Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிற்கான உதவிகளை சர்வதேசம் நிறுத்த வேண்டும்-ஜேர்மன் அமைச்சர் வேண்டுகோள்

Featured Replies

ஜேர்மன் அபிவிருத்தி அமைச்சர் ஜேர்மன் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கி இருக்கும் பேட்டியில் பின் வருமாறு தெருவித்து உள்ளார்.

சிறிலங்கா அரசு சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்காதவிடத்து சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் .ஜேர்மன் அரசங்காம் சிறிலங்காவிற்கென ஒதுக்கிய இருப்பத்தைந்து மில்லியன் டொலர்களை இந்தோனேசியாவின் அச்சே மானிலத்திற்கு வழங்கி உள்ளது.

இந்தச் செய்தியை அனைத்து ஊடகங்களும் அனைத்து மொழிகளைலும் வெளியிட வேண்டும்.இன்னும் இந்தச் செய்தி தமிழ் ஊடகங்கள் எதிலும் வந்ததாகத் தெரியவில்லை.முக்கியமாக தமிழ் நெற்றில் வர வேண்டிய செய்தி.

Sri Lankan aid depends on peace moves

23 December 2006 | 21:54 | FOCUS News Agency

Berlin. In an interview to be published by Berlin's Tagesspiegel newspaper on Sunday, German Development Minister, Heidemarie Wieczorek-Zeul, says that the international community should make further assistance to Sri Lanka dependent on the resumption of the peace process in the country, Deutsche Welle announced. The interview is to be published to mark the second anniversary of the devastating tsunami which killed 230,000 people and hit 12 nations bordering the Indian Ocean. Sri Lanka was one of hardest hit by the catastrophe. Wieczorek-Zeul said that as result of the renewed civil war Germany would redirect 19 million euros which had been intended for Sri Lanka to the Indonesian province of Aceh.

http://www.focus-fen.net/index.php?id=n102064

நீர் குறிப்பிட்டதுபோல் ஆங்கில மூலத்தில் சொல்லப்படவில்லை.

...says that the international community should make further assistance to Sri Lanka dependent on the resumption of the peace process in the country, என்பதன் தமிழாக்கம் நீர் குறிப்பிடுவதுபோல் ''சிறிலங்கா அரசு சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்காதவிடத்து சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் ..'' என்பது முழு அபத்தமான மொழிபெயர்ப்பு.

''சிறீலங்கா சமாதான பேச்சுகளை மீளத்தொடங்கினால், சர்வதேச நாடுகள் இலங்கைக்கு மேலதிக உதவிகளைச் செய்யவேண்டும்'' என்பதே நேரடியான மொழிபெயர்பாகும்.

அது சரி, இந்த செய்தி எல்லா மொழிகளிலும் வந்து விட்டால் இலங்கை இராணுவம் வாகரையில் முன்னேனுவதை நிறுத்திவிடுமா? வெற்றுக் கற்பனையில் வானத்தில் பறக்காது நியமாக பூமியில் கால் பதித்து சாத்தியப்பாடான அவசரம் செய்யப்பட வேண்டிய கருமங்கள் பற்றி சற்று சிந்தித்து இனிமேலாவது கருத்து எழுதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதா.... இன் பணிக்கு வந்த அவசரத்தை பார்த்தீர்களா?

இதுவரை களத்துக்கு வந்த பதிவுகளுக்கு உங்கள் கவலைகள் திரும்பி பார்த்ததாகவே இல்லை. அது என்ன

அரசவாதம் பற்றி ஒரு சிறிய தவறான தகவல் வந்தாலே தங்களுக்கு பொறுக்க முடியாததாக்கும்.

இதைவிட வேறு என்ன ராசா வேணும் உமது பிழைப்பு யாருக்கு விசுவாசம் என்பதைச் சொல்ல.

இலங்கைக்கான சர்வதேச உதவிகள் நீரும் நானும் பேசி முடிவெடுக்கும் காரியம் அல்ல. யாழ் களத்தில் என்னை இலங்கை அரசின் கையாள் என நீர் இரண்டுவரி எழுதியவுடன் உலக நாடுகள் அதை வாசித்து தமது வெளியுறவுக்கொள்கையை தீர்மானிப்பது போல் நீர் மட்டும் அல்ல நாரதர் இன்னும் சிலர் கற்றுக்குட்டி தனமாக கருத்து எழுதி வருகிறீர்கள். முதலில் இந்த கோமாளித்தனதை நிறுத்துகள். அப்போதுதான் பயனுள்ள கருத்துகள் யாழ் களத்துக்கு பலர் வந்து எழுதுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Minister: No Money For Sri Lanka Without New Peace Process

The international community should make further assistance to Sri Lanka dependent on the resumption of the peace process in the country, German Development Minister Heidemarie Wieczorek-Zeul said in an interview to be published Sunday.

