Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமந்திரனுக்கு எதிரான கோசம்

Featured Replies

சுமந்திரனுக்கு எதிரான கோசம்
 
article_1447221439-prujoth.jpg'எங்கட ஆணியை நாங்கள் புடுங்குவம், நீ புடுங்கிறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியா, சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் எழும்பிய கோசம் இது. இப்படியான பல கோசங்கள் அங்கு எழுப்பப்பட்டன.

அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் உரையாற்றுவதற்காக எம்.ஏ.சுமந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டம் ஆரம்பிப்பதற்கு சற்றுமுன்னர் அரங்கினுள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், எம்.ஏ.சுமந்திரனை உரையாற்றுவதிலிருந்து தடுத்து வெளியேற்றுவதில் குறியாக இருந்தார்கள். அதில், அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள். ஆனால், அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பெற்ற வெற்றியும், அது ஒரு தளத்தில் கொண்டாடப்படும் விதமும் பெரும் அச்சுறுத்தலானது.

அதீத உணர்வூட்டலினால் அடிப்படைய ஜனநாயக விழுமியங்களை புறந்தள்ளி வளர்ந்தவர்களாக தமிழ்ச் சமூகம் தம்மை தொடர்ந்தும் முன்னிறுத்தி வருகின்றது. எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் அதன் வடிவமே. அது, ஆர்ப்பாட்டம் என்கிற நிலையைத் தாண்டி காடைத்தனம் என்கிற அளவில் நோக்கப்பட வேண்டியது. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்த கருத்துக்களும், கோசங்களும், அவர்களின் நடவடிக்கைகளும் அதனையே பிரதிபலித்தன.

எம்.ஏ.சுமந்திரன் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு 58,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகவும், சர்வதேச விவகாரங்களுக்குமான பொறுப்பாளராகவும் இருக்கின்றார்.

அவர், தனக்கு வாக்களித்த மக்களின் நலத்திட்டங்களில் எவ்வளவு அக்கறையோடு செயலாற்ற வேண்டுமோ, அதேயளவுக்கு தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களையும் முன்னெடுக்க வேண்டும். அதனை முன்னிறுத்திய செயற்பாடுகளில் குறைபாடுகள் காணப்படுகின்ற போது, விமர்சனங்களும், மாற்றுக் கருத்துக்களும் அவசியமானவை.  ஆனால், அவர் தனக்கான பொறுப்புக்களை முன்னெடுப்பதைத் தடுப்பதையோ, முடக்குவதையோ பெரும் வெற்றியாக கொள்ள முடியாது. அது, தார்மீக அணுகுமுறையும் அல்ல.

கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றில் தமிழ்த் தளம் இருவேறு துருவங்களாகவே தன்னை முன்னிறுத்தியது. தாயகத்திலுள்ளவர்கள் ஒரு பக்கத்திலும், புலம்பெயர் தேசங்களிலுள்ளவர்கள் இன்னொரு பக்கமாகவும் பெருமளவு பிரிந்து நின்றார்கள். தேர்தல்களின் வெற்றி தோல்விகளில் அதன் பிரதிபலிப்பை கண்டுகொள்ளக் கூடியதாகவும் இருந்தது. அதன் விளைவும், வன்மமும் இன்னமும் பெரிய இடைவெளியை தாயகம்- புலம்பெயர் தேசங்களில் உருவாக்கி விட்டிருக்கின்றது.

கடந்த நாடாளுமன்றக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவார் என்று தாயகத்திலுள்ளவர்களும், புலம்பெயர் தேசங்களிலுள்ளவர்களும் கருதியிருக்கவில்லை. அவர், மீண்டும் தேசியப் பட்டியல் உறுப்பினராகவே அரசியலரங்கிற்கு வருவார் என்றும் நம்பியிருந்தனர்.  ஆனால், அந்த நம்பிக்கை அப்படியே மாற்றம் கண்டது. அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கணிசமான வாக்குகளோடு வெற்றிபெற்றார்.

 எம்.ஏ.சுமந்திரனின் வெற்றியை உறுதி செய்த காரணிகளில் புலம்பெயர் ஊடகங்களின் (குறிப்பாக, இணைய ஊடகங்கள்) செயற்பாடுகள் முக்கியமானவை. அவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான எதிர்ப்பிரசாரங்களின் போக்கில் எம்.ஏ.சுமந்திரனை அதிகமாக குறிவைத்தன.

அது, பொதுத் தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பில் தாயகம்- புலம்பெயர் தேசங்களில் காணப்பட்ட நீண்ட விவாதங்களின் போக்கில் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதாரவாக மாறின. தாயகத்திலுள்ள மக்களே வாக்காளர்களாக இருக்கின்ற நிலையில், புலம்பெயர் ஊடகங்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை எரிச்சலூட்டிக் கொண்டேயிருந்தன. அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியிலும், எம்.ஏ.சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகளிலும் பிரதிபலித்தன.

