Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழினியும் வாழ்வும் சாவும் ஒரு பெருந்துயரின் முடிவா? இல்லை தொடரா?

Featured Replies

தமிழினியும் வாழ்வும் சாவும் ஒரு பெருந்துயரின் முடிவா? இல்லை தொடரா?

"இறந்த போது ஓடி வந்தவர்கள் இருக்கின்ற போது திரும்பியும் பார்க்கவில்லை" - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்:-

தமிழினியும் வாழ்வும் சாவும் ஒரு பெருந்துயரின் முடிவா? இல்லை தொடரா?

இது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில் உள்ள சிவகாமியின் வீடு. சிவசுப்பிரமணியம் சிவகாமி இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி ஆவார்.

மீள்குடியேற்றத்தின் போது அரசசார்பற்ற நிறுவனங்களால் ஒரு வருட காலத்திற்கு என அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்கள் இவை.2013 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் திகதி பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்து தாயாராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் ஓப்படைக்கப்பட்டார்.

அன்று முதல் இறக்கும்  வரை கடந்த மூன்று வருடங்களாக தமிழினி இந்த கொட்டிலில்தான் வாழ்ந்திருக்கின்றார்;.
2009 இற்கு முன் ஈழத்துப் பெண்களின்  தலைமை பாத்திரமாக இருந்தவர் தமிழினி. ஒரு இனத்தின் விடுதலைக்காக அதன் முன்னேற்றத்திற்காக காலத்தின் தேவை கருத்தி பங்;காளியாக  இருந்தவர்.

தமிழினி சிறையில்; இருந்த போது எவரும் அவருக்காக அவரை சென்று பார்த்து தேவைகள் அறிந்து உதவி செய்யவில்லை.

இரண்டு வழக்கறிஞர்கள் ஒரு தமிழ் வழக்கறிஞர் மற்றயது சிங்கள வழக்கறிஞர் இருவரும் ஆரம்பத்தில் தமிழினியின் வழக்காக பணம் கோரிய போதும் பின்னர் தமிழினி நாட்டுக்காக சேவை செய்யதவர் எனவே தாங்கள் அவருக்காக இதையாவது செய்ய வேண்டாமா என பணத்தை பெற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டமையும் குறிப்பிட வேண்டும்.  தமிழினிகாக வாதடிய சிங்கள வழக்கறிஞர் தமிழினிக்கு வழங்கிய சட்ட ஆலோசணைக்கு அமையவே புன்வாழ்வுக்கு செல்வதாக நீதி மன்றில் தெரிவித்து அவர் புனர்வாழ்வுக்கு சென்று விடுலையானார்.

தமிழினி விடுதலையாகி காலம் வடக்கு மாகாண சபை தேர்தல் காலம் என்பதனால் தமிழினியின் விடுதலை அனைவராலும் குறிப்பாக தமிழ் அரசியல் தரப்புக்களால் சந்தேக கண்;ணோடு பார்க்கப்பட்டது. அவர் ஆளும் அரசியல் தரப்போடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடலாம் என பெரும்பாலும் சந்தேகித்தார்கள் விமர்சித்தார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதன் பின்னர் கடந்த 18 ஆம்  திகதி வரை தமிழினியை எவரும் நினைத்தும் பார்க்கவில்லை.

தமிழினி கொழும்பிலும்,பரந்தனிலும் என தனது வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார். அவர் குடியிருக்கும் சிவபுரம் கிராமத்தில் தமிழினியின் கொட்டில் போன்றே பெரும்பாலும் எல்லோரதும்  இருப்பிடங்களும் காணப்படுகிறது. குறித்த பிரதேசத்தின் காணிகள் மத்திய வகுப்புத்திட்ட காணிகள் என்பதனால் அவர்களுக்கு அரச உதவிகள், வீட்டுத்திட்டம் என்பன எவையும் பெற்றுக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

ஆனால் தமிழினியின்  இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக பணியாற்றியிருந்திருந்தால் தமிழினியின் கொட்டில் வாழ்க்கைக்கு மட்டுமல்ல பல முன்னாள் போராகளின் கொட்டில் வாழ்ககைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். அது நடக்கவில்லை.

