Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

Featured Replies

  • தொடங்கியவர்
12814320_997525116962849_370516168986110
 
இலங்கை கிரிக்கெட் T 20 அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக லசித் மாலிங்க Sri Lanka Cricketக்கு கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல்நிலை ஆரோக்கியமானதாக இருந்தால் உலக T 20அணியில் வீரராக விளையாடத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

டெஸ்ட், மற்றும் ஒருநாள் போட்டிகளின் தலைவராகவுள்ள அஞ்சேலோ மத்தியூஸ் உலக T 20 போட்டிகளில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Replies 357
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்...

டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்...

 

16 அணிகள் பங்கேற்கும் 6-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3-ந் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது.

முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’ பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறும்.

15-ந் திகதி தொடங்கும் சூப்பர்-10 சுற்றில் தான் பிரதான அணிகள் அடியெடுத்து வைக்கின்றன. இதில் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோத இருக்கின்றன. அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

சூப்பர்-10 சுற்றில் ஒரு பிரிவில் இந்திய அணியுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணி அங்கம் வகிக்கும். மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இடம் பெறுகிறது.

நாளை நடக்கும் தொடக்க ஆட்டங்களில் ஹாங்காங்-சிம்பாப்வே (பிற்பகல் 3 மணி), ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து (இரவு 7.30 மணி) அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.
  • தொடங்கியவர்

பதவியை துறந்தார் லசித் மாலிங்க

 

இருபதுக்கு 20 கிரிகெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஆசிய கிண்ண போட்டிகளின் போதும், தற்போது காயம் காரணமாக லசித் மாலிங்க ஒய்வரையிலேயே இருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளின் போது, அவர் வழமைக்குத் திரும்புவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/3937

நாளை தொடங்குகிறது உலக கோப்பை டி20! கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு பிரகாச வாய்ப்பு

 

நாக்பூர்: 16 அணிகள் பங்கேற்கும் 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர், முதல் சுற்று மற்றும் சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது. முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன.

‘ஏ' பிரிவில் வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி' பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறும்.

15ம் தேதி தொடங்கும் சூப்பர்-10 சுற்றில்தான் பிரதான அணிகள் நுழைய உள்ளன. இதில் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இரு பிரிவுகளில் இருந்தும் தலா 2 அணிகள் என மொத்தம், 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். சூப்பர்-10 சுற்றில் ஒரு பிரிவில், இந்திய அணியுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ‘ஏ' பிரிவில் முதலிடம் பெறும் அணி அங்கம் வகிக்கும். மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ‘பி' பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இடம் பெறுகிறது.

நாளை நாக்பூரில் நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் ஹாங்காங்-ஜிம்பாப்வே பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியிலும், ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியிலும் மோத உள்ளன. 15ம் தேதிக்கு பிறகுதான் உலக கோப்பை களைகட்ட ஆரம்பிக்கும் என்பது ரசிகர்கள் கருத்து. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் வெற்றி வாய்ப்பு மண்ணின் மைந்தர்களான இந்திய அணிக்கே உள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.



Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/preview-world-t20-2016-ms-dhoni-led-india-clear-favourites-248472.html

  • தொடங்கியவர்

தர்மசாலாவில் பாகிஸ்தான் விளையாடக் கூடாது: இம்ரான்கான் கருத்து

 
இம்ரான் கான். | கோப்புப் படம்.
இம்ரான் கான். | கோப்புப் படம்.

உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தர்மசாலாவில் விளையாடக் கூடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை தர்மசாலாவில் நடத்த முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவிப்ப தாகவும், அதனால் அங்கு போட்டி யை நடத்த போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் இமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங் கூறியிருந்தார்.

இது தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றுக்கு இம்ரான்கான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியா - பாகிஸ்தான் இடையே தர்மசாலாவில் நடை பெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டி குறித்து இமாச்சல பிரதேச முதல்வர் பொறுப்பற்ற முறையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது கருத்து வெறுப்பை வளர்க்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ் தான் அணி தர்மசாலாவில் ஆடக் கூடாது.

