Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனிக்கவிதைகள்

Featured Replies

விண்ணை அளந்திடும் புள்ளினம் போல் மனம்
எண்ணிலா எண்ணம் கொண்டு மிதந்திடும்;
மண்ணில் சூரியக் வெளிச்சமும் விழு முன்னே
கண்ணும் விழித்த கணமே துள்ளி எழ வைக்கும்;
திண்ணிய மனதுடன் எண்ணிய கருமத்தை
வண்ணமுறச் செய்திடும் துணிவையும் தந்திடும்;
தன்னைக் கற்றுணர்ந்து கொண்ட இலட்சியம்
உண்மையென நம்பி உழைக்கும் மனிதர்க்கு!

***

எழிலினை எதனிலும் கண்டு நயந்திடும் பார்வையும்
முழுமையிலா அவனியின் தன்மை உணர் புன்னகையும்
அழுக்காறு களைந்து பிறரை வாழ்த்திடும் உள்ளமும்
ஆழ்மனம் சொல்லும் வழி விலகாத வாழ்வும் கொள்ள
அளவில்லாக் களிப்பில் ஆன்மா முழுமை கொள்ளும்!

***

எல்லைகள் தெரியா விரிந்த வான வெளி - ஆங்கே
எல்லையாய் உந்தன் மனம் இடும் வேலி.
வண்ணங்கள் ஏழு அழகு வானவிலில் - உன்
எண்ணக் கனவின் வண்ணங்கள் எண்ணில;
கணந்தொறும் இவ்வுலகில் தேவைகளும் கணக்கில.
உள்ளத்தே உதித்த வண்ணக் கலவைகளை
அள்ளித் தெளித்திடு அன்புடன் நாள்தொறும்!
வையகமும் வளமாய் வண்ணப் பொலிவுறும்! - மனம்
எல்லையில்லாக் களிப்பினில் வானத்தே பறந்திடும்!

 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசத்தின் கவிதைக்கும், 
அவரை நீண்ட நாட்களின் பின், களத்தில் காண்பதிலும் மிக்க மகிழ்ச்சி.:)

  • தொடங்கியவர்

மல்லிகை வாசத்தின் கவிதைக்கும், 
அவரை நீண்ட நாட்களின் பின், களத்தில் காண்பதிலும் மிக்க மகிழ்ச்சி.:)

மிக்க நன்றி தமிழ் சிறி. :) அடிக்கடி இங்கு வருவதுண்டு. வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வேன். இனிமேல் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகத் தொடர்ந்தும் எழுதுவேன். :)  

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாசமுள்ள கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்  மல்லிகை, வாழ்த்துக்கள்...!  :)

  • தொடங்கியவர்

நல்ல வாசமுள்ள கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்  மல்லிகை, வாழ்த்துக்கள்...!  :)

கருத்துக்கும், என்றென்றும் வாழ்த்திடும் உள்ளத்துக்கும்  நன்றிகள்,  சுவி அண்ணா :) 

  • 1 year later...
  • தொடங்கியவர்

அழகு மனம்

சிந்தை கெடு  கொடும் வஞ்சனைத் தீயும்
ஊனினை,  உள்ளத்தை நலிவுறச்செய் கோபமும் 
அண்டை மானிடர் பால் கொள் பொறாமையும் 
அண்டமும் தனதே, சர்வமும் தானே எனும் கர்வமும் 
எண்ணத்தில் இவையனைத்தும் இல்லாத மனிதர்க்கு 
காணும் அனைத்தும் அழகுறத் தோன்றிடும் -  அவர் 
மனவுலகும் அழகாகும்; மகிழ்ச்சியில் மூழ்கிடும்!

***************************************

உறவுகளின் சங்கீதம்

உள்ளங்களில் ஊற்றெடுக்கும் அன்பெனும் ஜீவநதிகள்
தேசங்கள் கடந்து பாயாமல், சிறு குவளைகளுக்குள் தேங்கிடுமோ?

புள்ளினம் போல் தேசமெலாம் பறந்து திரிந்து உறவு கொண்டாடி
உள்ளம் மகிழாமல், தத்தம் கூண்டுகளுக்குள் நாம் முடங்கிடுவமோ?

புல்லாங்குழலின் துளைகளை அடைத்துவிட்டு, அதை மீட்ட
கோபியரும், கோபாலரும் மகிழும் கானம் பிறந்திடுமோ?

பிரிந்து பெரும் பிரவாகத்துடன் ஓடும் நதிகளின் சங்கமம் தான் அழகு!

