Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

 

உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே...

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !

பெண் :

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே...

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே...

பெண் :

தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே !

பேசப்பேசத்தான்  இன்னும் பிடிக்குதே !

பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே... நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே !

ஆண் :

சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே !

நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே..!

பெண் :

நேசங்களால் கைகள் இணைந்ததே !

கை சேர்ந்ததால் கவலை மறந்ததே !

தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே..!

ஆண் :

மழை வருகிற மணம் வருவது

எனக்கு மட்டுமா ?

தனிமையில் அதை முகர்கிற சுகம்

உனக்கும் கிட்டுமா ?

பெண் :

இருபுறம் மதில் நடுவினில் புயல்

எனக்கு மட்டுமா ?

மழையென வரும் மரகதக்குரல்

சுவரில் முட்டுமா ?

ஆண் :

எனது புதையல் மணலிலே...

கொதிக்கும் அனலிலே !

இருந்தும் விரைவில் கைசேரும்

பயண முடிவிலே !

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே !

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே ......!

 

--- உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே ---

  • Replies 5.9k
  • Views 327.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......! 

413028621_122118347720114056_37772656775

இன்று திருவெம்பாவையின் பூர்த்தி நாள்...
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்......!
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

வணக்கம் வாத்தியார்.......! 

413028621_122118347720114056_37772656775

இன்று திருவெம்பாவையின் பூர்த்தி நாள்...
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்......!

சிறுவயதில் ஊர் இளைஞர்களுடனும் தந்தையுடனும் சேர்ந்து அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சியும் திருவெம்பாவையும் பாடித்திரிந்திருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

சிறுவயதில் ஊர் இளைஞர்களுடனும் தந்தையுடனும் சேர்ந்து அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சியும் திருவெம்பாவையும் பாடித்திரிந்திருக்கிறோம். 

திருப்பள்ளியெழுச்சிக்குப்பின் திருவெம்பாவை படித்தீர்கள் .....சரி ......அத்தோடு திருப்பாவையும் படித்திருந்தால் ஒரு பாவையும் வந்திருப்பாள்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

திருப்பள்ளியெழுச்சிக்குப்பின் திருவெம்பாவை படித்தீர்கள் .....சரி ......அத்தோடு திருப்பாவையும் படித்திருந்தால் ஒரு பாவையும் வந்திருப்பாள்........!  😂

பாவையால் படும்பாட்டை எல்லோரும் எழுதும்போது நல்ல காலம் நான் தப்பிட்டேன் என்று மனதுக்குள் நினைப்பதுண்டு!😇

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஏராளன் said:

பாவையால் படும்பாட்டை எல்லோரும் எழுதும்போது நல்ல காலம் நான் தப்பிட்டேன் என்று மனதுக்குள் நினைப்பதுண்டு!😇

என்ன சொல்லுறீங்கள் எராளன் ......துன்பம் போன்ற இன்பமான அந்தப் படும் பாட்டைப் படுவதற்குத்தானே கல்யாணம் செய்யிறது......என்ன அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்ல வேண்டி இருக்கும்.....வாழ்க்கை சீராகப் போகும்......இல்ல நான் அரிச்சந்திரனின் மறு அவதாரம் என்று வாழ நினைத்தால் "வெரிசொறி" கடைசியில தகனமேடையில்தான் சந்திக்க வேண்டி இருக்கும்.....! 😂

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..
 
தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..
 
பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..
 
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..
 
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..
 
பணத்தின் மீது தான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா......!
 
 
--- அண்ணன் என்னடா தம்பி என்னடா ---
  • கருத்துக்கள உறவுகள்

 

67102_1067751996591422_83381249412202641

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

 

பெண் : குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு கோலம்
போடும் பாட்டாலே மயிலு இள
மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே

பெண் : ஒன்ன எண்ணி
நானே உள்ளம் வாடிப்
போனேன் கன்னிப்
பொண்ணுதானே என்
மாமனே என் மாமனே

பெண் : ஒத்தையிலே
அத்த மக ஒன்ன நெனச்சி
ரசிச்ச மக கண்ணு ரெண்டும்
மூடலையே காலம் நேரம் கூடலையே

பெண் : மாமன் ஒதடு
பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும்
கேட்ட வரம் கூடும் காலம்
வாராதா மாமன் காதில் ஏறாதா

பெண் : நிலா காயும்
நேரம் நெஞ்சுக்குள்ள
பாரம் மேலும் மேலும்
ஏறும் இந்த நேரந்தான்
இந்த நேரந்தான்

பெண் : ஒன்ன எண்ணி
பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு
வச்சேன் இஷ்டப்பட்ட
ஆச மச்சான் என்ன
மேலும் ஏங்க வச்சான்..........!