இவ்வாறு இம்ரான்கான் கூறியுள்ளார்.

அதிகாரிகள் வருகை

இந்நிலையில் இந்தியா வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு வழங்கப்பட வுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவதற்காக அந்நாட்டின் 2 அதிகாரிகள் இன்று இந்தியா வருகிறார்கள். இதற்காக அவர்க ளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தியா வரும் பாகிஸ்தான் அதிகாரிகள் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8323338.ece

 

  • தொடங்கியவர்

ஜெயிக்கப் போவது யாரு?

 
உலகக் கோப்பை இன்ஃபோ ரிப்போர்ட்

 

தகளமாக ஆரம்பிக்கிறது ஆறாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள். இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளன.  மார்ச் 8-ம் தேதி  தொடங்கி, இந்தியாவில் நடக்கப்போகும் இந்தத் தொடரில், ஜெயிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லும் ரேஸில் முன்னிலையில் இருக்கும் அணிகளின் பலம், பலவீனங்கள் என்ன? கிரவுண்டில் இறங்கிப் பார்ப்போமா?

p4a.jpg

இந்தியா

p4b.jpg

பலம்:

red-dot%283%29.jpg மிகச் சமீபத்தில், ஆஸ்திரேலியாவை  அவர்கள் மண்ணிலேயே டி20 தொடரில் வாஷ்அவுட் செய்ததும் இலங்கையை வென்றதும் அணிக்கு பெரிய உத்வேகம்.

red-dot%283%29.jpg தோனி, யுவராஜ் சிங், ரோஹித் ஆகியோரின்  ஐந்து டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆடிய அனுபவம். 

red-dot%283%29.jpg ரோஹித், தவான் எனத் துவக்க ஆட்டக்காரர்களின் அதிரடி. ‘குட்டி டிராவிட்’ எனப்படும் ரஹானே, கோஹ்லி போன்ற அடுத்த நிலை ஆட்டக்காரர்களின் சிறப்பான ஆட்டம்.

red-dot%283%29.jpg ரெய்னா என்ற அட்டகாச ஆல்ரவுண்டர். புதிய வேகப் புயல் பும்ரோ மற்றும் முகமது சமி.

red-dot%283%29.jpg சுழற்பந்து வீச்சில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் அஸ்வின். அவருக்குப் பக்கபலமாக ஜடேஜா, ரெய்னா, யுவராஜ் சிங். எக்ஸ்ட்ராவாக இவர்களின் சிறப்பான ஃபீல்டிங்.

red-dot%283%29.jpg தோனியின் புயல் வேக ஸ்டம்ப்பிங்.

p4c.jpg

பலவீனம்:

red-dot%283%29.jpg எதிர் அணியினர் மிரண்டுபோகும் அளவுக்கான வேகப்பந்து வீச்சு இல்லாதது.

red-dot%283%29.jpg சில வீரர்களைத் தவிர, பிற வீரர்கள் ஃபீல்டிங்கில் ஆவேசமாக இல்லாமல் இருப்பது.

red-dot%283%29.jpg யுவராஜ் சிங் மற்றும்  ஜடேஜா வழக்கமான அதிரடி ஆட்டத்துக்கு முழுமையாகத் திரும்பாதது.

red-dot%283%29.jpg தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தால், ஐந்தாவது விக்கெட்டுக்குப் பிறகு வலுவான கூட்டணி இல்லாதது.

ஆஸ்திரேலியா

p4d.jpg

பலம்:

red-dot%283%29.jpg டி20 உலகக் கோப்பையை இதுவரை வெல்லாததால், இந்த முறை வென்றே தீர வேண்டும் என்ற வெறியில் விளையாடுவது.

red-dot%283%29.jpg எதிர் அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டும்  அதிரடி பேட்ஸ்மேன்கள்.

red-dot%283%29.jpg எதிர் அணி பேட்ஸ்மேன்களைத் திணறச் செய்யும் வேகப்பந்து வீச்சு.

red-dot%283%29.jpg டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-க்கும் கேப்டனாக மாறியுள்ள ஸ்மித்.

