Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அவர்கள் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைமைத்துவமும் ஆளுமையும் மிக்க போராளி தமிழினி! – இறுதி நிகழ்வில் மாவை சேனாதிராஜா உரை

தலைமைத்துவமும் ஆளுமையும் மிக்க போராளி தமிழினி! – இறுதி நிகழ்வில் மாவை சேனாதிராஜா உரை

 

நல்ல அரசியல் அறிவும் ஆற்றலும் நிறைந்தவராக தமிழினி விளங்கினார். தலைமைத்துவமும் ஆளுமையும் கொண்டிருந்தார். நிறைந்த கொள்கைப்பற்றும் இலட்சிய தாகமும் தமிழினியின் உயிர்மூச்சாக இருந்தது. மாறாத நோயால் இவர் உயிர் பிரிந்துவிட்டாலும் என்றும் தமிழர் மனதில் நினைவிலிருப்பார்.

இவ்வாறு இன்று பரந்தனில் இடம்பெற்றுவரும் தமிழினியின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (ஜெயக்குமரன் சிவகாமி) சுகவீனம் காரணமாக கொழும்பு, மஹரகம வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை மரணமானார். அவரது பூதவுடல் கிளிநொச்சி, பரந்தனில் (இல.143, 8ஆம் ஒழுங்கை, சிவபுரம் குடியிருப்பு) உள்ள அவரின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் மாலையிலிருந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது பூதவுடலுக்கு தமிழ் அரசியல்வாதிகள், கல்விச் சமூகத்தினர், சிவில் அமைப்பினர், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தமது இறுதி அஞ்சலிகளைத் செலுத்திவருவதுடன் இரங்கல் உரைகளையும் ஆற்றிவருகின்றனர். தமிழினிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இரங்கல் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்ததாவது:-

சகோதரி சிவகாமியின் உயிர் பிரிந்துவிட்டது என்ற செய்தி கிடைத்ததும் துக்கம் தாளாமல் கண்கள் கலங்கிவிட்டன. சிவகாமி, தமிழினி எனும் இயக்கப் பெயருடன் விடுதலைப்புலிகள் மகளிர் அணியில் அரசியல்துறையில் தன்னை அர்ப்பணித்திருந்தார். நல்ல அரசியல் அறிவும் ஆற்றலும் நிறைந்தவராய் விளங்கினார். தலைமைத்துவமும் ஆளுமையும் கொண்டிருந்தார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் இனிமையுடன் பழகும் சுபாவமும் பண்பும் நிறைந்த பெண்மணியாக ஒரு தலைமைத்துவமிக்க போராளியாக விளங்கியதை அறிவேன்.

தமிழினியை கிளிநொச்சி, வன்னி, அம்பாறை முதலான இயக்க அலுவலகங்களில் சந்தித்து அரசியல் சார்ந்த விடயங்களைப் பற்றி ஆர்வமுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களை நான் நினைவுகூருகின்றேன். நிறைந்த கொள்கைப்பற்றும் இலட்சிய தாகமும் அவர் உயிர்மூச்சாக இருந்ததையும் அறிந்திருக்கின்றேன். தமிழின விடுதலைக்காக தமிழீழ தேசத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையிலும் போர்ப் படையிலும் மேலும் பல துறைகளில் பெண்கள் அர்ப்பணிப்புடன் பங்காற்றியிருந்தமையும் கொள்கைக்காகத் தம் உயிரை அர்ப்பணித்தமையும் விடுதலை வரலாற்றில் பெருமையுடன் பதிவுசெய்யமுடியும்.

இன விடுதலைப் போரின் பங்காளியாக 2009 வரை வன்னியில் அர்ப்பணித்து நின்ற தமிழினியை இராணுவம் கைதுசெய்து சிறை முகாமிலும் புனர்வாழ்வு முகாமுக்குள்ளும் அடைத்தது. அங்கிருந்து நோய்வாய்ப்பட்டு சில ஆண்டுகளில் தன் தாயுடன் இணைந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தும் மாறாத நோயால் மருத்துவமனையில் இவர் உயிர் பிரிந்துவிட்டாலும் என்றும் தமிழர் மனதில் நினைவில் இருப்பார்.

எம் இதய அஞ்சலியை அர்ப்பணித்து அன்னாரின் குடும்பத்தினரின் துயரத்தில், கண்ணீரில் கலந்து ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தனதுரையில் தெரிவித்தார்.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=768d775c-2fbf-4080-9934-d52e1da8f7f5

  • Replies 82
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

12144811_10153661470812359_8443488786812

එදා මට වාඩිවෙන්න පුටුවක් ගෙන ආ තමිලිණි.....සම්මුඛ සාකච්ඡාවෙන් අනතුරුව වූ සුහද සාකච්ඡාවෙදි කියා සිටියෙ, යුද්ධය නිමවූ පසු බ්රිඳක් වීමටත් මවක් වීමටත් කැමති බවය....

Sri Lanka's top female Tiger leader Thamilini provides a chair for visitors at her official resident in Kilinochchi Sri Lanka on September 11, 2004. A cyanide capsule dangling from her neck and a pistol by her side, the leader of Sri Lanka's female Tamil Tiger rebels say her 5,000 fighters are clear: civilian life has been and gone -they are a future army. REUTERS/Anuruddha Lokuhapuarachchi

 

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இமயமலையே சரிந்து சாம்பலாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புகைப்படங்கள் எத்தனையோ விடயங்களை மெளனமாக காட்டி நிற்கின்றது...
நண்பர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், அபிமானிகள் மற்றும் மக்களின் கூற்றுக்கள் 
எமக்காக முற்றும் துறந்த போராளிகளுக்கு; மக்களிடம் இருக்கும் நன் மதிப்பையும், பொது அபிப்பிராயத்தை பறை சாற்றுகின்றது. 
உங்கள் மறைவு கூட எங்களை, பலரை விழிப்படையச் செய்யும் என்பதில் ஐயமில்லை. 
உங்களைப் போன்ற உன்னதர்களை கொண்ட தமிழ் இனத்தில் பிறந்ததற்காக மீண்டும் ஒருமுறை பெருமை அடைகிறேன்.

தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.