Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் தொடர்கிறது நிலவெடிப்பு ; மக்கள் மத்தியில் பீதி - அதிகாரிகள் விரைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தொடர்கிறது நிலவெடிப்பு ; மக்கள் மத்தியில் பீதி - அதிகாரிகள் விரைவு

[ Saturday,23 January 2016, 04:59:05 ] 
jaffna1.jpg

யாழ்ப்பாணம் – நவக்கிரி வடக்குவெளி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட நிலவெடிப்பு 100 மீற்றர் தூரத்தையும் கடந்து தொடர்ந்து செல்வதால் மக்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை இந்த நிலவெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இதனால் வீடொன்றின் சுவர்களுக்கு இடையிலும் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதற்கு முன்னர் 100 மீற்றர் தூர பரப்பளவில் நிலவெடிப்பு ஏற்பட்டிருந்தது. இருந்த போதிலும் தற்போது அந்த வெடிப்பு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதால் மக்கள் மத்தியில் தற்போது பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

சம்பவத்தை கேள்வியுற்ற அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்த எமது செய்தியாளர், கோப்பாய் பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸார் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை அவதானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

http://ibctamil.com/news/index/17430


அச்சுவேலியில் நிலஅதிர்வு
 

article_1453527382-2.jpg

-சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி, நவக்கிரி பகுதியில் இன்று சனிக்கிழமை (23) அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் உள்ள வீடொன்றின் சுவரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து தோட்டத்தரவைகள் வரையில் நிலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. 

அதிகாலை 3 மணியளவில் சிறிய சத்தத்துடன் இந்த நில அதிர்வு ஏற்ப்பட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கனியவளங்கள் மற்றும் சுரங்க அகழ்வாரச்சி பணியகத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

article_1453527510-3.jpg

article_1453527728-4.jpg

article_1453527740-5.jpg

article_1453527766-6.jpg

- See more at: http://www.tamilmirror.lk/164474/%E0%AE%85%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%B2%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-#sthash.2OGlU4Dc.dpuf

Edited by நவீனன்

யாழ். அச்சுவேலி பகுதியில் ஏற்பட்டது நில அதிர்வுதானா?

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அச்சுவேலி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்று திடீரென வெடிப்புகளுக்கு உள்ளாகி அந்தப் பகுதயில் பெரும் பதட்டமான நிலமையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையில் திடீரென தோட்ட வெளியில் அமைந்துள்ள குறிப்பிட்ட வீட்டின் சுவர்கள் நிலம் என்பன வெடிக்கத் தொடங்கியுள்ளன.

ஆனால் இன்று காலையில் பார்த்த போது மேலும் குறிப்பிட்ட வீட்டின் சுவர்கள் உட்பட நிலப் பகுதியும் பாரிய வெடிப்பகளுக்கு உள்ளாகி விரிவடைந்துள்ளதுடன், அயலில் உள்ள தோட்டக் காணியிலும் சுமார் நூற்றி ஐம்பது மீற்றருக்கும் ;மேற்பட்ட அளவுக்கு பரவலாக வெடிப்புகள் காணப்படுகின்றன.

இது சம்பந்தமாக கறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த அச்சுவேலிப் பொலிசார் மற்றும் பிரதேச செயலாளர், கிராம அலுவலர்கள் நிலைமையை அவதானித்து சென்றுள்ளார்கள்.

குறிப்பிட்ட நிகழ்வு சம்பந்தமாக பல்வேறு வகையான கதைகளும் பேசப்படுகின்றன. குறிப்பாக குறிப்பிட்ட நேரத்தில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் மற்றும் நிலம் கீழ் இறங்குகின்றது போன்ற கதைகள் எழுந்துள்ளன.

  1. யாழ்ப்பாணத்தில் நில அதிர்வு!: மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை

house-vedippu-01.jpg

house-vedippu-02.jpg

house-vedippu-03.jpg

http://www.tamilwin.com/show-RUmuyBRXSWho0H.htmlhouse-vedippu-04.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 யாழில் பூமியதிர்வா?

யாழ்ப்பாணம் மற்றும் புத்தூர் பகுதிகளில் 20 - 25 வினாடிகள் பூமியதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த செய்தி இலங்கை ஊடகங்களில் இல்லை.

http://tamil.oneindia.com/news/srilanka/earthsahake-sri-lanka-245128.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நம்மூரில எது நடந்து அது இலங்கை.. சர்வதேச ஊடகங்களில் முதலில் வருகுது..?! நாமே தான் எல்லாத்தையும் கவனிச்சுக்கனும். அப்புறம் பங்கு பிரிக்க வைட்கவுஸில் இருந்தும் ஆக்கள் வருவாங்கள்.

