Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முஸ்லிம் மக்கள் தொடர்பில் குழப்பமான கருத்துக்கள் வேண்டாம்! (டக்ளஸ் எம்.பி. வேண்டுகோள்)

Featured Replies

வடக்கு மாகாணத்தை விட்டு எமது சகோதர மக்களாகிய முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் முடிவுற்றுள்ள நிலையில், அம் மக்களுக்கான இழப்புகள் தொடர்பில் பரிகாரங்களைக் காண்பதற் கான நடவடிக்கைகளுக்கு முயலாமல், சுயலாப நோக்கிலும், இனங்களுக்கிடையில் தற்போது ஏற்பட்டு வரும் சுமுகமான உறவுகளைக் குழப்பும் நோக்கிலும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.  தெரிவித்துள்ளார். 

அன்றைய கால கட்டத்தில் இம் மக்களது துயர்துடைக்க முன் வராதவர்கள், இன்று மீண்டும் இரு சமூகங்களுக் கிடையிலும் விரிசல் நிலையை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை முன்வைத்து வருவது ஆரோக்கியமான விடயமல்ல. கடந்த கால கசப்பான தவறுகளை உணர்ந்து, அவ்வாறான தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருக் கும் வகையில் இனங்களுக் கிடையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டி யெழுப்பவே நாம் தொடர்ந்து உழைத்து வருகின்றோம். அதற்கு எமது மக்களை நேசிக்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன் வருவதை விடுத்து, குழப்பங்களை உண்டு பண்ணக் கூடிய இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அன்று முதல் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நாம், கடந்த காலங்களில் அதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வந்திருந்தோம்.  
எனவே, இவ்வாறான சுயநல அரசியல் வாதிகள் மேலும், மேலும் தவறான கருத்துப் பரிமாற்றல்களை மேற்கொள்ளாமல்,  இம்மக்களின் இழப்புகளுக்கும், மீள் குடியேற்றத்திற்கும் பரிகாரம் காண முன் வரவே ண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

http://www.valampurii.lk/valampurii/content.php?id=7957&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை இப்பவும் அரசியலில் இருக்கின்றாராம்

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2015, 00:23:38, putthan said:

அண்ணை இப்பவும் அரசியலில் இருக்கின்றாராம்

நான் இன்னமும்  இருக்கிறாராம் என்று சொல்ல வந்தேன் ....

  • கருத்துக்கள உறவுகள்
On 19.11.2015, 07:23:38, putthan said:

அண்ணை இப்பவும் அரசியலில் இருக்கின்றாராம்

அண்ணையைக் குறை சொல்லக்கூடாது. அவருக்கும் 30.202 மக்கள் வாக்களித்துள்ளார்கள். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், வாயை வைச்சுக் கொண்டிராமல் சும்மா அலம்ப வெளிக்கிட்டு, லெப்ட், ரைட், ரொப், பொற்றம் என்று வாங்கிக் கட்டுறார்.

அட, சும்மா படுத்துக் கிடந்த சங்கரியருமெல்லா சன்னதம் கொண்டாடுறார். 

  • கருத்துக்கள உறவுகள்

நுணலும் தன் வாயாற் கெடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காணி வயல் வரம்பு உறுதி சம்பந்தமாய் மார்கழிமாசம் ஊருக்கு போக இருக்கிறன்....

அதாலை டக்ளஸ் ஐயா நல்லவர் எண்டுதான் நான் சொல்லுவன்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

காணி வயல் வரம்பு உறுதி சம்பந்தமாய் மார்கழிமாசம் ஊருக்கு போக இருக்கிறன்....

அதாலை டக்ளஸ் ஐயா நல்லவர் எண்டுதான் நான் சொல்லுவன்.:cool:

நான் இரண்டு கிழமைக்கு முதல் போயிட்டு வந்திட்டன் அதுதான் இந்த துணிவு ...:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.