Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியமைக்காக கவலையடைகிறேன் - தமிழினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
tamilini_book.jpg
விடுதலைப் புலிகள் அமைப்பில் அரசியல்துறையின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் ஒன்று எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த தமிழினி பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 2 வருடங்கள் புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 

புனர்வாழ்வு காலத்தில் அதிகளவான காலத்தை தமிழினி சிங்கள மொழியை கற்பதற்காகவே செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் அவர் இறப்பதற்கு முன்னர் எழுதிய குறிப்புகளில் “இப்படியான உன்னதமான மனிதர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த நேரிட்டமை குறித்து கவலையடைவதாக” எழுதியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும் தமிழினி எழுதிய நூலின் விற்பனையில் கிடைக்கும் பணத்தை மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உள்ள சிறுவர் விடுதியின் தேவைகளுக்காக செலவிடுமாறு கோரியிருந்தாகவும் தெரியவருகிறது. 

பரந்தன் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட தமிழினி தனது 43வது வயதில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் மரணமடைந்தார். 

இதனிடையே தமிழினி உயிரிழந்த பின்னர், இனந்தெரியாத சிலர் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்று, அவரை அந்த வைத்தியசாலையில் அனுமதித்தவர்கள் பற்றி விசாரித்து, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கும் தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஏன் தமிழினிக்கு சிகிச்சையளித்தீர்கள் எனக் கூறி, அந்த நபர்கள் மருத்துவரை அச்சுறுத்தியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள அந்த மருத்துவர் தனக்கு நபர்கள் பற்றி பிரச்சினையில்லை எனவும் நோயாளியை மரணத்தில் இருந்து காப்பாற்றுவது மாத்திரமே தனக்கு முக்கியம் எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.tamilwin.com/show-RUmuyBTbSWjv1B.html

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மை என்றால்.. தமிழினி யாருக்கு எதிராக ஆயுதம் தூக்கினார் என்பதில் தெளிவில்லாமல் இருந்திருக்கிறா அல்லது இப்படி எழுதத் தூண்டப்பட்டிருக்கிறா.

தேசிய தலைவர் ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் சொல்வது.. நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளின் ஆக்கிரமிப்புக்கு அடிமைத்தனங்களுக்கு அக்கிரமங்களுக்கு இராணுவத்திற்கு எதிராக எமது நிலம் மற்றும் அரசியல் சமூக உரிமையை பெற்றெடுக்கவே போராடுகிறோம். எம்மை நோக்கி வரும் ஆபத்தில் இருந்து எம்மை எமது மக்களை நிலத்தை.. தற்காத்துக்கொள்ளவே போராடுகிறோம்.

இதைத்தான் உலகில் உள்ள அத்தனை ஜீவராசியும் செய்யுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

இது உண்மை என்றால்.. தமிழினி யாருக்கு எதிராக ஆயுதம் தூக்கினார் என்பதில் தெளிவில்லாமல் இருந்திருக்கிறா அல்லது இப்படி எழுதத் தூண்டப்பட்டிருக்கிறா.

தேசிய தலைவர் ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் சொல்வது.. நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளின் ஆக்கிரமிப்புக்கு அடிமைத்தனங்களுக்கு அக்கிரமங்களுக்கு இராணுவத்திற்கு எதிராக எமது நிலம் மற்றும் அரசியல் சமூக உரிமையை பெற்றெடுக்கவே போராடுகிறோம். எம்மை நோக்கி வரும் ஆபத்தில் இருந்து எம்மை எமது மக்களை நிலத்தை.. தற்காத்துக்கொள்ளவே போராடுகிறோம்.

அவர் உயிருடன் இருக்கும்வரை

இவ்வாறான மாற்றங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை

இனி இவ்வாறெல்லாம் வரும்.............

34 minutes ago, விசுகு said:

அவர் உயிருடன் இருக்கும்வரை

இவ்வாறான மாற்றங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை

இனி இவ்வாறெல்லாம் வரும்.............

நீங்கள் வாசிக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, arjun said:

நீங்கள் வாசிக்கவில்லை

இணைத்தால் எல்லோரும் உணரலாமே...

புத்தகம் வெளிவரட்டும் .

வாசிப்போம் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைப்போம் .

தங்களுக்கு சார்பாக இல்லாவிட்டால் கல்லை எறிவதுதான் நடக்கும் .

அதை விட்டு ஆடு அறுக்க முதல் .......

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, arjun said:

புத்தகம் வெளிவரட்டும் .

வாசிப்போம் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைப்போம் .

தங்களுக்கு சார்பாக இல்லாவிட்டால் கல்லை எறிவதுதான் நடக்கும் .

அதை விட்டு ஆடு அறுக்க முதல் .......

அப்போ நீங்களும் இன்னும் வாசிக்கவில்லை..

அதை விட்டு ஆடு அறுக்க முதல் .......???

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி அக்கா எழுதிய புத்தகத்தில் அப்படி கருத்துப்பட எழுதி இருந்தால் தவறு  என்று ஒன்றும் இல்லை.
அவருக்கு நாங்கள் மரியாதை கொடுத்தது போலவே அவரின் படைப்புக்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.

அதில் அரசியல் வேண்டாம்.
போராட்ட காலம் வேறு, புனர்வாழ்வுக் காலம் வேறு, பிணியுற்ற காலம் வேறு. 
அவர் தான் நோயுற்ற நாட்களில் மனிதத்தோடும், கருணையோடும் கவனித்து கொண்ட தாதிகள், வைத்தியர்கள் பற்றி எழுதியும் இருக்கலாம். (பெண்) பூவாக இருக்க வேண்டியவள், வாழ்நாளின் பெரும் பகுதியை புயலாகவே இருந்துள்ளார். தவிர நேயின் பின் அவரின் முடிவு இது என்று தெரிந்த பின்னர் அவர் மனம், ஆத்மா சமாதானத்தையும், சாந்தியையும் தேடி இருக்கலாம். 
அது குறித்து கேள்வி எழுப்புவது அனாவசியம்.

நேற்று நான் செய்த செயல்கள், எடுத்த முடிவுகள் இன்று எனக்கு பிழையாகப் படலாம், 
இன்று நான் செய்யும் செயல்களும், முடியுகளும் எனக்கு சரியாக படுவதினால் தான் செய்கிறேன்.
இதுவே நாளை பிழையாகக் கூட தெரியலாம். 
இதுதான் மனித வாழ்வின் பரிமாணம். ஒவ்வொரு தளத்திலும் , ஒவ்வொரு காலப் பகுதியில் இருந்து பார்க்கும் பொது சில தெளிவுகள் தோன்றலாம்.

தவிர புத்தகத்தை முதலில் வாசிப்போம். அவர் குறிப்பிடும் அந்த உன்னதாமான மனிதர்கள் யார் என்பதை நாமும் தான் தெரிந்துக் கொள்வோமே.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Sasi_varnam said:

2009க்கு முன்

2009க்குப்பின்....

இதில் தெளிவாக இருந்தால் போதும்...

எவரையும் குற்றம் சொல்லவோ

பிழை பிடிக்கவோ தேவையில்லை

ஆனால் அது தமிழ் சமுதாயத்தின் சுயநிர்ணயம் மற்றும் அபிலாசைகளுடன் முரண்பட்டால்

அதற்கான கருத்தக்கள் வருவது இயல்பு..

புனர்வாழ்வு என்று சொல்கிறார்களே அப்படி என்னதான் செய்திருப்பார்கள். தமிழினி இரண்டு வருடம் புனர்வாழ்வு முகாமில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எப்படியான புனர்வாழ்வு அது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.