Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

காலம் சல்லாப காலம்
உலகம் உல்லாச கோலம்
இளமை ரத்தங்கள் ஊரும்
உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்பமயம்
தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப்பறந்து கொண்டாடுவோம்

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாஸ்திரங்கள் ஓடிவிடும்
 
காலை ஜப்பானில் காபி
மாலை நியூயார்க்கில் கேப்ரெட்
இரவில் தாய்லாந்தில் ஜாலி
இதிலே நம்மக்கென வேலி
இங்கும் எங்கும் நம்முலகம்
உலகம் நமது பாக்கெட்லே
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்லே
இரவு பொழுது நமது பக்கம்
விடிய விடிய கொண்டாடுவோம்.....!

---எங்கேயும் எப்போதும்---

  • Replies 5.9k
  • Views 334k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : வாடகைக்கு காதல்
வாங்கி வாழவில்லை யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே.
உடம்பு குள்ள உசிர விட்டு போக
சொல்லு நீதான் உன்ன விட்டு
போக சொல்லாதே. காணுகின்ற
காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்.

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு. 

ஆண் : காதலுக்கு கண்கள்
இல்லை கால்கள் உண்டு
தானே சொல்லாமலே ஓடி
போனாலே வேடந்தாங்கல்
பறவைக்கெல்லாம் வேறு
வேறு நாடு உன்னுடையே
கூடு நானடி அண்ணாந்து
பாா்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி.....!

---ஆகாயம் தீ பிடிச்சா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!

பெண் : ஆயிரம் கோடிகள்
செல்வம் அது யாருக்கு
இங்கே வேண்டும் அரை
நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே
போதும் பூவே எங்கள்
தோட்டத்தை பார்க்க
பூத்தாயா வெண்பூவே
எங்கள் தோட்டத்தை
பார்க்க பூத்தாயா

பெண் : சின்ன சின்ன
கைகளிலே வண்ணம்
சிந்தும் ரோஜாப்பூ சிரித்து
பேசி விளையாடும்
நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ

ஆண் : இன்னும் அந்தி
வானில் பச்சைக்கிளி
கூட்டம் என்ன சொல்லி
பறக்கிறது

பெண் : நம்மை கண்டு
நானி இன்னும் கொஞ்ச
தூரம் தள்ளி தள்ளி போகிறது

ஆண் : எங்களின் கதை
கேட்டு தலையாட்டுது
தாமரைப்பூ

பெண் : மயிலே நாம்
ஆடிய கதையை நீ பேசு

ஆண் : மல்லிகைப்
பூவே மல்லிகைப் பூவே
பார்த்தாயா......!

---மல்லிகைப்பூவே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண்: பட்டு நூலு சேலைக்குள்ள
சிக்கல நீ நொளஞ்ச
மச்சம் மட்டும் மிச்சம் வச்சு
மொத்தமா கவுத்துப்புட்ட

ஆண்: கட்டழகி வத்த வச்ச
கண்டபடி அலைய விட்ட
நெஞ்சுக்குள்ள றெக்க விரிச்ச
உசுர தொறந்துப்புட்ட

பெண்: கரிச்சான் குருவியோன்னு
கனவுல கூவையில
தினுசா உன் மழையில
நான் நனஞ்சேனே

பெண்: வளையல் ஒரசையில சந்திரன
சிணுங்க வச்சேன்
வெட்கப்பட்டு செவ செவக்குற
வெத்தல கண்ணாலே

ஆண்: என்ன அடிச்சு அடி தொவச்சு
நீ அலசி எடுக்குற
முந்தி மடிப்பில் என்ன மடிச்சு
உலையை மூட்டி தாகம் ஏத்துற

ஆண்: யாத்தி யாத்தி
நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி
என மயக்கும் சுந்தரியே......!

---யாத்தி யாத்தி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்
 
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்

இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை

இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்கவில்லை
சின்ன சின்னக் கூத்து நீ செய்யிறத பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்

வண்ண வண்ணப் பாதம் நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய் நான் இருப்பேன்
கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே

உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகில் நான் இருந்தால்......!

---எந்தன் உயிரே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : நீளும் இரவில்
ஒரு பகலும் நீண்ட
பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும்
கலை அறிந்தோம்
எங்கு என்று அதை
பயின்றோம்

ஆண் : பூமி வானம் காற்று
தீயை நீராய் மாற்று புதிதாய்
கொண்டு வந்து நீட்டு

ஆண் : நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஓ ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே கண்
பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

ஆண் : உயிரே உன்னை
உன்னை எந்தன் வாழ்க்கை
துணையாக ஏற்கின்றேன்
ஏற்கின்றேன் இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே......!

