Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். நீதிமன்ற முன் வீதி பாவனைக்குத் தடை

Featured Replies

யாழ். நீதிமன்ற முன் வீதி பாவனைக்குத் தடை
யாழ். நீதிமன்ற முன் வீதி பாவனைக்குத் தடை

யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் முன் வீதியினை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான பிணை மனு விண்ணப்பம் கடந்த 7ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்த வீதியினை 150 மீற்றர் வரை மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தமுடியாது எனவும் நீதிமன்ற பகுதியில் 200 மீற்றர் பகுதிக்குள் பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். 

இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

http://onlineuthayan.com/news/1155

  • தொடங்கியவர்
ரௌடித்தனத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதிபதி இளஞ்செழியனின் எச்சரிக்கை!
 


 
மாவட்ட நீதிபதி அல்லது அரச அதிபர் தளத்தில் நின்று சட்டத்தைப் பயன்படுத்தி வன்செயலில் ஈடுபடும் கும்பலைக் கலைப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என ரௌடித்தனத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை
 
வன்முறைகளில் அல்லது வன்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவினரை, சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பொலிஸார் அல்லது படையினரின் உதவிகொண்டு கலைப்பதற்கு சட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
 
இத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ரௌடித்தனத்தில் ஈடுபடும் இளைஞர்கள் இடமளிக்கக் கூடாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தியமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை என்ற குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட 20 வழக்குகளின் சந்தேக நபர்களுக்கான பிணை விசாரணையின் முடிவில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பின்போதே இந்த எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றது. கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ள இந்த வழக்குகளில் நீதிபதி இளஞ்செழியன் அளித்துள்ள தீர்ப்பில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
 
- வன்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று, அந்தக் கும்பலைக் கலைப்பதற்கு, மாவட்ட நீதிவானுக்கும் அரச அதிபருக்கும் குற்றவியல் நடவடி சட்டக் கோவையின் 95ஆம் பிரிவின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொலிஸ் அத்தியட்சகரும் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டளை பிறப்பிக்க முடியும்.
 
இந்தச் சட்ட விதியின்படி, நிலைமைக்கு அமைய, தேவை ஏற்பட்டால், பொலிஸாரே கலகக்கார்களை அல்லது வன்செயல் கும்பலைக் கலைப்பதற்கான கட்டளையைச் செயற்படத்தும்படி உத்தரவிடுவதற்கு மாவட்ட நீதிபதிக்கும், அரசாங்க அதிபருக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
 
தேவை ஏற்படின் இராணுவத்தை வரவழைத்து கட்டளையைச் செயற்படுத்தும்படி, நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்படும் பட்சத்தில், பொதுமக்களுக்குக்கூட, கட்டளை பிறப்பித்து வன்செயலாளரைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது.
 
நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது நீதிபதி மற்றும் அரசாங்க அதிபர்களினால் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் நாட்டைவிட்டு சென்றதன் பின்னர் மாவட்ட நீதிபதிகளும், அரசாங்க அதிபர்களும் இந்தச் சட்டத்தை நடைமுடைப்படுத்துவதில்லை. ஏனெனில் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் பிரகாரம், பாதுகாப்புப் படையினருக்கும், பொலிசாருக்கும் இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆயினும் குற்றவியல் நடவடிக்கைக் கோவையின் 95 ஆம் பிரிவின் கீழ் மாவட்ட நீதிபதிக்கும், அரசாங்க அதிபருக்கும் கலகம் ஏற்பட்டால், அல்லது வன்செயல்கள் ஏற்பட்டால், அவற்றில் ஈடுபட்டிருக்கும் கும்பல்களை, சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பொலிஸாருக்கு அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டளை பிறப்பித்து கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கான அதிகாரம் இருக்கின்றது.
 
ஆகவே, இவ்வாறு வன்செயல்களில் ஈடுபடுபவர்களைக் கலைப்பதற்கான சட்டத்தை பயன்படுத்தும் நிலைக்கு மாவட்ட நீதிபதியையோ அல்லது அரசாங்க அதிபரையோ தள்ள வேண்டாம் என்று யாழ்ப்பாணத்தில் ரெளடித்தனங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு, இந்த பிணை விசாரணை வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில், நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.
 
