Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்ணைக்கு வாங்க...

Featured Replies

article_1444882794-pannai-(1).jpg

 

யாழ்ப்பாணம் கோட்டை பகுதியின் பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரை பகுதி, அழகாக்கப்பட்டு பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டுள்ளதால், மாலை வேளைகளில் பெருமளவான மக்கள் அங்குச் சென்று, கடற்கரை அழகை இரசிப்பதோடு அங்கு நடைபயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ், பண்ணையை சுற்றுலா இடமாக மாற்றும் நடவடிக்கை கடந்த 2013ஆம் ஆண்டு 23 மில்லியன் ரூபாய் செலவில் முன்னனெடுக்கப்பட்டது.

தற்போது பெரும்பாலான வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அங்கு பெருமளவான பொதுமக்கள் ஒன்றுகூடுகின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தும் வகையில், பல சம்பவங்கள் இப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

இப்பகுதிக்கு இரவு வேளைகளில் வரும் கும்பல்கள், அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்து இருட்டினுள் மது அருந்தி விட்டு மது போத்தல்கள், உணவுகள் என்பவற்றை அப்பகுதிகளில் விட்டுவிட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய செல்வோர், பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

நடைபாதையில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களை செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் பலகை நாட்டப்பட்டுள்ள போதிலும், அங்கு வருபவர்கள், நடைபாதையில் அவற்றை செலுத்துகின்றார்கள். நடைபாதைகள் அலங்கார கற்களால் அமைக்கப்பட்டு உள்ளதால் அவற்றின் மீது மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதால், அந்த நடைபாதை சேதத்துக்குள்ளாகியும் வருகின்றது.

யாழ்ப்பாண மக்களுக்கு சரியான பொழுதுபோக்கு இடங்கள் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள பண்ணைக் கடற்கரையை அழகுபடுத்தும் போது, அதனை பேணிப்பாதுகாப்பது எமது கடமையாகும்.

article_1444882808-pannai-(2).jpg

article_1444882817-pannai-(3).jpg

article_1444882828-pannai-(6).jpg

article_1444882840-pannai-(8).jpg

article_1444882872-pannai-(11).jpg

article_1444882851-pannai-(10).jpg

article_1444882885-pannai-(13).jpg

 

http://www.tamilmirror.lk/156588#sthash.Ngh5o0ot.dpuf

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன்,

ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யாழில் எழுதிய கவிதை...!

அன்றும் இன்றும் என்னோடு பின்னிப் பிணைந்து விட்ட பாலம் அது...!

எத்தனையோ பெரிய, நீண்ட பாலங்களைப் பார்த்திருக்கிறேன்!

ஆனால் இந்தப் பாலம் மட்டுமே என்னைக் கவர்ந்தது!

அதைத் தான் மண் வாசனை என்று கூறுகிறார்களோ?

நினைவூட்டலுக்கு நன்றி..!

 

பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள்

தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க,

கரை சேர்ந்த மகரந்தங்களின் வாடை

கடற்காற்றில் கலந்து,

பூங்கறை நாற்றமாய்க் கடல் மணம் பரப்ப

பச்சை படிந்து போன தந்திக் கம்பிகளில்

கடற்காற்று மீட்டிய சங்கீதம்

அந்த மாலை நேரத்துப்,

பறவைகளின் ஒலியோடு கலந்தது!

 

மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில்,

களங்கண்டித் தடிகளின் உச்சிகளில்

கடற்காகங்கள் தங்கள் சிறகுகளை

அகல விரித்துத் தவம் செய்ய,

மேல் வானத்துச் சூரியன்

தங்கத் தகடாகி, கடற் கன்னியின் மடியில்

சங்கமிக்கத் தயாராகினான்!

 

பாலத்தின் அடித்தளத்து மதகுகளின்

மேலே குந்தியிருந்த மீனவர்களின்

மூங்கில் தடித் தூண்டில்களில்

தொங்கிய மிதப்புக் கட்டைகளுடன்

அலைகள் மேல் தவழ்ந்த முரல் மீன்கள்,

ஓடிப் பிடித்துக் கண்ணாமூச்சி

விளையாடிக்கொண்டிருந்தன!