பலவீனம்:

red-dot%283%29.jpg பாக்னர், பின்ச், கோல்டர் நைல் போன்ற வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது.

red-dot%283%29.jpg இந்திய மைதானங்களில் சிறப்பாகப் பந்து வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது.

தென்னாப்பிரிக்கா

p4e.jpg

பலம்:

red-dot%283%29.jpg மற்ற அணிகளைவிட வலுவான பேட்ஸ்மேன்கள் அதிகம் இருக்கும் அணி.

red-dot%283%29.jpg துல்லியமான லைன்&லெங்க்த்தில் பந்து வீசும்  நான்கு பந்து வீச்சாளர்கள் மற்றும் மீதமுள்ள அனைவரும் அதிரடி பேட்ஸ்மேன்களாகக் களம் இறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபார்முலாவைப் பயன்படுத்தும் தென்னாப்பிரிக்க கேப்டன் டூப்ளெஸியின் வியூகம்.

red-dot%283%29.jpg எதிர் அணியினரைப் பயமுறுத்தும் டிவில்லியர்ஸ், ஸ்டெயின் போன்றோர் அணியில் இருப்பது.

பலவீனம்:

red-dot%283%29.jpg உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகள் என்றாலே, இறுதிப் போட்டிகள் வரை அட்டகாசமாக ஆடி, மோசமாகத் தோற்கும் ராசி. இது மனரீதியாக வீரர்களைப் பாதிப்பது தென்னாப்பிரிக்க அணியின் பலவீனம்.

நியூசிலாந்து

p4f.jpg

பலம்:

red-dot%283%29.jpg போட்டியின் முதல் பந்தையே சிக்ஸருக்கு விரட்டக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருப்பது.

red-dot%283%29.jpg சமீபத்தில் விளையாடிய ஒருநாள் போட்டிகளையே 20 ஓவர் போட்டிகளைப்போல விளையாடியவர்கள். 20 ஓவர் போட்டிகளை எப்படி விளையாடப்போகிறார்கள் என்று எல்லா அணிகளுமே எதிர்பார்க்கிறது.

பலவீனம்:

red-dot%283%29.jpg பிரண்டன் மெக்கல்லம் என்ற அதிரடி பேட்ஸ்மேன் ஓய்வு பெற்றுவிட்டது.

red-dot%283%29.jpg வெட்டோரிக்குப் பிறகு வெளிநாடுகளில் அற்புதம் புரியும் சுழற்பந்து வீச்சாளர்கள்    கிடைக்காமல் போனது.

மேற்கிந்தியத் தீவுகள்

p4g.jpg

பலம் :

red-dot%283%29.jpg 20 ஓவர் போட்டிகளை விளையாடுவதற்கு என்றே பிறந்தவர்களைப்போல விளையாடும் அணி என்பதே அவர்களது கூடுதல் பலம்.

red-dot%283%29.jpg இமாலய சிக்ஸர்களை அடிக்கும், சிக்ஸர் மழை பொழியும் கெயில் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது.

பலவீனம்:

red-dot%283%29.jpg நரேய்ன், பொல்லார்டு, பிராவோ போன்ற சிறந்த வீரர்கள் அணியில் இல்லாமல் இருப்பது.

red-dot%283%29.jpg நிலையான அதிரடி ஆட்டத்தை எந்த வீரர் தருவார் என நம்பவே முடியாது. திடீரென சொதப்பலாக விளையாடி, வேகமாக வெளியேறுவது.

