியலை பார்க்கவில்லை. தங்களின் சீன விரிவாகத்தின் பூகோள நலனை பார்த்தார்கள்.

புலிகள் தாமாக யுத்தத்தை ஆரம்பிக்காமைக்கும் காரணம் உள்ளது.

செப் 11 முஸ்லீம் அடிப்படைவாதிகளின் கோமாளித்தனம்.. உலக அரங்கில் அரச பயங்கரவாதங்களுக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கின. அதன் பெறுபேற்றை இன்று முஸ்லீம் உலகம் அதன் அழிவில் கண்டுகொண்டிருக்கிறது. அதுகள் அழிய அழிய பெருகுங்கள். ஆனால் சிறு இனமான நாம்.. தொடர் அழிவில் ஈடுபட முடியாது.

முள்ளிவாய்க்காலில் மெளனிக்க இதுவும் ஒரு காரணம். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சிலர் மற்றவர்களுக்கு பட்டம் வைத்ததை தான் தாங்கள் போராட்டத்துக்கு சென்றதாக இங்கே பல வருடங்களாக எழுதி வருகிறார்கள்.:grin:

தம்பி நுணாவில் எழுதுறதுதான் எழுதுறியள்....:)

இனிமேல் அந்த அண்ணைமாருக்கு பிளட் கொதிக்கிறமாதிரி எழுதவேண்டாம்.......ஏனெண்டால் அவையள் அங்காலையுமில்லை இஞ்சாலையுமில்லை எல்லோ..:grin: :grin: :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.