--- ஊரு சனம் தூங்கிருச்சு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : ஏதோ….. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ

பெண் : மார்பினில் நானும்
மாறாமல் சேரும்
காலம்தான் வேண்டும்…..ம்ம்ம்..
வான்வெளி எங்கும்
என் காதல் கீதம்
வாழும் நாள் வேண்டும்…..ம்ம்ம்..

பெண் : தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்…..ம்ம்ம்….
சேரும் நாள் வேண்டும்…..ம்ம்ம்….

ஆண் : நாடிய சொந்தம்
நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்…..ம்ம்ம்..
நாளொரு வண்ணம்
நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்…..ம்ம்ம்..

ஆண் : காற்றினில் செல்லும்
என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும்….ம்ம்ம்…
ஏக்கம் உள்ளாடும்…..ம்ம்ம்…....!

--- ஏதோ….. நினைவுகள் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

 
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான்
ரொம்பப் பக்கம்பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்
 
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு
விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ

வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
 
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே

கங்கை கங்கை ஆற்றைக்
கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில்
கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே காதல் கண்ணே
நெஞ்சை மட்டும் மூடி வைத்தாய் .......! 

--- ஒரு பொய்யாவது சொல் கண்ணே ---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

ஆண் : கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

ஆண் : மணியின் ஓசை
கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல்
காற்றில் மிதக்குதே

ஆண் : பின்னிப் பின்னிச்
சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும்
வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான்
இணைஞ்சி இருக்கு உறவு
எல்லாம் அமைஞ்சி இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு
யாரும் துணை இல்ல யாரோ
வழித்துணைக்கு வந்தால் ஏதும்
இணை இல்லை உலகத்தில்
எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில்
வாசம் சேர்ந்தது போல

ஆண் : மனசுல என்ன
ஆகாயம் தினம்தினம்
அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும்
கிளி எல்லாம் மூடும் சிறகிலே
மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே தாயின்
மடியைத்தேடி ஓடும் மலைநதி போல......!

--- இளங்காத்து வீசுதே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

சில்லென்ற தீப்பொறி
ஒன்று சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென சர சர
சர வென பரவுது நெஞ்சில்
பார்த்தாயா

இதோ உன் காதலன்
என்று விறு விறு விறுவென
கல கல கலவென அடி மன
வெளிகளில் ஒரு நொடி நகருது
கேட்டாயா

உன் மெத்தை
மேல் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே

கண்ணா உன் காலணி
உள்ளே என் கால்கள் நான்
சேர்ப்பதும் கண்மூடி நான்
சாய்வதும் கனவோடு நான்
தொய்வதும் கண்ணா உன்
கால் உறை உள்ளே என் கைகள்
நான் தொய்ப்பதும் உள்ளுற தேன்
பாய்வதும் உயிரோடு நான் தேய்வதும்

முத்து பையன் தேநீர்
உண்டு மிச்சம் வைத்த
கோப்பைகளும் தங்க கைகள்
உண்ணும் போது தட்டில் பட்ட
ரேகைகளும் மூக்கின் மேலே
முகாமிடும் கோபங்களும் ஓஓஓ…

அன்பே உன் புன்னகை
கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அரை தனில் நின்று
உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்

அக்கம் பக்கம் நோட்டம்
விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில்
சுவாசங்களும் ஓஓஓ….....!


--- தித்திக்குதே தித்திக்குதே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
 
போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற
ராக நதியினில் நீ நீந்த வா
 
இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்
கேளாய் பூ மனமே-ஓ-ஓ
 
உள்ளம் என்னும் ஊரிலே
பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள்
ராஜ பவனிகள் போகின்றதே
 

எந்தன் மூச்சும் இந்த பாட்டும்
அணையா விளக்கே
கேளாய் பூ மனமே-ஓ-ஓ.......!
 
--- சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ---
  • கருத்துக்கள உறவுகள்

என் பங்குக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா

பெண் : லவ்வுக்கு காவலா
பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா
செந்தூர பூவிலா
குழு : வில்லன்களை வீழ்த்தும்
வெண்ணிலா

பெண் : ஜுராசிக் பார்க்கில் இன்று
சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது

ஆண் : பிக்காசோ ஓவியந்தான்
பிரியாமல் என்னுடன்
டெக்சாசில் ஆடி வருது

பெண் : கவ் பாயின் கண் பட்டதும்
ப்ளேபாயின் கை தொட்டதும்
உண்டான செக்ஸானது
ஒன்றாக மிக்ஸானது

ஆண் : ஜாஸ் மியூசிக் பெண்ணானதா
ஸ்ட்ராபெரி கண்ணானதா
லவ் ஸ்டோரி கொண்டாடுதா
கிக்கேறி தள்ளாடுதா

பெண் : நம் காதல் யாருமே
எழுதாத பாடலா .......! 

