Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

Featured Replies

  • தொடங்கியவர்

உ.கோ.டி20: நியூஸிலாந்துக்கு எதிராக வங்கதேசம் படுதோல்வி

சவுமியா சர்க்கார் விக்கெட்டை கொண்டாடும் சோதி. | படம்: ஏ.எஃப்.பி.
சவுமியா சர்க்கார் விக்கெட்டை கொண்டாடும் சோதி. | படம்: ஏ.எஃப்.பி.

கொல்கத்தாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசத்தை, நியூஸிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஊதித்தள்ளியது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்தது, கப்தில் இந்தப் போட்டியில் இல்லை. நியூஸிலாந்து அணியை வங்கதேசம் 145 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது, தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 15.4 ஓவர்களில் 70 ரன்களுக்குச் சுருண்டது.

வங்கதேச அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நியூஸிலாந்து அணியில் மீண்டும் ஐ.எஸ்.சோதி 3.4 ஓவர்கள் வீசி 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, கிராண்ட் எலியட் 4 ஓவர்களில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றி மூலம் குரூப் பிரிவு ஆட்டத்தில் நியூஸிலாந்து அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது.

மிகவும் வறண்ட பிட்சில், தொடக்கத்தில் கேன் வில்லியம்ன்சன் 32 பந்துகளில் 42 ரன்கள் என்ற வலுவான தொடக்கத்தை கொடுத்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் தனது முதல் ஓவரில் ஹென்றி நிகோல்ஸை (7) பவுல்டு செய்தார். 42 ரன்கள் எடுத்த வில்லியம்சன் அதில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்து முஸ்தபிசுர் ரஹ்மானிடம் பவுல்டு ஆனார்.

கிராண்ட் எலியட் 9 ரன்களில் சுவாகத ஹோம் பிடித்த அருமையான கேட்சின் மூலம் முஸ்தபிசுர் 3-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். பிறகு கடைசி ஓவரில் மிட்செல் சாண்ட்னர், நேதன் மெக்கல்லம் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் பவுல்டு செய்தார் முஸ்தபிசுர் ரஹ்மான், மிகவும் நேர்த்தியான, துல்லியமான, கட்டுக்கோப்பான பந்து வீச்சு முஸ்தபிசுர் ரஹ்மானுடையது.

கொலின் மன்ரோ தனது ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நடு ஓவர்களில் ஆடி 1 பவுண்டரி 2 சிக்சருடன் 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அல் அமின் ஹுசைன் பந்தில் பவுல்டு ஆனார். ராஸ் டெய்லர் 24 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து அல் அமின் ஹுசைனிடம் ஆட்டமிழந்தார்.

ஆனால் மன்ரோ, டெய்லர் கூட்டணி 42 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கோரி ஆண்டர்சன் ரன் எடுக்காமல் மஷ்ரபே மோர்டசாவின் வேகம் குறைவான பந்தில் மட்டையில் பட்டு பவுல்டு ஆனார். கடைசி ஓவரில் முஸ்தபிசுர் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்த ஹேட்ரிக் பந்தை மெக்லினாகன் சிக்ஸ் அடிக்க நியூஸிலாந்து ஒரு வழியாக 145 ரன்களை எட்டியது. ஆனால் இதில் 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அதாவது 14.5 ஓவர்களில் 99/2 என்று இருந்த நியூஸிலாந்து கடைசி 6 விக்கெட்டுகளை 46 ரன்களுக்கு இழந்தது.

