Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீப் பாடல்' பிடிக்காவிட்டால் கேட்காதீர்: 'சர்ச்சை' சிம்பு ஆவேசம்

Featured Replies

பீப் பாடல்' பிடிக்காவிட்டால் கேட்காதீர்: 'சர்ச்சை' சிம்பு ஆவேசம்

 

 
simbu_2007489f.jpg
 

'பீப்' பாடல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக யாருடைய கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது என்று சிம்பு காட்டமாக தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு 'பீப் சாங்' என்ற பெயரில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியானது. ஆனால், அப்பாடல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்று கருத்துக்கள் நிலவின.

அப்பாடலில் உள்ள வரிகள் பல கொச்சையாக இருந்ததால், சில இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் பெண்ணியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிம்பு, அனிருத் மீதான கழுவியூற்றல் படலம் நீடித்து வருகிறது.

இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சிம்பு. பலரும் அப்பாடல் சிம்பு எழுதியது தானா, அவருடைய குரல் தானா என்று கேள்வி எழுப்பினார்கள்.

இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது, "'பீப் பாடல்' வெளியானது பற்றி பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்பாடலை முதலில் நான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. நானும் அனிருத்தும் இணைந்து பல்வேறு தளங்களில் சுமார் 150 பாடல்களை தயார் செய்து வைத்திருக்கிறோம். அதில் இருந்து ஒரு பாடலை திருடி வெளியிட்டு இருக்கிறார்கள்.

முதலில் அப்பாடல் ஏதாவது ஒரு படத்திலோ, ஆல்பத்திலோ இடம்பெறவில்லை. அது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அப்பாடல் குறித்து ஒரு சிலர் நன்றாக இருக்கிறது என்றும், பலரும் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... அதே இணையத்தில் தானே போர்ன் (ஆபாச வீடியோ) வீடியோக்களும் இருக்கிறது. தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதேபோல் தான் பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்.

நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்கவில்லை. என்னைக் கேள்விக் கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து "நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்" என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு அன்பை பரிமாறுங்கள் என்று ஒரு பாடல் வெளியிட்டேன். அப்போது எனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்களா? யாருடைய கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதேபோல், என்னுடைய பணியைப் பற்றி குறைச் சொல்பவர்கள் யாருக்கும் நான் பதில் வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article7980174.ece?homepage=true

  • தொடங்கியவர்

திரு சிம்பு அவர்களே... இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?

 

    தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே.


    திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், "ஹிப்ஹாப் தமிழா" திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு,

சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை.

பொதுவாக தமிழர்கள்  சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பார்ப்பது கிடையாது. படங்களில், மெகா சீரியல்களில் வரும் வில்லன்கள் வில்லிகள் நன்றாக இருக்கக்கூடாது என்று வாரித் தூற்றும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை சினிமாவுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. சினிமா நடிகர்ளை நாட்டை ஆள வைத்து அழகு பார்ப்பவர்கள்.

simbu_vc1.jpg



    இத்தகைய சமூகத்தில், உங்களுடைய பாடல்களை, பட வசனங்களை வைத்து இங்கு தினம் தினம் எவ்வளவு பெண்கள் "வெர்பல் அப்யூஸ்" எனப்படும், ’வார்த்தை வதை’யை எதிர்கொள்கிறார்கள்  என்பதை ரசிகர்களை மகிழ்விக்க பறந்து பறந்து வேலை பார்க்கும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ‘இது வெறும் ஜாலிக்குதான்’ ‘நங்கள் பெண்களை திட்டவில்லை’ என்று நீங்கள் கூறும் பதில்களை கேட்டு கேட்டு காது புளித்துப்போனவர்களில் நானும் ஒருத்தி!