Wieczorek-Zeul's interview, which was released a day early and is to be published in Berlin's Tagesspiegel am Sonntag, is to mark the second anniversary of the devastating Tsunami which swept across coastal regions surrounding the Indian Ocean on December 26, 2004.

Sri Lanka was one of hardest hit by the catastrophe, which resulted in more than 230,000 deaths across Asia.

Wieczorek-Zeul said her ministry had already stopped making new promises to the government in Colombo.

"It would be good, if other western governments would act in the same way," she told the newspaper.

She said that as result of the renewed civil war and the flare up in fighting in Tamil populated areas, no new funds could be allocated.

Consequently, 19 million euros (25 million dollars), which had been intended for Sri Lanka, for the building of houses and education projects was to be redirected to the Indonesian province of Aceh.

http://www.playfuls.com/news_10_6165-Minis...ce-Process.html

ஸ்ரீலங்காவுக்கா அனைத்து உதவிகளையும் மேற்கத்தைய நாடுகள் நிறுத்த வேண்டும் - ஜேர்மன் அபிவிருத்தி அமைச்சர்

புதிய சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பமாகாவிட்டால், ஸ்ரீலங்காவுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும் என ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவின் சமாதானப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டே மேலதிக நிதி மற்றும் பொருளாதார உதவிகளை சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் என ஜோமன் அபிவிருத்தி அமைச்சர் ஹெயிற்மேரி விசோரக-ஸியல் (Heidemarie Wieczorek-Zeul) தெரிவித்துள்ளார்.

ஆழிப் பேரலையின் இரண்டாவது நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக பேர்லின் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

ஸ்ரீலங்காவிற்கான அனைத்து உதவிகளையும் தனது அமைச்சு நிறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நடவடிக்கையினை ஏனைய மேற்கத்தைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Edited by கந்தப்பு

பேட்டியின் வார்த்தை பிரயோகங்கள் எப்படி இருந்தாலும், ஜேர்மன் அமைச்சரின் இந்த அறிக்கை ஸ்ரீலங்கா அரசுக்கு பாதகமானது தான். இராஜதந்திர சம்பிரதாயங்களை கருத்தில் கொண்டு ஒரு அரசுக்கு எதிரான ஆரம்ப அறிக்கைகள் ஒரு soft warning உடன் தான் வெளிவிடப்படும்.

ஸ்ரீலங்காவிற்கான 19 மில்லியன் Euro இந்தோனேசியாவிற்கு திருப்பி விடப்பட்டு இருக்கிறது என்று ஜேர்மன் உத்தியோக பூர்வமாக அறிவித்திருப்பது, ஸ்ரீலங்கா அரசிற்கு பல்வேறு மட்டங்களில் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

ஜேர்மனின் பொருளாதார உதவிகள் இடைநிறுத்தத்தை தடுக்க மகிந்தர் தன் நேரடி தூதர்களை அனுப்பி ஜேர்மன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையிலும், ஜேர்மனின் இந்த முடிவு, மகிந்தரின்

இராஜதந்திர சறுக்கல் தான்.

ஜேர்மன் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே Highest GDP கொண்ட பொருளாதார வல்லரசு. ஜேர்மனின் இந்த முடிவு நிச்சயம் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே சில தாக்கங்களை ஏற்படுத்தும். அதை அடுத்து வரும் மாதங்கள் நிரூபிக்கும்

சமாதா.... இன் பணிக்கு வந்த அவசரத்தை பார்த்தீர்களா?

இதுவரை களத்துக்கு வந்த பதிவுகளுக்கு உங்கள் கவலைகள் திரும்பி பார்த்ததாகவே இல்லை. அது என்ன

அரசவாதம் பற்றி ஒரு சிறிய தவறான தகவல் வந்தாலே தங்களுக்கு பொறுக்க முடியாததாக்கும்.

இதைவிட வேறு என்ன ராசா வேணும் உமது பிழைப்பு யாருக்கு விசுவாசம் என்பதைச் சொல்ல.

சமாதானத்தின் விளக்கத்தை வரவேற்கின்றேன்.

தலைப்பிற்குச் சிறிதும் சம்பந்தமில்லாத தேவனின் விதன்டாவாதத்தை கண்டிக்கின்றேன்.

கருத்து தெரிவிப்பவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதன் மூலம் வேறு இணையத்தளங்களில் பதியப்படும் செய்திகளை வெறுமனே அனைவராலும் மீண்டும் மீண்டும் பிரதிபண்ணப்படும் தேவையற்ற வேலை ஒன்றே இங்கு செய்யப்படுகின்றது.