-சுப.தமிழினியன்


வார்னே சொன்னா பலிக்குமா?

p4h.jpg

முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே சொல்லும் கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே நடந்துள்ளன. 2011-ம் ஆண்டு இந்தியாதான் உலகக் கோப்பையை வெல்லும் என்றார். மைக்கேல் கிளார்க் கேப்டனாக இருந்தால், 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று கூறியிருந்தார். 2011-ம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த டெஸ்ட் போட்டி ஒன்று, டையில் முடியும் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது அத்தனையுமே நடந்தது. ‘இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணியாக இந்தியாதான் இருக்கும்’ என்று கூறியிருக்கிறார். இந்த முறையும் ஷேன் வார்னேயின் கணிப்பு பலிக்குமா?

டி20 உலகக் கோப்பையை இதுவரை நடத்திய நாடுகளில், இலங்கையைத் தவிர வேறு எந்த நாடுமே இரண்டாவது சுற்றைத் தாண்டியது இல்லை. இந்த ஃபார்முலாவை இந்திய அணி உடைக்குமா?


இன்னும் சில அணிகள்!

இலங்கை: குஷால் பெரேரா, தில்ஷான் என வலுவான துவக்க வீரர்கள். இறுதி ஓவர்களில்  கட்டுக்கோப்பாக பந்து வீசும் மலிங்கா, சுழற்பந்து வீச்சில் கலக்கும் சேனநாயகா போன்றோர் அணியின் மிகப்பெரிய பலம்.

சங்ககரா, ஜெயவர்த்தனே போன்றோருக்குப் பிறகு, மத்தியில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள் இல்லாமல் இருப்பது. மலிங்காவுக்கு  துணையாக, சிறப்பான வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது பலவீனம்.

பாகிஸ்தான்: அப்ரிடி, மாலிக், ஹபீஸ், ரியாஸ் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது. உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் திடீர் பலம் பெற்று  ஆச்சர்யம் அளிப்பது பலம்.

ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாததால், அவர்களுக்கு இந்திய மைதானங்களின் தன்மை புரியாமல் இருப்பது பெரிய பலவீனம்.

p4i.jpg

இங்கிலாந்து: சமீப காலங்களில், 20 ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி இருக்கிறார்கள். சமீபத்தில், பாகிஸ்தானை வென்று  கூடுதல் உத்வேகத்துடன் இருப்பது பலம்.

வேகப்பந்து வீச்சு பலமாக இருந்தாலும், இந்திய மைதானங்களில் விக்கெட்களை வீழ்த்தும் சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரிய குறை.

பலம் வாய்ந்த இந்த அணிகளைத் தவிர, வங்கதேசம், ஜிம்பாப்பே, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளும் விளையாடுகின்றன. இத்தகைய சின்னச்சின்ன அணிகளும், பல சமயங்களில் திடீர் ஆச்சர்யத்தை  அளிக்கும். கடந்த ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில், வங்கதேச அணி மற்ற சின்ன அணிகளை வென்றதோடு, இங்கிலாந்தையும் வீழ்த்தியது.  அதுபோல ஆச்சர்யங்களும் இந்த டி20 உலகக் கோப்பையில் காத்திருக்கலாம்... பார்ப்போம்!

vikatan

  • தொடங்கியவர்

தலைவராக மெத்தியூஸ் - இலங்கை அணியில் சில மாற்றங்கள்

தலைவராக மெத்தியூஸ் - இலங்கை அணியில் சில மாற்றங்கள்

 

20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் உப தலைவரா தினேஷ் சந்திமால் தெரிவாகியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் ஜெப்ரி வெந்தசே ஆகியோருக்கு பதிலாக சுரங்க லக்மால் மற்றும் லகிரு திருமானே ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

பதினாறு அணிகள் பங்கேற்கும் 6-வது 20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3-ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் 20க்கு இருபது போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக இருந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக நேற்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே மெத்யூஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
  • தொடங்கியவர்

இலங்கை மகளிர் அணி இந்தியா பயணம்

1506367_1781708435193689_537172545839060

10636598_1781708221860377_87536496350060

 

  • தொடங்கியவர்

T20 World Cup போட்டிகளில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணி.11224764_556855151142981_351481028559978

  • தொடங்கியவர்

இன்று நடந்த முதலாவது தகுதிகாண் போட்டியில் சிம்பாவே 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது..