--- முக்காலா முக்காபுலா ---

  • கருத்துக்கள உறவுகள்

 

417808816_2557026284475418_8116121207092

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கின்றேன் ..வாத்தியார்...

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்

ஆண் : உன்தோள் சேர
ஆசைதான் உன்னில் வாழ
ஆசைதான் உனக்குள் உறைய
ஆசைதான் உலகம் மறக்க
ஆசைதான் ஒன்றும் ஒன்றும்
ஒன்றாய் ஆக ஆசைதான்

பெண் : கண்ணில் கடைக்
கண்ணில் நீயும் பார்த்தால்
போதுமே கால்கள் எந்தன்
கால்கள் காதல் கோலம் போடுமே

ஆண் : நாணம் கொண்டு
மேகம் ஒன்றில் மறையும்
நிலவென கூந்தல் கொண்டு
முகத்தை நீயும் மூடும் அழகென்ன

பெண் : தூக்கத்தில்
உன்பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே

ஆண் : பிரம்மன் கூட
ஒரு கண்ணதாசன்தான்
உன்னைப் படைத்ததாலே

ஆண் : நீயும் என்னைப்
பிரிந்தால் எந்தன் பிறவி
முடியுமே மீண்டும் வந்து
சேர்ந்தால் மறு பிறவி தொடருமே

பெண் : நீயும் கோவில்
ஆனால் சிலையின்
வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால்
ஒளியும் நானே ஆகிறேன்

ஆண் : வானின்றி வெண்ணிலா
இங்கில்லை நாம் இன்றி காதல்
இல்லையே

பெண் : காலம் கரைந்த
பின்னும் கூந்தல் நரைத்த
பின்னும் அன்பில் மாற்றம்
இல்லையே.......!

--- உன் பேர் சொல்ல ஆசைதான் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பல ராகங்களின் கலவை இந்தப் பாடலின் சிறப்பு.....!

 

 

MSV இசையோடு கோர்த்து வாலி ராகங்களை அழகாக சேர்த்து SPB ரசனையோடு ஈர்த்து உருவாக்கிய ராகமாலை -பெண் ஒன்று கண்டேன் -முத்துராமன் பிரமீளா.....!

உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்

உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்

உன் இளநடை மலயமாருதம் ஆகும்

உன் மலர் முகம் சாரமதியென கூறும்

 

உன் நெஞ்சம் என் காதல் மாளிகை நீ ஒரு ராகமாலிகை ....

நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி

இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி

உன் குரல்வழி பிறந்தது ஹம்சத்வனி

உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி

 

நான் வாவனெ அழைக்கையில்

விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி

ஆரபிமானமும் தேவையில்லை

இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை

 

நீ எனக்கே தாரம் என்றிருக்க

உனை என்வசம் தாவென நான் கேட்க

என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே

இந்த நாயகன் தேடிடும் நாயகியே

உன் நெஞ்சம் என் காதல் மாளிகை

---நீ ஒரு ராகமாலிகை ---

 

(= மை - ஆனந்த - பைரவி- மோஹன. - நட- மலயமாருதம் - மலர்- முக- சாரமதி- சரஸாங்கி- சரஸ்வதி- ஹம்சத்வனி -நீலாம்பரி தோடி - தேவமனோஹரி- ஆரபி. -அகில - கேதார வஸந்த --ரஞ்சனி--நாயகி).

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : மாருகோ மாருகோ
மாருகயீ ஜோருகோ
ஜோருகோ ஜோருகயீ
பெண் : காசுகோ காசுகோ
பூசுகோ பூசுகோ மாலையில்
ஆடிகோ மந்திரம் பாடிக்கோ

