Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் கிளம்பிவிட்ட சோதிடக்காரர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மற்றும் அவரது சகோதரர்களின் மூட நம்பிக்கைகளும், சோதிட, மாந்திரிக நம்பிக்கைகளும் உலகப் புகழ் மிக்கவை.

தமது நேரத்தினைக் சரியாமல் கணியாமல் மகிந்தவுக்கு நேரம் சரியில்லை என்று சோதிடம் சொல்லி, பெரிய பிரச்சனைப் பட்ட, சாத்திரிமாரும் இருகின்றார்கள்.

இவர்களில் நல்ல காசு பார்த்தவர் சாத்திரியார் சுமண. அந்த மோதிரத்தினைப் இந்த விரலில் போடுங்கோ, இந்த தங்க கோலை இந்த கையில் வைத்திருங்கோ, ரணிலை சாப்பாட்டுக்கு கூப்பிட்டு, இந்த மாதிரி செய்து, அவர் பவரை எழும்பவிடாமல் செய்யுங்கோ எண்டு, மருந்து, மாந்திரீகம் எண்டு நல்ல காசு பார்த்தவர் அவர்.

அவரோ இந்த முறை எதையாவது சொல்லி துளைக்க, அந்தாள் வெண்டுதெண்டால், முதல் வெள்ளை வான் தனக்குத்தான் எண்ட பயத்தில், இந்த முறை கப்சிப் ஆக இருக்கிறார். 

ஜனவரி தேர்தலில் சுமண உள்ளிட்ட பலர், மகிந்த தோல்வி அடையப் போவதில்லை என அடித்து சொல்லி, மகிந்த சகோதரர்களை அக மகிழ வைக்க, இந்திக தொட்டவத்த என்னும் கண் பார்வை இல்லாத ஒருவர் மட்டும் மகிந்த தோல்வி அடைவார் என அடித்துச் சொன்னார்.

மகிந்தவின் தோல்வியுடன் நாடு முழுவதும் புகழ் மிக்கவராகி விட்டார்,  இந்த பார்வை இல்லாத, குறி சொல்பவர் (Soothsayar).

கடந்த வாரம், அவரை பேட்டி கண்ட, ஏரிக்கரை பத்திரிகை ஒன்று, தான் அவ்வாறு சொன்னதால், கவலை கொண்ட கோத்தபய, தன்னை தொடர்பு கொண்டு, தனது அண்ணனின் தோல்வியினைக் தடுத்து நிறுத்த, எதாவது மாந்திரீக, சூனிய, தந்திர வேலைகள் எதாவது செய்து தர முடியுமா என கேட்டதாக சொன்னார். பார்வை இல்லாத தனக்கு அவை தெரியாது, ஏதோ ஒரு சக்தியில் தான், தனக்குத் தோன்றுவதை சொல்வதாகவும் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் மகிந்த, அதிக பட்சம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆவார் ஆனால் அவர் பிரதமர் ஆக முடியாது என்று சொல்கிறார், இந்திக தொட்டவத்த.

முக்கியமாக 8ம் இலக்கம் ராஜபக்சேவின் அதிஸ்ட இலக்கமல்லவா, என்று கேட்டபோது, 2005 நவம்பர் 17, 2010 ஜனவரி 26 நல்லாகத் தான் இருந்தது என்றால், 2015 ஜனவரி 8 ஏன் வேலை செய்யவில்லை என்று மறு கேள்வி கேட்டு, 2015 ஆகஸ்ட் 17 தேர்தலில் ராஜபக்ச ஒரு தொகுதி போட்டியாளர் மட்டுமே. அந்த திகதி அதிஸ்டமானால் அவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார், அவ்வளவு தான் என்றார் அவர்.

மருண்டு போய் இருக்கிறது ராஜபக்ச குடும்பம்.