Zimbabwe 158/8 (20/20 ov)
Hong Kong 144/6 (20/20 ov)
Zimbabwe won by 14 runs
 
தற்சமயம் நடைபெற்று கொண்டு இருக்கும் போட்டியில்
 
ஸ்காட்லாந்து எதிராக ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்து ஆடுகிறது... 79/1  10ஓவர்களில்
  • தொடங்கியவர்

டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவண

 
 
kop_2766618f.jpg
 

அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, உற்சாக கொண்டாட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய 6-வது டி 20 உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்குகிறது. கொல்கத்தா, மும்பை, டெல்லி, நாக்பூர், பெங்க ளூரு, தர்மசாலா, மொஹாலி ஆகிய 7 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற் கின்றன. 27 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 35 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

போட்டி அட்டவணை

1_2766622a.jpg

2_2766620a.jpg

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88/article8326688.ece?homepage=true&ref=tnwn

  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்தான்  170/5

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்து  53/0   5 ஓவர்களில்

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்து ஆல் 171 அடிக்க இயலாது ஜீவன்...:)

  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்த்தான் 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது..

  • தொடங்கியவர்

நாளைய போட்டிகள்

12238215_1191240294228398_22864963057140

10329705_1191240284228399_57336256845827

  • தொடங்கியவர்

12823412_1191225814229846_49984205658338

  • தொடங்கியவர்

சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்: தோனி

 
 
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் நேற்று தாயகம் திரும்பினர். கொல்கத்தா விமான நிலையத்தில் கேப்டன் தோனிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது படம்: பிடிஐ
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் நேற்று தாயகம் திரும்பினர். கொல்கத்தா விமான நிலையத்தில் கேப்டன் தோனிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது படம்: பிடிஐ

ஆசியக் கோப்பை டி 20 இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக இந்தியா சாம்பி யன் பட்டம் வென்ற நிலையில் டி 20 உலகக் கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவில் ஒவ் வொருவரும் கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பு கின்றனர். மைதானத்தில் ஆடுவதை விட டிவி-யில் பார்க்க கிரிக்கெட் மிக எளிதாகவே இருக்கும். இந்தியா இறுதியில் வென்றது என்றில்லாமல் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி என்பதே பரபரப்பான தலைப்பாக இருக்கும். வெற்றி பெற்றால் இது என்ன பெரிய விஷயம், வென்றுதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் கருத்து வெளியாகும். தோற்றால் வங்கதேசத்திடம் தோற்கலாமா என்று கேள்விகள் எழும்.

அதாவது வெற்றி பெறுவது இயல்பான ஒன்று அதன் மூலம் முன்னெடுத்துச் செல்ல ஒன்றுமில் லை என்பது போல் இருக்கிறது சில விமர்சனங்களின் தரம்.

சுரேஷ் ரெய்னா அல்லது ரோஹித் சர்மா போன்றவர்கள் முதல் பந்திலிருந்தே பெரிய ஷாட்களை ஆடக்கூடியவர்கள். ஆனால் பின்னால் களமிறங்கும் போது ஆரம்பத்திலேயே பெரிய ஷாட்களை ஆடுவது கடினம்.

முகமது ஷமி அணிக்கு வந்தால் ஆஷிஷ் நெஹ்ரா இடத்தில் மட்டுமே இடம்பெற முடியும். ஆனால் நெஹ்ராவை இப்போதைக்கு நாம் விலக்க முடியாது. பும்ராவை நீக்குவதற்கு வாய்ப்பேயில்லை. ஏனெனில் அவர் புதிய பந்து, பழைய பந்து என்று யார்க்கர்களை நினைத்த போது வீச முடிகிறது. முதலில் ஷமி தனது உடல்தகுதியை பயிற்சிப் போட்டிகளில் நிரூபிக்க வேண்டும்.

