Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரைப் பகுதியிலிருந்து பின்வாங்கி விட்டோம்: சிறிலங்கா இராணுவம்

Featured Replies

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதில் இருந்து நாங்கள் பின்வாங்கி விட்டோம் என சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மக்கள் வசிப்பிடங்களில் இருந்து தாக்குதல்களை நடத்துவதால் நாங்கள் தாக்குதலை நிறுத்தியுள்ளோம் என இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை கூறியுளள்து.

"விடுதலைப் புலிகள் வாகரை மருத்துவமனைக்கு அருகில் இருந்து தாக்குதலை நடத்துகிறார்கள் என்று நிச்சயமான தகவல் கிடைத்த பின்னர் இன்று எங்களால் எதிர்த்துத் தாக்குதலை நடத்த முடியவில்லை" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

விடுதலைப் புலிகள் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள், விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் உள்ள பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தங்களது தாக்குல் நிலைகளை எப்போதும் மாற்றிக்கொண்டே உள்ளனர். எப்போதும் மக்களை அவர்கள் கவசமாகப் பயன்படுத்துகின்றனர் என அவர் மேலும் கூறினார்.

http://www.eelampage.com/?cn=30110

சீ சீ நீங்கள் பின் வாங்கியதுக்காக நாங்கள் உங்களை தப்பா நினைக்கவில்லை :P

நீங்கள் தாக்கினா மக்கள் அழிச்சு போவர்கள் என்று தான் பின் வாங்கினிங்களாக்கும் :P

இது யாருக்கு சொன்ன கதை ஜநா சபைக்கா இல்லை கண்காணிப்பு குழுக்கா?

இதுதான் சிங்களத்தின் 'தந்திரோபாயப்' பின்வாங்கல்.

இப்போது மக்கள் பகுதிகளை நோக்கி வான்குண்டு வீசிக்கொண்டிருப்பதாகக் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் வாகரை மருத்துவமனைக்கு அருகில் இருந்து தாக்குதலை நடத்துகிறார்கள் என்று நிச்சயமான தகவல் கிடைத்த பின்னர் இன்று எங்களால் எதிர்த்துத் தாக்குதலை நடத்த முடியவில்லை" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இது கவனிக்க வேண்டிய செய்தி. நாளைக்கு வாகரை வைத்தியசாலை மீது இராணுவம் தாக்குதல் நடத்தினாலும், புலிகள் மீது பழியைப் போடுகின்ற கபடச் செய்தி இது. நேற்று மக்கள் அங்கே தஞ்சமடைகின்றனர் என்ற வைத்திய அதிகாரியின் செய்தியின் பின்னர் தான் இலங்கையரசு இவ்வாறு அறிக்கை விடுகின்றது.

Monitors urge parties to refrain from violence in Vaharai

[TamilNet, Tuesday, 12 December 2006, 11:33 GMT]

The Sri Lanka Monitoring Mission (SLMM), in an statement issued from Colombo Tuesday, urged the Parties, the GoSL and the LTTE, to refrain from "any further viloence" in Vaharai area. Restriction of SLMM access by GoSL forces to areas where violations may have taken place is in itself a violation of the CFA and more importantly prevents the SLMM from working according to is mandate, charged the statement. "The LTTE has failed to protect civilians in Vakarai by restricting their movements," the SLMM statement accused the Tigers.

Full text of the press release issued by the SLMM follows:

SLMM HQ

Colombo

Date: 12.12.2006

SUBJECT: Urgent concerns over alarming situation in Vakarai area

The Sri Lanka Monitoring Mission, SLMM, is deeply concerned over the escalating violence in the area between Batticaloa and Trincomalee in the east part of Sri Lanka. The violence does not only put the Cease Fire Agreement, CFA, into great danger, but jeopardizes lives of thousands of innocent civilians, especially internally displaced people in the Vakarai area.

The LTTE has failed to protect civilians in Vakarai by restricting their movements.