அதன்பின்னர் எம்.ஏ.சுமந்திரனின் அணுகுமுறையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டது. புலம்பெயர் தேசங்களிலுள்ள ஊடகங்கள் தொடர்பிலோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் தொடர்பிலோ அவர் மிகுந்த எள்ளல் மனநிலையோடு அணுகினார். இன்னமும் அவர் அந்த மனநிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

இனியும் மாற்றிக் கொள்ளவார் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு, அவர் முன்வைக்கும் காரணங்களில் ஒன்று முக்கியமானது. அதாவது, தாயகத்திலுள்ள மக்களின் விருப்பத்தை புலம்பெயர் தேசங்களிலுள்ளவர்கள் மதிக்க வேண்டும் என்பது.  தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது தாயகத்தையே அடிப்படையாக கொண்டது. தாயகத்திலுள்ள மக்களின் உணர்வுகளும், விருப்பங்களும் அதன் துணைக்கூறுகளினால் மதிக்கப்பட வேண்டியது. தாயகத்திலுள்ள மக்களைப் புறந்தள்ளிக் கொண்டு விடுதலையையோ, தீர்வினையோ பெற்றுக் கொள்ள முடியாது. அது, அர்த்தமுள்ள செயற்பாடும் அல்ல.

 கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எம்.ஏ.சுமந்திரன் மூன்று விடயங்கள் சார்ந்து அதிகம் பேசப்பட்டார். முதலாவது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான அவரது நிலைப்பாடு. இரண்டாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அவரின் நடவடிக்கைகளை முன்னிறுத்தியமை மற்றும் அவருக்கு எதிரான பொய்ப்பிரசாரங்கள் சார்ந்தவை. மூன்றாவது, யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டமை 'இனச்சுத்திகரிப்பு' என்று அவர் குறிப்பிட்ட விடயம் சார்ந்தது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான எம்.ஏ.சுமந்திரனின் நிலைப்பாடு கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட்டமையை முன்னிறுத்திய எழுந்ததாக சொல்லப்படுகின்றது. ஆனால், அதற்கு முன்னரே இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் தரப்புக்குள்ளிலிருந்து முதலமைச்சர் தன்னை விடுவித்துக் கொண்டு அடுத்த பக்கத்திற்கு சென்றுவிட்டார். அதன் பிரதிபலிப்பினையே, முதலமைச்சர் பொதுத் தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தினார்.

அதன்போக்கிலான விடயம், கட்சி சார்ந்ததாகவும், மக்களின் உணர்வுவெளிப்பாடு சார்ந்ததும் ஆகும். குறித்த விடயத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடந்து கொண்ட விதம் தொடர்பில் மக்களுக்கு பெரும் அதிருப்தியுண்டு. ஆனால், அவர் நீக்கப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு கொண்டிருக்கவில்லை. அப்படியான நிலையில், கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் தொடர்பிலான விடயத்தை எம்.எ.சுமந்திரன் வெளிப்படுத்தியிருக்கலாம். அது, உட்கட்சி சார்ந்த விடயமும் கூட.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அமெரிக்கத் தீர்மானம், உள்ளக விசாரணைக்கு ஆதரவானதாக முன்வைக்கப்பட்டது. அதற்கு, எதிர்ப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச விவகாரங்களை கையாளும் எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கவில்லை அல்லது, அவரின் செயற்பாடுகளில் பாரிய குறைகள் காணப்பட்டன என்பது சார்ந்ததாக எழுந்தவை.

அத்தோடு, சுவிஸில் இடம்பெற்ற கூட்டமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவரினால் எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் அவற்றுக்கு எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய பதில்களினூடு தோன்றிய சர்ச்சை சார்ந்தது. அதாவது, இன அழிப்பு இலங்கையில் நடைபெறவில்லை என்று எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டார் என்கிற விடயம் தொடர்பிலானது. ஆனால், கேள்வி எழுப்பிய இரு நபர்களினாலும் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவினூடே குறித்த விடயம் பொய்த்துப் போனது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்கள் அதனை வைத்து முன்னெடுத்த பிரசாரங்கள் சில நாட்களுக்குள்ளேயே அவர்களுக்கு எதிராக திருப்பின.

1990ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளினால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயம் தார்மிக ரீதியிலும், மானுட குலத்துக்;கு எதிரானது என்கிற ரீதியிலும் பெரும் குற்றம். ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் அதனை இராணுவ ரீதியிலான பாதுகாப்பு அணுகுமுறையில் செய்ய வேண்டிய ஏற்பட்டிருக்கலாம்.

