Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே.... இப்பதான்இன்னொரு திரியில் 4 படங்கள் போட்டேனே..

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இல்லையே.... இப்பதான்இன்னொரு திரியில் 4 படங்கள் போட்டேனே..

அட.. ஆமா.. இனிமேல் அப்படியே செய்யிறன்.. tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளர் வியனரசு..

12998720_988099734608899_617851561639471

13015499_210472409344244_329304787224164

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20.04.2016: திருவாடனை தொகுதியில் வேட்பாளர் அறிவுச்செல்வன்..

 

 

13076753_637054959779658_508934934455420

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்பது சன், ஜெயா தொலைக்காட்சிகளுக்கு தெரிஞ்சிருக்கு.. tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

13063413_1583251335336716_32780513072145

***********************************************************************************

வேட்பாளர் - மக்கள் பிணைப்பு

13062073_1717598181821092_47947353518310

13001291_1717598215154422_57956914766447

13043713_1717598248487752_50791236553114

13012661_1717598268487750_52168803384790

13062469_1717598295154414_62180934605538

13062150_1717598315154412_66614281281253

 

  • கருத்துக்கள உறவுகள்

thatstamil.com ன் சர்வே 

சட்டசபை தேர்தல்  பிரசாரத்தில் யார் சூப்பர்

As at (7am GMT)

ஜெயலலிதா - 25%
ஸ்டாலின் - 19%
வைகோ - 8%
விஜயகாந்த் - 5%
பிரேமலதா - 8%
சீமான் - 35%

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

thatstamil.com ன் சர்வே 

சட்டசபை தேர்தல்  பிரசாரத்தில் யார் சூப்பர்

As at (7am GMT)

ஜெயலலிதா - 25%
ஸ்டாலின் - 19%
வைகோ - 8%
விஜயகாந்த் - 5%
பிரேமலதா - 8%
சீமான் - 35%

சீமான்.... இம்முறை தேர்தலில், முக்கிய பங்கு வகிப்பார் என்றே எண்ணுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முகனூலில் வாசித்தது.

சன் டிவியில் சீமான், அதிமுகவை கிழிகிழி என்று கிழித்துக் கொண்டு இருந்தார். அட, இவர் எப்ப திமுக காரரானர் என்று யோசித்தேன்.

பேசிகொண்டிருக்கும் போதே, நிறுத்தி வேறு விடயம் போட்டார்கள்.

போர் அடித்ததால் சானலை மாத்தி, ஜெயா டிவி பக்கம் போனால், அங்கே அதே சீமான், இப்போது திமுகவை, கருணாநிதியை கிழிகிழி என்று கிழித்துக் கொண்டு இருந்தார்.

அட, இவர் எப்ப, தாவிப் பாய்ந்து அதிமுக காரரானர் என்று யோசித்தேன்.

சொல்லி வைத்தால் போல, பேசிகொண்டிருக்கும் போதே, நிறுத்தி வேறு விடயம் போட்டார்கள்.

பிறகு தான் புரிந்தது, சீமான் பேச்சில் தமக்கு தேவையான விடயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஊடக பலம் இல்லை என்று சொன்னாலும் கூட, இந்த வகையில் சீமான் மக்களை சென்றடைகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரை குறிவைக்கிறார் சீமான்? - அதிர வைக்கும் 6 வியூகங்கள்

தேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு. அப்படிதான் சீமானின் நாம் தமிழர் கட்சியும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அவ்வப்போது புதிய கட்சிகள் தோன்றினாலும், அவைகள் பழைய கட்சிகளை சற்று பலவீனப்படுத்தியே வந்துள்ளன. 1957-ம் ஆண்டு அண்ணாதுரை தி.மு.கவைத் தொடங்கியபோது, கம்யூனிஸ்ட்டுகள் பலவீனப்பட்டார்கள். 96-ம் ஆண்டு ம.தி.மு.க உதயமானபோது, தி.மு.கவுக்கு மாற்று என முன்வைக்கப்பட்டது. 