உள்ளூர் ஊடகமான உதயனில் இது குறித்த செய்தி பதிவாகி இருந்தது. யாழ் களத்திலும் அது இருந்தது. :rolleyes:

 

 

Edited by nedukkalapoovan

இது பூமியதிர்ச்சியாக இருக்க சந்தர்ப்பங்கள் மிக மிக குறைவு. படங்களை நோக்கும் போது, இந்த இடத்திற்கு கீழ் இருக்கும் சுண்ணாம்பு கற்பாறைகள் நொருங்கி நிலம் தாறுமாறாக differential settlements அடைவதாகவே தெரிகிறது. நிலக்கீழ் குகைகள் நீரினால் நிரம்பி அல்லது வெறுமையாகி அமுக்கம் மாறினாலும் பாறைகள் நொருங்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புத்தூர் நில வெடிப்பு பூமிநடுக்கம் அல்ல! தரையிறக்கம்!- பேராசிரியர் நந்தகுமார்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 05:46.35 AM GMT ]
house-vedippu.jpg
யாழ. புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் நிலத்தில் உண்டான திடீர் வெடிப்புகள் பூமிநடுக்கம் அல்ல எனவும், அவை நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும் உடைவுகளால் ஏற்படும் தரை இறக்கம் மட்டுமே எனவும், பேராதனை பல்கலைக்கழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வீடொன்றிலும் தோட்ட நிலங்களிலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யாழ். குடாநாட்டில் தரையின் கீழ் நீரோட்டங்களும் குகைகளும் காணப்படுகின்றன. இந்த நிலையில் நாம் குழாய் கிணறுகள், ஆழமான கிணறுகள் அமைத்து அவற்றினுடாக நிலத்தடி நீரை அதிகமாக வெளியே உறிஞ்சி இழுப்பதால் நிலத்தின் கீழ் நிலத்தடி நீரோட்ட இடைவெளி அதிகரித்து சுண்ணாம்பு பாறைகள் உடைவதுடன் அதன் காரணமாக மண் பிடிமானம் குறைவடைந்து இவ்வாறு நிலம் கீழ் இறங்குகிறது. இதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுகிறது.

மேலும் இதுபோன்ற பல சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்திலும் இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கட்டுடை இடிகுண்டு 1200ம் ஆண்டு இவ்வாறான செயற்பாடுகளினாலேயே உருவானது.

இதனைவிட மாத்தளை பகுதியிலும் மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது.

அத்துடன் டோக்கியோ போன்ற வளர்சியடைந்த நகரங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்த சம்பவத்தில் பாரிய சத்தமொன்று ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளமை தொடர்பாக கேட்ட போது, நிலத்தின் கீழ் ஏற்படுகின்ற கற்பாறைகளுடைய வெடிப்பின் காரணமாக இச்சத்தம் ஏற்படும்.

இவ்வாறான அனர்த்தங்களை தவிர்க்க வேண்டுமாயின் இயற்கைக்கு முரணான வகையில் நிலத்தடி நீரை அகத்துறிஞ்சுவதை நிறுத்த வேண்டும்.

இல்லையேல் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாததாய் அமைந்துவிடும், எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmuyBRYSWho7J.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவெடிப்பு அதிகரிப்பு
26-01-2016 08:40 AM
செல்வநாயகம் கபிலன்

article_1453777935-aa.jpg

அச்சுவேலி நவக்கிரிப் பகுதியில், கடந்த 23ஆம் திகதி அதிகாலை, நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு, 1.5 சதமமீற்றர் அகலத்துக்கு விகாரமடைந்துள்ளது.  

மேலும், புதிதாக சில இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வெடிப்பு ஏற்பட்ட பகுதி சற்றுக் கீழிறங்கியுள்ளது.

இந்த வெடிப்பு சுண்ணாம்புப் பாறைகளின் விரிசல்கள் காரணமாக ஏற்பட்டது என்றும், நிலநடுக்கத்தால் ஏற்படவில்லையெனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஏஸ்.ரீ.வீ.ராஜேஸ்வரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் வெடிப்பானது மேலும் விகாரமடைவதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவியுள்ளதாக அப்பகுதி கிராமஅலுவலர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/164666#sthash.ryat5y4f.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.