டி 20 உலகக்கோப்பைக்கான சரியான பாதையில் நாங்கள் பயணிக்கிறோம். இம்முறை சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் எதிரணியை கட்டுப்படுத்தக் கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாள ருக்கு எதிராக பெரிய அளவிலான ஷாட்கள் அடிப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.

அவருக்கு பந்து வீச சரியான துணையும் கிடைத்துவிட்டால் அவர்கள் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடியும். இந்த விஷ யத்தில் தரம்வாய்ந்த சுழற் பந்து வீச்சாளர்களை கருத்தில் கொள்ள வேண்டும். பந்து வீச்சில் அவர்கள் காட்டும் மாறுதல்கள் டி 20 உலகக் கோப்பையில் முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு தெரிவித்தார் தோனி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article8326673.ece

  • தொடங்கியவர்

இலங்கை  அணி இந்தியா பயணம்

12841317_1781984241832775_69994634992825

12792292_1781984611832738_11789464222616

12829391_1781984818499384_54248097064136

12819313_1781984798499386_90365460574927

12823500_1781984881832711_19560283220492

12841425_1781984925166040_25645070030732

902153_1781984955166037_7945999702347567

12829068_1781985051832694_88452429279759

10339215_1781985058499360_26851678615363

  • கருத்துக்கள உறவுகள்

இருபதுக்கு 20 உலககிண்ணத் தொடரில் இந்தியாவுடான போட்டி மைதானத்தை மாற்றுமாறு பாக்கிஸ்தான் கோாிக்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இருபதுக்கு 20 உலககிண்ணத் தொடரில் இந்தியாவுடான போட்டி  மைதானத்தை மாற்றுமாறு  பாக்கிஸ்தான் கோாிக்கை


பாக்கிஸ்தான் இருபதுக்கு 20 உலககிண்ணத் தொடரில் இந்தியாவுடான போட்டி நடைபெறும் மைதானத்தை மாற்றும்படி சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் போட்டி நடைபெறவிருந்த நிலையிலேயே பாக்கிஸ்தான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.


குறிப்பிட்ட மைதானத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்  குறித்து ஆய்வினை மேற்கொண்ட பாக்கிஸ்தான் குழுவினர் அளித்த அறிக்கையின் பின்னரே பாக்கிஸ்தான் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.


பாக்கிஸ்தான் கொல்கத்தா அல்லது மொகாலிக்கு 19 ம் திகதி நடைபெறவுள்ள இந்தியாவுடனான போட்டியை மாற்றுமாறு கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129834/language/ta-IN/-20-----.aspx

  • தொடங்கியவர்
இலங்கை கிரிக்கெட் அணியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் ஜனாதிபதி!
 
இலங்கை கிரிக்கெட் அணியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் ஜனாதிபதி!
இந்தியாவில் இடம்பெறவிருக்கும் 'இருபதுக்கு 20' உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்றச் செல்லும் இலங்கை அணியின் வீரர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். 
 
இலங்கை கிரிக்கெட் அணியினரை நேற்று மாலை கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார். இச்சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் உடனிருந்தார். 'ஒரே அணி - ஒரே தேசம்' எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை இலங்கைக் கிரிக்கெட் அணியினர் உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்கின்றார்கள். 
 
                        1457495918_cricket1.jpg
 
இதைமுன்னிட்டு 'ஒரே அணி - ஒரே தேசம்' எனும் வாக்கியம் பொறிக்கப்பட்ட இலட்சினையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவால் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது. 'ஒரே அணி - ஒரே தேசம்'  உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமும் இதன்போது ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  
 
                                    1457495936_cricket2.jpg
 
  • தொடங்கியவர்

பாகிஸ்தான் அணியின் இந்திய வருகை நிறுத்தி வைப்பு!

பாகிஸ்தான் அணியின் இந்திய வருகை நிறுத்தி வைப்பு!

