Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளியேன் : ஜனாதிபதி திட்டவட்டம்

Featured Replies

மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளியேன் : ஜனாதிபதி திட்டவட்டம்
மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளியேன் : ஜனாதிபதி திட்டவட்டம்

நாட்டில் வாழும் அப்பாவி மக்களின் நலன்களைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்குத் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுகததாச உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற அரச சேவை முகாமைத்துவ உதவியாளர்கள் 2700 பேர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டும் வகையில் குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

மக்களுக்காக அவர்களது நலநோம்புகை நடவடிக்கைகளுக்கு அரசு ஒதுக்கும் ஒவ்வொரு சதத்தையும் முதலீடு செய்யும் வகையில் ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நலநோம்புகை முறைமைகளில் குறைபாடுகள் உள்ளன. அக்குறைபாடுகளை நான் அமைச்சருடன் கலந்துரையாடி சரி செய்யவுள்ளேன்.தங்களிடம் சேவைகளை நாடிவரும் மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் அரச சேவையை ஊழல், மோசடி, வீண்விரயம் இல்லாத ஒரு சேவையாகக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்போடு உள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரச சேவை முகாமைத்துவத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய மேலும் 1061 அதிகாரிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அந்தவகையில். பல்வேறு அமைச்சுகள் திணைக்களங்களில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான 80 வீத வெற்றிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ளது.

அரச நிர்வாகம், முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, அமைச்சின் செயலாளர் ஜே தடல்லகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

http://onlineuthayan.com/news/1062

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை நாளும் மகிந்தவின் அரசாங்கத்தில் இருந்தவர்.... யார் யார் மக்களின் நலன்களைச் சுரண்டினார்களோ...... அவர்களையெல்லாம் அறிந்தும்.... அவர்களையே இப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் மைத்திரி அங்கிள்......
தானும் மக்களை ஏமாற்ற வெளிக்கிட்டு விட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி பெண்ணே.....!! :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.