seeman300.jpg

89-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பா.ம.க மாற்று சக்தியாக முன்வைக்கப்பட்டது. கால ஓட்டத்தில் அதுவும் கரைந்துபோனது. 2006-ம் ஆண்டு தே.மு.தி.க கால் பதித்தபோது, பா.ம.கவும், ம.தி.மு.கவும் பலவீனப்பட்டது. அதுவே, பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் தொடங்கிய கட்சிகளை மக்கள் ஆராதிக்கவில்லை. 234 தொகுதிகளிலும் மாற்றை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு மக்கள் வரவேற்பைக் கொடுத்தே வந்துள்ளனர். அந்த வகையில், 'தமிழனா... திராவிடனா?' என்ற கோஷத்தோடு களமிறங்கும் சீமானும் கவனிக்கப்படுகிறாரா? என்ற கேள்விக்கு மே 19 பதில் தரும். 

புதிய மாற்று என தே.மு.தி.க வந்தபோது பா.ம.க, ம.தி.மு.கவை பலவீனப்படுத்த வேண்டும் என விஜயகாந்த் எண்ணவில்லை. அரசியல் ஓட்டத்தில் அனைத்தும் இயல்பாகவே நடந்தன. அண்ணா கால்பதித்தபோது கம்யூனிஸ்ட்டுகள் பலவீனமடைவார்கள் என அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த வகையில், 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க என பிரதான கட்சிகளுக்கு எதிராக சீமான் முன்வைக்கும் அரசியல் ஆச்சர்யத்தை அளிக்கிறது.

'தமிழ்நாட்டின் சிவசேனா, பாசிஸ்ட் சீமான்' என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதைக் கண்டு சீமான் கொதித்தாலும், பிரதான கட்சிகளுக்கு எதிராக அவர் முன்வைக்கும் வியூகங்கள் கவனிக்கப்பட வேண்டியவை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

1. மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 இடங்களில் போட்டியிடுகிறது. திருமாவும் கிருஷ்ணசாமியும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை. அவர்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில், பட்டியல் இனத்து மக்களின் வாக்குகளை, தமிழன் என்ற அடிப்படையில் கவர்வதற்காக, 20 அட்டவணை பிரிவு மக்களை பொதுத் தொகுதியில் நிறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் இதுபோன்று யாரும் இதுவரையில் செய்ததில்லை. ஓரிரு தொகுதிகளில் வேண்டுமானால் இதுபோல் செய்வார்கள். அதிரடியாக 20 பேரை களத்தில் நிறுத்துவது என்பது, திருமா போட்டியிடாத இடங்களில் உள்ள அவரது வாக்குகளை அப்படியே நாம் தமிழர் பக்கம் திருப்புவதற்காக மட்டும்தான். தமிழ்நாட்டில் 20 சதவீதம் பெரும்பான்மையாக உள்ள மக்களை நோக்கி சீமான் வைத்த முதல் குறி இது. 