 

உன் கரையோரக் கண்ணா மரங்களின்

ஆகாயம் பார்த்த வேர்களின் மீது

ஓடி விளையாடிய சிறு நண்டுகள்

பாடசாலை முடிந்து

வீடு நோக்கி ஓடும் சிறுவர்களைப் போல

நீலப் பாவாடையின் குறுக்கே ஓடும்

கோலக் கரை போன்ற உந்தன் கற்களில்

ஒளிந்து கொள்ள இடம் தேடின!

 

பேட்டுக் கோழியைச் சுற்றித் திரிந்த

கோழிக் குஞ்சுகளாகக் கிடந்த

தீவுக் கூட்டங்களைத் தாயோடு இணைக்கும்

மூல வேராகி, இதயத்தின் மூல நாடியாகி

கல்லில் நாருரித்த எங்களுக்கு

நெல்லில் இருந்து நெருப்புக் குச்சி வரை,

பொருளே இல்லாதவர்களுக்குப்

பொருளாதாரம் காட்டிய பாதை நீ!

 

நிரை நிரையாகக்

கரையோரங்களின் இருந்த

வெள்ளைக் கற்கள் மட்டுமே

வழி காட்டி விளக்குகளாகப்

பேருந்தின் வாசல்களில் தொங்கியபடி

ஊர் சேரும் வரை.

உயிரைக் கையில் பிடித்த படி

உன் மடியில் ஊர்ந்த நாட்கள்

இன்றும் நினைவுகளில்!

 

பள்ளிப் படிப்பற்றுத்

துள்ளித் திரிந்த தலைமுறைக்குக்

கல்லூரி காட்டிய உன்னால்,

மூடிக் கிடந்த எங்கள் கதவுகள்

அகலத் திறந்து, நாங்கள்

அகிலம் எல்லாம் பரந்து விட

நீ மட்டும் எரிந்துபோன மெழுகுவர்த்தியாய்,

எல்லோரையும் கரையேற்றி விட்ட

கற்குவியல் பாதையாய் இன்னும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை புங்கை...!

பண்ணைப் பாலத்தின் ஏராளமான நினைவுகள் என் மனதிலும் பசுமையாய் இருக்கு ..., எதைச் சொல்ல  எதை விட..., நினைத்தால் கண்ணில் நீர் நிறையுது...!

எல்லா தலைமுறைகளுக்கும் இனிப்பான நினைவுகளை தந்த பாலம் என் தலைமுறைக்கு மட்டும் உவர்ப்பான நினைவுகளை தருகின்றது.
 
90 களின் ஆரம்பத்தில் கோட்டையில் நிலை கொண்டு இருந்த இராணுவத்தினைரை புலிகள் மூன்று  பக்கம் சுற்றி வளைத்து முற்றுகை இட்டு இருக்க நாலாம் பக்கமாக இப் பாலம் இராணுவத்திற்கு ஒரு அரணாக இருந்தது. தரை வழி தொடர்பின் மூலம் இராணுவத்தினரை மீட்க இப் பாலம் மட்டுமே ஒரே வழியாக இருந்தது. தினமும் ஷெல் வீச்சின் மூலம் தமிழ் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருந்த கோட்டை இராணுவம் ஈற்றில் இவ் வழியினூடாகவே மீட்கப்பட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபனின் கனவுகளில் ஒன்றான கோட்டையில் எங்கள் கொடி பறக்கவேண்டும் என்ற கூற்றுக்கு அமைய  நிழலி குறிப்பிட்ட அன்றைய ஒரு பொழுதில் கோட்டையில் புலிகளின் கொடி ஏற்றப்பட்டது.

அந்த வாரம் அல்லது அதே நாளில் திலீபன் அண்ணாவின் மறைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டதாக ஞாபகம். நானும் நண்பர்களும் குழாமாக  உணர்ச்சிப் பெருக்குடன் கொடி ஏற்றப்பட்ட ஒரு ஒரு சில மணி நேரத்துக்குள் சைக்கில் சவாரியாய் சென்று, கோட்டை சுற்றுப்பகுதி வரை சென்று கொடியை தரிசித்து.புலிகளுடன் மகிழ்வாய் அளவளாவி திரும்பிய பொன்னான நினைவுகள்....

தலை நிமிர்ந்து நின்ற நாட்களவை ..

 

ஆதவன்,

ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யாழில் எழுதிய கவிதை...!

அன்றும் இன்றும் என்னோடு பின்னிப் பிணைந்து விட்ட பாலம் அது...!

எத்தனையோ பெரிய, நீண்ட பாலங்களைப் பார்த்திருக்கிறேன்!

