Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் மாவை சரா எவ்வாறு உள்ளே? அருந்தவபாலன் சுரேஸ் மதனி எவ்வாறு வெளியே? உள்ளிருந்து ஒரு தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் மாவை சரா எவ்வாறு உள்ளே? அருந்தவபாலன் சுரேஸ் மதனி எவ்வாறு வெளியே? உள்ளிருந்து ஒரு தகவல்!

August 22nd, 2015 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை
mavaimp-300x225

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணும் போது பாரிய மோசடியை அரசாங்க உயர் அதிகாரிகளின் துணையோடு மாவைறும் சுமந்திரனும் செய்து முடித்து யாழ்ப்பாண மக்களையும் சக வேட்பாளர்களையும் முட்டாளாக்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்த உயர் அதிகாரியின் மூலம் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. பெயர் குறிப்பிட விரும்பாத இந்த அதிகாரி தெரிவித்த தகவல்களை நாம் இங்கே தருகிறோம்.அதிகாலை 10 மணியலவில் சகல விருப்பு வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்து அவற்றின் பெறுபேறுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டன.

இதன் அடிப்படையில் முதல் 8 இடங்களில் இருந்தவர்கள் சிறிதரன், சித்தார்த்தன் அருந்தவபாலன்,பிரேமச்சந்திரன், மதனி , சேனாதிராஜா, சரவணபவான் மற்றும் சுமந்திரன். இதை அறிந்து கொண்ட சுமந்திரனும் மாவையும் அரச உயர் அதிகாரியின் துணையோடு  கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிதரன் அவர்களுக்கு தனி இரு விருப்பு வாக்கு என அளிக்கப்பட்ட 27000 வாக்குகளும் யாழ்மாவட்டத்தில் பிரேமச்சந்திரனுக்கும் தனி ஒரு விருப்பு வாக்கு என அளிக்கப்பட்ட 11000 வாக்குகளும் மாவைக்கும் சுமந்திரனுக்கும் முறைகேடாக மாற்றியமைக்கப்பட்டு முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

அதன்டிபபடையில் மாற்றியமைக்கப்பட்டு முதல் 8 இடங்கள் முறையே சிறிதரன், சேனாதிராஜா, சுமந்திரன், சித்தார்த்தன், அருந்தவபாலன், பிரேமச்சந்திரன், மதனி மற்றும் சரவணபவான் என வழங்கப்பட்டன. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட விடயங்கள் உதயன் பத்திரிகை செய்தியாளர் இருவருக்கு தெரிய வந்ததால் இது சரவணபவான் காதுக்கு எட்டிவிட்டது.

தான் வெளியே எனத் தெரியவந்ததால் சரவணபவன் மாவைக்கு தொலைபேசி மூலம், நீங்கள் செய்த முறைகேடுகள் எனது செய்தியாளரிடன் இருக்கிறது. என்னை உள்ளே எடுக்காவிட்டால் உங்களின் முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று மாவையுடன் உரத்த தொணியில் கதைத்த சாரவிற்கு மாவை சொன்னார் நீர் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்.நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று.அதன் விளைவே சரவணபவான் உள்ளே எடுக்கப்பட்டு அருந்தவபாலன் அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டார்.

யாழில் சுமந்திரனுக்கு இவ்வளவு விருப்பு வாக்கா? என வாக்குப் போட்ட யாழ்ப்பாண மக்களே ஏங்கித் தவிக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்காக வெறும் 24612 முட்டள்களே இருந்தார்கள். நிட்சயமாக 58043 முட்டாள்கள் இல்லை.

- See more at: http://www.sarithamnews.com/?p=28870#sthash.O6LQhJLh.j9ZoayUU.dpuf

செய்தியாளர்  இந்திய சினிமா பார்ப்பாரோ/??