2. பா.ம.கவை திட்டமிட்டு காலி செய்யும் வகையில் வன்னியர் வாக்குகளை குறிவைக்கிறார். மற்ற அரசியல் கட்சிகள் நிறுத்தாத இடங்களில் நாம் தமிழர் சார்பில் 36 வன்னியர்கள் போட்டியிடுகின்றனர். அதிலும், 'வீரப்பனுக்கு மணிமண்டபம்' என்ற சீமானின் கோரிக்கை வன்னியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. வீரப்பனை அரக்கன் என்ற ரஜினி அழைத்தபோது, ராமதாஸ் கொந்தளித்துப் போனார். பல இடங்களில் பா.ம.கவினர் ரஜினிக்கு எதிராக கொந்தளித்தார்கள். ஆனால் ஜெயலலிதா, வீரப்பனை அரக்கன் என்று சொன்னபோது, ராமதாஸ் எந்த மறுப்பையும் வெளிக்காட்டவில்லை. அ.தி.மு.கவோடு மோதல் போக்கையும் கடைபிடிக்கவில்லை. ராமதாஸ் கோட்டைவிட்ட இடத்தை பிடித்துக் கொண்டு, 'இப்போது அரக்கன் என்று ஜெயலலிதா சொல்வாரா?' என சவால்விடுகிறார் சீமான். நகர்ப்புற வாக்காளர்கள் பக்கம் அன்புமணி ஓடும்போது, கிராமப்புற வன்னியர்களை குறிவைத்து 25 வயதுள்ள இளைஞர்களை களத்தில் நிறுத்தியிருக்கிறார். இதன் மூலம் பா.ம.கவை பலவீனப்படுத்த முடியும் என நம்புகிறார் சீமான்.
3. " 'ரஜினி தமிழரே இல்லை  என விஜயகாந்த் சொல்லும்போது, 'நாங்கள்தான் மாற்று' எனச் சொல்ல vijayakanth300.jpgவிஜயகாந்த்துக்கு அருகதை இல்லை. 2011 தேர்தலில் மாற்று எனச் சொல்லும் தகுதியை விஜயகாந்த் இழந்துவிட்டார். இவர் சொல்லும் மாற்று என்பதே ஏமாற்றுதான்" எனப் பேசுகிறார் சீமான். 'ரஜினி நேர்மையானவர். மராட்டி என வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர். அவரை விமர்சிக்க விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது?' என குறிவைப்பதன் மூலம், விஜயகாந்த் எதிர்ப்பை கூர்மையாக்கி, ரஜினி வாக்குகளை தன்பக்கம் இழுக்கும் நோக்கம்தான். அதிலும், தே.மு.தி.கவும் பா.ம.கவும் அணிசேர்ந்த கட்சிகள்தான் என்ற பிரசாரத்தின் மூலம் வடபுலத்தில் உள்ள இவர்களுக்கு எதிரான வன்னியர் வாக்குகளை நாம் தமிழர் பக்கம் திருப்புகிறார். 

4. சீமானின் தி.மு.க-காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஈழ மக்களை படுகொலை செய்த கட்சி, ஊழல் கட்சி, தரகர்கள் கூட்டணி என கடுமையாக விமர்சனம் செய்கிறார். அதிலும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை தன்பக்கம் இழுக்க, 'காமராஜர் ஆட்சியை கொடுப்போம்' என்று சொல்வதும், காமராஜருக்குத் தளபதியாக இருந்த சிவாஜி கணேசனை தமிழர் என முன்னிறுத்துவதும் மிக முக்கியமான தந்திரங்கள். பா.ஜ.கவின் விநாயகர் கலாசாரத்தை எதிர்கொள்ள முருகனை முன்னிறுத்துகிறார். இதன்மூலம், 'இந்து வாக்கு வங்கியும் தன்பக்கம் வரும்' என்பதுதான். 

5. அ.தி.மு.கவின் வாக்காளர்களில் முக்குலத்தோர் கணிசமாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் தமிழர்களின் சுயமரியாதையைப் பற்றிப் பேசுகிறார். 'ரோட்டில் விழுந்தால் அ.தி.மு.க, வீட்டில் விழுந்தால் தி.மு.க' என தமிழன் சுயமரியாதை இழந்து தவிப்பதை நையாண்டி செய்கிறார். அ.தி.மு.க, தி.மு.க விமர்சனத்தைக் கூர்மையாக்குவதன் மூலம், 'நாம் தமிழரே மாற்று' என மக்கள் மத்தியில் பதிய வைக்க முயற்சிக்கிறார். தவிர, 'மக்கள் நலக் கூட்டணி என்பதே ஏமாற்றுதான். இவர்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்கிறது? திருமாவும் வைகோவும் முன்வைக்கும் ஈழ விடுதலையை சி.பி.எம், சி.பி.ஐ கட்சி ஏற்குமா? கொள்கையில்லாத கூட்டணி' என கடுமையாகத் தாக்குகிறார். 