ஆண் : கண்மணி
பொன்மணி கொஞ்சு
நீ கெஞ்சு நீ மாலையில்
ஆடு நீ மந்திரம் பாடு நீ

ஆண் : சம்பா சம்பா
அடி ரம்பா ரம்பா இது
சோம்பேறி பூஞ்சிரிப்பா

பெண் : கொம்பா கொம்பா
இது வம்பா வம்பா நீ
கொம்பேறி மூக்கனப்பா
ஹோய் ஹோய்

ஆண் : ஏய் சும்மா சும்மா
பொய் சொல்லாதம்மா
உன் சிங்காரம் ஏங்குதம்மா

பெண் : ஏ கும்மா கும்மா
அடி யம்மா யம்மா உன்
கும்மாளம் தாங்கிடுமா

ஆண் : ஆசையாக பேசினால்
போதாதம்மோய் தாகத்தோடு
மோகம் என்றும் போகாதம்மா

பெண் : ஆத்திரம் காட்டினால்
ஆகாதய்யா அச்சத்தோடு
நாணம் என்றும் போகாதய்யா

ஆண் : ஏத்துக்கடி என்ன
சேர்த்துக்கடி வாலிபம்
ஆடுது வெப்பமோ ஏறுது

 

ஆண் : கண்மணி
பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ

பெண் : மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ

பெண் : நான் சின்னப்
பொண்ணு செவ்வாழை
கண்ணு நீ கல்யாண வேலி கட்டு

ஆண் : என் செந்தாமரை
கைசேரும் வரை நான்
நின்றேனே தூக்கம் கெட்டு

பெண் : உன் ஆசை என்ன உன் தேவை
என்ன நீ லேசாக காத கடி

ஆண் : என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இந்நேரம் கண்டு பிடி

பெண் : கேக்குது கேக்குது ஏதோ ஒன்னு பார்த்து
பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு

ஆண் : அட தாக்குது தாக்குது ஊதக்காத்து
தள்ளி தள்ளி நிக்குற ஆளை பார்த்து

பெண் : காலம் வரும் நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசைய தீர்த்துக்கோ.....!

 

--- மாருகோ மாருகோ ---

  • கருத்துக்கள உறவுகள்

 

417749787_794182212748124_63145048333771

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : பிரம்மா உன் படைப்பினிலே…
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன்
அழகினிலே இவளைக் கண்டு
அழகினிலே.. இவளைக்கண்டு

பெண் : ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

ஆண் : என் இராத்திரியின் நாவல்
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சேம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்

பெண் : நீப்போடுப்போடு சக்கப்போடு
ஆண் : என்னப் போத்திக்கடி தேகத்தோடு
பெண் : அட வாடா ராஸ்கல் நேரத்தோடு

குழு : ஆடி உன்னைப் பார்க்கும் போது
உள் நாடித்துடிக்குதே
உன் தேகம் கண்டப் பின்பு
என் வேகம் குறையுதே

குழு : ஒடையுதே செதறுதே
ஆணினம் மொத்தமாய்
இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே

பெண் : புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும்
வந்த ஹீரோக்களின் கில்லி நீ..
ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என
அந்த லீலைகளின் கள்ளி நான்

ஆண் : ஆத்தி சீனிப்பேச்சிக்காரி
என் சில்மிஷ சிங்காரி
நீ சிரித்தாலே தீபாவளி
நான் ஏணி வச்சி ஏறி
உன்ன எட்டி பார்க்கும் ஞானி
நாம் வெடிபோம்மா காதல் வெடி

பெண் : அட சீசன் வந்த வேடந்தாங்கல்
நான் தானடா
சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல
வா வா ஜீவா.......!

--- ஏ வாடா வாடாப் பையா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : என் கண்மணி
உன் காதலி இள
மாங்கனி உன்னை
பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன் நான் சொன்ன
ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

ஆண் : நன்னா சொன்னேள் போங்கோ

பெண் : என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ

ஆண் : இருமான்கள்
பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா

பெண் : ஒரு ஜோடி
சேர்ந்து செல்லும்
பயணங்களில் உறவன்றி
வேறு இல்லை கவனங்களில்

ஆண் : இளமா மயில்
பெண் : அருகாமையில்

ஆண் : வந்தாடும் வேலை
இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்ல வில்லையோ

ஆண் : இந்தாமா கருவாட்டு கூடை
முன்னாடி போ

பெண் : என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ

ஆண் : தேனாம்பேட்டை
சூப்பர் மார்க்கெட் இறங்கு

ஆண் : மெதுவாக
உன்னை கொஞ்சம்
தொட வேண்டுமே
திருமேனி எங்கும்
விரல்கள் படவேண்டுமே

பெண் : அதற்கான
நேரம் ஒன்று வர
வேண்டுமே அடையாள
சின்னம் ஒன்று தர வேண்டுமே

ஆண் : இரு தோளிலும்
மணமாலைகள்

பெண் : கொண்டாடும்
காலமொன்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

ஆண் : என் கண்மணி
உன் காதலி இள
மாங்கனி உன்னை
பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன் நான் சொன்ன
ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பெண் : என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ......!

--- என் கண்மணி ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.