Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு ஒருபோதும் விலகாது! - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சமஷ்டி நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு ஒருபோதும் விலகாது! - சுமந்திரன்
[Sunday 2015-08-30 09:00]
இனப்பிரச்சினைக்கு சமஸ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலகாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு சமஸ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலகாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

  

ஆண் ஆதிக்க கட்சியாக வர்ணிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தேசியப்பட்டியலில் பெண் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளது. எனினும் தேசியக்கட்சிகள், தேசியப்பட்டியலில் பெண்களுக்கு இடங்களை வழங்கவில்லை.

தற்போதைய தேசிய அரசாங்கம் என்ற விடயம், இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டமையாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதில் அக்கறையில்லை. தேசிய அரசாங்கம் தற்போது தேவையா? இல்லையா? என்பது குறித்த இரண்டு கட்சிகளையும் பொறுத்த விடயம். ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு ஐக்கிய தேசியக்கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ எமது கட்சியை கோரவில்லை.

இதேவேளை அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஆதரவை ஐக்கிய தேசியக்கட்சி கோரினால், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமது ஆதரவை வழங்கும். ஏனெனில் ஜனவரி 8ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சி முன்னெடுத்த திட்டத்துக்கு தமிழ் மக்கள் அங்கீகாரம் வழங்கினார்கள் என்ற அடிப்படையில் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கும். எனினும் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்தில் தமது கட்சி அமைச்சுக்களை பொறுப்பேற்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

http://www.seithy.com/breifNews.php?newsID=139395&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆம்பிளையளை பாராளுமன்றம் கொண்டுபோறியளோ பொம்பிளையளை கொண்டுபோறியளோ அல்லது அலிகளைத்தான் கொண்டுபோங்கோ எங்களுக்குத் தேவை 2016ல் தீர்வு. பேச்சுப்பேச்சாக இருக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சமஷ்டி நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு ஒருபோதும் விலகாது! - சுமந்திரன்

உதெல்லாம் எங்களுக்கு பழைய கதைகள் கண்டியளோ.... இனியும் உந்த தண்டவாள கதையள் வேண்டாம். 
ஈழத்தமிழர் பிரச்சனை அச்சடிச்ச பிரச்சனை மாதிரி அதை முதல்லை தீர்க்கப்பாருங்கோ மிஸ்டர் சுமந்திரன்...
சும்மா ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் எண்டு புதுக்கதையை செருக வேண்டாம்...

2016!!!!!!!!  

 

 

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பார்த்தால்... கூட்டமைப்பை விட்டு சமஷ்டி விலகிப்போய் விடும்.சாத்தியங்கள் தான் அதிகம் உள்ளது!

சொல்லிச் சொல்லியே நீங்கள் காலத்தைக் கொண்டு போய் விடுவீங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பார்த்தால்... கூட்டமைப்பை விட்டு சமஷ்டி விலகிப்போய் விடும்.சாத்தியங்கள் தான் அதிகம் உள்ளது!

சொல்லிச் சொல்லியே நீங்கள் காலத்தைக் கொண்டு போய் விடுவீங்கள் !

அம்மான் சொல்லியிருக்கிறார்  சம்ஸ்டி அடிப்படையில் தமிழ்மக்களுக்கு தீர்வு வேணும் என்று, கூட்டமைப்பு சம்ஸ்டியை விட்டிச்சினம் என்றால் அம்மான் எடுத்துதருவார்.........

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவற்று இதைவிட வேறு ஒன்றை வைத்து சடைய முடியாது......
சடைவது ஒன்றுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டால் 
சமஸ்டிதான் சரியான தெரிவு. 
வைச்சு சடைஞ்சு கொண்டே இருங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.