விரிந்த வானத்தே பட்சிகள் கூடிப்பறந்திட தோன்றிடும் கோலமும் அழகு!
பரந்த உலகிலே பிரிந்த உறவுகள் எல்லாம் கூடிப் பேசி மகிழ்வதும் அழகே!

புல்லாங்குழலின் துளைகளில் விரல்கள் நர்த்தனமிட்டு, உட்சென்ற காற்றை இனிய கீதமாக்கும்.

நல்லுள்ளங்கள் நயமுடன் வார்த்தைகள் நவின்றிட பிறந்திடும் உறவெனும் உன்னத சங்கீதம்!

Edited by மல்லிகை வாசம்
Formatting

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நள்ளிரவின் முழு நிலவொளியில் சலனமற்ற கடலோரம்,
வளைந்து கடலை வணங்கும் தென்னைமர ஓலை சாமரம் வீசும்;
குளிர்தென்றலும் மெல்ல வந்து மேனி தழுவி நழுவிச் செல்லும்;
கள்ளமுடன் முறுவல் பூக்கும் நிலவொளியில் ஒளி விண்மீன்கள்;
செல்லிடப் பேசியில் ஆர்ப்பாட்டமில்லா மெல்லிசையில் லயிக்கும் 
ஆழ்மனம் அமைதியின் எழிலினை நயந்து களிப்புறும், ஆர்ப்பரிக்கும்!
************************

சிறு சிறு துளிகள் மண்ணைத் தழுவி 
வெள்ளமாய் பாயும் மழையின் பிரவாகமும்,
வசந்தகாலம் கண்கவர் வண்ணமாய் மலர்ந்து 
காற்றினில் ஆடி மகிழும் மலர்களின் குதூகலமும்,
வானவெளியே எழில்மிகு கோலமென ஒருங்கே சேர்ந்து 
உல்லாசமாய் திரியும் பட்சிகளின் ஊர்வலக் காட்சியும்,
சுரங்கள் பல சேர்ந்து ராகமாகி காற்றலைகளில் 
பரவி காதோரம் செல்ல ஏற்படும் பரவசமும், 
அழகு தமிழ் சொற்கள் பொருள்பட சேர்ந்து 
கவிதையாய் பிறக்கையில் அதில் வரும் இன்பமும் 
உணர்ந்து ரசித்து அவற்றில் மூழ்கிடும் தருணங்கள் 
மானிடன் மனதில் தோன்றும் ஆணவத்தை அழித்திடும்;
ஒன்றாய் இணைந்து வாழ்தலின் அழகினை உணர்த்திடும்! 

***********************

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தனிமைக்கு அருமருந்தாம் - அதுவே 
தன்னுள்ளே சிக்க வைக்கும் போதையுமாம்; 
தினந்தோறும் கடல்போல தகவல்களை அள்ளித் 
தந்திடினும் அதில் முத்துக் குளித்து அவற்றின் 
உண்மை தன்மையினை அறிந்திடுதல் கடினமாம்;
முகநூலாம் - நட்புக்கோர் நூலாம் - எனினும் அது ஓர் 
முகமன் நூலாம்; கலை அலங்காரம் செய்த முகம் போலாம்! :11_blush:

(கலை அலங்காரம் - Make-up)

  • கருத்துக்கள உறவுகள்

இரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அழகிய கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள் மல்லிகை வாசம் .....!  tw_blush:

  • தொடங்கியவர்
On 11/3/2017 at 8:03 PM, suvy said:

இரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அழகிய கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள் மல்லிகை வாசம் .....!  tw_blush:

கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி சுவி அண்ணா :11_blush:

  • 3 months later...
  • தொடங்கியவர்

அழுக்காறு
**************
மல்லிகையின் நறுமணம் கண்டு முல்லை மலர் வாடுவதில்லை;
பென்குயினின் மிடுக்குநடை கண்டு அன்னம் தன் அழகு நடையை மறப்பதில்லை;
ஆழ்கடல் வாழ் மீனினங்கள் காணும் அழகை
வானவெளியே வலம் வரும் புள்ளினங்கள் காணாது வருந்துவதில்லை.
நம் ஒவ்வோர்க்கும் தனித்தனி ஆற்றலை அளித்தனன் இறைவன்.
நம் தனித்துவமே நம் எல்லோர்க்கும் ஆபரணங்களாம் - எனினும்
தங்கத்தில் பதித்த மணிவைரம் ஒளிர்வதால் தங்கத்தின் மதிப்பு குறைவதுமில்லை; இரண்டும் சேர்ந்து அழகாய் மிளிர தவறியதுமில்லை.
பெருமை மிகு மானிட ஜாதிக்கு
பொறாமை எனும் புற்றுநோய் வீணே.
அழுக்காறு எனும் அழுக்கினை அகற்றி
அன்பு எனும் பாலத்தில் அனைவரும் இணைய, உள்ளத்தில் ஆனந்த நதி சலனமின்றிப் பாய்ந்திடுமே! 