அது, இராணுவ அணுகுமுறை சார்பில் சரியாகவும் இருக்கலாம். ஆனால், ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அது, மிகப்பெரிய தவறு. அந்தத் தவறினைத் திருத்திக் கொள்வது தொடர்பிலான உறுதிப்பாட்டினை 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்தனர். அதற்காக, நிகழ்த்தப்பட்டது தவறில்லை என்பதல்ல. அந்த விடயத்தினை எம்.ஏ.சுமந்திரன் கையாளும் போது அது, புலிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் பெரும் உணர்வுக்கும் எதிரானதாக மாறியிருக்கலாம்.

'எமக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக நீதியைக் கோரும் தரப்பு என்கிற வகையில், நாம் நிகழ்த்திய அநீதிகளுக்கு நீதியை வழங்குவதும், மன்னிப்புக் கோருவதும் அடிப்படையானது.' அதன்போக்கில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயத்தை எம்.ஏ.சுமந்திரன்  கையாண்டிருந்தால் அது ஒருபோதும் தவறாக அமையாது. அது, அரசியல் ரீதியாகவும் முன்னோக்கியதாகவே கொள்ளப்பட வேண்டியது.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய அரசியல்- ஆயுதப் போராட்ட அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றார்கள்.  உணர்வு ரீதியாக விடுதலைப் புலிகள் இன்னமும் தமிழ் மக்களோடு இருக்கின்றார்கள் என்பது உண்மை.  ஆனால், அரசியல் ரீதியான செயற்பாடுகள், நகர்வுகளின் போக்கில் முன்னோக்கி பயணிக்க வேண்டிய அவசியம் உண்டு.

அதற்கு, உணர்வுகளுக்குள் மாத்திரம் தங்கியிருப்பதனால் பலனில்லை. அப்படியான நிலையில், யதார்த்தத்தினை உள்வாங்கி பயணிக்க வேண்டும். மாறாக, 'தலைவர் மீண்டும் வருவார், புலிப்படை வெல்லும்' என்று கோசங்களை எழுப்புவதனால் வெற்றி கிடைத்துவிடும் என்று கருதுவது பாரிய தோல்வியை வழங்கும். அப்படியான நிகழ்வின் கூறாகவே எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டத்தினையும் பார்க்க முடியும்.

- See more at: http://www.tamilmirror.lk/158827/%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE-#sthash.lIejh3lw.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய அரசியல் ரீதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் வாதி ஒருவன் சொல்கிறான்;

"நான் அரசியல்வாதி! என்னால் எதனையும் செய்யமுடியும். நான் வன்முறை செய்யும்போது, அதில் ஏற்படும் இன்பத்தை மட்டும் அனுபவித்தால் துன்பம் ஏற்படாது. மாறாக, வன்முறையாக என்னைப் பிராண்டிக் காயப்படுத்தினால்! உன்னைத் தொலைத்து விடுவேன்!!"

இங்கு திருந்த வேண்டிய, திருத்தப்பட வேண்டியவர் யார்.........???????????????? 

இதுவரை எத்தனையோ கேடுகெட்ட அரசியல்வாதிகளென பட்டியலில் உள்ளவர்களும் அவுஸ்ரேலியாவுக்கு வந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு நடக்காத எதுவும்... சுமந்திரனுக்கு எதிராக...! காரணமென்ன..??? சாது மிரண்டால் காடுகொள்ளாது.

புருசோத்துமன் தங்கமயில் அவர்களே! சிறீலங்காவில் தமிழரைப் பூண்டோடு அழிக்கச் சிங்களம் சிறு எலும்புத் துண்டுகளையும் தேடித் திரிகிறது. அதற்கு இறைச்சியையே கொடுக்க முனையாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மே 2009 க்குப் பின் டெயிலி மிரர் சிங்கள பெருந்தேசியத்தின் ஆணவக் குரலாக விளங்கிய ஆங்கில ஊடகத்தின் கிளையாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டத் தோல்வியோடு கருத்தியல் ரீதியில் நசுக்க நச்சுப் பாய்ச்ச உருவானதே இந்த தமிழ்மிரர் என்ற ஊடகம். (போருக்கு முன்னரும் போரின் போதும் வைக்கப்பட்ட பல சனநாயகக் கருத்துக்களை வெட்டி அகற்றி சிங்களப் பெரிந்தேசிய இனத்தை களிப்பூட்டக் கூடிய சிங்களப் பெரிந்தேசிய இனத்தின் பேரினவாதச் சிந்தனைகளை செயல்வடிவம் பெறத்தக்க கருத்துக்களை அனுமதித்து வந்தது ஆங்கில டெயிலிமிரர். அதன் செயற்பாட்டை நேரடியாகக் கண்டவர்கள் நாங்கள்.)