வங்கதேசத்தின் மோசமான பேட்டிங்:

3 போட்டிகளில் தோல்வியடைந்து தொய்வான மனநிலையுடன் களமிறங்கிய வங்கதேசம் 2-வது ஓவரின் கடைசி பந்தில் தமிம் இக்பாலை (3) ரன் அவுட் மூலம் இழந்தது. மொகமது மிதுன் ஷார்ட் தேர்ட் மேன் திசையில் தட்டி விட்டு ஒரு ரன்னுக்காக புறப்பட சற்றே தயங்கி ஓடத்தொடங்கினார் தமிம் ஆனால் மன்ரோவின் த்ரோ நேராக ஸ்டம்பை தாக்க ரன் அவுட் ஆனார். அதன் பிறகு மிதுன் (11), சபீர் ரஹ்மான் (12) ஆகியோர் வங்கதேச இன்னிங்ஸின் அதிக பட்ச ஜோடி ரன்களாக 25 ரன்களைச் சேர்த்தனர். இதில் சாண்ட்னர் ஓவரில் மிதுன், சபீர் ரஹ்மான் தலா ஒரு பவுண்டரியை அடித்தனர்.

இந்நிலையில் மெக்லினாகன் பந்தை ஒதுங்கிக் கொண்டு ஆட நினைத்தார் மிதுன், ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய மெக்லினாகன் அவரை பவுல்டு செய்தார்.

நிதானம் காட்ட வேண்டிய நேரத்தில் ஷாகிப் அல் ஹசன் (2), சாண்ட்னர் பந்தை லாங் ஆனில் தூக்கி அடித்து மெக்கல்லமிடம் கேட்ச் கொடுத்தார். சபீர் ரஹ்மான் பேட்டிற்கு சரியாக வராத நேதன் மெக்கல்லம் பந்தை தூக்கி அடித்து சாண்ட்னரின் நல்ல கேட்சுக்கு வெளியேறினார். சவுமியா சர்க்கார் 6 ரன்களில் லெக்ஸ்பின்னர் சோதியிடம் ஸ்டம்ப்டு ஆனார்.

முஷ்பிகுர் ரஹிம் ரன் எடுக்காமல் கிராண்ட் எலியட் பந்தில் பவுல்டு ஆனார். இது ஒரு அருமையான லெக் கட்டர். மஹ்முதுல்லாவுக்கு சோதி அருமையான கூக்ளியை வீசி அவரது மட்டைக்கும் கால்காப்பிற்கும் இடையே புகுந்த பந்து ஸ்டம்பை தொந்தரவு செய்தது. 48/7 என்ற நிலையில் வங்கதேசத்தின் அதிகபட்ச ஸ்கோராக சுவாகத ஹோம் 16 ரன்கள் எடுத்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் 1 சிக்சர் அடித்தார். 15.4 ஓவர்களில் 70 ரன்களுக்குச் சுருண்டு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் ஏமாற்றத்துடன் வெளியேறியது வங்கதேசம். ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

தஸ்கின் அகமது, அராபத் சன்னி போட்டித் தொடரின் இடையில் தடை செய்யப்பட்டதில் அந்த அணி மனதளவில் வெறுப்படைந்துள்ளதை இந்தத் தோல்வி காட்டுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article8399768.ece?homepage=true

 

  • Replies 357
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

”மலிங்காவுக்கு ஈடாக யாரும் வரமுடியாது” திசர பெரேரா

March 26, 2016

மலிங்காவுக்கு ஈடாக யாரும் வரமுடியாது என்று இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா கூறியுள்ளார். முழங்கால் காயத்தால் தொடரந்து அவதிப்பட்டு வந்த முன்னாள் தலைவர் மலிங்கா தற்போது நடந்து வரும் டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும், அனுபவ வீரர்கள் இல்லாமல் இலங்கை அணி திணறி வருகிறது.

370180-lasith-malinga-gen-sad-700

இந்நிலையில் திசர பெரேரா கூறுகையில், ”சங்கக்காரா, ஜெயவர்த்தனே இடத்தை நிரப்ப எப்படியும் 5- 6 ஆண்டுகள் பிடிக்கும். சங்கக்காரா அணிக்கு வந்த போது கூட சிறப்பாக செயல்பட அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. அதேபோல் ஒரு வீரர் அவர் இடத்தில் நிலைபெற கண்டிப்பாக சிறிது காலம் எடுக்க தான் செய்யும்” என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ”மலிங்கா போன்று ஒரு வீரரை பெறுவது என்பது இனி சாத்தியமற்றது. அதேபோல் தான் ஹேராத் போன்ற ஒரு சுழல் வீரர் இனி கிடைக்கமாட்டார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவோம். நான் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி மைதானத்தில் 6-7 போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு கைகொடுக்கும் என்று நினைக்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=11358&cat=2