---அன்பில் அவன்---

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்தது

_‘‘அம்மா! நான், உங்க மருமக, பேத்தி மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’_

*_‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’_*

*_‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள்._*

_‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார்._

_பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார்._

_‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’_

_ பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள்._ 

_அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள். சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள்._

*_‘‘பாட்டி... இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’_*

*_‘‘இது எதுக்கும்மா?’’_*

*_‘‘இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன்’’ என்று செய்து காட்டினாள்._*

*_பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள்._* 

_அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள்._

*_‘‘பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க’’ என்றாள்._*

*_பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர்._*

_பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள்._

*_‘‘இதை எப்போ கொண்டு வந்தே?’’ என்று பாட்டி கேட்டதற்கு, ‘‘ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி’’ என்றாள் குறும்பாக._* 

_படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். ‘‘அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?’’ என்றான் மகன்._ 

*_"உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள்._*

_பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள்._ 

*_வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார். அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார்._*

*_‘‘அப்பா! அதோ பாருங்க... குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள். நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை?_* 

*_எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள்._*

*_தன் மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்._*
👍🍬🍬🍬🍬🍬👍

https://www.facebook.com/Giritharasharma/posts/7382509938429478

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : ஹோ…..ஓ….
தொலைதுார வெளிச்சங்கள் நீயே
மலையோர வெளிச்சமும் நீயே

ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே
பெண் : கொண்டால் என் ஜீவன் நில்லாதே

ஆண் : இமைப்பொழுது
உன் நெஞ்சில் இருந்து
நான் நீங்காதவனாக வேண்டும்
தருவாயா தருவாயா

ஆண் : என் அன்பே அன்பே
எனை விண்ணைப் பிடிக்கும்
திறனும் ஆற்றலும்
உன்னையே சார்ந்தது
உணர்வாயா உணர்வாயா
என் அன்பே அன்பே

ஆண் : காரிருளில் சூரியன்
நீரலையில் தாமரை
தாகத்தில் வேகும்
பாலை மண்ணில் வான்மழை

பெண் : வாய் அசைத்து
பார்க்கிறேன்
வார்த்தைகளில் உன் மொழி
உன் நாவில் வந்து தீர்த்தமாகும்
தேன் துளி……

ஆண் : கடிகாரம் காட்டுமா
மனம் செல்லும் வேகத்தை
புயலாகி உன்னை நான் அடைவேன்

ஆண் : நீ செல்லும்
வழி எல்லாம் மரம் ஆவேன்
ஒரு சொட்டு வெயில் கூட
விடமாட்டேன்......!

---எங்கே என் இதயம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!  

ஆண் : அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மன போலவே
எங்க அப்பத்தாவப் பாருங்க

ஆண் : பாசமான புலிங்க கூட
பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில்
படிக்கட்டா மாறலாம்

ஆண் : வீரபாண்டித் தேரப் போல
இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு
இவங்களப் போல் யாரு

ஆண் : சித்தப்பாவின் மீசையப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் கொழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்

ஆண் : கோழி வெரட்ட வைரக்கம்மல்
கழட்டித்தானே எறிவாங்க
திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட
கழுத்துச் செயின அவுப்பாங்க

ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு......!

---ஆயிரம் ஜன்னல் வீடு---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல
நீ கண்ணனோட புள்ள
அடி ஆத்தா ஆத்தா குங்குமப்மூட்டைய
திண்ணுப்புட்டு உங்கம்மா பெத்தாளா
அடி பார்த்தா பார்த்தா பளப்பளன்னு இருக்குற
வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாளா
 
அட கருப்புக்கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளப்படம்
ஏ செக்கச்செக்கச் செவப்பி
நீ சேலக்கட்டுன குலுஃபி
ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம்

நெறுப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே
கருப்பு நெறந்தான் என்னக்கவர்ந்திடுமே
அடி நீ குளிச்சா ஒரு துளி சலமே
கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே
கரு மேகம் மட்டும் தானே பூமியில மழத்தூவும்
அழகு மழத்தூவும்

கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும்
தெனமும் வரும் போகும்
அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கட்டி தேகத்தால்
என்னையும் கட்டி இழுத்துப்புட்டேடி
அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலறக் காட்டித்தான்
கருப்புப்பையனக் கவுத்துப்புட்டேடி........!