6. தேர்தலில் மதுவிலக்கு மிக முக்கியமான முழக்கமாக இருக்கும்போது, 'செயற்கை மது கூடாது. இயற்கை மது வேண்டும்' என்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.கவும் அ.தி.மு.கவும் கொங்கு மண்டலம் மற்றும் ராமநாதபுரத்தில் பேசும்போது, 'கள்ளை பானமாக அறிவிப்போம்' என வாக்குக்காகச் சொல்வார்கள். ஆனால், சீமானோ, 'இயற்கை பானமாக கள்ளைக் கொண்டு வருவோம்' என உறுதியாக நிற்கிறார். இது பனைமரத் தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்கக் கூடிய வாக்குறுதியாக இருக்கிறது. 

தேர்தல் முடிவுக்குப் பிறகும் இரட்டை மெழுகுவர்த்தி பிரகாசமாக எரியுமா அல்லது பத்தோடு பதினொன்றாக கரைந்து போகுமா? என்பதற்கான விடை தெரிய இன்னும் முப்பது நாட்கள் இருக்கின்றன. 

-ஆ.விஜயானந்த்

http://www.vikatan.com/news/politics/62863-who-is-the-target-of-seeman-list-of-reasons.art

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா கூட்டத்துக்கு போனவர் ஒருவரின் நேர்காணல்.. மானத்தமிழனை அடிமையாக்கிய கூட்டம் திராவிடக்கூட்டம்..

 

*****************************************************************************************************

நேற்றைய பரமக்குடி கூட்டத்தில்..

13076760_199599060425446_611348782540259

13055585_199599083758777_414179429998408

13051494_199599107092108_207647900839991

13043451_199599173758768_588559567067868

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சையில் வாகனப்பரப்புரை..

13015153_1717594235154820_82732807877323

13015321_1717594251821485_71510123510046

13001056_1717594275154816_25605461920425

******************************************************************************

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உமா மகேஸ்வரி..

13077049_771940326238997_456163839102555

******************************************************************************

"நாம் தமிழர்" அரசியல் அடுத்த தலைமுறைக்கானது..

13055543_228885327467079_540372876307988

13000092_228885357467076_504142717770469

12991072_228885394133739_238629873170514

12990909_228885430800402_142691018434689

 

******************************************************************************

திரைக் காட்சியில் பரப்புரை..

13001311_1717623225151921_81971003445997

13015306_1717623241818586_82650796340350

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

******************************************************************************

எல்லாளன் யூசுப்.. இவர் திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர்.. இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் தமிழர்.

 

12108920_399835146881762_239301157830408

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

******************************************************************************

13076577_772012892898407_221746846211265

 

 

  • கருத்துக்கள உறவுகள்

mwtkba.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படம் விசுகு, நிச்சயம் இது வரும் தேர்தலில் நிறைவேற வேண்டும் என்பதே... என் பிரார்த்தனை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13055783_981087411975835_714738815925537

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்குக்கு ஒரு முதல்வர் வேட்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் தமிழகத் தேர்தல் களத்தில். வாரமொரு முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ் அலசலாம். அதில் முதல் வாரம்.... வெற்றிவேல் வீரவேல் சீமான்!

 சீமான் மீது ஏன் இந்த கவனம்?

குரலால் கூட்டம் கூட்ட ஒரு காலத்தில் கருணாநிதி. அடுத்து வந்தார் வைகோ. இதோ இது சீமான் காலம்!

தமிழ்நாட்டு மேடையில் தெள்ளு தமிழ் வாடை பரவ சீமான் காரணமாய் அமைந்ததுதான் அவரது அரசியலின் முதல் வெற்றி. தமிழர்கள் உணர்ச்சிமயமானவர்கள். அதனால், உணர்ச்சி வார்த்தைகளை முறையான உச்சரிப்புடன் உரக்கச் சொல்லும் தலைவர்களுக்குப் பின்னால் உடனடியாக அணி சேர்ந்து விடுவார்கள். சீமானின் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவரது கூட்டத்துக்குச் செல்பவர்களைவிட அவரது தமிழ் பேச்சை கேட்கலாம் என்று செல்பவர்களே அதிகம்.