சுமந்திரனின் 58 ஆயிரம் (கள்ள வாக்கு உட்பட) வாக்குக்கு மாங்கு மாங்கென்று வக்காளத்து வாங்கும் இந்த ஊடகம்.. அவரின் பேச்சுக்கு செயற்பாடுகளுக்கு சனநாயக சாயம் பூச வெளிக்கிடும் இந்த ஊடகம்.. தாயக மக்களையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் பிரித்தாளும் சிங்களப் பேரினவாதத்தின் நோக்கத்தை நிறைவு செய்யப்பாடுபடும் சுமந்திரனுக்கு வக்காளத்து வாங்குவது ஆச்சரியப்படுவதற்குரிய ஒன்றல்ல.

சுமந்திரனின் அரசியல் தோல்விகள்.. தாயக மக்களாலும்.. அவருக்கு இனங்காட்டப்பட்டுள்ளன. புலம்பெயர் மக்களாலும் இனங்காணப்பட்டுள்ளது.

சுமந்திரன் பயணிக்கும் பாதை 2009 ஆயுதப் போராட்ட மெளனிப்புக்குப் பின்.. தமிழ் மக்களுக்கு உள்ள அர்ப்ப சொற்ப சந்தர்ப்பங்களையும் இல்லாமல் செய்யும் என்ற பயம்.. தாயக மக்களிடமும் நிறைந்துள்ளது என்பதை அரசியல் போராளிகளின்.. தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில்.. அந்த மக்கள் முன்வைத்து வரும் பகிரங்க கருத்துக்கள் பறைசாற்றி நிற்கின்றன.

சுமந்திரன்.. யாழ் ஆக்கிரமிப்பு காணி விடுவிப்பில் தோல்வி கண்டார்.

சுமந்திரன்.. ஐநா மனித உரிமைகள் அவையில் சிங்கள அரச பயங்கரவாதத்தை கண்டிக்கவும் அதன் இன அழிப்பை இனங்காட்டவும் தவறினார்.

சுமந்திரன்..சம்பூர் மக்களின் பாதுக்காப்பான மீள்குடியேற்றம் தொடர்பில் எந்த ஒரு அக்கறையும் இன்றி தேர்தல் பொறுக்கி அரசியலாக சம்பூர் மக்களின் நில விடுவிப்பை பயன்படுத்தி விட்டு அடங்கி விட்டார்.

சுமந்திரன்.. 2002 பிரபா - ஹக்கீம் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வடக்கு முஸ்லீம்களின் பாதுகாப்பான வெளியேற்றம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பாக இன்றும் பேசித் திரிவது அநாவசியமாக இரண்டு சமூகங்களிடையேயும் பிரிவினையையும் பதட்டத்தையும் அரசியல் ஒத்துவாராமையையும் நீட்டி நிலைப்பிக்க முனையும் சிங்கள பேரின அரசியலுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களின் பங்களிப்போடு சிங்கள பேரின அரசின் பொருண்மியப் புறக்கணிப்புக்களில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் தாயக மக்களை.. புலம்பெயர் மக்களிடம் இருந்தும் பிரிக்கும் கருத்தியல் என்பது தாயக மக்களை தொடர்ந்து ஆதரவற்ற அநாதைகளாக்கி அதில் அரசியல் குளிர்காய நினைக்கும் நரித்தனமே மிஞ்சி உள்ளது.

இதனையே சிங்கள ஆளும் பேரினவாத அரசியல் சக்திகளும்.. அண்டையில் ஹிந்திய வல்லாதிக்கமும் அமுல்படுத்த விரும்புகின்றன. இதன் மூலம் தாயக தமிழ் மக்களின் அரசியல்.. விடுதலை உணர்வை அடக்கி தமக்குள் அடிமையாக வைச்சிருக்கலாம் என்று இந்த இரண்டு அரசுகளும் கணக்குப் போடுகின்றன.

உணர்ச்சி இன்றி அரசியல் இல்லை. சிங்களப் பேரின பேரினவாத தேச உணர்ச்சி அரசியலை கண்டிக்க வக்கில்லாத தமிழ்மிரர் சிங்கள பேரின அரசின் கொடுமைகளை இன்றும் சந்தித்து இடம்பெயர்ந்து நிற்கும் தமிழ் மக்களிடம் எப்படியான அரசியலை எதிர்பார்க்கிறது. கைகட்டி நிற்கும் அரசியலையா..??!

சனநாயகம் என்ற போர்வையில்.. சிங்களப் பேரினவாத சிந்தனைகளை தமிழர் தேசம் எங்கும் விதைத்து அதனை சிங்கள தேசமாக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவ உதயமானதே இந்த தமிழ்மிரர். இதில் வரும் ஆக்கங்கள் கட்டுரைகளை உன்னிப்பாக நோக்கின் அதன் வரவு இருப்பு செயற்பாடு எவ்வளவு நாசுக்காக இதனை செய்து வருகிறது என்பதை இட்டு தெளிவூட்டம் பெறலாம்.