It is the responsibility of the LTTE to do their utmost to facilitate for these innocent civilians to reach safe ground. The SLMM has contrary to acceptable practices on one occasion experienced that civilians were being hindered from exiting the area.

...

....

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20589

:wacko:

அட என்ன கரிசனை. அப்படியே யாழ்ப்பாணத்து சனத்தையும் பாதுகாப்பா விட்டுட்டு கொஞ்சம் பின் வாங்கினா என்ன? இப்பவே பின்வாங்கிரது நல்லது பிறகு கப்பல் கேக்க வேண்டி வரும். நரிகளின் தந்திரம்...?

ஈழத்திலிருந்து

ஜானா

அது தானே ஜநாவில தமிழீழக் கெடி பறக்கத்தேவையில்லை யாழ்ப்பாணத்தில புலிக் கொடி பறந்தாக் காணும் பனங்கொட்டை சொறிஞ்சு கொண்டு மிச்சக்காலத்தை ஓட்டலாம் :lol:

ஐ.நா:

பொதுமக்களைத் தாக்குவது மனித உரிமைகளை மீறுவதாகும் என சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
போ.நி.க.கு:

The LTTE has failed to protect civilians in Vakarai by restricting their movements.

It is the responsibility of the LTTE to do their utmost to facilitate for these innocent civilians to reach safe ground. The SLMM has contrary to acceptable practices on one occasion experienced that civilians were being hindered from exiting the area.

இலங்கை இராணுவம்:

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதில் இருந்து நாங்கள் பின்வாங்கி விட்டோம் என சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

பந்து இப்போ யார் பக்கம்? :lol:

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்வாங்கிறம் எண்டு சொல்லிப்போட்டு பன்சாலைக்குள்ள இருந்து வருவாங்க தம்பிமாரே கவனம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் போக்குவரத்துக்கு புலிகள் தடையல்ல - கண்காணிப்பு குழுவின் குற்றச்சாட்டுக்கு எழிலன் மறுப்பு

பொது மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு புலிகள் தடையாக இருக்கின்றனர் என்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது. விடுதலைப்புலிகள் பொதுமக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள். எமது கட்டுப்பாட்டு பிரதேச நடைமுறைகளை பின்பற்றி வெளியிடங்களுக்கு மக்கள் செல்லலாம் என்று விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எஸ்.எழிலன் நேற்றிரவு பி.பி.சி.க்கு தெரிவித்தார்.

போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினருக்கு வாகரைப் பகுதியில் மோதல் இடம்பெறும் பிரதேசங்களுக்கு செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. அவர்களுக்கான போக்குவரத்தை படைத் தரப்பினர் நிறுத்தி வைத்துள்ளனர். தாக்குதல்களின் போது காயமடைபவர்களைக்கூட வெளியிடங்களுக்கு கொண்டுசெல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில் எம்மீது போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் குற்றம் சுமத்துவது தவறானதாகும்.

பனிச்சங்கேணி பகுதியில் கடந்த 21ஆம் திகதி பனிச்சங்கேணி ஊடான பாதை மூடப்படும் வரை மக்கள் போக்குவரத்தை மேற்கொண்டுவந்தனர். ஆனால் பாதை மூடப்பட்டதன் பின்னர் மக்களால் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. இப்பகுதியில் ஒரு பாதையே காணப்படுகின்றது. இதனை படைத்தரப்பினர் தொடர்ச்சியாக மூடிவைத்துள்ளதுடன் முன்னகர்வுகளை மேற்கொண்டும் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கு போக்குவரத்து செய்வதற்கான வாய்ப்புகள் இருக்குமானால் நாங்கள் அதற்கு தடையாக இருக்கமாட்டோம். ஆனால் போக்குவரத்துக்கான எந்த வசதியும் மக்களுக்கு செய்துகொடுக்கப்படாத நிலையில் நாங்கள் அவர்களை தடுப்பதாக கூறுவது வேதனைக்குரிய விடயமாகும்.

மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களிலிருந்து நாங்கள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம். ஆனால் புலிகள் வாகரை வைத்தியசாலைக்கு அருகில் இருந்து தாக்குதல்களை நடத்துவதாக அரசாங்கம் பொய் பிரசாரம் செய்து வருகிறது.

இதனை உறுதிப்படுத்திக்கொள்ள சர்வதேச நிறுவனங்கள் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு வருகை தந்து நிலைமைகளை பார்வையிடலாம். ஆனால் போர்நிறுத்த கண்காணிப்புக்குழு குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு செல்ல படை தரப்பு அனுமதி வழங்காமல் இவ்வாறான குற்றச்சாட்டுகளை செய்வது மோசமான விடயமாகும்.

-பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

அடைமழை, அகோர ஷெல் 35 ஆயிரம் பேர் பெரும் அவதி

* வாகரையில் காயமடைந்தோரை கடல் வழியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஐ.சி.ஆர்.சி.முயற்சி

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடரும் அகோர ஷெல் தாக்குதலால், கொட்டும் மழையில் 35,000 இற்கும் மேற்பட்ட மக்கள் மிகப் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

வாகரையை அண்டிய பால்சேனை, வம்மிவெட்டுவான் மற்றும் கண்டலடிப் பகுதிகளில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதலில் 45 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வாகரை ஆஸ்பத்திரியில் மிகப்பெரும் இடப்பாற்றாக்குறைக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த அகோர ஷெல் தாக்குதலால் மேற்படி பகுதிகளில் பாடசாலைகள் பலத்த சேதமடைந்த நிலையில் 35,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த மூன்று நாட்களாக வாகரை ஆஸ்பத்திரியை அண்டிய பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இப்பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் 35,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இருக்க இருப்பிடமின்றி கொட்டும் மழையில் பெரும் அவலங்களைச் சந்தித்து வருகின்றனர்.

நேற்றும் இப்பகுதியில் தொடர்ந்து கடும் ஷெல் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பால்சேனை பகுதியில் இதனால் நேற்று மூன்று பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

கடும் ஷெல் தாக்குதல் தொடர்வதால் மக்கள் ஆஸ்பத்திரியை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டும் மழையில் மரங்களுக்குக் கீழும் சிறு சிறு கட்டிடங்களினுள்ளும் பலத்த சிரமங்களின் மத்தியில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நேற்றும் வழங்கியது.

இதேநேரம், கடந்த இரு நாட்கள் இப்பகுதியில் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் முப்பதுக்கும் மேற்பட்டவர்களை கடல் வழியாக மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேற்று ஈடுபட்டிருந்தது.

தரைவழியால் இவர்கள் வாகரை வர, படையினர் அனுமதி வழங்காத நிலையிலேயே செஞ்சிலுவைச் சங்கத்தினர் கடல் வழியாக படகுகளில் வாகரை கரையை வந்தடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை படகுகள் மூலம் மட்டக்களப்புக்கு அனுப்பும் முயற்சிகளும் நடைபெற்றன.

-தினக்குரல்

ஐநால கொடிபறக்கிற நாடேல்லாம் தேனும் பாலும் ஓடுகிற நாடாத்தான இருக்குது. முதல்ல யாழ்பாணத்தில தமிழீழத்தில எங்கட கொடி பறக்கட்டும் மற்றவைகளை பிறகு பாக்கலாம். மானத்தோட தன்ட பனங்கொட்டைய சொறிஞ்சு கொண்டு வாழ்ரதில் எந்த அவமானமும் இல்ல. மத்தவன்டையத உக்கிப் போன எலும்புத் துண்டு சூப்பிரதுக்காக வீட்டுல இருக்கிவையையும் கொண்டு குடுத்துட்டு சொறியமா இருந்தா சரி. :P

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.