Jump to content

தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமையை பாதுகாக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள்! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (ICET)


Recommended Posts

பதியப்பட்டது

முள்ளிவாய்க்காலோடு எம் தேசத்தின் மூச்சடங்கிப் போகவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எம் இனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளதால், வரலாற்று முக்கியத்துவம் மிக்க இத்தருணத்தில் 'அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை' ஆகிய நாம் உங்கள் வாசல் தேடி வருகிறோம்.

தமிழின அழிப்பில் சிங்கள தேசம் இராணுவரீதியாக வெற்றியீட்டிய போதும், திம்புக் கோட்பாட்டின் அடிநாதமாக திகழ்கின்ற தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமை ஆகிய எமது அடிப்படை அரசியல் கோட்பாடுகள் தோற்கடிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, அக்கொள்கைகளை நேர்மையுடன் கொன்டு செல்லும் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் என்ற பெயருக்கு கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு தமிழர் தாயகத்தில் வாழும் எமது உறவுகளை அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்காகவே 'அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை' ஆகிய நாம் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். தொடர்ந்தும் போராடுவோம். ஆயினும், இலங்கைத் தீவில் அமுலிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத சட்டங்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வலுச்சேர்க்கும் அரசியல் நடவடிக்கைகளை அடக்குமுறைக்குள் வைத்திருக்கிறது என்பதை நாமறிவோம். அந்த அடக்குமுறைக்குள்ளும், தமிழர் ஒரு தேசம் என்ற கொள்கையோடு, தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமையை ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அர்ப்பணிப்போடு பணியாற்றிவருவதனால், தாயகத்திலுள்ள எமது மக்களை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

தமிழர் தாயகமே, எமது உரிமைக்கும் நீதிக்குமான போராட்டத்தின் அடித்தளம். ஆதலால், அனைத்துலகளவில் நாம் தொடரும் போராட்டங்கள் வெற்றியடைவதற்கு, தாயகத்தில் வாழும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஓங்கி ஒலிக்கின்ற உறுதியான குரலொன்று எமக்குத் தேவை. அந்தக் குரல் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் என்ற பெயருக்கு கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பதே எமது நிலைப்பாடு.   

'நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம், சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும், தமிழின அழிப்புக்கு நீதியையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வல்லமை பொருந்திய ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதனால், உங்களுடைய வாக்குகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இடப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகளே, ஊரில் உள்ள உங்கள் உறவுகளுடன் விரைவாகக் தொடர்புகொண்டு, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறுங்கள். புலம்பெயர் தேசத்தில் செயற்படும் ஏனைய அமைப்புகளையும் இந்த பரப்புரை பணியில் இணைந்து கொள்ளுமாறு சகோதரத்துவத்துடன் அழைக்கிறோம்.

'அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை' என்பது இனஅழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்பும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுவருவதோடு, வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு செயல்வடிவம் கொடுப்பதை இறுதி இலட்சியமாக வரிந்துகொண்டு, உலகின் பல பாகங்களிலும் சனநாயக ரீதியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் பதினான்கு  தேசிய அவைகளின் தாய் அமைப்பாகும்.


'அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை' (ICET)

சுவிஸ் ஈழத்தமிழரவை  - சுவிஸ்
நோர்வே ஈழத்தமிழர் அவை  - நோர்வே
கனேடிய தமிழர் தேசிய அவை - கனடா
இத்தாலி ஈழத்தமிழரவை - இத்தாலி
பிரான்ஸ் தமிழர் பேரவை - பிரான்ஸ்
சுவீடன் தமிழர் தேசிய அவை - சுவீடன்
தமிழர் நீதிக்கான அமைப்பு - அவுஸ்திரேலியா

பெல்ஜியம்  தமிழர் தேசிய அவை - பெல்ஜியம்
பின்லாந்து தமிழர் பேரவை - பின்லாந்து
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் – டென்மார்க்
நெதர்லாந்து தமிழர் அவை  - நெதர்லாந்து
நியூசீலந்து தமிழர் தேசிய அவை - நியூசீலந்து
தமிழர் இன அழிப்புக்கு  எதிரான கூட்டமைப்பு - மொரிசியஸ்
யேர்மன்  ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

 

http://www.pathivu.com/news/41817/57/ICET/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தப் புலிவால்களுக்கு தாயகத்தில் உள்ள மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்! வெயிட் அண்ட் சீ விசிலடிச்சான் குஞ்சுகளா!:grin:

Posted

இநத  கடித தலைப்பு (letter pad) அமைப்புகள் எல்லாவறையும்   சேர்த்தால்  ஒரு  பத்து பேர் இருப்பர்களோ தெரியாது. இவர்களின் தொலைபேசி இலக்கங்கள்  காலாவதியானவை.

Posted

இநத  கடித தலைப்பு (letter pad) அமைப்புகள் எல்லாவறையும்   சேர்த்தால்  ஒரு  பத்து பேர் இருப்பர்களோ தெரியாது. இவர்களின் தொலைபேசி இலக்கங்கள்  காலாவதியானவை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்னைபொறுத்த வரையில் இத்தகைய அமைப்புகள், பேசாமல் இருப்பதே அங்குள்ளவர்களுக்கு செய்யும் பெரிய உதவி. 

இந்த முறை மற்றம் வேண்டும் என்பது தெளிவாக அங்கிருந்தே வந்துள்ளது. அதை திசை திருப்பி, இங்கே உள்ளவர்களே அதை செய்வதாகவும், இதற்க்கு பின்னிற்பதாகவும் பெரிய பிரச்சார உத்தியை கூட்டமைப்பும் அதன் அடி வருடிகளும் செய்யும் போது அதற்க்கு பலிக்கடா ஆக போகக்கூடிய இத்தகைய செயல்பாடுகள் எந்த விதத்திலும் நன்மை பயக்க மாட்டாது . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானியாவில் இருந்து கைநாட்டு வைக்க ஒருவரும் அகப்படவில்லைப் போலிருக்கே. கேட்டிருந்தால் எனது கட்டைவிரலை அழுத்தியிருப்பேன்.. சா. மிஸ் ஆகியிடுத்து

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிரித்தானியாவில் இருந்து கைநாட்டு வைக்க ஒருவரும் அகப்படவில்லைப் போலிருக்கே. கேட்டிருந்தால் எனது கட்டைவிரலை அழுத்தியிருப்பேன்.. சா. மிஸ் ஆகியிடுத்து

 

நீங்கள் பிரித்தானியாவில் ஒரு நாட்டாமையாக இருப்பீர்கள் என்று நினைத்தேன், இப்படி கைநாட்டு பேர்வழியாய் இருப்பீர்கள் என்று நினைக்கவே இல்லை :) 

Posted
 

.இந்தப் புலிவால்களுக்கு தாயகத்தில் உள்ள மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்! வெயிட் அண்ட் சீ விசிலடிச்சான் குஞ்சுகளா!:grin:

இந்த அமைப்புகளின் கொள்கையுடன் உடன்பாடு இல்லாவிட்டாலும் இவர்களுக்கு ஆதரவு பெருகி வருவதாகவே தெரிகிறது. 

 

இநத  கடித தலைப்பு (letter pad) அமைப்புகள் எல்லாவறையும்   சேர்த்தால்  ஒரு  பத்து பேர் இருப்பர்களோ தெரியாது. இவர்களின் தொலைபேசி இலக்கங்கள்  காலாவதியானவை.

 

இவர்களே ஆட்பலத்திலும் பணபலத்திலும் உலகத்தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த அரசு ஆகியவற்றிலும் பார்க்க உயர்வான நிலையில் இருக்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.