Jump to content

காடை முட்டை குழம்பு


Recommended Posts

காடை முட்டை குழம்பு
Kaada Muttai Kuzhambu

 

கோழி முட்டையை விட காடை முட்டை மிகவும் ஆரோக்கியமானது என்பது தெரியுமா? ஆம், இதுவரை நீங்கள் காடை முட்டையை பச்சையாக குடித்திருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு குழம்பு செய்து சுவைத்ததுண்டா? இங்கு அந்த காடை முட்டையைக் கொண்டு குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

 

தேவையான பொருட்கள்:

காடை முட்டை - 20

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தக்காளி - 2 (அரைத்தது)

பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

உப்பு - தேவையான அளவு

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 2 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

 

செய்முறை:

முதலில் காடை முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் பலமுறை கழுவி, ஓட்டை உரித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட்டு, பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு தக்காளியை சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள காடை முட்டையை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காடை முட்டை குழம்பு ரெடி!!!

 
E_1306230177.jpeg
 
ஜப்பானியக் காடை வளர்ப்பு: ஜப்பானியக் காடை வளர்ப்பு தமிழகத்தில் பிரபலமாகிவரும் முக்கிய தொழில்களில் ஒன்றாகும். காடைகள் பொதுவாக முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப் படுகின்றன. இருப்பினும் காடைகள் இறைச்சிக்காகவே அதிகம் வளர்க்கப்படுகின்றது. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்பு தொழிலானது பெரிய பண்ணைத் தொழிலாகவே வளர்ந்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காடையா? தீக்கோழியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி பரிமளம் அந்தக் கடியனை கெதியா அவுட்டு விடுங்கோ....! :)

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

காடையா? தீக்கோழியா?

ஐயோ எனக்கு தெரியாது ரதி:)

அதுதான் கூகுள் ஆண்டவரின் உதவியோடு படத்தை போட்டேன்.

8 minutes ago, suvy said:

தங்கச்சி பரிமளம் அந்தக் கடியனை கெதியா அவுட்டு விடுங்கோ....! :)

திருப்பியும் கடியனா:grin:

கடியனுக்கு ஒரு ரெசிப்பி போடதான் இருக்கு :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

ஐயோ எனக்கு தெரியாது ரதி:)

அதுதான் கூகுள் ஆண்டவரின் உதவியோடு படத்தை போட்டேன்.

திருப்பியும் கடியனா:grin:

கடியனுக்கு ஒரு ரெசிப்பி போடதான் இருக்கு :cool:

ஒரு கொரியன் ரெசிப்பி எடுத்துப் போடுங்கோ....!

ostrich.jpg

இதுதான் தீக்கோழி...!

Link to comment
Share on other sites

38 minutes ago, suvy said:

ஒரு கொரியன் ரெசிப்பி எடுத்துப் போடுங்கோ....!

நிழலி இந்த பக்கம் வந்தால் கடியனின் பல்லில் வறை போடலாம் என்பார்:grin:

 

Edited Tuesday at 1:29 PM by நவீனன்

Link to comment
Share on other sites

காடை முட்டை கோழி முட்டையின் அளவா??  எது சுவை கூடியது?? வெளி நாடுகளுலும் இருக்கா?? என்ன பெயரில்??

நன்றி இணைப்புக்கு சகோதரம் :)

 

1 hour ago, suvy said:

ஒரு கொரியன் ரெசிப்பி எடுத்துப் போடுங்கோ....!

ostrich.jpg

இதுதான் தீக்கோழி...!

அவ்வளவு கஸ்டம் ஏன்?? ஆட்டுக்கறியை எப்பிடிச் சமைக்கிறீர்களோ அப்படியே கடியனுக்கும் முயற்சித்துப் பாருங்கோவன்:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

காடையா? தீக்கோழியா?

கோழி குருடா ஈந்தாலும், ஆணம், யாதீயா இருக்கோணும் எண்ட மாதரி காடையோ, கெளதாரியோ, ஆணம் நல்லமா ஈக்கோணும் இல்லீயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தில இருக்கிறது கோழி முட்டை.காடை முட்டை சிறியது.

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

இந்தப்படத்தில இருக்கிறது கோழி முட்டை.காடை முட்டை சிறியது.

உண்மை சுவைப்பிரியன்.. நானும் அதை அவதானித்தேன்.:)

10 minutes ago, suvy said:

quail-egg-350x250.jpg

இது காடை முட்டை...!

நன்றி சுவி அண்ணா:)

உங்கள் எல்லோரதும் கருத்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி :)

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

நந்ற்quail-egg-350x250.jpg

இது காடை முட்டை...!

நன்றி சகோ!! பார்க்கவே ஒரு மாதிரி இருக்கு ... யாராவது சாப்பிட்டிருக்கிறீர்களா??? சுவை என்ன மாதிரி??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.