    அது என்ன மாயமோ புரியவில்லை, என்ன மந்திரமோ தெரியவில்லை ஜாலிக்கு திட்ட பெண்கள் மட்டுமே கிடைக்கிறார்கள். "க்ளப்புல மப்புல" பெண்கள் திரிவதாக பாடிய ’ஹிப்பாப் தமிழா’ திரு.ஆதியின் கண்களுக்கு குடிப்பழக்கம் உள்ள சுமார் நான்கு சதவீத பெண்கள் மட்டுமே தெரிகிறார்கள்.  அவருக்குப் பிடித்த பாரதியாரின் கூற்றின்படி நிமிர்ந்த நன்னடையில், நேர்கொண்ட பார்வையுடன் இப்புவியில் யாருக்கும் அஞ்சாத துணிவுடன் இந்த சமூகத்தில் போராடி முன்னேறும் பெண்களை பார்க்காமல் போய்விட்டார். குடிக்கும் பழக்கம் உள்ள முக்கால்வாசி ஆண்களைப் பற்றி பாடியதே இல்லை. பெண்கள் கர்சீப்பை கட்டிக் கொண்டு நடமாடுவதாகக் கூறிய திரு.ஆதி அவர்கள், ஏனோ லோ ஃஹிப், ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போடும் ஆண்களிடம் வேட்டி சட்டை கட்ட சொல்லவே மறந்து விட்டார்.  ஆண்கள் குடித்தால், பெண்கள் குடிப்பதில் என்ன தவறு... பெண்களும் குடிக்க வேண்டும் என்று வறட்டு பெண்ணியம் பேசும் பெண் அல்ல நான். மது அருந்துவது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும்.ஆனால் ‘பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள்’ என்று கூப்பாடு போடுவதுதான் இங்கு பிரச்சனை.

    இங்கு பல பெண்கள் ஆசிட் வீச்சிலும் இன்னும் பல கொடூரமான வழிகளிலும் கொல்லப்பட, சித்தரதை செய்யப்பட ‘அடிடா அவள, ஒதடா அவள, வெட்ரா அவள’ என்று பாட எப்படி தான் மனசு வருகிறதோ என்று தெரியவில்லை ’பொயட்டு’ திரு.தனுஷ் அவர்களுக்கு. நெரிசல்மிக்க நகரத்தின் பீக் ஹவரில் நகரப் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் அவஸ்தையை அறிவீர்களா நீங்கள்! சமூகக் காரணங்களால் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க முடியாமல், இஷ்டப்பட்ட வேலைக்குச்  செல்ல முடியாமல், வீட்டின் பொருளாதாரத்துக்கு கை கொடுக்க ஏதோ ஒரு வேலைக்கு காலையில் செல்லும்போது, எத்தனை உரசல்கள், சீண்டல்களை நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா? உடல் முழுக்க உறுப்பு முளைத்த எத்தனை ‘ஆண்களை’க் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா? உடல் அவஸ்தையை  பொறுத்துக் கொண்டு, விடுப்பு எடுக்க முடியாமல் மாதம் முழுக்க வேலைக்குச் செல்லும் எங்களை, எப்படி ஒரு போகப் பொருளாக மட்டும் உங்களால் பார்க்க முடிகிறது!?

simmbu_400400_vc1.jpg



     இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஒரு படம் முழுக்கவே பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தினார் திரு.ஜி.வி.பிரகாஷ். வெர்ஜினிட்டி என்ற பிற்போக்கு தனத்தை முதன்மைப்படுத்தி, வெர்ஜின் பெண்கள் டைனோசர் காலத்திலேயே போய்விட்டனர் என்றாகவெல்லாம் பட வசனங்கள். இது முழுக்க முழுக்க முட்டாள்தனத்தின் உச்சகட்டம். ஒரு பெண்ணை வெறும் பாலியல் உறவுக்காக மட்டுமே ஒருவன் பயன்படுத்தி அவளைத் தூக்கி எறிந்தால் அந்தப் பெண் வெர்ஜினிட்டியை இழந்து விட்டதன் காரணத்தால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரக் கூடாதா? காதலன் கைவிட்ட, கணவனைப் பறிகொடுத்த பெண்கள் இன்னொரு திருமணம் செய்யக்கூடாதா? மணமுறிவு பெற்ற பெண்கள் இன்னொரு ஆணைத் திருமணம் செய்யக் கூடாதா? பெண்களுக்கு பலமான பொருட்களை தூக்கினாலும், வெகு தூரம் சைக்கில் ஓட்டினாலும், கன்னித்திரை பாதிக்கப்பட்டு நீங்கள் பொக்கிஷமாகக் கருதும் ‘வெர்ஜினிட்டி’ போய்விடும். தடகளம் உள்ளிட்ட‌ விளையாட்டுகளில் பயிற்சி பெறும் பெண்களுக்கும் வெர்ஜினிட்டி இருக்காது. இது மருத்துவ உண்மை. அவர்களை என்ன செய்வது? அப்படியான பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்?

