Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாயில்களில் 'சிங்களே'

Featured Replies

வாயில்களில் 'சிங்களே'
 

article_1451810923-a.jpg

நுகேகொடையிலுள்ள பல முஸ்லிம் நபர்களது வீடுகளின் சுவர்களிலும் பிரதான வாயில்களிலும் 'சிங்களே' என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது இனந்தெரியாத நபர்களால் நேற்று சனிக்கிழமை (02) இரவு எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

- See more at: http://www.tamilmirror.lk/162918/%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-#sthash.fPQ15DJL.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தின் ரத்த வாரிசுகள். ரத்த வெறி பிடித்து அலைகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான மகிந்த சார்பு இனவாதிகளின் நேக்கம் வரவிருக்கும் அரசியல் தீர்வைக் குழப்புவதே ஆகும். நாட்டின் பயங்கரவாதம் உள்ளிட்ட இனவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் இடமில்லை என்று அதிபர் உறுதியாகக் கூறியிருக்கின்றார். எனவே இவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள். அதேவேளை தமிழர் பகுதியிலும் இனவாதத்தை உசுப்பி விட்டு தீர்வை குழப்பும் முயற்சியில் சில குறூப்புகள் இறங்கியுள்ளன இவர்களையும் கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் இருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

இச்செயலை செய்தவர்களை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் பொதுபல சேன எனும் இன்வாத அமைப்பாகும். அதிபர் எப்போ தமிழ் கைதிகளை விடுவார்? இவர் வாக்குறுதி கொடுத்து பல மாதங்கள் ஆகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

. அதிபர் எப்போ தமிழ் கைதிகளை விடுவார்? இவர் வாக்குறுதி கொடுத்து பல மாதங்கள் ஆகின்றன.

அடுத்தமுறை அதிபராக தெரிவு செய்யப்பட்டால்.......

  • தொடங்கியவர்

சிங்ஹ லே: 'இனத்துவ மேலாதிக்க சிந்தனையை தூண்டும் முயற்சி'

 

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான நுகேகொட பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வீடுகளின் மதில் சுவர்களின் மீது 'சிங்ஹ லே' (தமிழில்- சிங்கத்தின் இரத்தம்) என்ற சிங்கள வாசகங்களை எழுதியவர்களை கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடந்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த விசாரணைகள் நடப்பதாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இனங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்களால் முன்னெடுக்கப்படும் விஷமத் தனமான நடவடிக்கை இது என்று அரசியல்வாதிகள் சிலரும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.

தென்னிலங்கையில் அண்மைக்காலமாக 'சிங்ஹ லே' என்கின்ற வாசகம் சிலரால் பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்றது.

160104131351_sinha_le_624x351_bbc_nocred
நுகேகொட பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வீடுகளின் மதில் சுவர்களின் மீது 'சிங்ஹ லே' எழுதப்பட்டுள்ளது

பெரும்பாலும், சிங்ஹ(சிங்கம்) என்ற சொல் கறுப்பு நிறத்திலும் லே (இரத்தம்) என்ற சொல் சிவப்பு நிறத்திலும் அமையும் விதத்தில் இந்த வாசகங்கள் பொறிக்கப்படுகின்றன.

கார்கள், ஆட்டோக்கள் மற்றும் தனிப்பட்ட வாகனங்களில் இந்த வாசகம் பொறித்த ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்ளும் வழக்கம் இப்போது அதிகரித்துவருவதாகவும் இது இனவாதம் தலைதூக்குவதன் வெளிப்பாடு எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

'சிங்கள மக்கள் சிங்கத்திற்கு பிறந்த இனம் என்ற மாயையை மெய்ப்பிப்பதற்காக முயற்சிக்கிறார்கள்' என்றார் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் அரச கொள்கைகள் தொடர்பான ஆய்வாளருமான கண்டியைச் சேர்ந்த எஸ். பாலகிருஷ்ணன்.

மிருகங்களிலே மிக உயர்வான, பலமுள்ள மிருகமாக பார்க்கப்படுகின்ற சிங்கத்தைப் போன்று தாங்களும் இனத்துவ ரீதியாக மேலாதிக்கம் உள்ளவர்கள் என்ற இனவாத சிந்தனையை தூண்டுவதற்கு தான் இந்த வாசகம் பயன்படுத்தப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

இந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு, முறைப்பாடு கிடைக்கும் வரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காத்திருப்பது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160104_sinha_le_hr?ocid=socialflow_facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.