Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.வை அனுமதித்திருக்காவிடின் விளைவு மோசமாக இருந்திருக்கும் : ராஜித்த சேனாரத்ன

Featured Replies

ஐ.நா.வை அனு­மதித்­தி­ருக்­கா­விடின் விளைவு மோச­மாக இருந்­தி­ருக்­கும் : ராஜித்த சேனா­ரத்ன

 

திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்குள் ஐ.நா.குழு­வி­னரை அனு­ம­தித்­தி­ருந்தோம். இதில் பாது­காப்­புக்கு எந்­த­வித அச்­சு­றுத்­தலும் இல்லை. அமெ­ரிக்­காவின் குழு­வொன்றை அனு­ம­தித்­தி­ருந்­தாலே குற்­ற­மாகும். மேலும் ஐ.நா. வுடன் இணைந்­தி­ருக்­கா­விட்டால் திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் இர­க­சிய வதை முகாம் ஒன்று இருப்­ப­தா­கவே சர்­வ­தே­சத்­துக்கு தகவல் வழங்­கி­யி­ருப்பர் என அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன நேற்று தெரி­வித்தார்.

rajitha_senaratne.jpg

ரகர் வீரர் தாஜீ­தீனின் படு­கொலை தொடர்­பான சி.சி.டிவி கமரா வீடியோக் காட்­சிகள் அழிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். தாஜீதீன் விவ­கா­ரத்தை மூடி­ம­றைப்­ப­தற்­கான தேவைகள் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கே இருக்­கி­றதே தவிர எமது அர­சாங்­கத்­திற்க்கு கிடை­யாது என்றும் அவர் கூறினார்.

இதே­வேளை இனப்­ப­டு­கொலை என்று அங்கு எதுவும் இடம்­பெ­ற­வில்லை. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்­பான உள்­ளக விசா­ர­ணைகள் இடம்­பெறும். அதில் குற்றம் நிரூ­பிக்­கப்­படும் பட்­சத்தில் அது குறித்து நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றக் கட்­டிடத் தொகு­தியில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ளர்­களால் எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் ராஜித்த மேலும் கூறு­கையில்,

எமது நாட்டின் இரா­ணு­வத்­தி­ன­ரையும், இரா­ணு­வப்­ப­டை­யி­ன­ரையும் முன்­னேற்­று­வ­தனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பிரித்­தா­னிய அர­சாங்கம் ஆறு மில்­லியன் ஸ்ரேலிங் பவுண்­களை உத­வி­ய­ளித்­துள்­ளது. இதனைக் கண்­கா­ணிப்­ப­தற்­கென பிரித்­தா­னியா தனது அதி­காரி ஒரு­வ­ரையும் நிய­மித்­துள்­ளது. இச் செயற்­பாட்டால் இலங்­கையில் பாது­காப்­பிற்கோ அல்­லது இறை­மைக்கோ எந்­த­வி­த­மான அச்­சு­றுத்­தலும் கிடை­யாது.

பொது எதி­ரணி என்று கூறிக் கொள்வோர், யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் அமெ­ரிக்­காவின் உத­வியை நாடி­யி­ருந்­த­போது அமை­தி­யாக இருந்­தனர். ஆனால் இப்போது கூச்­ச­லி­டு­கின்­ற­னர். ஆனால் அப்­போது அமெ­ரிக்­கா­விடம் உத­வியை நாடி­யி­ருந்­ததைப் போன்ற ஒரு அம்­ச­மா­கவே இதனைப் பார்க்­கின்றோம்.

மேலும் ஐக்­கிய நாடுகள் எனும் போது நாமும் (இலங்­கையும்) அதில் இணைந்­தி­ருக்­கின்றோம். அப்­ப­டி­யானால் நாமும் ஐ.நா.வாகவே இருக்­கின்றோம். ஐ.நா. எனும் வல­ய­மைப்­புக்குள் பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுடன் நாமும் இணைந்­தி­ருக்­கின்றோம்.

அந்த வகையில் திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்குள் நுழை­வதன் பொருட்டு ஐ.நா. விசா­ர­ணைக்­கு­ழு­வுக்கே நாம் அனு­ம­தியை வழங்­கி­யி­ருந்தோம். அமெ­ரிக்­காவின் விசா­ர­ணைக்­கு­ழுவுக்­கு நாம் அனு­மதி வழங்­கி­யி­ருந்தால் அதனைத் தவ­றாக கூற முடியும்.

திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்குள் செல்­வ­தற்கு ஐ.நா. விசா­ரணை குழு­வுக்கு நாம் அனு­மதி மறுத்­தி­ருந்­தோ­மானால் அது தவ­றாக அமைந்­தி­ருக்கும். அத்­துடன் திரு­மலை கடற்­படை முகா­முக்குள் இர­க­சிய முகாம் ஒன்று இருப்­ப­தாக சர்­வ­தே­சத்­துக்கு தகவல் வழங்­கப்­பட்­டி­ருக்கும். ஆகவே ஐ.நா. குழுவை திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்குள் அனு­ம­தித்­தி­ருந்­தமை எந்த விதத்­திலும் நாட்­டுக்கோ, பாது­காப்­புக்கோ, இறை­மைக்கோ அச்­சு­றுத்­தல கிடை­யாது என்­றார்.

இதே­வேளை முன்னாள் பாது­காப்பு செய­லா­ளர் கோத்­தா­பாய ராஜ­ப­க்ஷ­வினால் தெரி­விக்­கப்­பட்­ட­தான கருத்து எனக்­கூறி எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்த அமைச்சர்,விடு­தலைப் புலி­களின் புல­னாய்வுப் பிரிவில் பிர­தா­னி­யாக செயற்­பட்டு வந்த நகு­லேஸ்­வரன் என்­ப­வரை முன்­னைய அர­சாங்­கமே விடு­வித்­தது. மகளிர் அணித்­த­லை­வி­யாக செயற்­பட்டு வந்­த­வரும் அண்­மையில் மர­ணித்­த­வ­ரு­மான தமி­ழி­னி­யையும் விடு­தலை செய்­தது முன்­னைய அர­சாங்­கமேயாகும்.

அது­மாத்­தி­ர­மின்றி பிர­பா­க­ரனை விட முதலில் தண்­டிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டி­யவர் கே.பி. யாவார். வடக்கு இளை­ஞர்­களின் கைகளில் ஆயு­தங்­களை தவழச் செய்த குற்­ற­வாளி அவரே. கே.பி. பிர­பா­க­ர­னுக்கு அடுத்­த­தாக புலி­களின் அமைப்பின் தலை­வ­ராக செயற்­பட்டார். அவ்­வா­றா­ன­வரை அழைத்து வந்த முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் அவ­ருக்கு விருந்து படைத்து உண்டு மகிழ்ந்­தனர். இவ்­வாறு செயற்­பட்­ட­வர்கள் இன்று கத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். எனவே இது­பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

மேலும் ரகர் வீரர் தாஜீதீனின் படுகொலையுடன் தொட்புபட்டதான சி.சி.டிவி கெமரா வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. தாஜீதீனின் கொலையை மூடிமறைப்பதற்கான தேவை முன்னைய ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது. எமது அரசாங்கத்திற்கு அப்படியான தேவை கிடையாது. இலங்கையில் பேர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. பரிந்துரைகளின் பிரகாரம் உள்ளக குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

http://www.virakesari.lk/article/931

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் பிறேமசந்திரன் தான் மேற்படி குற்றச்சாட்டை வைத்த்வர். (திருகோணமலை வதை முகாம்) சம்பந்தர் ஐயாவும் இது பற்றி பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். அத்தோடு திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். இவர்களிடம் ஐ.நா உறுப்பிபர்கள் பேசவில்லையா? ஆதாரத்தை கேட்கவில்லையா? அல்லது இரவோடு இரவாக சிங்களவர்கள் மூடிவிட்டார்களா? சிங்களவர்கள் இதில் சூராதி சூரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இலங்கையில் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. பரிந்துரைகளின் பிரகாரம் உள்ளக குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

சொறீலங்காவில் போரே நடக்கல்ல... இவர்.. போர் என்று உச்சரிக்கிறார்.

நடந்தது எல்லாம் சும்மா பள்ளிக்கூடப் பொடியளின் சண்டித்தனம். இதுக்குப் போயி சர்வதேச விசாரணை.. உள்ளக விசாரணை என்று கொண்டு. பிரன்சிபாலைக் கூப்பிட்டு தமிழரைக் கொன்று.. தமிழ் பெண்களை பாலியல்வன்புணர்ந்து துடியாட்டம் செய்த.. சிங்கள பள்ளிக்கூடப் பொடியளை.. அப்படி செய்தனியளோடா.. என்று கேட்டிட்டு.. தப்பித்தவறி.. ஓம் என்று தலையாட்டிறவனை அரைமணித்தியாலம்.. முட்டுக்காலில விட்டிட்டிட்டு வீட்டுக்கு பத்திமா அனுப்பி விட வேண்டியான். அப்படியே அமெரிக்காவுக்கு அனுப்பி பேஸ்போல் பழகவிட்டால் இன்னும் நல்லா இருக்கும். நாட்டில் இன ஐக்கியம்.. நல்லிணக்கம்.. நல்வாழ்வு.. நலவாழ்வு தான் இப்ப சர்வதேசத்துக்கு ரெம்ப முக்கியம். tw_blush::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.