சிங்கள பேரினவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு எந்த அரசியல்.. சமூக.. பொருண்மிய.. நில உரிமைகளையும் வழங்கப் போவதில்லை. இந்த அடிப்படையில் இருந்து தான் தமிழ் அரசியல் கைதிகளின் பொதுமன்னிப்பும் அணுக்கப்படுகிறது. இதே சிங்கள அரசுகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் செய்த ஜே வி பி குழுவினருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுகிறது.

சிங்களப் பேரினவாத அரசுக்கு முண்டுகொடுக்கக் கூடிய தமிழ் ஆயுக்குழுக்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுகிறது. சிங்கள பேரினவாத அரசுக்கு சேவகம் செய்யக் கூடிய முன்னாள் புலிக் காட்டிக்கொடுப்பாளர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால்.. அப்பாவி தமிழ் மக்களுக்கும்.. அரசியல் கைதிகளுக்கும் அது சாத்தியமில்லை என்று முழங்குகிறது. அதுவும் ஐநா அவர்களின் விடுதலை தொடர்பில் சுட்டிக்காட்டிய பின்னும்.

சுமந்திரன்.. போலி வாக்குறுதிகளை தந்து இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வரும் சிங்களப் பேரின அரசுக்கு முண்டுகொடுப்பது ஏன்..??! அதன் செயற்பாடுகளை சர்வதே அரங்கில் மறைத்து நிற்பது ஏன்..?!

சுமந்திரன் ஒரு பக்கம் போலி வாக்குறுதிகளை வழங்க.. அதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு பக்கம் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. கறுப்பு தீபாவளி கொண்டாடுகிறது. இந்த முரண்பாடுகளுக்கு சுமந்திரனின் பதில் என்ன..??! தமிழ்மிரர் என்ற ஒற்றர் ஊடகத்தின் சனநாயக நிலைப்பாடு என்ன..?!

சுமந்திரன் தொடர்ந்தும் தாயக தமிழ் பேசும் மக்களையும் புலம்பெயர் தமிழ் பேசும் மக்களையும் துருவமயப்படுத்தும் செயலை செய்து கொண்டிருக்க அனுமதிக்கப்படுவதானது எதிர்காலத்தில் தாயக தமிழ் மக்களின் அரசியல் என்பது சிங்களப் பேரினவாத அரசியல் நிரல்படுத்தப்பட்ட ஒன்றாகி தமிழ் மக்கள் எந்த வித அரசியல் உரிமைகளும் நில உரிமைகளும் அற்று சிங்களவர்களால் சூழப்பட்ட ஒரு பயங்கர சூழலில் வாழும் நிலைக்கே கொண்டு செல்லும். இந்த அடிமை வாழ்வில் இருந்து கொண்டு தமிழர்களால் உண்மையான சனநாயகத்தை ஒருபோதும் சுகிக்க முடியாத நிலையே தோன்றும்.

அப்போது அவர்களுக்கு குரல்கொடுக்க தமிழ்மிரர் ஆட்டுக்குட்டிமிரர்கள் இருக்கா. அவற்றின் இன்றைய இருப்பின் நோக்கமே தமிழ் மக்களை நிரந்தர அடிமைகளாக்கி மொத்த தீவையும் சிங்கள சிறீலங்கா ஆக்குவதுதான். அதற்கு சுமந்திரன் போன்ற சந்தர்ப்பவாத சுயநலமிகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சுமந்திரனின் தமிழர் விரோத செயற்பாடுகள்.. புகலிடத்தில் இருந்து வரும் எச்சரிக்கைகளூடு இனங்காணப்படுவதை தடுக்க சிங்களப் பேரினத் தேசிய ஊடகங்கள் முக்கி முழங்குவதில் இருந்து.. அவரின் செயற்பாடுகள் சிங்களப் பெரிந்தேசிய இனத்தின் பேரினவாத நிலைப்பாடுகளை பாதுக்காகவும் தக்க வைக்கவும் எவ்வளவு உபயோகம் ஆகிறது என்பதை விளங்கிக் கொண்டு.. புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இந்த ஆபத்துக்களில் இருந்து தாயக தமிழ் மக்களை காப்பாற்றும் பொறுப்பில் இருந்து ஒதுங்காமல் துணிச்சலுடன் செயற்பட வேண்டும்.

