Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிக விருப்பு வாக்குகளால் வெற்றிபெற்ற சி.சிறீதரன் பா.உ. அவர்களுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு!

Featured Replies

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு கட்சித் தொண்டர்களினாலும் ஆதரவாளர்களினாலும் கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிட்டு அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்டு முன்னிலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளைக் காரியாலயமான அறிவகத்தில் கட்சித் தொண்டர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களால் வரவேற்றுக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை 5.00 மணியளவில் கிளிநொச்சிக் கந்தசாமி கோயிலின் சமய வழிபாட்டு நிகழ்வுடன் ஆரம்பமாகி அழைத்து வரப்பட்டு கட்சிக் காரியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, கரைச்சிப் பிரதேசசபை முன்னாள் உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சித் தொண்டர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
உங்களின் பலத்தினாலேயே நான் இன்று உங்களின் முன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். உங்களின் பலத்தினால் எமது விடுதலைக்கான இலட்சியப் பாதையில் நாம் என்றும் உறுதியோடு பயணிப்போம்.

இனி வருங்காலங்கள் எமக்கு மிகவும் முக்கியமான காலமாக அமைய இருக்கின்றமையால் நாம் மிகவும் அவதாமும் நிதானமாகவும் இராஜதந்திர அணுகுமுறைகளை மேற்கொண்டு எமது இலட்சியப் பாதையில் பயணித்து எமது விடுதலையை விரைவில் வென்றெடுப்பதற்காக உறுதியோடு செயற்படுவோம் என்று தெரிவித்தார்.
srimp-01

srimp-02

srimp-03

srimp-04
யாழ் மாவட்ட த.தே. கூட்டமைப்பின் அதிக விருப்பு வாக்கு பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்!

நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளார்கள் 10 பேருள் சிவஞானம் சிறிதரன் அதிக வாக்குகளைப் (72058) பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அந்த வகையில்

யாழ். மாவட்டத்தில்
1- சிவஞானம் சிறிதரன் – 72058
2- மாவை சேனாதிராஜா – 58732
3 – சுமந்திரன் – 58043
4- சித்தார்த்தன் – 53743
5 -ஈ. சரவணபவன் – 43223

ஆகிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.

srimp-05

srimp-06

srimp-07

srimp-09

srimp-10

srimp-11

srimp-12

srimp-13

- See more at: http://www.canadamirror.com/canada/47721.html#sthash.vJ3W8AU1.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் தானைத் தளபதி, வருங்கால தலைவர் 

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

சுரேசுக்கு எனனாச்சு?

தமிழரசுக்கட்சியின் தானைத் தளபதி, வருங்கால தலைவர் 

எனக்கு உவரில கொஞ்சம் சந்தேகம், அவரது கடமையில் சந்தேகம் இல்லை.

ஆறு கடக்கும் வரையாச்சும் கூட வருவாரா? 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுரேசுக்கு நடந்தது முழு உலகுக்குமே தெரியும். இது கூட உங்களுக்கு தெரியாதா? 

மீரா,

சுரேசுக்கு எனனாச்சு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உவரில கொஞ்சம் சந்தேகம், அவரது கடமையில் சந்தேகம் இல்லை.

ஆறு கடக்கும் வரையாச்சும் கூட வருவாரா? 

 

இப்ப ஆறு எண்டதை என்ன மீனிங்கிலை சொல்ல வாறியள்????

  • கருத்துக்கள உறவுகள்

மீரா தமாசில்லை. போனதடவை மாவையை விட கூட எடுத்தவர் என்று என்னை ஒரு முறை திருத்தினீர்கள்.

இப்போ ஏன் சறுக்கல்? 

ஈபி வோட் பாங்குக்கு என்னாச்சு?

அல்லது கூட்டமைப்புக்குள் இருந்து கலக குரல் எழுப்பியதால் மக்கள் குட்டினார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி இருந்தால் சிவசக்தி ஆனந்தனை தெரிவு செய்திருக்க மாட்டார்கள். 

மீரா தமாசில்லை. போனதடவை மாவையை விட கூட எடுத்தவர் என்று என்னை ஒரு முறை திருத்தினீர்கள்.

இப்போ ஏன் சறுக்கல்? 

ஈபி வோட் பாங்குக்கு என்னாச்சு?

அல்லது கூட்டமைப்புக்குள் இருந்து கலக குரல் எழுப்பியதால் மக்கள் குட்டினார்களா?

இப்ப ஆறு எண்டதை என்ன மீனிங்கிலை சொல்ல வாறியள்????

என்ன கு.சா தெரியாதமாதிரி கேள்வி?

தேசிய அரசியலில் ஈடுபடவேண்டும் என்பதற்காக தமிழ் சனம் வாக்களிக்கவில்லை.

