Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளாடைகளை களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு இனிமேல் இடமில்லை : ஜனாதிபதி திட்டவட்டம்

Featured Replies

உள்ளாடைகளை களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு இனிமேல் இடமில்லை : ஜனாதிபதி திட்டவட்டம்
 
 
உள்ளாடைகளை களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு இனிமேல் இடமில்லை : ஜனாதிபதி திட்டவட்டம்
நாட்டின் கலாசாரம், நாகரிக வளர்ச்சியைச் சீரழிக்கும் வகையில், வெளிநாட்டுப் பாடகர்களை வரவழைத்து அநாகரிகமான இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
உள்ளாடைகளைக் களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு, இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
நாடளாவிய ரீதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள்  வழங்கும் நிகழ்வு, அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு 50 ஆயிரம், 30 ஆயிரம் என நுழைவுச்  சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கலந்துகொள்ளும் யுவதிகள், மதுபானத்தை அருந்திவிட்டு கடும் போதையில் தங்களது உள்ளாடைகளைக் களைந்தெறிவது மாத்திரமன்றி, மேடைக்கு ஏறி பாடகருக்கு முத்தமும் கொடுக்கின்றனர். இவ்வாறான அநாகரிகமான இசை நிகழ்ச்சிகளுக்கு, இனிமேல் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது' என்றார்.
 
'உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு, சிறந்ததொரு நாடாக இலங்கையை மாற்றுவதற்கு, அனைவரும் முன்வர வேண்டும். இந்த நாட்டிலுள்ள அனைத்துச் சமூகங்களினதும் கலாசாரம் பாதுகாக்கப்படும். மேலும், பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க, சிறுவர்கள் உட்பட அனைவரும் முன்வர வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.  
  • தொடங்கியவர்

இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு வருந்துகின்றோம்

 

கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்டிருந்த இசை  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு தாம் வருந்துவதாக முன்னாள் கிரிக்கட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதனைக் காண வந்தவர்களுடைய பணத்தை மீளவழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். 

இந்த இசை நிகழ்ச்சியின் போது 5000 முதல் 50இ000 வரை டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டனஇ உள்ளே  நுளைவுச் சீட்டுக்களின்விலைக்கமைய மதுப்பானம் வழங்கப்பட்டுள்ளதோடு அநாகரிகமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த  இந்த நிகழ்ச்சியை  இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் ‘Live Events’  என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் தொடர்பில் நாடு முழுவதும் மற்றும் சமூகவலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சியை காணச்சென்ற பெண்ணொருவர், பாடகரின் மீது தனது உள்ளாடைகளை  கழற்றி அவர் மீது வீசியுள்ளார். 

இதன்பின்னர் இவ்வாறான ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்போவதில்லையெனவும் இந்நிகழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.

http://www.virakesari.lk/article/1409

  • கருத்துக்கள உறவுகள்

சீர்கேடுகளைக் களைவதென்பது ஏதாவது ஒரு புள்ளியிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இது சம்பந்தமான ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்றேன்....!  ஆனால் நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை...!!

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

கொழும்பு இசை நிகழ்ச்சியில் பாடகருக்கு இளம்பெண்கள் முத்தமழை: குவியும் கண்டனங்கள்!

 

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் கால்பந்தாட்ட மைதானத்தில் நடந்த மேற்கத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில், மேடையில் பாடிய  பாடகர் மீது இளம்பெண்கள் உள்ளாடைகளை வீசியும்,கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தியது குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

உலக அளவில் பாப் இசையுலகில் புகழ் பெற்று விளங்கும் லத்தீன் மொழி பாப் பாடகர் என்ரிக் இக்லேசியாஸ், ‘லவ் அன்ட் செக்ஸ்’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சிகளை நடத்த,  உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் கடந்த 20-ம் தேதி என்ரிக் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான குமார் சங்ககாரா மற்றும் மகிலா ஜெயவர்தனே ஆகியோர் இணைந்து நடத்தும் 'லைவ் ஈவென்ட்ஸ்' என்ற நிறுவனம்,  இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை விற்பனை செய்யப்பட்டன. சில நாட்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்து, அரங்கம் நிறைந்த காட்சியாக என்ரிக் இக்லேசியாஸ்-ன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேடை ஏறியது முதல் என்ரிக்,  ரசிகர்களின் உற்சாக வரவேற்பில் மிதந்தார். இதனையடுத்து உச்சஸ்தாயியில் அவர்  பாடல்களை பாடப் பாட, உற்சாகம் மிகுதியில் அரங்கில் இருந்த இளம்பெண்கள் கூச்சலிட்டபடி ஆடத் தொடங்கினர். அவர்களில் சிலர் தங்களது உள்ளாடைகளை கழற்றி மேடைமீது பாடிக்கொண்டிருந்த என்ரிக் இக்லேசியாஸ் மீது வீசி,  உற்சாகக் கூச்சலிட்டனர்.