58 ஆயிரம் வாக்குப் பெற்ற சுமந்திரனுக்காக அழும்.. தமிழ்மிரர் ஒரு இலட்சம் வாக்குப் பெற்ற விக்கிக்காக அழாது. 80 ஆயிரம் வாக்குப் பெற்ற அனந்திக்காக அழாது. 70 ஆயிரம் வாக்குப் பெற்ற சிறீதரனுக்காக அழாது. ஏனெனில் அவர்கள் தமிழ் மக்களின் இதயத்தில் உள்ளதை முன்வைத்து அரசியல் செய்ய முனைகிறார்கள். சுமந்திரன்.. தமிழ் மக்களின் இதயத்தை சிங்களவர்களுக்காக சிதைக்கும் அரசியலை முன்னெடுக்கிறார். இதில் இருந்து சுமந்திரனின் 58 ஆயிரம் வாக்கும் வெற்றியும் இப்போ சந்தேகத்தையே கிளப்புகிறது. இந்த வாக்குப் பின்னும் வெற்றிக்குப் பின்னும் சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் நிழல் கரங்கள் செயற்பட்டுள்ளதை இது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கிறது என்றால் அது மிகையல்ல.

சுமந்திரன் சம்பந்தன் தொடர்பில் எல்லா தமிழ் மக்களும் மிகவும் அவதானமாக எச்சரிக்கையாக இருந்து அரசியலை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். தொடர் வாக்குறுதித் தோல்விகளை சந்தித்து வரும் இவ்விருவரும்.. தமிழ் மக்களின் தாயக அரசியலை தொடர்ந்து நலினப்படுத்தும் சிங்களப் பெரிந்தேசிய பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கும் ஹிந்திய வல்லாதிக்க நிகழ்ச்சி நிரலுக்கும் பாதுகாப்பும் நுழைவு அனுமதியும் ஒத்துழைப்புமே நல்கி வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால்... தமிழ் மக்களுக்கு சொந்தமாக ஒரு அரசியலே இலங்கைத் தீவில் இல்லாமல் போகும். அதன் பின் அங்கு சனநாயகம் என்பதே தமிழ் மக்களுக்கு இருக்காது. அதனை நோக்கி கொண்டு செல்வது தான் தமிழ்மிரர் போன்ற போருக்கும் பின் உதயமான சிங்களப் பெருந்தேசிய பேரினவாத ஊடக ஊதுகுழல்களின் கிளை விரிவாக்கமாகும். சிங்களப் பேரினவாத சிந்தனைகளை தமிழ்மக்களிடம் நாசூக்காக விதைக்கவே இவை உருவாக்கப்பட்டுள்ளன என்ற எச்சரிக்கையும் அவதானிப்பும் தமிழ் மக்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

யாழ் இணையத்திலும் இப்போ ஒரு குழுமம் இந்த ஊதுகுழல்களுக்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளன. அதில் பழைய சிங்கள விசுவாச ஒட்டுக்குழுக்களும்.. போருக்குப் பின் சனநாயக வேசம் போட்டுக் கொண்டு கிளம்பி இருக்கும்.. காழ்ப்புணர்வு அரசியல் கருத்துக் கொண்டோரும் எந்த தூர நோக்கும் இன்றி.. இவற்றிற்கு முண்டுகொடுத்து வருகின்றனர். இந்த அவதானிப்பும் அவசியம்..! எச்சரிக்கைகளும் அவசியம். சரியான பதில் செயற்பாடுகளும் அவசியம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

பான்ச்! என்ன புசத்தல் இது? சும் எங்கே வன்முறை செய்தார்? ஏன் யாரும் யாரையும் திருத்த வேண்டும்? குறிப்பாக சும்மின் தெரிவில் பங்கே வகிக்காத பு.பெ தமிழர் ஏன் சும்மைத் திருத்த வேண்டும்? தெரிவு செய்த தாயக மக்கள் தங்களுக்குப் பிடிக்கவில்லையானால் அடுத்த தேர்தலில் கடாசி விட்டுப் போவார்கள்? இதில் பு.பெ. தமிழர் ஏன் குத்தி முறிவான்?

4 hours ago, nedukkalapoovan said:

சொன்னாங்கோ! ஒரே விடயத்தை பெரிய சைஸ் எழுத்துருவிலும், போல்ட் செய்தும் எழுதினால் அது காலப் போக்கில் உண்மையாகி விடுமாம்! :rolleyes:

ஐயோ ஆளை விடுங்கோ .

சுமந்திரன் ஆஸி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் படங்ககளை பார்க்க சந்தோசமாக இருக்கு .

விஜே -தல போஸ்டருக்கு பால் ஊற்றும் கோஸ்டிகள் போல போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து புலிபோஸ்டருக்கு பால் ஊற்றும்  கோஷ்டிகளும் இங்கு  இருக்கு .இவர்களை காணாமல் தாண்டிபோவதுதான் சிறந்தது.