 

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி பதிவு இணையைத்தை நம்பி இருந்தார்கள், இப்ப சரிதம்! நல்ல முன்னேற்றம் :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வூடகச் செய்தியை அதிகம் முகநூலில் பகிர்ந்து கொண்டிருப்பது தாயக உறவுகள் என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும். அங்கிருந்து அவர்கள் சொல்ல விளையும் கருத்தும் இதே. ஆனால் சில சம் சும் காவடிகள்.. யாழில் அதனை மாற்றி ஆட்டம் காட்டுகின்றன.. அவ்வளவே. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சில செம்பு தூக்கிகள் இன்னமும் முகநூலை நம்பி புலத்து மக்களின் உணர்வை எடை போடுவது கேலிக்குரியதும் அறியாமையும் ஆகும். ஒருவர் இங்கு 2 இலட்சம் பேஸ்புக் இருக்காம் 2 எம்பி கஜேக்கு கிடைக்குமாம் என்றார் ஆளை இப்ப காணேல்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் சம்பந்தனும் ஏன் புலி சார்ப்பு அரசியல் கட்சின்னு அடையாளப்படுத்தப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இன்னும் இருக்கினம். தமிழரசுக் கட்சியோடு வெளிய போய் தேர்தலை சந்திக்கலாம் தானே. இவ்வளவு மக்கள் பலமுள்ளவை எதுக்கு இன்னும் பழைய புலிச் சாயம் பூசப்பட்ட சிங்கள மக்களால் இன்றும் ஹிந்தியாவால்.. இன்றும்.. புலி மயப்படுத்திப் பார்க்கப்படும்.. கூட்டமைப்பில் இருக்கனும். புளொட் முன்னர் வவுனியாவில் தனிய நின்றது போலவே நின்றிருக்கலாம் தானே. எதுக்கு புலிச்சாய கூட்டமைப்புக்குள் பதுங்கனும். கஜே அணி அந்த வகையில்.. சாதித்தது எவ்வளவோ திறம். புலிச் சாயத்தை பயன்படுத்தாமல்.. தங்கள் கொள்கை சாயத்தை பயன்படுத்தினார்கள். மக்கள் இன்னும் புலிகள் எதிர்பார்த்த தமிழ் சிறுபான்மை மக்களின் வாக்கு வலிமை சிதறக் கூடாது என்ற அந்த ஒற்றை நோக்கத்தை அதிகம் விரும்புகிறார்கள். சம் சும் கும்பல் அதில் குளிர்காய்வது தான் தாயக யதார்த்தம். அதனை உணரவிடாமல்.. சம் சும் கும்பல் எதிரிக்காக தமிழ் மக்களை பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி அதில் சுயலாப அரசியல் செய்ய முற்படுகிறார்கள். இதனை தாயக மக்கள் உணரும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பதுங்கியுள்ள மிச்சசொச்ச குள்ளநரிகள்.. ஓரங்கட்டப்படும். அதில் சம் சும் கும்பலும் அடங்கும். இது தெரியாமல் ஒரு கூட்டம் காவடி எடுத்துத் திரியுது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பலமுறை சொல்லியாச்சு கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை முன்னாள் புளட் முக்கியஸ்தர் சிவராம் போன்றோரினால் உருப்பெற்ற கூட்டமைப்பில் புலிகள் ஏறிக் குந்திக்கொண்டனர் என்பது உண்மை. அது போக கூட்டமைப்பு புலிகளுக்கு எதிரானது