சீமானின் ப்ளஸ்!

தேர்தல் அரசியல் என்பதே தொகுதி பறிக்கும் அரசியல்தான். அந்த அரசியலுக்குள் இனத் தூய்மையும் இன வெறுப்பும் பேசுவதே மற்றவரை ஈர்க்கும் உத்திதான்.

அபத்த அடிப்படை!

கருணாநிதி எதிர்ப்பில் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்டமைத்தது போல, இஸ்லாமிய எதிர்ப்பில் பாரதிய ஜனதா உயிர் வாழ்வது போல, ‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்ற கருத்தாக்கத்தில் தன்னுடைய அரசியலை நிலை நிறுத்திக் கொள்ள சீமான் திட்டமிட்டுள்ளார்.
 
‘‘தமிழர்கள் தங்களது உடமைகளையும் உரிமைகளையும் திராவிட கட்சிகளிடம் பறி கொடுத்து வருகிறார்கள். அதனை மீட்கவே நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இது தேர்தல் அல்ல. அடிமை தேசிய இனத்தின் உரிமை மீட்பு போர்’’ என்று பிரகடனப்படுத்தி உள்ள சீமான், ‘‘எந்தவொரு தத்துவமும் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முடியாது என்ற தத்துவத்தின் கீழ் திராவிட இயக்கம் அழியும்’’ என்ற கண்டுபிடிப்பையும் செய்துள்ளார். இந்த புது தத்துவத்தை எந்த போதியில் கண்டடைந்தாரோ! மார்க்சியத்தின் வயதை யாராவது அவருக்கு படித்துச் சொல்லுங்கள். வயது மூப்பு வந்ததும் செத்துப் போக மனித உடல் அல்ல தத்துவம். காலங்கள் தோறும் புதுப்புது பொழிப்புரைகளால் உயிர்ப்பிக்கப்படுவதே தத்துவம். அந்த புரிதலே இல்லாமல் தத்துவத்துக்கு வைரவிழாவும் மணிவிழாவும் கொண்டாடுவது கோமாளித்தனம்.

திராவிடம் என்பதை இனச்சொல்லாக பெரியார் கட்டமைக்கவில்லை. ஆரியம் என்ற எதிர் சிந்தனைக்கு மாற்று சிந்தனையாக வைத்ததே திராவிடம். அந்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஒரு குடும்பத்தின் சொத்தாக தி.மு.க-வையும், ஒரு தனி மனுஷியின் விளையாட்டுப் பொம்மையாக அ.தி.மு.க-வையும் மாற்றி காட்டிய கீழ்த்தர அரசியலே தமிழகத்தின் இன்றைய அரசியல். கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு பண மலைகளின் அதிகாரப் பசி அரசியலை அம்பலப்படுத்தாமல் அவர்கள் இருவருக்குமே, ‘தத்துவார்த்த முகமூடி’ போட்டு மறைத்துக் குழப்புவதால் தான் சீமான் பேச்சு பொதுமக்களுக்கு புரியாமல் அந்நியமாய் இருக்கிறது.

சீமானின் மைனஸ்!