Edited by arjun
சின்ன மாற்றம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சொன்னாங்கோ! ஒரே விடயத்தை பெரிய சைஸ் எழுத்துருவிலும், போல்ட் செய்தும் எழுதினால் அது காலப் போக்கில் உண்மையாகி விடுமாம்! :rolleyes:

அதை வாசிக்கிற மக்கள் தீர்மானிப்பினம். பின்ன நீங்களா அவைக்கு எழுத்துக்கூட்டி வாசிச்சு விடப் போறீங்க. இப்படி அலுத்துகிறீங்க. ஓ... உங்கட சும் தேவாரசாமியின் குட்டுக்களை புட்டு புட்டு வைச்சிட்டாங்க என்ற பதட்டம் போல. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

அதை வாசிக்கிற மக்கள் தீர்மானிப்பினம். பின்ன நீங்களா அவைக்கு எழுத்துக்கூட்டி வாசிச்சு விடப் போறீங்க. இப்படி அலுத்துகிறீங்க. ஓ... உங்கட சும் தேவாரசாமியின் குட்டுக்களை புட்டு புட்டு வைச்சிட்டாங்க என்ற பதட்டம் போல. tw_blush:

ஓம்! முன்னர் ஒரு தடவை செய்தது போலவே ஆதாரத்தை நீங்கள் புலமையோடு முன் வைத்து விட்டதால் நாம் கலங்கி விட்டோம்!tw_cold_sweat: நீங்க கண்டுக்காதீங்க! :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

ஓம்! முன்னர் ஒரு தடவை செய்தது போலவே ஆதாரத்தை நீங்கள் புலமையோடு முன் வைத்து விட்டதால் நாம் கலங்கி விட்டோம்!tw_cold_sweat: நீங்க கண்டுக்காதீங்க! :grin:

ஆதாரத்தை நீங்கள் தான் அறியாமல் அறியாமையில் இருக்கிறீர்கள். மக்களிடம் இருக்கிறது ஆதாரம்... நாங்க அவங்களுக்கு காட்டித்தான் அவங்க அறியனுன்னு இல்லை.  இன்றைய நிகழ்வுகளும்.. மக்கள் கருத்துக்களும் அதற்கு சாட்சி. நீங்க கண்டுக்காதேங்க... ஏன்னா உங்களை யாருமே கண்டுக்கப்போறதில்லை. யாழில எழுதிக் களைச்சதை விட. இதுக்கு வேற பிரயோசனமான வேலை செய்திருக்கலாம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

ஆதாரத்தை நீங்கள் தான் அறியாமல் அறியாமையில் இருக்கிறீர்கள். மக்களிடம் இருக்கிறது ஆதாரம். இன்றைய நிகழ்வுகளும்.. மக்கள் கருத்துக்களும் அதற்கு சாட்சி. நீங்க கண்டுக்காதேங்க... ஏன்னா உங்களை யாருமே கண்டுக்கப்போறதில்லை. யாழில எழுதிக் களைச்சதை விட. இதுக்கு வேற பிரயோசனமான வேலை செய்திருக்கலாம். tw_blush:

நேற்று எழுதித் தூக்கப் பட்ட கருத்தில் இருக்கு நான் செய்த பயனுள்ள வேலை! தூக்க முதல் பார்த்திருப்பியள் தானே? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மிரர் பத்திரிகை சாடுகின்றீர்கள்.

தற்போது வெளிவரும் புலத்து தமிழ் ஊடகங்கள் கொப்பி எடுத்து போடும் செய்திகள் அனைத்துமே தமிழர் மிரரினதும் அட தெரன தமிழ் பதிப்பினதும் என்பதனை மறந்து விடாதீர்கள்.

நெடுக்கர் தன்னை தீவிர தமிழ்த் தேசியவாதியைப் போல காட்டிக் கொள்ள விரும்புகின்றார். விடுங்கப்பு.

அவர்தான் உத்தமர் மற்றவர்கள் எல்லாம்.... மிகுதியை மற்றவர்களே முடியுங்கள்.

சுமந்திரன் போய் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கக் கூடியதாக இருக்கின்றது.

அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் யாராவது ஒரு புண்ணாக்கு போய் சந்தித்து விட்டு வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அதில் இருப்பவர்கள் எல்லாம் பணத்தை அடித்தவர்களும் புலிகளின் சொத்துக்களை பதுக்கியவர்களுமே.

அந்த வகையில்தான் நெடுக்கர் தீவிரமாக தனது கருத்துக்களை யாழில் இரவு-பகல் பாராது பரப்பி வருகின்றார்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nirmalan said:

டக்கிளஸ் தேவானந்தாவும் தான் உவையளை முன்னர் சந்திச்சவர். கண்டது..??! சுமந்திரன் இன்று இருக்கும் பதவியில் உள்ள வசதிகளை தன் சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்வதை இட்டு எல்லாம் தமிழ் மக்கள் பெருமைப்பட முடியாது. காரணம்.. இவரின் நகர்வுகள் தமிழ் மக்களை இன்னும் இன்னும் அரசியல் அனாதைகளாக்கி அடிமைகளாக்கிக் கொண்டிருக்கிறது.