  • தொடங்கியவர்

’’தலைவர் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல’’ அப்ரிடி

March 26, 2016

பாகிஸ்தான் அணியின் தலைவராக இருக்க தான் தகுதி இல்லாதவர் என்று சாகித் அப்ரிடி விரக்தியுடன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கிண்ண தொடரில் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

afridifb-story_647_030216110233

இந்த தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் வென்றது. மற்ற 3 போட்டிகளிலுமே தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு சாயித் அப்ரிடி கூறுகையில், ”ஒரு வீரர் என்ற முறையில் நான் தகுதியானவர். ஆனால் தலைவர் பதவிக்கு நான் தகுதியானவன் கிடையாது.

நாடு திரும்பிய பிறகு எனது ஓய்வு முடிவை அறிவிப்பேன். ஊடகங்களால் நான் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானேன். போட்டியின் போது எங்களுக்கு உற்சாகம் அளித்த கொல்கத்தா மற்றும் காஷ்மீர் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சிறப்பான உபசரிப்பு அளித்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் நன்றியை தெரிவி்த்துக் கொள்கிறேன்“ என்று கூறியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=11355&cat=2

  • தொடங்கியவர்

12495119_570968286399834_201036864567453

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தோல்வி நிச்சயம்.

நவீனன் இப்போதே புள்ளிகளை வழங்கலாம்

  • தொடங்கியவர்

மலிங்கவை வீழ்த்திய அப்ரிடி

March 25, 2016

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் அதிக இலக்குகளைக் கைப் பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் தலைவரான அப்ரிடி.

Shahid-Afridi
நியூசிலாந்து அணிக்கு எதிராகக் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இரு இலக்குகளைக் கைப்பற்றியதன் மூலமே அப்ரிடி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். மலிங்க இதுவரை 31 ஆட்டங்களில் விளையாடி 38 இலக்குகளுடன் முதலிடத்தில் இருந்தார்.

தற்போது அவரை அப்ரிடி முந்தியுள்ளார். இதன்படி இதுவரை 33 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 39 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்த ரி-20 ஆட்டங்களிலும் 97 இலக்குகளுடன் அப்ரிடியே முதலிடத்தில் உள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=11339&cat=2

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12439185_571017683061561_612752141906193

  • தொடங்கியவர்

இங்கிலாந்து வெற்றி

12347866_571035526393110_916005796861093

12417550_571035646393098_789711958115876

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் ஐ சானல் எங்கே பாக்கிறியள்?

  • தொடங்கியவர்

டி 20 உலகக் கோப்பை: நடப்புச் சாம்பியன் இலங்கை வெளியேறியது

இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்புச் சாம்பியனான இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

160318154423_englands_bowler_moeen_ali__

 இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள்

டில்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடியாக கடைசி ஓவர் வரை உறுதியாக நின்று ஆடி 73 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருந்தபோதிலும் அவரால் அணியின் தோல்வியை தடுக்க முடியவில்லை.

முன்னதாக இலங்கை அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததே இலங்கை அணியின் தோல்விக்கு வழி வகுத்தது.

160326105432_lanka_cricket_640x360_getty  ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் இலங்கை அணியினர்

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்தது. அதில் பட்லர் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை எடுத்தார்.

நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை போட்டியில் ஒன்றாம் பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இரண்டாவது பிரிவில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது அணியாக தகுதி பெறும் அணி இந்தியாவா அல்லது ஆஸ்திரேலியாவா என்பது ஞாயிற்றுகிழமை தெரிந்துவிடும்.

http://www.bbc.com/tamil/sport/2016/03/160326_t20_lanka_england?ocid=socialflow_facebook

  • தொடங்கியவர்

]]

22 minutes ago, goshan_che said:

நவீனன் ஐ சானல் எங்கே பாக்கிறியள்?