---கருப்பு பேரழகா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து..
கூரையை பிரிச்சிக் கொட்டுமடா
கிடைச்சதை நீயும் வாரியிறைச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
செட்டாகவே செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா

மீசை நரைச்சுப் போனதினாலே
மீசை நரைச்சுப் போனதினாலே
ஆசை நரைச்சுப் போய்விடுமா
வயசு அதிகம் ஆனதினாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காசுயிருந்தா அதை அனுபவித்திடனும்
செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா

பைசாவைக் கண்டா நைசாகப் பேச
ஆ.. பைசாவைக் கண்டா நைசாகப் பேச
பலரகப் பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து ஹுக்காவைத் தந்து
பாடியாடி சுகம் தருவாங்க
பட்டான மேனி பட்டாலே இன்பம்
மெய்யடா மெய்யடா மெய்யடா நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா.....!

---உல்லாச உலகம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு

பராவண மாவடு நீறு பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி யாலவா யான்றிரு நீறே......!

---மந்திரமாவது நீறு---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அலையே சிற்றலையே

கரை வந்து வந்து போகும் அலையே

என்னைத் தொடுவாய்

மெதுவாய்ப் படர்வாய் என்றால்

நுரையாய்க் கரையும் அலையே

தொலைவில் பார்த்தால்

ஆமாம் என்கின்றாய்

அருகில் வந்தால் இல்லை என்றாய்

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாதே நகிலா ஓ ஓ 

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு .......!

---காதல் சடுகுடு---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ராணி.....!

---ராஜராஜ சோழன் நான்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : முத்தம் என்னும் கம்பளியை
ஏந்தி வந்தே
உன் இதழும் என் இதழும்
போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி
கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும்
கனிந்து விடும்

பெண் : தீராமல் தூறுதே
ஆண் : காமத்தின் மேகங்கள்
ஆண் : மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி…

குழு : புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே

பெண் : புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்.....!
 

---புலராத காலைதனிலே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : நான் வருவேன் வருவேன் உயிரே
போகாதே போகாதே
வான் முடியா பயணம் போவோம்
ஏங்காதே ஏங்காதே

ஆண் : இந்த கணமே கணமே கணமே
இன்னும் தொடாராதா
புது சுகமே சுகமே சுகமே
மனம் கேட்கிறதே

ஆண் : என் ரணமே ரணமே ரணமே
கொன்று குவிக்காதே
எனை தினமே தினமே தினமே
என் தேவதை…..தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை

ஆண் : வா வா தூர நிலா
தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா
காதல் அதில் வாழ்ந்திருப்போம்

ஆண் : வா வா கை விரலை
கை பிடிக்குள் மூடி வைப்போம்
வா வானம் வரை
நாம் நடப்பபோ……ஓம்ம்ம…..!

---நான் வருவேன்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!


சித்திரை மாத நிலவினிலே
தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்
அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்

பாலும் பழமும் இருந்ததங்கே
படுக்கையும் விரிப்பும் கிடந்ததங்கே
பசியும் களைப்பும் இருக்கவில்லை
பாவையும் அவனும் உறங்கவில்லை

கதைகள் சொன்னான் கேட்டிருந்தாள்
கனிரசம் தந்தான் திரும்பிக் கொண்டாள்
மலரே மணியே என்றெல்லாம்
வார்த்தைகள் சொன்னான் சிரித்துக் கொண்டாள்

பேசினான் அவளோ பேசவில்லை
பார்த்தான் அவளோ பார்க்கவில்லை
ஆசையாய் எழுந்து கைப்பிடித்தான்
அப்புறம் நடந்தது நினைவிலில்லை......!

---சித்திரைமாத நிலவினிலே---

  • கருத்துக்கள உறவுகள்

1. காலையில் எழுந்ததும் போன் முகத்தில் முழிக்காமல் இருப்பது

2. டீ குடித்துவிட்டு தான் பல்லு விலக்க போவேன் என்ற கொள்கையை கடைபிடிக்காமல் இருப்பது

3. சாப்பிடும் உணவில் ருசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது.