  1. ஒரு சாத்தியமான தீர்வு 
  2. அதுவரை ஒற்றுமையை குலைத்து நிலைமையை மோசமாக விருப்பமில்லை
  3. சுயநலம் இல்லாமை
  4. அதிகார போட்டி இல்லாமமை

இன்னும் கிடக்கு அனால் எனக்கு பொறுமை இல்லை, அந்த முதலாவதை எட்டுமட்டும் இரண்டாவது மற்றும் நாலாவது இல்லாமல் இருந்தாலே பாதியாறு கடந்தமாதிரி.

இவர் அதிகமாக புலிகளின் பெயரை பாவித்தவர் அதுதான் எனது சந்தேகத்துக்கு கரணம் வேறொன்றும் இல்லை.

 

**** அரசியவாதிகள் புலிகளின் பெயரை பாவிப்பதை நான் விரும்புவதில்லை - எனது தனிபட்ட கருத்து ********

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லோரும் தனிப்பட்ட கருத்துக்களையே எழுதுகிறார்கள். 

புலிகளிள் பெயரை சிறிதரன் உட்பட கூட்டமைப்பினர்பாவித்தனர் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள் . 

என்ன கு.சா தெரியாதமாதிரி கேள்வி?

தேசிய அரசியலில் ஈடுபடவேண்டும் என்பதற்காக தமிழ் சனம் வாக்களிக்கவில்லை.

  1. ஒரு சாத்தியமான தீர்வு 
  2. அதுவரை ஒற்றுமையை குலைத்து நிலைமையை மோசமாக விருப்பமில்லை
  3. சுயநலம் இல்லாமை
  4. அதிகார போட்டி இல்லாமமை

இன்னும் கிடக்கு அனால் எனக்கு பொறுமை இல்லை, அந்த முதலாவதை எட்டுமட்டும் இரண்டாவது மற்றும் நாலாவது இல்லாமல் இருந்தாலே பாதியாறு கடந்தமாதிரி.

இவர் அதிகமாக புலிகளின் பெயரை பாவித்தவர் அதுதான் எனது சந்தேகத்துக்கு கரணம் வேறொன்றும் இல்லை.

 

**** அரசியவாதிகள் புலிகளின் பெயரை பாவிப்பதை நான் விரும்புவதில்லை - எனது தனிபட்ட கருத்து ********

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கு.சா தெரியாதமாதிரி கேள்வி?

தேசிய அரசியலில் ஈடுபடவேண்டும் என்பதற்காக தமிழ் சனம் வாக்களிக்கவில்லை.

  1. ஒரு சாத்தியமான தீர்வு 
  2. அதுவரை ஒற்றுமையை குலைத்து நிலைமையை மோசமாக விருப்பமில்லை
  3. சுயநலம் இல்லாமை
  4. அதிகார போட்டி இல்லாமமை

இன்னும் கிடக்கு அனால் எனக்கு பொறுமை இல்லை, அந்த முதலாவதை எட்டுமட்டும் இரண்டாவது மற்றும் நாலாவது இல்லாமல் இருந்தாலே பாதியாறு கடந்தமாதிரி.

இவர் அதிகமாக புலிகளின் பெயரை பாவித்தவர் அதுதான் எனது சந்தேகத்துக்கு கரணம் வேறொன்றும் இல்லை.

 

**** அரசியவாதிகள் புலிகளின் பெயரை பாவிப்பதை நான் விரும்புவதில்லை - எனது தனிபட்ட கருத்து ********

புலியின்ரை பெயரை பாவிச்சுத்தானே அவர் முன்னணியிலை நிக்கிறார்...இதிலையிருந்து என்னதெரியுது???? :cool:  

இங்கு எல்லோரும் தனிப்பட்ட கருத்துக்களையே எழுதுகிறார்கள். 

புலிகளிள் பெயரை சிறிதரன் உட்பட கூட்டமைப்பினர்பாவித்தனர் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள் . 

 

சம்பந்தையும் சுமந்திரனையும் தவிர எல்லோரும் பாவித்தே இருந்தனர். 

  • தொடங்கியவர்

தமிழ் மக்கள் சுயத்தை இழக்கமாட்டார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது ஒன்றும் தமிழ் மக்களுக்கு புதியதில்லை அது போல் இவர்கள் தங்களுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதும் இல்லை இதுவும் தமிழ் மக்களுக்கு புதியதில்லை.

ஆனால் தமிழ் மக்கள் எந்த தேர்தல் நடந்தாலும் வெளிப்படுத்தும் ஓரே கருத்து தமிழ் தேசியம், தமிழிழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்பது ஆகும். அதற்காக மட்டுமே இந்த ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ளது. அத்துடன் இலங்கையின் அரசு யாராக இருக்க வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்கிறார்கள். இதை நன்றாக எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக புலம் பெயர் மக்கள். யார் சுயலாபம் தேடினாலும் தமிழ் மக்கள் சுயத்தை இழக்கமாட்டார்கள்.

மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமோக வரவேற்பு!
[ செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2015, 06:23.38 PM GMT ]
batti_wel.jpg
நடந்துமுடிந்த பராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் மட்டக்களப்பு வாக்கெண்ணும் நிலையத்திற்கு வெளியில் வருகைதந்த சீனித்தம்பி யோகேஸ்வரன், சதாசிவம் வியாழேந்திரன், ஞானமுத்து சிறிநேசன் ஆகியோருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மாலை அணிவித்தும், பொன்னாடைபோர்த்தியும் அமோக வரவேற்பளித்தனர்.

batti_03.JPG

batti_04.JPG

batti_05.JPG

batti_06.JPG

batti_07.JPG


தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்வேன்: எஸ்.வியாழேந்திரன்

தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியத்திற்கும் என்றும் சேவையாற்றுபவர்களாக இருப்போம் என மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்றுள்ள எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
Remainder:*
தமிழ் மக்கள் தம் மீதும் தமது கட்சி மீதும் கொண்ட பற்றுக் காரணமாக அணி திரண்டு வாக்களித்துள்ளதாகவும் அவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் செயற்படுவேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து புதுமுகவேட்பாளராக களமிறங்கியிருந்தேன். இதற்கு களம் ஏற்படுத்தி தந்த தலைவர் சித்தார்த்தனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மக்கள் மட்டக்களப்பில் எனக்கு அமோக ஆதரவினை தந்து வெற்றி பெறச் செய்துள்ளார்கள். நாங்கள் அந்த மக்களுக்கு நன்றி கூறுவது மட்டுமன்றி அவர்களுக்கு சேவையாற்றுவேன்.

எதிர்காலத்தில் கிராமம் கிராமமாக சென்று மக்களோடு மக்களாக இணைந்து அவர்களோடு இணைந்து செயற்படும் ஒருசேவகனாக செயற்படுவேன். அமோக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

http://www.tamilwin.com/show-RUmtyIScSVlu1I.html

போங்கடா நீங்களும் உங்கட கேவலம் கெட்ட இணக்க அரசியலும்.

இன்னும் ஒரு சில தசாப்தங்களின் பின் ஈழத்தமிழனை அருங்காட்சியகத்தில் தான் தேட வேண்டி வரும். 

கிழக்கு பறி போய் விட்டது . இப்பொழுது வடக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகின்றது. உங்கள் இணக்க அரசியல் இடங்களை பறி கொடுத்து இன அடையாளங்களை பறிகொடுத்து மத மாற்றங்கள் ஏற்பட வழி வகுத்து உங்களை இரண்டாவது சிறுபான்மையினமாக மாற்றும் . ஆனால் கவலைப்பட்டதீர்கள் . அதுவரை நீங்கள் உயிரோடு இருக்க மாட்டீர்கள். நீங்கள் தெரிவு செய்த தலைவர்களும் இருக்க மாட்ட்டார்கள்.. அவர்களுக்கு என்ன வாழும் வரை தமிழின தலைவர். வாரிசுகள் வெளிநாட்டில் தமிழே தெரியாமல்.

என்ன உங்களுக்காக தங்கள் வாழ்வை உருக்கிய அந்த உள்ளங்களை நினைக்கத்தான் நெஞ்சு வெடிக்கிறது.

 

  • தொடங்கியவர்

சரணம் ஐயப்பா , சரணம் ஐயப்பா என்று மலையில் ஏறிச் செல்லும் போது பக்தியாக மக்கள் ஒன்றாக 
சத்தமாக கத்தி தலத்தை சென்றடைய காரணம் புலிகள் தானாம் , சத்தத்தை கேட்டு புலிகள் 
நம்மை விட கொடிய மிருகங்கள் வருகின்றது என பயந்து ஓடி விடுமாம் ..

11887967_10207599605295310_2840013898302

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஆறு எண்டதை என்ன மீனிங்கிலை சொல்ல வாறியள்????

யாழ்ப்பாணத்தில்... ஆறு வாக்குகளால், ஆறாவது இடம் கிடைக்காமல் போனதை...  
நைசாக.... சொல்கிறார் போலுள்ளது.:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்

அதிக விருப்பு வாக்குகளால் வெற்றிபெற்ற சி.சிறீதரன் பா.உ. அவர்களுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு!

 

அடுத்த தேர்தலின் போது இலங்கை பணக்காறர் வரிசையில் முதலிடத்தில்  இருப்பார்

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.:(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.