அருமை

  • தொடங்கியவர்
18 hours ago, கஜந்தி said:

அருமை

நன்றி கஜந்தி ?

  • 11 months later...
  • தொடங்கியவர்

போலிப் புன்னகையும், பசப்பு மொழியும் அலங்கரித்த மானுடம் பேருடனும், புகழுடனும் சீர்பெற்று வாழ்ந்திடும்.
இவை அல்லால், அது வாழும் கலை தெரியாப் பொருள் எனப் பெயர் பெறும்!

*******************

நல்லவரையும், நன்மையையும் மட்டும் வேண்டி நிற்க இது சொர்க்கம் அல்ல, பூலோகம்; வல்லவன் தான் வாழ்வான் என கீதை சொல்லும் மார்க்கம்!

*********************

நலிந்தோரை நசுக்கிய வலியவர் சொல்வதே தர்மமாம் - ஆதலால் 'தர்மமே இறுதியில் வெல்லும்' என்று சொல்வதும் நிஜம் தான் போலும்! 🤔 🤡🤣

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் நீங்கள் நிறைய எழுதுவீங்கள் .......பின் இப்போதுதான் மீண்டும் தொடர்ந்து வருகின்றீர்கள்,சந்தோசமாய் இருக்கு மல்லிகை வாசம். நல்ல கவிதைகள்.....இன்னும் நிறைய எழுதுங்கள் வாசிக்க ஆவல் .....!  😁 

  • 2 months later...
  • தொடங்கியவர்

நிஜங்களை தேடித்தேடி தினந்தினம் பயணம்
நீதி, நியாயங்கள் அருகிவிட்ட உலகில்.
நிலையில்லா வாழ்வில் நிலைத்திடா நிஜங்களால் நலிந்திடும் மனதில் நிம்மதியேது?
'நினைவினில் பரம்பொருள் ஒன்றே நிலையெனக் கொள்ளல் நல'மென ஞானியர் நவின்றது 
நடைமுறை வாழ்வினில் நமக்கு ஒவ்வுமா?
நர்த்தனமாடிடும் நடராஜன் அவன் ஆட்டுவிப்பில் 
நாமும் ஓர் பொம்மையென நம்நிலை உணர்ந்து 
நாள்தொறும் நம்கருமம் நலமுடனே ஆற்றுதலும்,
நிஜம் இதுவேயென உணர்தலும் நிம்மதி தரும்.

சிறு சிறு கவிதைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
10 hours ago, Lara said:

சிறு சிறு கவிதைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி லாரா. 😊

மல்லிகை வாசம் உங்கள் கவிதை அருமையாக இருக்கின்றது. 

நாமும் ஓர் பொம்மையென நம்நிலை உணர்ந்து 
நாள்தொறும் நம்கருமம் நலமுடனே ஆற்றுதலும்,
நிஜம் இதுவேயென உணர்தலும் நிம்மதி தரும்.

இது தான் நிஜம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
On 5/4/2019 at 5:10 PM, ஜெகதா துரை said:

மல்லிகை வாசம் உங்கள் கவிதை அருமையாக இருக்கின்றது. 

நன்றி ஜெகதா. 

*****************************************

தன்னலம் மறுத்திட்ட உயர் இலட்சிய மறவர்,
துர்க்குணம் அறியாத் தம் தொழில் ஆற்றி வாழ்
நம் சகமனிதர், இல்லறம் வளர்த்த அன்புத் தாய்மார், 
வானுயர் விருட்சங்களாய் வளர்ந்து - இப்புவிக்கு 
வளம் தரவல்ல இளஞ்சிறு தளிர்கள் - சிறார்கள்
இன்ன நல்லுயிர்கள் இன்று நம்முடனில்லை - எனினும் 
நினைவுதனில் கலையாது நிலைத்திருக்கும் அவர் தியாகம்! 🙏🙏🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.