இந்த குழப்பம் போதாது என்று பச்சை துண்டு, பச்சை வேட்டியுடன் கையில் வேலுடன் கிளம்பிவிட்டார் சீமான். பல ஆண்டுகளுக்கு முன்னர் பெரியாரின் கைத்தடியை பிடித்திருந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரபாகரனின் துப்பாக்கியை ஏந்தியவர், இப்போது முருகனின் வேலை ஏந்தியுள்ளார். ‘முருகன் தமிழ் கடவுள், தமிழர் பண்பாட்டை மீட்கப் போகிறோம்’ என்கிறார். போகட்டும் - மீட்கட்டும். ‘முப்பாட்டன் முருகன்! எம்பாட்டன் சிவன்’ என்றால் என்ன பொருள்? முருகனுக்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு? இவர் சொல்லும் முருகன், மாயோனாக இருந்தபோது சிவன் என்ற அப்பா கிடையாதே? பழசை மீட்கிறோம் என்றால் பழசாக அல்லவா மீட்க வேண்டும். என்ன புரிதல் இது? இது தவறான புரிதல் அல்ல. தெளிவான குழப்பம்!

அழகான தமிழும், உணர்ச்சிமயமான குரலும், துடிப்பான இளைஞர்களும் இருந்தும் குறிப்பிட்ட சிலரைத்தாண்டி, பலரை சீமான் சென்றடைய முடியாமல் போவதற்கு தடைகற்கள் இவை. பெரியார் பிறந்த தினம் கொண்டாடி முடித்துவிட்டு கிராமப்பூசாரிகள் மாநாடு நடத்துவமும்,  ஏகாதிபத்தியங்களுக்கு சிம்ம சொப்பனமான சேகுவேரா படத்தோடு ஹிட்லர் படத்தை வைப்பதும், முத்துராமலிங்கதேவருக்கு முதல் மாதம் மாலைபோட்டு, இம்மானுவேல் சேகரனுக்கு இரண்டாம் மாதம் மாலை போடுவதும் , ‘பூஜா’வை வைத்து படம் எடுத்துவிட்டு, பின்னர் ராஜபக்சேவை எதிர்ப்பதும், மாதவனை, ‘தம்பி’யாக உருவாக்கிவிட்டு விஷால் ரெட்டியை வீழ்த்தக் கிளம்புவதும்,  வட இந்திய முதலாளிகள் மீது வெறுப்பைக் கிளப்பிவிட்டு வைகுண்டராஜனோடு சிரிப்பதும் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றான அரசியலாக எப்படி மாறும்?

சினிமாக்காரர்கள் நாட்டை ஆளக்கூடாது என்கிறார். சரிதான். ஆனால் இவர் யார்? 2008-க்கு முன்பு வரை எங்கே இருந்தார்? பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள் (1997 - 2008) என்று Non Tamizhar - கள் பலரை வைத்து படம் எடுத்த இயக்குநர்தானே? சினிமாக்காரர்கள் நடத்திய ராமேஸ்வரம் ஆர்ப்பாட்டத்தில் சினம் கொண்டு பேசியதால் கைதாகி, பிறகு ‘நாம் தமிழர்’ தொடங்கியவர்தானே. ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்ற சீமான் குரலை மறக்க முடியுமா? ‘வாழ்த்துக்கள்’ என்ற தனது படத்தின் பெயருக்கு ‘க்’ வருமா வராதா என்று கருணாநிதியிடம் ஐயம் கேட்ட காட்சிகள் மறக்கத்தக்கதா? எனவே, பல மாற்றங்கள் காட்டியவர்தான் இன்று புதுமாற்றம் காட்ட வந்துள்ளார்.

வரட்டும் தவறு இல்லை. வந்தவர் ஏதாவது ஒரு கட்சியுடன் அண்டிப் போய்விடாமல் ஐந்து, பத்து இடங்களுக்கு கை ஏந்தாமல்... தகுதி இல்லாதவரை முதலமைச்சர் ஆக்க, இல்லாத தகுதி எல்லாம் இருப்பதாக இட்டுக் கட்டி பேசித் திரியாமல்... தன்னையே நம்பி களத்தில் நிற்கும் தைரியத்தை பாராட்டவே வேண்டும்.