அல்ல. புலிவால்களுக்குத்தான் எதிரானது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவராம் புளொட்டாக இருந்து உருவாக்கவில்லை. சிவராம் புலி சார்ப்பு ஊடகராக இருந்த போது புலிகளின் ஒத்தாசையோடு உருவாக்கப்பட்டு.. யாழ் பல்கலைக்கழகத்தில்.. செல்வராசா  கஜேந்திரன் போன்றவர்கள்.. மாணவ பிரதிநிதிகளா இருந்து வளர்த்த ஒன்று. ஒரு காலத்தில் யாழ் தீவுக்குள் போகவே முடியாத நிலையில் இருந்த கூட்டமைப்பை வெட்டுக் குத்து அச்சுறுத்தல் மத்தியில் கூட எடுத்துச் சென்றவர்கள் அவர்கள். உவர் சம்பந்தர் நேரடியாகவே சிங்களப் பாராளுமன்றில் புலி சார்ப்பு கூட்டமைப்பு பிரதிநிதி என்று சிங்கள எம்பிக்களால் தூற்றப்பட்டவர் (இப்ப தான் புலிச் சாயம் பூசாத புனிதர் என்று சிங்கள மக்களை நம்பச் சொல்லி நடிக்கிறார். அதுக்கு சுமந்திரன் உட்பட வாலுகளை கூட்டி வைச்சிருக்கிறார்.. இதுதான் தாயக சம் சும் கும்பலின் சுயலாப அரசியல் யதார்த்தம்).  சிலர் வரலாறு திரிந்திடும் என்று நினைக்கிறார்கள் போல. இதில தூய புலிகளுக்கு ஆதரவாம்.. புலி வால்களுக்கு எதிரிகளாம் கோசம் வேற. புலிகளின் நடைமுறை உண்மைகளையே திரிக்கும் இவர்கள் தான் நிஜப் புலிகளை ஆதரிக்கினமாம். சந்தர்ப்பவாதக் காவடிகள்.. இப்படி எத்தனை ஆட்டம் போடுங்கள். மக்கள் அதனை நன்கே அறிவார்கள். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கிகள் என்றுமெ நிஜ உலகிற்கு வரப்போவதில்லை. எத்தனை வேட மெடுத்தாலும் புலிவால்கள் நிஜப் புலிகளாக முடியாது. விருப்பமானவர்கள் கூட்டமைபில் இருந்து விலகலாம். புலிவாகளுடம் இணையலாம். கூட்டமைப்பின் முதுகெலும்பே தமிழரசுக் கட்சிதான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் வாக்கு பலத்தை ஒன்றுதிரட்ட  தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை விட்டு அதன் கொள்கையில் இருந்து விலகிச் செல்லும் சம் சும் கும்பலும்.. அது கொண்டு வந்த புளொட் கொலைகாரக் கும்பலும் தான் வெளியேறிச் செல்ல வேண்டும். முடிந்தால் உண்மையில் மக்கள் ஆதரவிருந்தால்.. எதுக்கு இந்தக் கும்பல் புலிச் சாயம் பூசிப் பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பதுங்கிக் கிடக்கனும். இந்தா சங்கரி போகல்லையா.. கஜேந்திரன் போகல்லையா.. இவை மட்டும் ஏன் ஏன்.. இன்னும் புலிச் சாயப் பேச்சை வாக்கு மேடையிலும்..புலி எதிர்ப்பு பேச்சை சிங்கள ஹிந்திய சர்வதேச தளத்திலும் பேசிக் கொண்டு கூட்டமைப்புக்குள் இருக்கனும். மக்கள் இவர்களின் பின்னால் அணி வகுத்து நிற்கினம் என்றால்.. pro-LTTE TNA என்று இன்றும் வர்ணிக்கப்படும் கூட்டமைப்புக்குள் எதுக்கு நிற்கினம். காவடிகளுக்கு உந்த ஆட்டத்துக்கு பதில் தெரியும். தெரிஞ்சு வெளில சொல்லிட்டு எப்படி அடுத்த காவடி எடுக்கிறது. 