செய்திகளை நாங்கள் அங்கு விரைவாகவும் நேரடியாகவும் அறிந்து கொள்ள முடியும்!

செய்திகள் எப்போதும் நடுநிலமையாகவும் உண்மையானதாகவும் இருப்பதையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அது அவ்வாறே இருக்கும் பட்சத்தில் அந்த செய்தியை பற்றி கருத்துரைக்க வேண்டிய அவசியமில்லை.

அது அவ்வாறில்லாத பட்சத்தில் அதனை பற்றி முரணான கருத்துகள் தெரிவிப்பதற்க்கு இடமளிக்கப்பட வேண்டும்.

அப்படி முரணான கருத்துகள் கருத்துக்களால் தோற்கடிக்கப்படவேண்டுமே ஒழிய, இவ்வாறான செயற்பாடுகள் மூலமோ அல்லது கருத்துக்களை வெட்டுவதன் முலமோ அல்லது செய்திகளை இடமாற்றுவதன் மூலமாகவோ அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

  • தொடங்கியவர்

நீர் குறிப்பிட்டதுபோல் ஆங்கில மூலத்தில் சொல்லப்படவில்லை.

...says that the international community should make further assistance to Sri Lanka dependent on the resumption of the peace process in the country, என்பதன் தமிழாக்கம் நீர் குறிப்பிடுவதுபோல் ''சிறிலங்கா அரசு சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்காதவிடத்து சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் ..'' என்பது முழு அபத்தமான மொழிபெயர்ப்பு.

''சிறீலங்கா சமாதான பேச்சுகளை மீளத்தொடங்கினால், சர்வதேச நாடுகள் இலங்கைக்கு மேலதிக உதவிகளைச் செய்யவேண்டும்'' என்பதே நேரடியான மொழிபெயர்பாகும்.

அது சரி, இந்த செய்தி எல்லா மொழிகளிலும் வந்து விட்டால் இலங்கை இராணுவம் வாகரையில் முன்னேனுவதை நிறுத்திவிடுமா? வெற்றுக் கற்பனையில் வானத்தில் பறக்காது நியமாக பூமியில் கால் பதித்து சாத்தியப்பாடான அவசரம் செய்யப்பட வேண்டிய கருமங்கள் பற்றி சற்று சிந்தித்து இனிமேலாவது கருத்து எழுதும்.

எனது மொழி பெயர்ப்புச் சரியானதே, மேலதிக என்றால் additional என்று வர வேண்டும் அதாவது ஏற்கனவே வழங்கப்பட இருப்பதற்கு மேலதிகமாக,further என்பது மேற்கொண்டு என்று வரும்.இதன் அர்த்தம் அரசு சமாதன முயற்சிகளை மீள ஆரம்பிக்காவிட்டால் மேற் கொண்டு உதவிகளை வழங்காது நிறுத்த வேன்டும் என்பதே, மேலதிக உதவிகள் நிறுத்தம் அல்ல.

உமது அரசைப் பாதுகாக்கும் உமது நோக்கம் விளங்குகிறது. :):D

  • கருத்துக்கள உறவுகள்

...says that the international community should make further assistance to Sri Lanka dependent on the resumption of the peace process in the country

''சிறிலங்கா அரசு சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்காதவிடத்து சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் ..''

''சிறீலங்கா சமாதான பேச்சுகளை மீளத்தொடங்கினால், சர்வதேச நாடுகள் இலங்கைக்கு மேலதிக உதவிகளைச் செய்யவேண்டும்''

இரண்டுமே சரியான மொழிபெயர்ப்ப்பு அல்ல..

நிறுத்தப்படும் என்றும் சொல்லப்படவில்லை; சமாதான பேச்சுக்கள் ஆரம்பித்தால் உதவிகள் கிடைக்கும் என்றும் சொல்லப்படவில்லை (அப்படியென்றால் சிங்கள் அரசு உடனடியாகவே ஜெனீவாவில் இன்னொரு பேச்சுவார்த்தைக்கான திகதி வேண்டும் என்று கேட்கும்)

"சர்வதேச நாடுகள் இலங்கைக்கு மேலதிக உதவிகளைச் செய்யவேண்டும்; எனினும் அது சமாதான முன்னெடுப்புகள் மீளவும் ஆரம்பிப்பதில் தங்கியுள்ளது"

மொழி விற்பன்னர்கள் இதனையும் விடச் சிறப்பாக மொழி பெயர்க்கமுடியும்..

சர்வதேச உதவிகள் சமாதான முயற்சிகளின் முன்னேற்றத்தில்தான் தங்கியுள்ளது (ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் தமது உதவிகளை நிபந்தனையின்றித் தொடர்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்).. எனினும் சிங்கள அரசோ, விடுதலைப் புலிகளோ சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இருந்து வெகுதூரம் வெளியே வந்துவிட்டார்கள் என்பது புரியாமல் கருத்தாடிப் பிரயோசனம் இல்லை..