தமிழினியின் இறுதி நிகழ்வின் போதே பலருக்கு பரந்தன் சிவபுரம் கிராமம் தெரிய வந்தது. அங்கு மக்கள் படுகின்ற அவலம் தெரியவந்தது. இறந்த உடலுக்கு மலர் மாலை அணிவிப்பதிலும், இரங்கல் உரை ஆற்றுவதற்கும் காட்டிய ஆர்வத்தை இருக்கின்ற போது காட்ட வில்லை என்பதே எல்லோரதும் விமர்சனம். அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொண்டது உரை நிகழ்த்தியது விமர்சனத்திற்குரியது அன்று. ஆனால் இருக்கின்ற போது எவரும் திரும்பி பார்க்கவில்லை என்பதே அனைவரினதும் வருத்தத்திறகுரியது.

தமிழினியின் இறுதி நிகழ்வை மண்டபத்தில் நடத்த வேண்டும் அதனை பெரியளவில் செய்ய வேண்டும் என்று பல பிரதிநிதிகள் தமிழினியின் குடும்பத்திடம் கோரியிருக்கின்றனர் ஆனால் அதனை அவரது சகோதரர்கள் மறுத்து விட்டார்கள். காரணம் புனர்வாழ்வுக்குப் பின் தமிழினி வாழ்ந்த வாழ்க்கை வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகவே.

ஒரு மிகப்பெரும் இயக்கத்தின் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்தவரின் நிலைமையே இவ்வாறு என்றால் புனர்வாழ்வுப்பெற்று வந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் நிலைமைகளை எண்ணிப்பாருங்கள்.

இறந்த பின்பு ஓடோடி வந்து அவரோடு பழகியிருக்கின்றோம் அவரை சந்தித்திருக்கின்றோம் அவர் அப்படியானவர் இப்படியானவர்  என்றெல்லம் பேசி செத்த வீட்டில் தங்களின் அரசியலை செய்கின்றவர்கள் இருக்கின்ற போது எதனையும் செய்யவில்லை என்பதே தமிழினியின் குடும்பத்தினரின் வேதனையாக இருக்கிறது.

இந்த வீடும் தமிழினியின் வாழ்க்கையும் இனியாவது பலரின் மனசாட்சிகளை தட்டியெழுப்புமா? அது பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வருமா? அல்லது இந்த செத்த வீட்டு அரசியல்தான் தொடரப் போகிறதா?

இதேவேளை கிளிநொச்சி கந்தசாமி கோவில் திருவிழாக்களில் கடந்த இரு வருடங்களாக தமிழினியின் அம்மா கச்சான் விற்று வாழ்க்கையை ஓட்டியதாக அங்கிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.
 
இந்த வீடும் தமிழினியின் வாழ்க்கையும் இனியாவது பலரின் மனசாட்சிகளை தட்டியெழுப்புமா? அது பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வருமா? அல்லது இந்த செத்த வீட்டு அரசியல்தான் தொடரப் போகிறதா???????

  • கருத்துக்கள உறவுகள்

இவரது இறுதிச்சடங்கில் உரையாற்றிய அரசியல்வாதிகள் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும். 

இந்த வீடும் தமிழினியின் வாழ்க்கையும் இனியாவது பலரின் மனசாட்சிகளை தட்டியெழுப்புமா? அது பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வருமா? அல்லது இந்த செத்த வீட்டு அரசியல்தான் தொடரப் போகிறதா???????

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன வேடிக்கை என்றால் உண்மையான புலிகள் சயனைட் கடிச்சுச் செத்துப்போயிட்டினம் எனச்சொன்ன கூட்டமைப்பின் பா ஊ ஒருவரும் இறுதிஅஞ்சலிக்குப்போனவராம். அப்படிக்கருத்துக்கூறியவர் என்ன சொல்லவருகிறார் எண்டால் சயனைட் கடிக்காத முன்னாள் புலிகள் எல்லாம் துரோகிகள் என்பதுதான்.