‘‘நமக்கு என்னதான் வாக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமே’’ என்று ஏதோ ஒரு இடத்தில் சீமான் சொல்லி இருக்கிறார். இந்த எதார்த்தம் ஒரு மனிதனுக்கு இருக்கத்தானே வேண்டும். இன்னும் கொஞ்சம் யதார்த்தத்துக்கு சீமான் வர வேண்டும். தடித்த வார்த்தைகளை விடுத்து தணிக்கும் தமிழை அவர் கை கொள்ள வேண்டும். அனைத்து அரசியல் சக்திகளையும் சக பயணிகளாக எதிர்கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். அடுத்தவரை அச்சுறுத்துவதற்காக தனது ரத்தத்தை கொதிநிலையில் வைத்திருப்பது எதிரிகளுக்கு அல்ல; அவருக்கே ஆபத்தானது. கருத்துக்களை விதையுங்கள். காலம் இருக்கிறது.

-ப.திருமாவேலன்

http://www.vikatan.com/news/politics/62933-plus-and-minus-of-chief-minister-candidate-seeman.art

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சற்று பயத்தில் எழுதிய கட்டுரை போலிருக்கு.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, இசைக்கலைஞன் said:

சற்று பயத்தில் எழுதிய கட்டுரை போலிருக்கு.. tw_blush:

அப்படித் தான் நானும் நினைத்தேன். கடைசி வசனத்தினை பாருங்கள்.

காலம் இருக்கிறது...( அய்யா அல்லது அம்மா, இன்னொரு முறை ஆட்சி பீடம் போகட்டுமே என்று சொல்வது போல உள்ளது. )

சீமான், பாமக  வையோ, விசியையோ தாக்குவதில்லையே... நேச சக்தி என்றே சொல்கிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இசைக்கலைஞன் said:

சற்று பயத்தில் எழுதிய கட்டுரை போலிருக்கு.. tw_blush:

சீமானின்.... தேர்தல் வியூகமும், தூரப் பார்வையும் விசாலமானது.
அதற்கு... அவர், நான்கு... ஆண்டுகளுக்கு முன்பே.... தயார் படுத்தி விட்டார்.
அது தான்.... இன்றைய சீமானின், தயார் படுத்தப் பட்ட  இளைஞர்களின்    செந்தமிழ் முழக்கங்கள்.
சீமானைப் பார்த்து....  ஜெயா, கருணா, வைகோ அணி எவருமே.... வாய் திறப்பதில்லை.
ரஜனி காந்தியை.... கூட, விஷயகாந்து விமர்ச்சுப்  போட்டாரு,  
சீமானை.... விமர்சிக்க, தமிழ் நாட்டில் யாருக்கும்.... "தில்" இல்லை என்றே நினைக்கின்றேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

சீமானின்.... தேர்தல் வியூகமும், தூரப் பார்வையும் விசாலமானது.
அதற்கு... அவர், நான்கு... ஆண்டுகளுக்கு முன்பே.... தயார் படுத்தி விட்டார்.
அது தான்.... இன்றைய சீமானின், தயார் படுத்தப் பட்ட  இளைஞர்களின்    செந்தமிழ் முழக்கங்கள்.
சீமானைப் பார்த்து....  ஜெயா, கருணா, வைகோ அணி எவருமே.... வாய் திறப்பதில்லை.
ரஜனி காந்தியை.... கூட, விஷயகாந்து விமர்ச்சுப்  போட்டாரு,  
சீமானை.... விமர்சிக்க, தமிழ் நாட்டில் யாருக்கும்.... "தில்" இல்லை என்றே நினைக்கின்றேன்.  

ஜல்லிக் கட்டுக்கு பொன் ராதாகிருஷ்ணன் முயன்றாரே என்று கேட்கப் பட்ட போது, கவனமாக, அண்ணன் முடிந்தவரை முயன்றார், எனக்குள் ஓடும் ரத்தம் தானே அங்கும் ஓடுது. துடிப்பார் தானே என்னும் போது, எப்படி அவர் தேர்தல் மேடையில் சீமானை எதிர்க்க முடியும்.

புத்திசாலிதனமான வியூகம்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.