இந்தியாவில் நடக்க இருக்கும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி, இந்தியா செல்வதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.

போட்டி நடக்கும் இடத்தில் முழு பாதுகாப்பை உறுதி செய்வதாக இந்திய அரசு உத்திரவாதம் அளித்தால் மட்டுமே பாக். வீரர்களை இந்தியா அனுப்ப முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் மார்ச் 19ம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எல்லையில் அவ்வப்போது ஊடுருவியும், இந்திய இராணுவ முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியும் இந்திய இராணுவ வீரர்களை கொன்று குவித்து வரும் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தர்மசாலாவில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு இமாச்சல முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், கிரிக்கெட் நடக்கும் இடத்தை தர்மசாலாவில் இருந்து கோல்கட்டாவுக்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தர்மசாலாவில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், திடீரென போட்டி நடக்கும் இடத்தை மாற்றுவது குறித்து குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஐசிசி மற்றும் பிசிசிஐ இன்று கூடி ஆலோசிக்க உள்ளன.

இந்நிலையில், இன்று இந்தியா வருவதாக இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயணத்தை அந்நாடு நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், பாதுகாப்பு விஷயத்தில் இந்திய அரசு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி இந்தியா செல்லும். இந்திய அரசு தரப்பில் இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாதது ஆகிய காரணங்களை கருத்தில் கொண்டே பாகிஸ்தான் அணியின் இந்திய பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  • தொடங்கியவர்
துடுப்பாட்டத்தை வலுப்படுத்த 3ஆம் இலக்கத்தில் லஹிரு – அரவிந்த டி சில்வா
2016-03-09 10:22:12

(நெவில் அன்­தனி)

 

சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது இலங்கை அணியின் துடுப்­பாட்­டத்தை வலுப்­ப­டுத்தும் நோக்கில் மூன்றாம் இலக்­கத்தில் லஹிரு திரி­மான்ன துடுப்­பெ­டுத்­தா­டுவார் என தெரி­வுக்­ கு­ழுவின் புதிய தலைவர் அர­விந்த டி சில்வா தெரி­வித்தார்.

 

மற்­றைய கிரிக்கெட் அணி­களை கவ­னிக்­கும்­போது நாங்கள் நீண்ட கால மற்றும் குறு­கிய கால திட்­டங்­களை வகுத்து அணியைக் கட்டி எழுப்­ப­ வேண்டும் என்றார் அவர்.

 

15417a-ce-silva.jpg

 

‘‘மஹேல ஜய­வர்­தன, குமார் சங்­கக்­கார ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை அணியில் பாரிய இடை­வெளி ஏற்­பட்­டுள்­ளது. எனவே, இலங்கை அணியை எழுச்­சி­ பெறச் செய்­வ­தற்கு ஒரு நீண்­ட­ கா­லத்­திட்டம் அவ­சியம். லஹிரு திரி­மான்ன, தினேஷ் சந்­திமால் போன்­ற­வர்கள் இந்தத் திட்­டத்தை பின்­பற்­ற­வேண்டும். 

 

துடுப்­பாட்­டத்தில் அடிக்­கடி மாற்­றங்கள் செய்­வதால் வீரர்கள் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கின்­றனர். இது தவிர்க்­கப்­ப­ட­ வேண்டும். லஹிரு திரி­மான்ன மூன்றாம் இலக்­கத்தில் நிலை­யாக இருக்க வேண்டும்.

 

இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் ஆகிய நாடு­களில் முறையே விராத் கோஹ்லி, சர்வ்ராஸ் அஹமத், சபிர் ரஹ்மான் ஆகியோர் இருக்­கின்­றனர். 

 

ஒரு­வேளை அணி தெரிவு குறித்து பொது­மக்கள் குமு­றலாம். ஆனால் நாங்கள் சில முடி­வு­களை எடுத்­துத்தான் ஆக­வேண்டும்’’ என 1996இல் உலக சம்­பி­ய­னான இலங்கை அணியின் இறுதி ஆட்ட நாயகன் அர­விந்த டி சில்வா தெரி­வித்தார்.