    இரண்டு நாட்களுக்கு முன் திரு.சிம்பு-திரு.அனிருத் கூட்டணியில் வெளிவந்த ’பீப் சாங்’... வக்கிரத்தின் உச்சம்! பாடலின் வரிகள் ஆபாசத்தின் உச்சம். அந்தப் பாடலின் ஒரு வரி பெண்களை உடலுறவு செய்ய மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம், காதல் வேண்டாம் என்கிறது. நாங்கள் பெண்கள், ஆண்களான‌ உங்களைப் போலவே நகம் சதை உள்ளவர்கள். காமத்துக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்ல.

    ஆண்களால் காதல் என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். ஆனால் பெண்கள் ஏமாற்றுவார்கள், பொழுதுபோக்குக்காக காதலிப்பவர்கள் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான ஒரு பொது புத்தியை கட்டமைக்கிற வேலையை செய்கின்றன தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் உங்களுடைய பாடல்களும் படங்களும். இப்படியான முயற்சிகள் பெண்களை ஏமாற்றிய சில ஆண்கள் மீதிருக்கும் களங்கத்தை மறைக்க முனைவதாகவே simbu_vc2.jpgதெரிகிறது. ஆனால், ஒரு பெண்ணாக நாங்களே பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருந்து, நாங்களே குற்றவாளிகளாகவும் ஆக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் துன்பத்துக்கு உள்ளாக்கப் படுவது இந்தச் சமூகத்தில் எங்களுக்குப் புதிதாக நடைபெறுவதில்லை. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே குற்றம் சுமத்தும் சமூகத்தில்தானே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

ஒரு பெண்ணாக எங்களது சிறிய அபிலாஷை என்னவெனில் இனியாவது இது மாதிரி படங்களையும் பாடல்களையும் வசனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவும், தவிர்க்கவும். உங்கள் வீட்டுப் பெண்களையும் சேர்த்து பெண்கள் இனத்தின் வலியைப் புரிந்து கொள்ளவும்! 

அப்புறம் இன்னொரு விஷயம்... ‘இது என்னோட பெர்சனல் கலெக்‌ஷன்... அதைப் பற்றி ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்றெல்லாம் சல்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் போல. பெர்சனல் கலெக்‌ஷன்ல் பொதுவெளிக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்படி வந்த பெர்சனல் கலெக்‌ஷன் ஒட்டுமொத்த பெண்களையும் பாதிப்பதாக இருந்தால், ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தவே செய்வோம். உங்களுக்கு  இருக்கும் படைப்புச் சுதந்திரம் போல, எங்களுக்கு ‘விமர்சன சுதந்திரமும்’ இருக்கிறது.

   இன்னுமொரு முக்கியமான விஷயம்... சென்னையே நூறாண்டு காணாத வெள்ளப் பாதிப்பில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பாடல் உங்களுக்கே கூட தெரியாமல் வெளியாக வேண்டிய தேவை என்ன? இந்திய சினிமாக்களிலேயே கிளாமர் கொடி கட்டிப் பறக்கும் தெலுங்கு திரையுலகமே, சென்னை வெள்ளத்துக்கு ஒன்றிணைந்து உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் சமயம், நீங்கள் தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை... இப்படியான உபத்திரவங்கள் செய்யாமல் இருக்கலாமே..! இந்த ஒற்றை கேடுகெட்ட பாடல், மக்களின் மனநிலையில், கவனத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிட்டதை அறிவீர்களா? அவ்வளவு ஏன், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்த நானே, வேலை மெனக்கெட்டு இந்தக் கட்டுரைக்காக சில மணி நேரங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறேனே!

    இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் வார்த்தைகள் திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், திரு.ஆதி ஆகியோர்களுக்கு ஏதேனும் மன சங்கடத்தை உண்டாக்கியிருந்தால்.... அதற்காக நான் வருந்தப்போவது இல்லை. அதைக் காட்டிலும் லட்சம், கோடி மடங்கு உங்கள் ’படைப்பு’கள் என்னைப் போன்ற பெண்களை அனுதினமும் துரத்துகின்றன... தீண்டுகின்றன. அது தரும் துன்பத்தையும் துயரத்தையும் ஒரு நொடி உணர்ந்தால் கூட, இனி அப்படியான ‘படைப்பு’களைப் படைக்க மாட்டீர்கள்!

 நன்றி!

http://www.vikatan.com/news/coverstory/56249-girl-writes-open-letter-to-simbu.art

  • கருத்துக்கள உறவுகள்

சர்வ வல்லமை கொண்ட , சினிமாவில் இருந்து வந்த ஒரு  பெண்மணி முதல்வராய் இருக்கும் தமிழகத்தில் இதெல்லாம் நடக்குது...!  :unsure:

தில் இருந்தால் டாஸ்மார்க்கை மூடு என்று ஒன்டு பாடிப் பார் அப்ப தெரியும்...! :)

ம்...ம்... "நாங்கள் கள்ளுக்கடைப் பக்கம் போகாதே , உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன் " என்று பாடித் திரிந்தவர்கள்...! :rolleyes:

விடுங்க , நாய்கள் தெருவில்தான் புணரும் , நாங்கள்தான் ஒதுங்கி போகணும்...! :( 

  • தொடங்கியவர்

பீப் பாடல்: - சிம்பு, அனிருத்துக்கு எதிராக மாதர் சங்கத்தினர் போலீசில் புகார்; ஆர்ப்பாட்டம்!

 

aniruth%20-%20simbu%20350.jpgகோவை: பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றி உள்ளதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக கோவையில் காவல்துறையில்  புகார் அளித்த மாதர் சங்கத்தினர், சிம்பு - அனிருத் புகைப்படங்களை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச்சொல்லி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது ஒரு பாடல். பாடலின் ஆரம்ப கட்ட வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகளுடன் துவங்குகிறது அந்த பாடல். பீப் ஒலி கொண்டு அந்த வார்த்தைகளை மறைக்க முயன்றிருந்தாலும், வார்த்தைகள் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் அளவில்தான் பாடல் உள்ளது. இணையத்தில் பெரும் எதிர்மறை விமர்சனங்களை இந்த பாடல் சந்தித்து வரும் நிலையில், இதை எழுதி பாடியதாக சிம்புவும், இசையமைத்ததாக அனிருத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் இணைய வாசிகள்.

இந்நிலையில், பெண்களை மிக அவமானப்படுத்தியுள்ள சிம்பு, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் ஜனநாயக மாதர் சங்கத்தினர்.

சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து இது தொடர்பாக புகாரினை அளித்தனர்.

woman%20protest%20600.jpg

"திட்டமிட்டு பெண்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, பாடல் முழுக்க கேவலமான வரிகள் உள்ளது. தொடர்ச்சியாக நடிகர் சிம்புவின் படங்களிலும், பாடல்களிலும்  பெண்களை அவமானப்படுத்தி பேசுவதும், பாடுவதும் தொடர்கிறது. சமீபத்தில் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்வதும் என பெண்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தூபம் போடும் வேலையாக இந்த பாடல் அமைந்துள்ளது. பெண்களை கேவலமாக சித்தரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, திட்டமிட்டு இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது. இப்பாடலை உடனே தடை செய்ய வேண்டும். மேலும் இப்பாடலை எழுதி, பாடிய சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது பெண்களை ஆபாசமாக பாடியதற்காகவும், பெண்களின் உடலுறுப்பைச் சொல்லி அவமானப்படுத்தியதற்காகவும் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் கூறி உள்ளனர்.

தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அலுவலகம்  முன்பு, சிம்பு, அனிருத் படங்களை கிழித்தெறிந்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை மாதர் சங்கத்தினர் காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

http://www.vikatan.com/news/tamilnadu/56261-women-association-complaints-simbu-anirudh.art

3 minutes ago, suvy said:

சர்வ வல்லமை கொண்ட , சினிமாவில் இருந்து வந்த ஒரு  பெண்மணி முதல்வராய் இருக்கும் தமிழகத்தில் இதெல்லாம் நடக்குது...!  :unsure:

தில் இருந்தால் டாஸ்மார்க்கை மூடு என்று ஒன்டு பாடிப் பார் அப்ப தெரியும்...! :)

ம்...ம்... "நாங்கள் கள்ளுக்கடைப் பக்கம் போகாதே , உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன் " என்று பாடித் திரிந்தவர்கள்...! :rolleyes:

விடுங்க , நாய்கள் தெருவில்தான் புணரும் , நாங்கள்தான் ஒதுங்கி போகணும்...! :( 

உண்மையில் அந்த பாடலை எப்படி அனுமதிக்கிறார்களோ தெரியாது. மிக கேவலம் :(

உண்மைதான், மிகவும் இழிவான பாடல். இனி ஆளாளுக்கு இது யார் பாடலென்றே தெரியாது என்றும், Beep வருமிடங்களில் தேவையான சொற்களைச் சொல்லி எஸ்கேப் ஆகிடுவாங்க.

"என்னா பு..(Beep)...க்கு லவ் பண்றோம்" பீப் பாடல் ஆரம்பவரிகள். என்னா புண்ணாக்குக்கு லவ் பண்றோம் என்று மாற்றி விடுவார்கள்.

நல்ல இசையமைப்பாளரான அணிருத்திடமிருந்து இவ்வாறு Beepக்கு பின்னால் ஒளிந்திருந்து மறைமுகமான, இழிவான சொற்களைப் பயன்படுத்தி வந்துள்ள இப்பாடல் கண்டிக்கப்பட வேண்டியதே.

 

3 hours ago, suvy said:

சர்வ வல்லமை கொண்ட , சினிமாவில் இருந்து வந்த ஒரு  பெண்மணி முதல்வராய் இருக்கும் தமிழகத்தில் இதெல்லாம் நடக்குது...!  :unsure:

தில் இருந்தால் டாஸ்மார்க்கை மூடு என்று ஒன்டு பாடிப் பார் அப்ப தெரியும்...! :)

ம்...ம்... "நாங்கள் கள்ளுக்கடைப் பக்கம் போகாதே , உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன் " என்று பாடித் திரிந்தவர்கள்...! :rolleyes:

விடுங்க , நாய்கள் தெருவில்தான் புணரும் , நாங்கள்தான் ஒதுங்கி போகணும்...! :( 

 

3 hours ago, நவீனன் said:

உண்மையில் அந்த பாடலை எப்படி அனுமதிக்கிறார்களோ தெரியாது. மிக கேவலம் :(

சுவி, நவீனன் உங்கள் கோபம் நியாயமானதே.

இப்பாடலை இதுவரை கேட்காதவர்களுக்காக. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
6 hours ago, suvy said:

சர்வ வல்லமை கொண்ட , சினிமாவில் இருந்து வந்த ஒரு  பெண்மணி முதல்வராய் இருக்கும் தமிழகத்தில் இதெல்லாம் நடக்குது...!  :unsure:

தில் இருந்தால் டாஸ்மார்க்கை மூடு என்று ஒன்டு பாடிப் பார் அப்ப தெரியும்...! :)

ம்...ம்... "நாங்கள் கள்ளுக்கடைப் பக்கம் போகாதே , உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன் " என்று பாடித் திரிந்தவர்கள்...! :rolleyes:

விடுங்க , நாய்கள் தெருவில்தான் புணரும் , நாங்கள்தான் ஒதுங்கி போகணும்...! :( 

அருமை சுவி அண்ணா.  இதுக்குதான் பச்சை

1 hour ago, அபராஜிதன் said:

IMG_20151213_221145.jpg

 

On 12/12/2015 at 7:02 PM, ஜீவன் சிவா said:

இனி ஆளாளுக்கு இது யார் பாடலென்றே தெரியாது என்றும், Beep வருமிடங்களில் தேவையான சொற்களைச் சொல்லி எஸ்கேப் ஆகிடுவாங்க.