தவிர தமிழினியையும் மேற்படி இவர் உட்படப்பலர் துரோகி என்றுகூறி பல முறை மனதளவில் சயனைட் கடிக்கப்பண்ணியவையள்தான்,

மேலும் இவர் கொஞ்சம் வசதியாக வாழ்ந்திருந்தால் முள்ளிவாய்காலில் கண்டைனரில கொட்டினதில அடிச்ச காசில கட்டிய வீட்டில வசதியாக வாழ்ந்திருக்கிறா என எலிவால்கள் கூறியிருப்பினம்.

ஆனால் தமிழினியின் கோபம் எல்லாம் சாதாரண மக்கள்மீதல்ல புலத்திலும் புலம்பெயர்தேசத்திலும் சந்தர்ப்பவாதிகளாகச் செயல்பட்ட  புலிவால்களின்மேலும் படித்தவர்க்கத்தின்மீதும் மதில்மேல் பூனைகளாக இருந்த லும்பர்கள் மீதுமே.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் என்ற கள உறவு கேபி தான் இவரை விடுதலை செய்தது என்கிறார் ஆனால் செய்தி ஆசிரியரோ வேறொன்றை சொல்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

பிரிதலில் தான் வலிகளின் வேதனை புரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி உயிரோடு இருக்கும் போது யாராவது உதவி இருந்தால் கூட அவர் அதனை ஏற்றிருக்க மாட்டார். கடுமையாக நோய் வாய் பட்ட பின்பும் கூட அதை வைத்து ஒருத்தரிடம் உதவியை எதிர் பார்க்காதவர் அவர். இந்தக் கட்டுரை அவரை அவமதிப்பது போல் உள்ளது. துரதிஸ்டவசமாக இந்த நோய் வந்து இறந்திருக்கா விட்டால் ஒரு காலத்தில் அவர் லண்டனின் இருந்திருப்பார். ஆனால் ஊரில் இன்னும் பல அங்கவீனமான போராளிகள் எந்த வித வெளி நாட்டு உதவியும் இல்லாமல் இன்னும் கஸ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவலாமே!

தமிழினி குடிசை வீட்டில் வாழ்ந்து இறந்தார் என்று அவர் இறந்த பின்னர் கவலைப்படுவதை விட அவரை விட தாழ்ந்த நிலையில் உள்ள போராளிகளுக்கும்,மக்களுக்கும் உதவி செய்தாலே அவரது ஆத்மா சாந்தியடையும்.

அவர் உயிரோடு இருக்கும் போது அவரை வைத்து அரசியல் செய்தவர்கள்.அவர் இறந்த பின்பும் கூட அதையே தான் செய்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் என்ற கள உறவு கேபி தான் இவரை விடுதலை செய்தது என்கிறார் ஆனால் செய்தி ஆசிரியரோ வேறொன்றை சொல்கிறார். 

இன்னொரு விடயம் தமிழினி ஊரில் வந்து வாழ்ந்ததாகவே தகவல் இல்லை. அவர் விடுதலையான நாள் தொடக்கம் கொழும்பிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இதற்கு அவர் கூறிய காரணம், அன்று தாம் ஆண்ட வன்னியை இன்று பிறிதொரு மனநிலையில் தன்னால் காண முடியாது என்று அவர் கூறியிருக்கின்றார். அவர், விடுதலைக்குப் பின்னான நாளில் ஊரில் வாழ்ந்தார் என்கின்ற தகவலை தயவு செய்து யாராவது உறுதிப்படுத்துங்கள்.

ஏனெனில், அவரின் தாயும் சகோதரிமாரும் வற்புறுத்தியும் அவர் ஊருக்கு வரவே இல்லை என்பதுதான் உண்மையான கதை.

அடுத்து. தமிழினியின் விடுதலைக்கு மட்டுமல்லாது பல போராளிகளின் விடுதலைக்கு கே.பி. முன்னின்று உழைத்தவர். அந்த வகையில் தமிழினியையும் விடுவிக்குமாறு கேட்டதற்கு இணங்கத்தான் சட்டமா அதிபர் திணைக்களத்தால் தமிழினி மீது வழக்குக்கான முகாந்திரம் இல்லை என கூறி நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்.