Don’t Deal With Pro-LTTE TNA

http://www.thesundayleader.lk/2014/10/26/dont-deal-with-pro-ltte-tna/

Pro-LTTE TNA members on rape rampage

Recently, continuous agitation prevailed in Kollavilankulam-Thunukkai in Mullaitivu following the rape of 56 Tamil women in rural areas allegedly by a pro-LTTE Tamil terrorist political party Tamil National Alliance (TNA) Thunukkai  Pradeshiya Sabha member.
Pornographic videos of those rape incidents were distributed by the culprit for sale in and around Thunukkai area and in the entire Mullaitivu District. And such videos are now for international sale too.
Series of such rape incidents have been continuing since the latter part of last year itself yet the affected women or other people living in the Kollavilankulam village refused to expose the injustice as they were afraid to take action against a Pradeshiya Sabha member who is politically and financially powerful with TNA.

http://www.sinhalanet.net/pro-ltte-tna-members-on-rape-rampage

இதெல்லாம் சிங்கள தேசத்தில் வாழும் காவடிகளின் கண்ணில் படவில்லைப் போலும். இல்ல பட்டும் கண்டுகொள்ளாமல் விட்டால் உலகம் மறந்திடும்.. மறைத்திடும் என்று நினைக்கிறார்களோ என்னவோ. சிங்களவன் தெளிவா இருக்கிறான். காவடிகள் தான் குழம்பிப் போயுள்ளன. tw_blush:

Sinhala Buddhist orgs attack TNA for 'pro-LTTE agenda'

http://www.tamilguardian.com/article.asp?articleid=8720

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்கப்பா...

சரியான காமடி... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சரிதம் நியூஸ் இணையத்தளம் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆதரவு இணையத்தளம் என்பது இந்த இணையத்தளம் தொடங்கப்பட்ட போதே அறிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உவ்வளவும் செய்தவைக்கு?? 8 வாக்கை கூட போட்டு இன்னுமொரு உறுப்பினரை எடுக்க முடியாமல் போனதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகலா வாறதில கூட்டமைப்புக்கு பிரச்சனையே இல்லை. அதனால் அதனை விட்டிருப்பினம். இப்ப அதால பல நன்மைகள். கஜேந்திரகுமாரை திட்ட அது தொடர்ந்து பயன்படும். தங்களின் மிச்ச தவறுகளை மறைக்கலாம். தேர்தல் நேர்மையாகவே நடந்துள்ளது என்று மக்களை நம்ப வைக்கலாம்.. இப்படி... பல நன்மைகளும் அந்த 8 வாக்கை விட்டு வைச்சதால இருக்குது தானே. tw_blush::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வாக்கு எண்ணும் நட­வ­டிக்­கையில் எவ்­வித முறை­கே­டு­களும் இட­ம்பெ­ற­வில்லை

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது விருப்பு வாக்கு எண்ணும் நட­வ­டிக்­கையில் எவ்­வித முறை­கே­டு­களும் இட­பெ­ற­வில்லை என தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

mahintha%20desapriya_0.jpg

விருப்பு வாக்­குகள் எண்­ணப்­ப­டும்­போது முறை­கே­டுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக, சில நாட்­க­ளாக பல குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்,

தேர்­தல்கள் தொடர்பில் மக்கள் மத்­தி யில் நன்­ம­திப்பு ஏற்­பட்­டுள்ள நிலையில் அவற்றை சீர்­கு­லைக்கும் வகையில் இக்­குற்­றச்­சாட்­டுக்கள் அமைந்­துள்ளன.விருப்பு வாக்­குகள் எண்­ணும்­போது வேட்­பா­ளர்­களின் முக­வர்கள் மற்றும் தேர்தல்கள் செயலக அதி­கா­ரிகள் இணைந்து செயற்­படும் போது இவ்­வா­றான முறை­கே­டுகள் நடை­பெற முடி­யாது.

ஐ.தே.க.வில் போட்­டி­யிட்டு தோல்­வியை தழு­விய முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் ரோஸி சேனா­நா­யக்க, தமது விருப்பு வாக்­குகள் எண்­ணப்­பட்ட விதம் சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­தென குறிப்­பிட்­டுள்­ள­தோடு, அதனை மீள எண்­ணு­மாறு பிர­த­ம­ரிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார். அதேநேரம் அளிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளுக்கும் தேர் தல் முடி­வுகள் வெளியா­ன­போது குறிப்­பி­டப்­பட்ட வாக்கு எண்­ணிக்­கைக்கும் வித்­தி­யாசம் காணப்­ப­டு­வ­தா­கவும், இது குறித்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தேச விடுதலை கட்சியின் தலைவர் கலகம தம்மரங்சி தேரர் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/08/26/விருப்பு-வாக்கு-எண்ணும்-நட­வ­டிக்­கையில்-எவ்­வித-முறை­கே­டு­களும்-இட­ம்பெ­ற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.