இந்த வீடியோவில் ரணில் குறித்து என்ன சொல்கிறார் என சிங்களம் தெரிந்தவர்கள் பார்த்து எழுதுங்களேன். (நான் ஆங்கில பத்திரிகையில் வாசித்ததுடன் எனது கருத்தும் சேர்த்து தந்தேன்)

இவர் இதிலே சோதிடம் பேசுவதைப் பொலத் தெரியவில்லை. ஆனால் தனது அரசியல் எதிர்வு கூறல்களை கூறுவது பொலத் தான் எனக்குப் பட்டது.

 

ஆனாலும் ஓரளவு தெளிந்த அரசியல் பேசுகிறார். அநுர குமார திசாநாயக்கவின் ஆதரவாளர் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஷ வெல்வார்: ஜோதிடர்

 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவார். எனினும், அவருக்கு பிரதமராக வருவதற்கான திறமை இல்லை என்று பிரபல ஜோதிடர் நாத்தாண்டியே பி.டீ. பெரேரா தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவார் என்றும் அத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிப்பெறுவார் என்றும் இந்த சோதிடரே கூறியிருந்தார்.

 

அதேபோல, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சரத் பொன்சேகா தோல்வியடைவார் என்றும், அவர் சிறைக்கு செல்வதுடன் சிறையில் அடைத்தவர்களே அவரை மீட்பார் என்றும் இந்த சோதிடரே தெரிவித்திருந்தார். 

அதுமட்டுமன்றி தான் இழந்த வரப்பிரசாதங்களை சரத் பொன்சேகா 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொள்வார் என்றும் அவர், தரமுயர்த்தப்படுவதுடன் அவருக்கு இல்லாமல் செய்யப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களும் வழங்கப்படும் என்றும் இந்த சோதிடரே தெரிவித்திருந்தார்.

 

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தோல்வியை தழுவிக்கொள்ளும். ஐக்கிய தேசிய முன்னணியே ஆட்சியமைக்கும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமராகுவதற்கு முடியாது. 

பொதுத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரபல்யமானவர்கள் சிலர் தோல்வியடைவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

அடுத்து பொதுத்தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி அதிகாரம் கொஞ்சம் அதிகரிக்கும் என்றும் சோதிடர் தெரிவித்துள்ளார். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rajapakse_17_11_02.jpg

அத்தான் வெற்றியுடன் திரும்பி வாருங்கள். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்

rajapakse_17_11_02.jpg

அத்தான் வெற்றியுடன் திரும்பி வாருங்கள். :grin: 

இரு, கை ஏந்தி....... பால் கொடுக்க, சிங்களவர்.
நமக்கு.. பால், ஊத்த... தமிழர்.
:grin:

வரிசை..... கட்டி, நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பாழாப்போன சைக்கிள்காரர் அதுதான் எங்கட பின்னணியின் விண்ணர்கள் வெற்றிபெறுவார்கள் எண்டு ஓரு சோதிடனும் சொல்லிறான் இல்லியே! 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள், 
மோட்டு சிங்களவனை நம்பி, கலியாணம் கட்டினாலும், 
அவனின்...சாத்திரத்தை, நம்ப மாட்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியஜகாந்துக்கு குவாட்டரும் கோழி புரியாணியும் கொடுத்து பிரேமலதா பிரச்சாரத்துக்கு அனுப்புவது போல, இங்க தென்னங் கள்ளுக் கொடுத்து அனுப்புறாவோ? அதுதான் அந்தாள் அடி சாத்திக் கொண்டு திரியுறார், வியஜகாந்த் போலவே..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இரு, கை ஏந்தி....... பால் கொடுக்க, சிங்களவர்.
நமக்கு.. பால், ஊத்த... தமிழர்.
:grin:

வரிசை..... கட்டி, நிற்பார்கள்.

அது தான் இரண்டறக்கலந்தாச்சில்ல...

இனி அவரின்றி நாமில்லை

அவர்கள் போட்டதே சட்டம் எழுத்து மூச்சு எல்லாமே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.