அன்று டேவிட் ஐயா, மலையக மக்களை குடியேற்றியிருக்காது விட்டால் மாங்குளம்தான் இன்று எமது எல்லையாக இருந்திருக்கும் என்று ஈ.பி.டி.பி.யின் சந்திரகுமார், டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார். இவர், எந்தக் கட்சி சார்பாக உரையாற்றினார் என்பது இங்கு முக்கியமல்ல அவரின் உரையில் குறிப்பிடப்பட்ட விடயம் உண்மையான விடயமும் கூட.

அன்றே எமது நிலம் பறி போகாது இருக்க திட்டமிட்டு குடியேற்றி எமது நிலம் பறி போகாது தடுத்து பல வேலைகளைச் செய்த டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் தொகைதான் என்ன? அந்த நிகழ்வுக்கு எல்லாம் மாவை, சம்பந்தர் போன்ற தலைவர்கள் எவரும் சென்றது இல்லையே. உண்மையில் தமிழினிக்கு சமனாக டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வினை கட்சி சார்பின்றி பெரிதாக செய்திருக்க வேண்டு.

டேவிட் ஐயாவை வழி அனுப்ப வந்த மக்கள் தொகையினை அனைவரும் படங்கள் ஊடாக கண்டிருப்பீர்கள். அதாவது, சரியான முறையில் டேவிட் ஐயாவை ஊடகங்கள் அடையாளப்படுத்தியிருந்தால் மக்கள் இறுதி நிகழ்வுக்கு பெருமளவில் திரண்டிருப்பார்கள். மனோரமாவை முன்னிலைப்படுத்திய யாழ். மற்றும் கொழும்பு தமிழ் ஊடகங்கள் டேவிட் ஐயாவைப் பற்றிய செய்திகள் போட மறந்ததுதான் சோகம். இந்த இடத்தில் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் டேவிட் ஐயா தொடர்பாக முன்னிலைப்படுத்தி செய்திகள் வெளியிட்டதற்கு பாராட்டியே ஆக வேண்டும்.

இங்கே நான் கூற வருவது, எமது தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு ஆதாயம் தேடுவதற்காகவே விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளை பாவிக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

அடுத்து, கே.பி.யை நீங்கள் ஏன் இறுதி நிகழ்வுக்கு செல்லவில்லை என எனது நண்பர் கேட்டபோது, அவர் சொன்னாராம். பிணத்தின் மீது எமது தமிழ் அரசியல்வாதிகள் இரண்டாவது தடவையும் (முதலாவது டேவிட் ஐயா) அரசியல் செய்கின்றனர் என்று கூறியதோடு, அந்தப் பெண் கொழும்பில் வாழ்ந்த போது தன்னோடு தொடர்பு கொண்டு உதவிகள் கோரியபோது தன்னால் இயன்ற வரை உதவிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், அந்தப் பெண் ஒருவேளை லண்டனுக்கு விரைவாக சென்றிருந்தால் அங்கு உரிய சிகிச்சை பெற்று உயிர் தப்பியிருக்கும் என கவலையோடு கூறினாராம்.

உயிரோடு இருக்கும் எத்தனையோ போராளிகள் தன்னிடம் உதவி கேட்டு வருகின்ற அளவுக்கு ஏன் தமிழ் அரசியல்வாதிகளிடம் அவர்கள் செல்வதில்லை என்பது தனக்கு தற்போதுதான் தெரிகின்றது என்றும் கூறினாராம். அதாவது, எமது அரசியல்வாதிகள் பிணத்தின் மீது அரசியல் செய்கின்ற காட்டுமிராண்டிகள் என்றாராம். அன்று தம்மை எல்லாம் உசுப்பி போராட வைத்துவிட்டு இன்று தமது பிள்ளைகளை பத்திரமாக வெளிநாடுகளில் பாதுகாத்து வைத்திருக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினாராம்.