:grin:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
போராடி தோற்றது இலங்கை: இங்கிலாந்து அரை இறுதிக்குத் தகுதி
2016-03-26 23:11:12

உலக இருபது 20 கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப்போட்டிக்கு குழு 1 இலிருந்து இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

 

இன்று நடைபெற்ற இலங்கை அணியுடனான போட்டியில் 10 ஓட்டங்களால்  வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதிபெற்றது. குழு 1 இலிருந்து ஏற்கெனவே அரை இறுதிக்கு மேற்கிந்திய அணியும் தகுதி பெற்றிருந்தது. எனவே, இலங்கை, தென் ஆபிரிக்கா, ஆகிய அணிகளின் அரை இறுதிக் கனவு கலைந்துள்ளது.

 

இங்கிலாந்துடனான இன்றைய போட்டியில் இலங்கை அணி  கடுமையாகப் போராடி தோல்வியைத் தழுவியது.

 

15748_england1.jpgடில்லியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களைப் பெற்றது.


ஜோஸ் பட்லர் 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களைக் குவித்தார். ஜேசன் ரோய்  39 பந்துகளில் 42 ஓட்டங்களையும் ஜோ ரூட் 24 பந்துளகில் 25 ஓட்டங்களையும் மோர்கன் 16 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் ஜெப்ரி வெண்டர்சே 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.


172 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது. திலகரட்ன தில்ஷான் 2 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

 

ஏஞ்சலோ மெத்யூஸ் அடித்த பந்தொன்றின் மூலம் ஓட்டமொன்றை பெறுவதற்காக மறுமுனையிலிருந்து ஓடி வந்த லஹிரு திரிமான்னவை மெத்யூஸ் திருப்பி அனுப்பியதால் திரிமான்ன 3 ஓட்டங்களுடன் ரன் அவுட்டானார். மிலிந்த சிறிவர்தன 7 ஓட்டங்களுடன் ஆட்டமிந்தார்.


இலங்கை அணி 3 ஓவர்களில் 16 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 4 விக்கெட்களை இழந்தது.

எனினும் அதன்பின் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸூம் சாமர கப்புகெதரவும் அணியை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக ஏஞ்சலோ மெத்யூஸ் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்.

 

இவ்விருவரும் 5 ஆவது விக்கெட்டுக்காக  80 ஓட்டங்களைக் குவித்தனர். கப்புகெதர 27 பந்துகளில் ஒரு சிக்ஸர் உட்பட 30 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். திசர பெரேரா 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 20 ஓட்டங்களைப் பெற்றார்.

 

15748_england2.jpg


இலங்கை அணி இறுதி 2 ஓவர்களில் 22 ஓட்டங்கள் மாத்திரம் தேவை எனும் அளவுக்கு இலங்கை அணி முன்னேறியது. இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

 

எனினும் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களையே இலங்கை அணி பெற்றது. ஏஞ்சலோ மெத்யூஸ் 54 பந்துகளில் 5 சிக்ஸர் உட்பட ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களைப் பெற்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15748#sthash.iQVZUi56.dpuf

 

12417534_992644877449372_664433995099338

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவை விரட்டி அடித்த இங்கிலாந்திற்கு பாராட்டுக்கள். வெல்டன் இங்கிலன்ட். tw_blush:

  • தொடங்கியவர்

உங்கள் வெற்றி என் உடல் ஆரோக்கியத்திற்கு பங்களிப்பு செய்கிறது: தோனியிடம் முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங்

 

 
மொஹாலி வலைப்பயிற்சியில் தோனி, ரவிசாஸ்திரி. | படம்: ஏ.பி.
மொஹாலி வலைப்பயிற்சியில் தோனி, ரவிசாஸ்திரி. | படம்: ஏ.பி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிறன்று நடைபெறும் அதிமுக்கியமான உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வீரர்களை நேரில் சென்று வாழ்த்தினார் 92 வயது முன்னாள் ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர்.