ஆனால் இந்தப் பாலம் மட்டுமே என்னைக் கவர்ந்தது!

அதைத் தான் மண் வாசனை என்று கூறுகிறார்களோ?

நினைவூட்டலுக்கு நன்றி..!

 

பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள்

தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க,

கரை சேர்ந்த மகரந்தங்களின் வாடை

கடற்காற்றில் கலந்து,

பூங்கறை நாற்றமாய்க் கடல் மணம் பரப்ப

பச்சை படிந்து போன தந்திக் கம்பிகளில்

கடற்காற்று மீட்டிய சங்கீதம்

அந்த மாலை நேரத்துப்,

பறவைகளின் ஒலியோடு கலந்தது!

 

மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில்,

களங்கண்டித் தடிகளின் உச்சிகளில்

கடற்காகங்கள் தங்கள் சிறகுகளை

அகல விரித்துத் தவம் செய்ய,

மேல் வானத்துச் சூரியன்

தங்கத் தகடாகி, கடற் கன்னியின் மடியில்

சங்கமிக்கத் தயாராகினான்!

 

பாலத்தின் அடித்தளத்து மதகுகளின்

மேலே குந்தியிருந்த மீனவர்களின்

மூங்கில் தடித் தூண்டில்களில்

தொங்கிய மிதப்புக் கட்டைகளுடன்

அலைகள் மேல் தவழ்ந்த முரல் மீன்கள்,

ஓடிப் பிடித்துக் கண்ணாமூச்சி

விளையாடிக்கொண்டிருந்தன!

 

உன் கரையோரக் கண்ணா மரங்களின்

ஆகாயம் பார்த்த வேர்களின் மீது

ஓடி விளையாடிய சிறு நண்டுகள்

பாடசாலை முடிந்து

வீடு நோக்கி ஓடும் சிறுவர்களைப் போல

நீலப் பாவாடையின் குறுக்கே ஓடும்

கோலக் கரை போன்ற உந்தன் கற்களில்

ஒளிந்து கொள்ள இடம் தேடின!

 

பேட்டுக் கோழியைச் சுற்றித் திரிந்த

கோழிக் குஞ்சுகளாகக் கிடந்த

தீவுக் கூட்டங்களைத் தாயோடு இணைக்கும்

மூல வேராகி, இதயத்தின் மூல நாடியாகி

கல்லில் நாருரித்த எங்களுக்கு

நெல்லில் இருந்து நெருப்புக் குச்சி வரை,

பொருளே இல்லாதவர்களுக்குப்

பொருளாதாரம் காட்டிய பாதை நீ!

 

நிரை நிரையாகக்

கரையோரங்களின் இருந்த

வெள்ளைக் கற்கள் மட்டுமே

வழி காட்டி விளக்குகளாகப்

பேருந்தின் வாசல்களில் தொங்கியபடி

ஊர் சேரும் வரை.

உயிரைக் கையில் பிடித்த படி

உன் மடியில் ஊர்ந்த நாட்கள்

இன்றும் நினைவுகளில்!

 

பள்ளிப் படிப்பற்றுத்

துள்ளித் திரிந்த தலைமுறைக்குக்

கல்லூரி காட்டிய உன்னால்,

மூடிக் கிடந்த எங்கள் கதவுகள்

அகலத் திறந்து, நாங்கள்

அகிலம் எல்லாம் பரந்து விட

நீ மட்டும் எரிந்துபோன மெழுகுவர்த்தியாய்,

எல்லோரையும் கரையேற்றி விட்ட

கற்குவியல் பாதையாய் இன்னும்!!!

நெல்லில் இருந்து நெருப்புக் குச்சி வரை,

பொருளே இல்லாதவர்களுக்குப்

பொருளாதாரம் காட்டிய பாதை நீ! ...

அருமையான வரிகள் புங்கை... கண்கள் பனிக்கின்றன..., ஏனோ]ஒரு வெறுமையும் சூழ்ந்துக் கொண்டது என்னை...

Edited by Sasi_varnam

article_1444047899-a.jpg

யாழ்ப்பாணத்தில், மாலைப்பொழுது இயற்கை அழகை இரசிப்பதற்கு ஏற்ற இடங்களுள் ஒன்றாக பண்ணை கடற்கரை விளங்கி வருகின்றது.

http://www.yarl.com/forum3/topic/151042-அழகான-சில-படங்கள்/?do=findComment&comment=1139610

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.