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை அய்யா பாட்டு.ஜீவன் இணைத்த இணைப்பிலும் பாடுது இல்லை :rolleyes:

17 minutes ago, சுவைப்பிரியன் said:

எங்கை அய்யா பாட்டு.ஜீவன் இணைத்த இணைப்பிலும் பாடுது இல்லை :rolleyes:

Youtubeஇலிருந்து தூக்கி விட்டார்கள்.

உடனே பார்க்கவும். அப்புறம் தூக்கினாப்பிறகு எங்கே எண்டு  கேட்கக்கூடாது.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பாடலுக்கும் பாடலுக்கு உரியவர்களுக்கும் யாழ் இணயத்தில் நிரந்தர தடை வருமா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பு - அனிருத் பெயரால்..  எல்லாரும் நல்லா மொக்காட்டை இழுத்துப் போர்த்திக்கினம். உண்மையில்.. வைரமுத்துக்கு எழுதப்பட்ட பதில் ஒன்றை அப்படியே இங்கும் இணைப்பது சாலப் பொருந்தும்.

ரெம்ப நல்லவனா நடிக்கப்படாது வைரமுத்து சார்.. நீங்க எழுதின வரிகளில் ஆபாசம் தேடினால்.. இந்திய உபகண்டத்தைச் சுற்றி அதில மாலை போடலாம். இந்திய சினிமாவில் ஆபாசம்.. அடிதடி.. குடி போதை.. வன்முறை பாலியல் வல்லுறவு.. பெண்கள் ஆண்களை ஏமாற்றுதல்.. ஆண்கள் பெண்களை ஏமாற்றுதல்... கள்ளக் காதல்.. கள்ளத்தொடர்பு.. இப்படி ஆயிரம் வைச்சுக்கிட்டு.. சின்னப் பசங்க ஒரு ஆர்வக்கோளாறில் உருவாக்கின ஒரு பீப் பாடலுக்கு ஏன் இத்தனை வன்மம். கொலைவெறி பாடலிலும் பீப் வருகுது.. அதை வைச்சு கொண்டாடிய இந்திய ஊடகங்கள்.. தமிழக ஊடகங்கள்.. இங்கு மட்டும் எதுக்கு வடிக்கினம். இது தர்மமா.. நீதியா..?! முதலில உங்களை திருத்திக்குங்க... ஊர் தானே திருந்திக்கும்.

Whats wrong with Beep song ?

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பீப்" பாடலுக்கு எதிர் பாட்டாம்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

"பீப்" பாடலுக்கு எதிர் பாட்டாம்!

 

 

எனி என்னத்தைப் பாடினாலும்.. சிம்பு அனிருத் பாட்டுக்கு ஈடாகாது. tw_blush:

மங்காத்தாவில் அஜித் பீப் வார்த்தை பேசி நடிச்ச படமும் வந்து தானே இருக்குது. விஜய் நண்பனில்.. பீப் வார்த்தை பேசி இருக்கார் தானே. கொலைவெறி சாங்கிலும் பீப் வருகுது. விடுங்க சார்.. இதெல்லாம் ஒரு மாட்டர் என்று கிட்டு. tw_blush:

Edited by nedukkalapoovan

கேவலம் கேவலம் எண்று சொல்லி இந்த பாட்டை தரவிறக்கி கேட்டு விமர்சிப்பதோடு..  அதை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்பவர்களின் வக்கிரம் பற்றி நல்லவர்களாக காட்டி கொள்ளும் யாரும் இங்கே பேச இல்லையா...??  ஏன்...? 

இங்கே வக்கிரம் பிடித்தவர்களுக்கு தேவை தங்களை நல்லவர்களாக காட்டி கொள்ள ஒரு  கெட்டவன்... விசயம் இங்கே அவ்வளவுதான்.... 

Edited by காத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.