பல்பீர் சிங் சீனியர் (92) மூன்று முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடிய மிகப்பெரிய ஹாக்கி வீரர். இவர் இன்று மாலை மொஹாலி மைதானத்தில் கேப்டன் தோனி மற்றும் அணி வீரர்களைச் சந்தித்து வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய கேப்டன் தோனி மற்றும் அணி வீரர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது தோனி நன்றி தெரிவித்ததோடு, பல்பீர் சிங் சீனியரின் உடல் ஆரோக்கியம் பற்றி விசாரித்தார், அதற்கு புன்னகையுடன் பதில் அளித்த பல்பீர் சிங், “உங்கள் வெற்றி என் உடல் ஆரோக்கியத்திற்கு பங்களிப்பு செய்கிறது” என்றார்.

பிறகு பிடிஐ நிறுவனத்திடம் அவர் தெரிவித்த போது, “இந்திய அணியை 3-வது உலகக்கோப்பையை (தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பையை வென்றதையடுத்து 2016 டி20 உலகக்கோப்பையையும் வெல்ல) வெல்ல வாழ்த்து தெரிவிக்க வந்தேன்” என்றார்.http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/article8399826.ece

  • தொடங்கியவர்

நாளைய போட்டி

இந்தியா vs அவுஸ்திரேலியா

மதிய ஐரோப்பிய நேரம்

16.00

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையணியை பாராட்டத் தான் வேண்டும்.மஹேல,சங்க மட்டுமில்லாமல் மலிங்கா கூட விளையாடவில்லை.அப்படி இருந்தும் போராடித் தானே தோத்தது...இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுபடுத்தி இருந்தால் எப்படியும் வென்றிருக்கும்.வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அணியையும் வாழ்த்த வேண்டும்.. இம்ரான் கான்.. அக்தார்.. வாசிம் அக்ரம்.. சலீம் மலிக்... இவர்கள் எல்லாம் விளையாடாமல்.. போராடித் தோற்றார்கள். முடியல்ல... சொறீலங்கா அணி விசிறிகளுக்கு ஓய்வு பெற்றவர்கள் எல்லாம்... வந்து விளையாடினாலும்.. பத்தாது. tw_blush::rolleyes:

சொறீலங்கா... போராடவே இல்லை. தோத்திச்சு. இங்கிலாந்து பீல்டிங்.. மற்றும் பந்து வீச்சை இன்னும் இறுக்கி இருந்தால்.. சொறீலங்காவை 100 தாண்ட முதலே ஆல்வுட் பண்ணி இருக்கலாம். 

எதுஎப்படியோ.. சொறீலங்கா.. இங்கிலாந்திடம் வாங்கிக் கட்டிக்கொண்டு போனது பெரு மகிழ்ச்சியே. மைதானத்தில் கூட அது தென்பட்டது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

942535_992700340777159_50165851557719939

  • தொடங்கியவர்

அரையிறுதிக்கு முன்னேறுவது யார்? - இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

 
 
இந்திய அணி. | படம்: ஏ.எஃப்.பி.
இந்திய அணி. | படம்: ஏ.எஃப்.பி.

டி 20 உலகக் கோப்பையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும்.

டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என பலரால் கணிக்கப் பட்ட தோனி தலைமையிலான இந்திய அணி போட்டியை நடத்தும் நாடாக இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் செயல்படவில்லை. 3 ஆட்டத்தில் இரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலிய அணி டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆட்டத் துக்கு ஆட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் கடைசி கட்டத்தில் கோட்டைவிட்ட நிலையில் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பதிவு செய்துள்ளது ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.

மொஹாலி ஆடுகளம் மந்தமாக செயல்படக்கூடியது என்பதால் ரன் குவிப்பதில் எந்த சிரமமும் இருக்காது.

ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஜோடி மீண்டும் பார்முக்கு திரும்ப இன்றைய ஆட்டம் உதவக்கூடும். நல்ல பார்மில் உள்ள நட்சத்திர வீரரான விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத் தில் 30 ரன்கள் சேர்த்ததன் மூலம் ரெய்னாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

யுவராஜ்சிங்கிடம் இருந்து இன்னும் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படாத நிலையில் இன்று தனது சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்த முயற் சிக்கக்கூடும். பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா நல்ல பார்மில் உள்ளனர்.

இளம் வீரர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகி யோர் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நெருக்கடியை சரியாக கையாண்டு வெற்றிக்கு உதவினர். அனுபவ வீரரான ஆஷிஸ் நெஹ்ரா பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசுவது பலமாக உள்ளது.

மொஹாலி ஆடுகளத்தில் பந்து அதிகளவில் சுழலாது என்றாலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் வித்தியாசமான யுக்திகளை கையாளக்கூடும். அதேவேளை யில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பாவும் கடந்த இரு ஆட்டங்களில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களிடம் திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஸம்பாவை கூடுதல் கவனத்துடன் எதிர்கொள் ளக்கூடும். இந்திய அணி பீல்டிங்கிலும் முன்னேற்றம் காண வேண்டியதுள்ளது.

வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா, பாண்டியா, அஸ்வின் ஆகியோர் கேட்ச்களை தவறவிட்டனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் பீல்டிங்கிலும் இந்திய வீரர்கள் அதிக கவனம் செலுத்த முயல்வார்கள்.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ் தானுக்கு எதிரான ஆட்டத்தில் 192 ரன்கள் குவித்து மிரட்டியது. தொடக்க வீரரான உஸ்மான் ஹவாஜா நல்ல பார்மில் உள்ளார். அதிரடியாக விளையாடக்கூடிய ஸ்மித், வாட்சன், வார்னர், மேக்ஸ் வெல், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்கள்.

மொஹாலி மைதானத்தில் ஏற்கெனவே அவர்கள் விளையாடி உள்ளதால் மைதானத்தின் தன் மையை அவர்கள் அறிந்திருப்பது கூடுதல் பலம் தான். இந்த தொடரில் வார்னர் 4வது வீரராக களமிறங் குவது எந்த பலனுமில்லாமல் இருப் பதால் அவரது பேட்டிங் வரிசை மாறக்கூடும். இரு அணிகளுக் குமே இன்றைய ஆட்டம் காலிறுதி போன்றது என்பதால் வெற்றி பெற கடும் போட்டி நிலவும்.

நேரம்: இரவு 7.30
இடம்: மொஹாலி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

விராட் கோலி:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் காலிறுதிக்குச் சமமானது. எங்களது திறமைக்கு ஏற்ப நாங்கள் விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவை நிச்சயம் வீழ்த்த முடியும்.

அணியின் பலத்துக்கு தகுந்தபடி தான் திட்டமிடவேண்டும். போட்டி நடைபெறும் தினத்தில், அதிக அளவிலான முன்கூட்டிய திட்டமிடல் உதவாது. மேலும் இந்த தொடரில் தகவமைத்துக்கொள்ளுதலும் முக்கியமானது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் முக்கியமான வீரர். அவர் அந்த அணிக்கு அடித்தளமாக விளங்குகிறார். அவர் போன்ற பெரிய வீரர்களை விரைவில் வீழ்த்துவது அவசியம்.

ஷேன் வாட்சன்:

இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்திவிட்டால் அது ஒரு பெரிய சாதனையே. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இதுவரை சரியாக ஆடவில்லை. ஆனால் சூழ்நிலைகள் மற்ற அணிகளுக்கும் கடினமாகவே உள்ளது. இந்திய அணியில் திறமை மிக்க மட்டையாளர்களும், பந்து வீச்சாளர்களும் உள்ளனர். திடீரென அவர்களுக்கு ஆட்டம் சிறப்பாக அமைந்துவிட்டால் இந்திய அணியை யாராலும் வீழ்த்த முடியாது.