காசு பதுக்கினவன்.. புலி சொத்தை எடுத்தவன் கொஞ்சம் என்றாலும்.. தமிழ் மக்களின் உணர்வுகளை தாங்கி நிற்கிறானே என்று சந்தோசப்படலாம் தானே. அதற்கு ஏன் பின்னிற்கிறீர்கள். உங்களுக்கு பதுக்க..சுருட்ட வழியில்லாமல் போச்சேன்னா. இல்ல அவங்களை விட குறைவா சுருட்டிட்டமின்னா. எல்லாம் மக்கள் சொத்துத்தான். இப்ப பாதிக்கப்படுவதும் மக்கள் தான். அடிமேல் அடி வாங்குவது மக்கள் தான்..! அது சுமந்திரனால் ஆனால் என்ன டக்கிளஸால் ஆனால் என்ன கருணாவால் ஆனால் என்ன சித்தார்த்தனால் ஆனால் என்ன. tw_blush:

தமிழ்மிரரை கொப்பி பண்ணுற ஊடகங்களில் இருந்து செய்திகளை நாங்கள் பெறுவதில்லை. தாயகத்தில் இருந்து நேரடியாக செய்தி எடுக்கும் ஊடகங்களை தான் நாம் அதிகம் பார்க்கிறோம். பகிர்கிறோம். முதலில் நீங்கள் அதனை விளங்கிக் கொண்டால் நல்லது. மேலும் தமிழ்மிரரின் உண்மை முகம் மக்களில் பலரும் அறிந்தது தான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 விக்கியர் அப்பிடி என்ன பிழையாய் சொல்லிபோட்டார்? மக்களுக்கு உண்மையாய் எதற்கும் சோரம் போகாமல் சேவை செய்பவர்களை தேர்ந்து எடுங்கள் என்று சொன்னார். இதில உவயளுக்கு ஏன் கோவம் வரவேணும்? அவர் மக்களுக்கு சேவை செய்ய வந்தவரே ஒழிய உவை சொல்லுறதுக்கு தலை ஆட்ட அல்ல. நாட்டில அழிப்பு நடக்கேக்க இந்தியாவில கூடாரம் அடிச்சு தங்கிட்டீனம். தாங்கள் நினச்சவைக்கு வோட்டு போடுங்கோ எண்டிட்டு சிகிச்சை எண்டு மறுபடி இந்தியப்பயணம். இப்போ அரசியல் கைதிகள் விடயம் சுமந்திரன் அவுசில, பெரியவர் இந்தியாவில.பிரிட்டன் பிரதமர் வந்த போது என்ன நடந்தது? மக்கள் நடு வீதியில உளக்குப்பட்டு அந்தரிக்கேக்கை அவை எங்கே?  வருத்தக்காரர் ஓய்வு எடுத்துக்கொண்டு மற்றவை வேலை செய்ய விட வேண்டியதுதானே. இதை யாரும் விளங்கிக்கொள்வர். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குது. தங்கட செயலை மாத்தவேணும் அல்லது சேவை செய்யிறவைக்கு இடத்தை விடவேணும். சும்மா விக்கி ஐயாவை குறை சொல்லி தாங்கள் சுத்தம் எண்டு காட்டப் பாக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

"சும்மின் தெரிவில் பங்கே வகிக்காத பு .பெ தமிழர் ஏன் சும்மைத் திருத்த வேண்டும்?" அவர் சொல்லுறார் தேர்தல் சிலவுக்கு பணம் வாங்க தானும், சம்பந்தரும் வெளி நாட்டுக்கு போனதாகவும், அடுத்த தடவை விக்கி ஐயாவை அனுப்பியதாகவும்    நேற்றைய பதிவில் யாரோ பதிந்திருந்தார்கள் சில விளக்கம் அளிப்பதற்காக புலம் பெயர்ந்தவர்களிடம் வந்தார் என்றும். இன்று சொல்கிறார்கள் சும்மின் தெரிவில் பங்கே வகிக்காத பு. பெ தமிழர் என்று. பங்கு வகிக்காதவர்கள் ஏன் காசு கொடுக்க வேண்டும், இவர்கள் ஏன் வாங்க  வேண்டும்? அவர்களுக்கு விளக்கம் அளிக்க இவர் ஏன் அங்கு போக வேண்டும்? இந்தக்கணக்கு எப்படிப் போட்டாலும் சமனடையாதாம். யாராவது தெரிந்தால் இந்தச் சமன்பாட்டை தீருங்களேனப்பா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.