         இளம்பெண்களில் சிலர், மேடைமீது தாவி குதித்து ஏறி, அவரை கட்டியணைத்தும் முத்தமிட்டும் அதிர்ச் சியளித்தனர். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதும், பல்வேறு தரப்பினர் கண்டனங்களைப் பதிவிட்டு வருகினறனர். புத்த பிட்சுகள் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

           இந்நிலையில், இதைப்போல் நமது நாட்டின் கலாசாரத்துக்கு எதிரான அநாகரிகமான செயல்களை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன, " பொது இடத்தில் தங்களது உள்ளாடைகளை கழற்றிய பெண்களை திருக்கை மீன் வாலால்  அடிக்க வேண்டும் என நான் வாதாட மாட்டேன். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை திருக்கை வால் சாட்டையால் அடிக்க வேண்டும்" என்று கொந்தளித்துள்ளார்.

http://www.vikatan.com/news/world/56899-sri-lanka-threw-underwearpop-star-enrique-iglesia.art

இந்தச் செய்தி நேற்று பிரெஞ்சு இணையத் தளங்களில் முக்கிய செய்திகளில் ஒன்றாக வந்திருந்தது. இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களைத் திருக்கை வாலால் அடிக்க வேண்டும் என்று மைதிரி கூறியதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். இக் கருத்தானது இலங்கை மக்களின் சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் காட்டுமிராண்டித் தனமாகவும் வாசகர்களால் நோக்கப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

குமார் சங்கார வில கையை வைத்தால் நாம் பொங்கி ஏழுவோம்....பரிநிர்வாணம் அடைந்த பெண்களோ.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, இணையவன் said:

இந்தச் செய்தி நேற்று பிரெஞ்சு இணையத் தளங்களில் முக்கிய செய்திகளில் ஒன்றாக வந்திருந்தது. இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களைத் திருக்கை வாலால் அடிக்க வேண்டும் என்று மைதிரி கூறியதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். இக் கருத்தானது இலங்கை மக்களின் சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் காட்டுமிராண்டித் தனமாகவும் வாசகர்களால் நோக்கப்பட்டது. 

போன வாரம் கனடாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் 

தமிழகத்திலிருந்து வந்த இசையமைப்பாளருக்கு முத்தங்கள் கொடுத்தாக

புலம்பெயர் தமிழ்ப்பிள்ளைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது

இன்று கொழும்பில்....??

கனடிய அரசு இது பற்றி எதுவுமே  சொல்லாததும்

இலங்கை அதிபர் திருக்கைவால் எடுப்பதும் தான் கவனிக்கவேண்டியது

நாம் எங்கு நிற்கின்றோம்

அடுத்த தலைமுறையும் உலகும் எங்கு நிற்கிறது

இதில் புலம் பெயர் தமிழ்ப்பிள்ளைகளின் தெரிவு எதுவாக இருக்கணும்....??

முடிவு.......???

 

  • தொடங்கியவர்

என்ரிக்கே சர்ச்சை: பணத்தை திருப்பிக் கொடுக்க மஹேல, சங்கா கோரிக்கை

150824135300_kumar_sangakara_sril_anka_6

 என்ரிக்கே இக்லேசியஸின் இசை நிகழ்ச்சியின்போது நடந்தததாகக் கூறப்படும் அசம்பாவிதங்கள் தொடர்பில் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளதோடு மன்னிப்பும் கோரியுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க-ஸ்பானிய பாடகரான என்ரிக்கே இக்லேசியஸின் இசை நிகழ்ச்சியின்போது நடந்தததாகக் கூறப்படும் அசம்பாவிதங்கள் தொடர்பில் அந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்பில் உள்ள முன்னணி கிரிக்கட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளதோடு மன்னிப்பும் கோரியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மோசமான அனுபவங்களுக்காக வெறுமனே மன்னிப்புக் கோருவதைவிட, கட்டணத்தை திருப்பிக் கொடுப்பது போன்ற பொருத்தமான இழப்பீட்டை வழங்கும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தமது பேஸ்புக் பக்கங்களில் நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பாடகர் என்ரிக்கே பங்கேற்ற இசை நிகழ்ச்சியொன்று இம்மாதம் 20-ம் திகதி கொழும்பில் நடைபெற்றது. அதனை பார்க்க வந்த பெண்ணொருவர் தனது மார்புக் கச்சையை கழற்றி மேடையில் பாடிக்கொண்டிருந்த என்ரிக்கேயின் கையில் கொடுத்தார்.

இந்த வீடியோ இணையதளங்களில் வெளியானதையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நேற்று கண்டனம் வெளியிட்டிருந்தார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் நாட்டின் கலாச்சாரத்தையும், இளம் சமூகத்தினரையும் பாதிப்பதாக அவர் கருத்து வெளியிட்டிருந்ததன் பின்னணில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்ககக்கார ஆகியோரின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

என்ரிக்கே போன்ற உலகப் புகழ்பெற்ற பாடகரின் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பங்களிப்பு வழங்குவதும், உள்நாட்டவர்களுக்கு சர்வதேச தரத்திலான நிகழ்ச்சியை வழங்குவதும் தமது நோக்கமாக இருந்ததாக அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சியை பார்வையிட வருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மஹேல மற்றும் சங்கக்கார, ஆனாலும் எதிர்பாராத விதமாக சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றும் கலைஞர்கள் மற்றும் இசைக்கருவிகள் வருவதற்கு தாமதமானமையினால் இசை நிகழ்ச்சி ஆரம்பமாக தாமதமாகியமையை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், அதனால் ரசிகர்கள் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இசை நிகழ்ச்சியின்போது நடந்த அனைத்து அசம்பாவிதங்கள் குறித்தும் முழுமையான உள்ளக விசாரணையொன்று நடத்தப்படும் எனவும் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/12/151228_sangakkara_enrique?ocid=socialflow_facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.