கோலியை விரைவில் ஆட்டமிழக்க செய்ய வேண்டும், களத்தில் அவர் நிலைத்து நின்றுவிட்டால் பந்து வீச்சாளர்களுக்கு அவர் நெருக்கடி கொடுப்பார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article8401966.ece

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

பாகிஸ்தான் அணியையும் வாழ்த்த வேண்டும்.. இம்ரான் கான்.. அக்தார்.. வாசிம் அக்ரம்.. சலீம் மலிக்... இவர்கள் எல்லாம் விளையாடாமல்.. போராடித் தோற்றார்கள். முடியல்ல... சொறீலங்கா அணி விசிறிகளுக்கு ஓய்வு பெற்றவர்கள் எல்லாம்... வந்து விளையாடினாலும்.. பத்தாது. tw_blush::rolleyes:

சொறீலங்கா... போராடவே இல்லை. தோத்திச்சு. இங்கிலாந்து பீல்டிங்.. மற்றும் பந்து வீச்சை இன்னும் இறுக்கி இருந்தால்.. சொறீலங்காவை 100 தாண்ட முதலே ஆல்வுட் பண்ணி இருக்கலாம். 

எதுஎப்படியோ.. சொறீலங்கா.. இங்கிலாந்திடம் வாங்கிக் கட்டிக்கொண்டு போனது பெரு மகிழ்ச்சியே. மைதானத்தில் கூட அது தென்பட்டது. tw_blush:

நெடுக்கு இதை இன்று இந்தியா v அவுஸ் மட்ச் முடிய எழுதுவம் என்றிருந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள்.

 

  • தொடங்கியவர்

சில மாதங்களாகவே ரசிகர்களுக்கும் நாட்டுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டோம்: அஞ்சேலோ மேத்யூஸ் வருத்தம்

 
Mathews_2790773f.jpg
 

ஐசிசி டி20 உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே இலங்கை கிரிக்கெட் அணி சரியாக ஆடாமல் ரசிகர்களுக்கும், நாட்டுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 டி20 சர்வதேச போட்டிகளில் யு.ஏ.இ., ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவை ஒரு போட்டியில் இலங்கை வீழ்த்தியதோடு சரி. மற்றபடி அதன் கிரிக்கெட் சில மாதங்களாகவே கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

“சில மாதங்கள் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்து விட்டது ரசிகர்கள், ஒட்டுமொத்த நாட்டுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டோம். நாங்கள் தரமான கிரிக்கெட்டை ஆடவே இல்லை என்பதே உண்மை.

நாம் இப்போது செய்யக் கூடியதெல்லாம் அணிச்சேர்க்கையை மாற்றாமல் ஒரே அணிச்சேர்க்கையை ஸ்திரப்படுத்துவதேயாகும். 20 வீரர்களைத் தேர்வு செய்து 6 மாதங்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதன் பிறகு மதிப்பீடு செய்ய வேண்டும். வாய்ப்பு வழங்கிய பிறகு அவர்கள் இந்த உயர் மட்டத்திற்கு தகுதியுடையவர்கள்தானா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். நாம் பொறுமை காப்பது அவசியம்.

லஷித் மலிங்காவை இழந்தது பெரிய அடிதான், ஆனால் இந்த மோசமான ஆட்டத்திற்கு அதனை ஒரு சாக்காகக் கூற முடியாது. மலிங்கா நிறைய போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார் என்பது உண்மைதான், அவர் இருந்திருந்தால் ஓரளவுக்கு நன்றாக ஆடியிருக்கலாம்.

இங்கிலாந்துக்கு எதிராக நெருக்கமாக வந்தே தோல்வி கண்டோம். 4 விக்கெட்டுகளை (15) குறைந்த ரன்களுக்கு இழந்தபிறகே மீண்டெழுந்தோம், உறுதியுடன் இங்கிலாந்து ஆடியதை பாராட்ட வேண்டும்.