4. நாம் லேட்டாக கிளம்பி விட்டு, கிளம்பும்போது லேட் ஆகிருச்சேனு வீட்டில் இருக்கும் மனைவி மீதும் அம்மாவின் மீதும் கோபப்படாமல் இருப்பது

5. தொலைக்காட்சி பார்ப்பதில் வீட்டில் உள்ள அனைவருக்கும் சம உரிமை அளிப்பது

6. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு வேலையை தள்ளிப்போடாமல் இருப்பது

7. தினமும் நமக்காகவும் நம்மளை சுற்றி இருப்பவர்களுக்காகவும் சாமி கும்பிடுவது

8. விலை மதிக்க முடியாத நம்முடைய பற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் இரவு தூங்கும் முன் பல் துலக்குவது

9. சாலையில் கண்ட இடத்தில் எச்சில் துப்பாமலும் குப்பை போடாமலும் இருப்பது

10. அனைவரிடமும் மரியாதையாகவும் அன்பாகவும் பேசிப் பழகுவது

11. தினமும் நமக்காக கஷ்டப்பட்டு சமையல் செய்யும் அம்மாவையும் மனைவியையும் மனம் திறந்து பாராட்டுவது.பாராட்டவில்லை என்றாலும் குறை கூறாமலாவது இருப்பது.

12. ஒருவர் நமக்கு செய்த உதவியை எந்த காலத்திலும் மறக்காமல் நன்றியுடன் இருப்பது.

இவை அனைத்தும் எனக்கு தெரிந்த சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள். பிடித்ததை கடைபிடியுங்கள் பிடிக்காததை விட்டுவிடுங்கள்.

ஆரோக்கியமான வாழ்விற்கு வாழ்த்துக்கள்.

பொறுமையுடன் படித்ததற்கு நன்றி… நன்றி… நன்றி…

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : வெட்டி வெட்டி
வேல பாக்கும் கண்ணா
இந்த குட்டி குட்டி கண்ணா
பாரேன் மீசை தாடி காட்டை
ஆளும் மன்னா நீ என் ஆசை
நாடி தொட்டு பாரேன்

பெண் : ஊட்டியோட
பியூட்டி நான் தானடா
என்ன பாக்கும் போது
வெக்கமாச்சோ வாய்
அசைச்ச போதும் நான்
பாத்துப்பேன் இனி நான்
உன்னோட டப்மாஷோ

பெண் : என்னோடு சேர
வாரியா இல்ல நீ வேற
மாறியா உன் மேல
சந்தேகம் வந்தாச்சுடா......!

---சூபி டூபி டூபா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை சேதி சொல்லாதோ -
இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பங்கயமாகாதோ
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே -
புதுப்பண்பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே

கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா.....!

---கனிய கனிய மழலை பேசும்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்

வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்

நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்

நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே

என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாதே நகிலா ஓ ஓ (2)

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு........!

---காதல் சடுகுடு---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பும் உண்டு
ஆண் : நாயும் நரியும் புலியும் பாம்பும்
வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட
மனிதனை காணவில்லை

ஆண் : சிரிப்பினில் மனிதன் இல்லை
அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதனில்லை
உறக்கத்தில் மனிதனுண்டு
ஆண் : வாழும் மிருகம் தூங்கும் தெய்வம்
நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை
உலகம் வணங்குதடா......!

---யாரடா மனிதன் இங்கே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : {பாய் விரித்தது பருவம்

பெண் : பள்ளி கொண்டது இளமை

ஆண் : குரல் கொடுத்தது சேவல்

பெண் : விழித்துக் கொண்டன கண்கள்} (2)

ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

பெண் : இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன
ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன
ஆண் : வளைக்கரம் இருந்தால்
துணைக்கரம் வேண்டும்

பெண் : துணைக்கரம் இருந்தால்
தொடச் சொல்லத் தோன்றும்.....!

 

---பாய் விரித்தது பருவம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே

பெண் : காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே

ஆண் : சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே…..ஏ…

ஆண் : வெண்ணிலவில் லேண்டு வாங்கி
மச்சிவீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாம்

பெண் : பத்து புள்ள பெத்துகிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஆண் : ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா
கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தாதாண்டி

பெண் : கேடி இல்ல கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேட்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா

ஆண் : பட்டுன்னுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
பெண் : நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
ஜாலி ஆனேன்

ஆண் : காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்

பெண் : முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா......!

---காந்தக் கண்ணழகி---

  • கருத்துக்கள உறவுகள்

 

\

271943115_5731616426854566_3112601043063

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.