Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமத்துவமான தீர்வுக்கு இந்தியா துணை: சுஷ்மா வாக்குறுதி : சம்பந்தன் தெரிவிப்பு

Featured Replies

சமத்துவமான தீர்வுக்கு இந்தியா துணை:  சுஷ்மா வாக்குறுதி : சம்பந்தன் தெரிவிப்பு

 

sambanthan-tna.jpg

 

thumb_large_sushma_swaraj__sambanthan.jp

இந்தியா எப்போதும் சரியான விடயத்தின் பக்கமே நிற்கும். இந்த நாட்டில் நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கு சமூகமான சமத்துவமான நிரந்த தீர்வை ஏற்படுத்துவதற்கு தமது முயற்சிகள் தொடரும் என்ற வாக்குறுதியை வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எமக்கு வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவது உடன் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டுமெனக் கோரியுள்ளதாக தெரிவித்தவர் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று நண்பகல் 12மணிக்கு கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. 

http://www.virakesari.lk/article/2828

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரோ,கண்ணா!

ஆரோ குத்துகிறார்கள்!

அரிசி மாவாகின்றது!

புட்டவிக்க மட்டும் சுஷ்மாவும், சம்பந்தரும்...!

இந்தியா என்ன கேட்கப் போகின்றதோ..அதையே வேண்டுகோளாக வைக்கிறாரே சம்பந்தன்//!

ஈழத்து அகதிகளைத் திருப்பி அனுப்பச் சொல்லி..!

இதுதான் அரசியல் சாணக்கியம் என்று கூறப்படுவதோ?

  • தொடங்கியவர்

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு; பேசிய விடயங்கள் இவைதான்

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு; பேசிய விடயங்கள் இவைதான்

February 6, 2016  02:43 pm

Bookmark and Share
 
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உட்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்,

குறித்த சந்திப்பு திருப்திகரமானதாக இருந்தது என்று கூறினார்.

மேலும் தெரிவிக்கும் போது,

"எமது மக்கள் இன்றைக்கு வடக்கு கிழக்கில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து, விஷேடமாக காணி சம்பந்தமான பிரச்சினை, இராணுவத்தின் அதிக பிரசண்ணம், மீள்குடியேற்றம், வீட்டு வசதி போன்ற பிரச்சினைகள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறினோம்" என்றார்.

இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

"எமது மக்கள் தினமும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி பேசினோம். அரசியல் தீர்வு ஒன்றை பெற வேண்டும் என்று மீண்டும் அவரிடம் கூறினோம்.

வடக்கு மீனவர்கள் குறித்தும் பேசினோம். அதை இந்திய அரசினால் மாத்திரமே நிறுத்த முடியும் என்று கூறினோம். இந்தியாவில் உள்ள அகதிகளும் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் விரைவில் இலங்கை வர வேண்டும்.

அவர்கள் விரைவில் இலங்கை வருவதற்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்க வேண்டும்"
என்றார்.

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே வாறவங்களோட எல்லாம திருப்திகரமான சந்திப்புதான் நடக்குது.ஆனால் தமிழ்மக்கள் வாழ்க்கையில் திருப்திகரமுமில்லை.தமிழர்கள் விரும்பும் தீர்வை விட இந்தியாவும்உலகமும் விரும்பிற தீர்வைவிடவும் கீழிறங்க எங்களுக்குள் எந்தப்பிழச்சனையும் இல்லை. அனைத்துலக விசாரணை அது இது என்று தேவையில்லாமல் எங்கள் விடயத்தில் தலையிடாதீர்கள் எங்கள் பிரச்சனையைத் நாங்களே தீர்க்குறோம்என்ற நிலையில் சம்பந்தர் இருக்கும் பொழுது இப்படித்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

வடக்கு மீனவர்கள் குறித்தும் பேசினோம். அதை இந்திய அரசினால் மாத்திரமே நிறுத்த முடியும் என்று கூறினோம். இந்தியாவில் உள்ள அகதிகளும் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் விரைவில் இலங்கை வர வேண்டும்.

எதிர்கட்சி தலைவர் ரேஞ்சில இருக்கும் சம்பந்தன் தன்ர பிள்ளை குட்டி.. பேரப்பிள்ளைகள்.. பூட்டப்பிள்ளைகளை ஒட்டுமொத்தமாக வெளிநாட்டில் இருந்து சொறீலங்காவுக்கு வரவழைக்கிறது. அதை செய்ய மாட்டினம்... தங்கட பிள்ளைகள் செகுசா வாழனும்.. அடுத்தவன் எப்படியும் கஸ்டப்படலாம். இதுதான் எங்கட தமிழ் அப்புக்காத்து அரசியல்வாதிகளின் போலி அரசியல். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, நவீனன் said:

இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவது உடன் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டுமெனக் கோரியுள்ளதாக தெரிவித்தவர் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனக்கு நெஞ்சுடிக்குது.....ஐயா சம்பந்தா ஜேர்மனிக்கு வந்து போட்டுக்குடுத்துடாதை ஐயா   எனக்கு பயமாய்க்கிடக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பாட்டு போட்டாச்சு ..
யாழ் தேவி வந்து போகுது ...

எல்லாம் சமத்துவமாதானே இருக்கு ??

சுஷ்மா என்ன குறும்பு பேசுறா ..?

சுஸ்மாவிட்கு யாராவது ஒருமுறை யாழ் களத்தை சுத்தி காட்டினால்தான் 
அவாவிற்கு உண்மை விளங்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.