 

துடுப்­பாட்ட வரிசை குறித்து அவ­ரிடம் மெட்ரோ நியூஸ் பிரத்­தி­யே­க­மாகக் கேட்­ட­போது, ‘‘ஆரம்ப வீரர்­க­ளாக தினேஷ் சந்­தி­மாலும் திலக்­க­ரட்ன டில்­ஷானும் களம் இறங்­குவர். 

 

இவர்­களைத் தொடர்ந்து லஹிரு திரி­மான்ன, சாமர கப்­பு­கெ­தர, ஏஞ்­சலோ மெத்யூஸ், மிலிந்த சிறி­வர்­தன, திசர பெரேரா ஆகியோர் ஏழாம் இலக்கம் வரை இடம்­பெ­றுவர்’’ என பதி­ல­ளித்தார்.

 

ஷெஹான் ஜய­சூ­ரிய அணிக்குள் வந்தால் ஒரு சிறு மாற்றம் இடம்­பெற வாய்ப்­புள்­ளது எனவும் அவர் கூறினார்.

 

இதே­வேளை, இலங்­கையில் கிரிக்கெட் வீரர்கள் மத்­தியில் காணப்­படும் ஆற்­றல்கள் வியக்­கத்­தக்­கது என்­ப­தையும் அவர் கூறத் தவ­ற­வில்லை.

 

குமார் சங்­கக்­கார கருத்து
இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் சந்­தர்ப்ப சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப வீரர்கள் தங்­களை மாற்­றிக்­கொண்டு விளை­யாடி வெற்றி பெற முயற்­சிக்­க­ வேண்டும் என குமார் சங்­கக்­கார தெரி­வித்தார்.

 

‘‘ஒவ்­வொரு வீர­ருக்கும் மனோ­பலம் இருப்­பது அவ­சியம். 2014இல் உலகக் கிண்ணப் போட்­டி­க­ளுக்கு செல்­லும்­ வரை நாங்கள் அணியில் இடம்­பெ­று­வோமா என்று நினைக்­க­வில்லை. 

 

அணி­யாக செல்­லும்­போ­து தான் எங்­க­ளது மன­துக்கு நிம்­மதி ஏற்­பட்­டது. இப்­போதும் அப்­ப­டித்தான். அணியில் மாற்றம் குறித்து கவ­லைப்­ப­டக்­கூ­டாது. 

 

தெரி­வா­ளர்கள் அதி சிறந்த அணி­யைத் தான் தெரிவு செய்­வார்கள். என்ன நடக்கும் என்­பதை யாராலும் ஆரூடம் கூற­மு­டி­யாது.

 

நாட்­டையும் அணி­யையும் இத­யத்தில் நிறுத்தி மனோ­தை­ரி­யத்­துடன் விளை­யாடி நாட்­டுக்கு வெற்­றி­யீட்­டிக்­கொ­டுக்­க­வேண்டும்’’ என 2014 உலக இரு­பது கிரிக்கெட் போட்­டியில் இலங்கை சம்­பி­ய­னாவ­தற்கு இறுதிப் போட்­டியில் பெரும்­பங்­காற்­றிய குமார் சங்­கக்­கார தெரி­வித்தார்.

 

இலங்கை குழாம்:
ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), தினேஷ் சந்­திமால் (உதவி அணித் தலைவர்), திலக்கரட்ன டில்ஷான், லஹிரு திரிமான்ன, சாமர கப்புகெதர, மிலிந்த சிறிவர்தன, ஷெஹான் ஜயசூரிய, திசர பெரேரா,  நுவன் குலசேகர, ரங்கன ஹேரத், துஷ்மன்த சமீர, சுரங்க லக்மால், சச்சித்ர சேனாநாயக்க, தசுன் ஷானக்க, லசித் மாலிங்க. 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15417#sthash.x5WORkdi.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.