இறுதி நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர், சிவபுரத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினரை துக்கம் விசாரிக்க செல்லவுள்ளதாக கூறினாராம்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் உங்கள் நண்பர் ஊடாக கேபிக்கு சொல்லுங்கள் "அவரை உசுப்பேற்றி போராட வைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய" 

இப்படியே ஆளாளுக்கு மாறி மாறி வழக்கு போடுவதனை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்வது நல்லது. (உங்களுக்கு கூறவில்லை. பொதுவாக கூறுகின்றேன்.)

என்னைப் பொறுத்த வரை கடந்த காலங்களை மறந்துவிட்டு தற்போது யார், யார் என்ன செய்கின்றார்கள் என்பதனை பார்த்து நாம் அதற்கு உதவ வேண்டும்.

டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோருடன் ஒப்பிடும் போது கே.பி. எவ்வளவோ மேல் என்பதுதான் எனது கருத்து.

அவரைத் தேடி நாளாந்தம் மக்கள் போய் உதவி கேட்ட வண்ணம் உள்ளனர். அவரும் தன்னால் முடிந்தவரை வெளிநாடுகளில் உள்ள உதவக்கூடியவர்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றார்.

பலருக்கு தெரியாத இன்னொரு விடயம். சூசையின் மனைவியையும் கே.பி.தான் எடுத்து வெளியே விட்டார். அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஊரோடு வாழ விருப்பம் இல்லாமல் கொழும்பில் வாழ்ந்து வருகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் சூசையின் மனைவியின் விடுதலை சில கட்டுப்பாடுகளுடன் தான் நடைபெற்றது. அவர்கள் இருக்க வேண்டிய இடம், பிள்ளைகள் படிக்க வேண்டிய இடம், போக்க் கூடிய இடம் என பலதை புலனாய்வாளர்களே தீர்மானித்தனர். 

மற்றையது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுதான் முக்கியம் எனில் இடையிடையே கூப்பாடு ஏன்? மற்றவர்களுடன் ஒப்பீடு ஏன்? 

இப்படியே ஆளாளுக்கு மாறி மாறி வழக்கு போடுவதனை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்வது நல்லது. (உங்களுக்கு கூறவில்லை. பொதுவாக கூறுகின்றேன்.)

என்னைப் பொறுத்த வரை கடந்த காலங்களை மறந்துவிட்டு தற்போது யார், யார் என்ன செய்கின்றார்கள் என்பதனை பார்த்து நாம் அதற்கு உதவ வேண்டும்.

டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோருடன் ஒப்பிடும் போது கே.பி. எவ்வளவோ மேல் என்பதுதான் எனது கருத்து.

அவரைத் தேடி நாளாந்தம் மக்கள் போய் உதவி கேட்ட வண்ணம் உள்ளனர். அவரும் தன்னால் முடிந்தவரை வெளிநாடுகளில் உள்ள உதவக்கூடியவர்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றார்.

பலருக்கு தெரியாத இன்னொரு விடயம். சூசையின் மனைவியையும் கே.பி.தான் எடுத்து வெளியே விட்டார். அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஊரோடு வாழ விருப்பம் இல்லாமல் கொழும்பில் வாழ்ந்து வருகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

மீரா, தமிழினியின் சாவினை புலம்பெயர் புலிப் பினாமிகள், தமிழ்க் கூட்டமைப்பு எவ்வாறு பயன்படுத்திக் கொண்டன என்பதனை நீங்கள் அறிந்தீர்கள்தானே.

மேலே குப்பியினை கடிக்காத போராளிகள் புலிகளே இல்லை என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், தமிழினியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு தனக்கான ஆதாயத்தினை தேடிக்கொண்டு உள்ளனர்.

எனது கோபம் இதுதான், துன்பத்தில் இருக்கும் போது உதவுங்கள். அதனை விடுத்து அவர்கள் அழிந்த பின்னர் அவர்கள் தொடர்பில் அஞ்சலி செலுத்துவதிலோ அல்லது அவர் தொடர்பில் எழுதி ஆதாயம் தேடுவதனை அனைவரும் நிறுத்த வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.