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
யாழ். நீதிமன்றத் தாக்குதல் வழக்கு: சந்தேக நபர்களுக்குக் கடும் நிபந்தனையுடன் பிணை
யாழ். நீதிமன்றத் தாக்குதல் வழக்கு: சந்தேக நபர்களுக்குக் கடும் நிபந்தனையுடன் பிணை

யாழ். நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 20 வழக்குகளில், கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களுக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கியுள்ளார். 

இந்த வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட 20 வழக்குகள் நீதிபதி இளஞ்செழியன், முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என சந்தேக நபர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், தங்களுக்கு முன்னர் குற்றம் செய்தது என்பதற்கான தீர்ப்பு எதுவுமில்லை எனவும், அத்தகைய வழக்குகள் எதுவும் நிலுவையிலுமில்லை எனவும் இதுதான் ஒரேயொரு வழக்கு எனவும் வித்தியாவின் கொலைக்கு அனுதாபம் தெரிவிக்க வந்து, மறியல் சாலையில் இருப்பதாக சந்தேக நபர்கள் சார்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. 

சந்தேக நபர்கள் சார்பில் கூறப்பட்ட அனைத்தையும் விடயங்களையும் பரிசீலனை செய்த நீதிபதி சந்தேக நபர்களுக்கு கடும் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கினார். 

அந்தப் பிணை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கின்றது. இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களின் கடவுச்சீட்டுக்களைப் பறிமுதல் செய்வதற்கு உத்தரவிடப்படுகின்றது. அத்துடன் இந்த சந்தேக நபர்களை நாட்டை விட்டு வேறு ஏதேனும் வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது என கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டாளருக்குக் கட்டளையிடுகின்றது. 

சந்தேக நபர்களை பிணையில் அழைத்துச் செல்வதற்கு தலா ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணையாளிகள் கையெழுத்திட வேண்டும். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிக்கும் பகல் 12 மணிக்கும் இடையில் சந்தேக நபர்கள் யாழ் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பிணை உத்தரவை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் சந்தேக நபர்களை நோக்கி ‘யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பிலான 20 வழக்குகளினதும் விசாரணைகளில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்கு 20 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனையும், அரச சொத்துக்களுக்கு ஏற்படுத்திய சேதம் தொடர்பான மதிப்பீட்டில் 3 மடங்கு தொகைப் பணம் நட்டயீடாக செலுத்த வேண்டும் என்ற தண்டமும் வழங்குவதற்கு சட்டம் பரிந்துரை செய்கின்றது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்’ என விசேடமாக சுட்டிக்காட்டியுள்ளார். 

http://onlineuthayan.com/news/1214

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியிலும் வீதித்தடையா...??! :rolleyes:

நல்லாட்சியிலும் வீதித்தடையா...??! :rolleyes:

இவ்வீதி வித்யா கொலை வழக்கு போன்ற பாரதூரமான வழக்குகள் நடை பெறும் போதெல்லாம் மூடப்பட்டே வந்தது - அதாவது நீதிமன்றத் தாக்குதலின் பின்னர். எப்போது வீதி திறக்கும், மூடப்படும் என்பது தெரியாமல் இருப்பதை விட மூடி இருக்கலாம். மக்களிற்கு இதனால் பாதிப்பு பெரிதாக இல்லை என்பதை இவ்வீதியின் அமைவிடத்தை தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

என்ன சுப்பிரமணியம் பூங்காவின் சிறிய வாசல் ஒன்று இந்த வீதியில்தான் உள்ளது. அட போங்கையா எவன் சுப்பிரமணியம் பூங்காவிற்கு இப்போதெல்லாம் விளையாடப் போறாங்க. எல்லா சிறுவர்களும் கம்பியூட்டர், ஐபோன், ஐபாட், ரீவி புடை சூழ வீட்டிலதாங்க. வீட்டுக்கு தெரியாம இளமையை நுகரும் சின்னஞ் சிறுசுகள்தான் அதிகம். அப்புறம் என்னை மாதிரி சிலர் சிறு வயது நினைவுகளை மீட்ட... அதுக்குத்தானே 3 பெரிய வாசல்கள் இருக்கே.

கவலையை விடுங்க நெடுக்ஸ். இளஞ்செழியன் ஏதோ நல்லதுதான் பண்றாப்போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.