15/4 என்ற நிலையில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற மனநிலையில் சில பவுலர்களை குறிவைத்து அடிக்க நானும் கபுகேதராவும் முடிவெடுத்தோம். கடைசியில் எதிர்முனையில் சரியான பேட்ஸ்மென் இல்லை, இருந்திருந்தால் அவரிடம் ஸ்ட்ரைக் கொடுத்திருப்பேன். பென் ஸ்டோக்ஸ் கடைசி ஓவரை அருமையாக வீசினார். இங்கிலாந்து பேட்ஸ்மென்களும் முதல் 6 ஓவர்களில் கட்டுப்படுத்திய பிறகு தொடர்ந்து தாக்குதல் ஆட்டம் ஆடினர்.

இவ்வாறு கூறினார் மேத்யூஸ்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article8402061.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள்

March 27, 2016

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நாக்பூரில் நடைபெற்றது.

prv_127bb_1459084092

இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. வழக்கம் போல் முகமது சஷாத் அதிரடி காட்ட ஆரம்பித்தார். அவர் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அடுத்து வந்தவர்கள் சொபிக்கவில்லை. அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். நஜிபுல்லா மட்டும் நிதானமாக ஆடி 48 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 123 ஓட்டங்கள் குவித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், சாமுல் பத்ரி 3 விக்கெட்டுகளையும், ரஸல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் பின்னர் 124 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தது.

இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியால் 3 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. 20 ஓவரில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 117 ஓட்டங்களே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக, ஜான்சன் ஜார்லஸ் 22 ஓட்டங்களையும், வெய்ன் பிராவோ 28 ஓட்டங்களை எடுத்தனர். ஆப்கான் அணியின் தரப்பில், முகமது நபி, ரசித் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த தோல்வியால் மேற்கிந்திய தீவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. அதேசமயம் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கான் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி விளையாடிய 4 போட்டிகளில் 1ல் வெற்றி பெற்றுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=11375&cat=2

  • தொடங்கியவர்
இந்திய மகளிர் அணியை 3 ஓட்டங்களால் மேற்கிந்திய மகளிர் அணி வென்றது
2016-03-27 19:56:46

உலக மகளிர் இருபது20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வென்றது.


 மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய மகளிர் அணி  20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களைப் பெற்றது.

15755india-woman.jpg

 


 அணித் தலைவர் ஸ்டெஃபனி டெய்லர் 45 பந்துகளில் 47 ஓட்டங்களைக் குவித்தார்.  டியென்ட்ரா டொட்டின்m  40 பந்துகளில் 45 ஓட்டங்களைக் குவித்தார்.


இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சாளர்களில் ஹர்மன்ப்ரீத் கவ்ர் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும்  அனுஜா பட்டீல் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி இந்திய அணி  20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்களையே பெற்றது.

 

அனூஜா பட்டீல் 27 பந்துகளில் 27 ஓட்டங்களையும் ஜூலான் கோஸ்வாமி 19 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர். மந்தான 22 ஓட்டங்களையும் வேதா கிருஷ்ணமூர்த்தி 18 ஓட்டங்களையும் பெற்றனர்.


மேற்கிந்திய மகளிர் அணியின் பந்துவீச்சாளர்களில்  டியனெ;ட்ரா  டோட்டின் 16 ஓட்டங்களுக்க 3 விக்கெட்களை வீழ்த்தினார்.  அஃபி பிளெட்சர் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகியாக டியென்ட்ரா டோட்டின் தெரிவானார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15755#sthash.Vfb4JVin.dpuf
  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியா 160/6

12524134_571664659663530_321228760903456

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முதலாவது அரைஇறுதி போட்டி மார்ச் 30

நியூசீலாந்து  vs இங்கிலாந்து

டெல்லி மைதனத்தில் மத்திய ஐரோப்பிய நேரம் 15.30

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.