  • தொடங்கியவர்

இலங்கைக்கான சர்வதேச உதவிகள் நீரும் நானும் பேசி முடிவெடுக்கும் காரியம் அல்ல. யாழ் களத்தில் என்னை இலங்கை அரசின் கையாள் என நீர் இரண்டுவரி எழுதியவுடன் உலக நாடுகள் அதை வாசித்து தமது வெளியுறவுக்கொள்கையை தீர்மானிப்பது போல் நீர் மட்டும் அல்ல நாரதர் இன்னும் சிலர் கற்றுக்குட்டி தனமாக கருத்து எழுதி வருகிறீர்கள். முதலில் இந்த கோமாளித்தனதை நிறுத்துகள். அப்போதுதான் பயனுள்ள கருத்துகள் யாழ் களத்துக்கு பலர் வந்து எழுதுவார்கள்.

தேசியத் தலைவரின் மாவீரர் உரையயே திரிக்கும் நீர் தான் வெகு லாவகமாக இங்கே விசமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகிறீர். நீர் எழுதிய எவையுமே நடந்ததும் இல்லை உமது நோக்கம் என்ன என்பதுவும் இங்கு எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமானது.எங்கெல்லாம் போராட்டத்தின் மீது சந்தேகங்களை எழுப்ப முடியுமோ அங்கெல்லாம் வந்து சரணகதி ஆகுங்கோ என்று எழுதுவது தான் உமது கருத்தாடலாக இங்கு இருக்கிறது.போராட்ட அரசியலை அறிந்தவர்கள் உம்மை இலகுவில் இனங்காணுவார்கள்.கோமாளித்தனம

  • தொடங்கியவர்
தேசியத் தலைவரின் மாவீரர் உரையயே திரிக்கும் நீர் தான் வெகு லாவகமாக இங்கே விசமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகிறீர். நீர் எழுதிய எவையுமே நடந்ததும் இல்லை உமது நோக்கம் என்ன என்பதுவும் இங்கு எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமானது.எங்கெல்லாம் போராட்டத்தின் மீது சந்தேகங்களை எழுப்ப முடியுமோ அங்கெல்லாம் வந்து சரணகதி ஆகுங்கோ என்று எழுதுவது தான் உமது கருத்தாடலாக இங்கு இருக்கிறது.போராட்ட அரசியலை அறிந்தவர்கள் உம்மை இலகுவில் இனங்காணுவார்கள்.கோமாளித்தனம
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானத்தின் விளக்கத்தை வரவேற்கின்றேன்.

தலைப்பிற்குச் சிறிதும் சம்பந்தமில்லாத தேவனின் விதன்டாவாதத்தை கண்டிக்கின்றேன்.

கருத்து தெரிவிப்பவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதன் மூலம் வேறு இணையத்தளங்களில் பதியப்படும் செய்திகளை வெறுமனே அனைவராலும் மீண்டும் மீண்டும் பிரதிபண்ணப்படும் தேவையற்ற வேலை ஒன்றே இங்கு செய்யப்படுகின்றது.

செய்திகளை நாங்கள் அங்கு விரைவாகவும் நேரடியாகவும் அறிந்து கொள்ள முடியும்!

செய்திகள் எப்போதும் நடுநிலமையாகவும் உண்மையானதாகவும் இருப்பதையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அது அவ்வாறே இருக்கும் பட்சத்தில் அந்த செய்தியை பற்றி கருத்துரைக்க வேண்டிய அவசியமில்லை.

அது அவ்வாறில்லாத பட்சத்தில் அதனை பற்றி முரணான கருத்துகள் தெரிவிப்பதற்க்கு இடமளிக்கப்பட வேண்டும்.

அப்படி முரணான கருத்துகள் கருத்துக்களால் தோற்கடிக்கப்படவேண்டுமே ஒழிய, இவ்வாறான செயற்பாடுகள் மூலமோ அல்லது கருத்துக்களை வெட்டுவதன் முலமோ அல்லது செய்திகளை இடமாற்றுவதன் மூலமாகவோ அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

அட சாணக்கியம்; உங்கட அபிப்பிராயத்தைக் கேட்பதற்கு யாழ்களம் ஒன்றும் உங்கள் வாசல்-படியில் வந்து பழிகிடக்கவில்லை.

யார் பதிவு, யாருக்கு குப்பை கொட்டிக் கொண்டிருக்கின்றது. என்று அறியமுடியாமைக்கு நாம் ஒன்றும் பாலர் பராயத்தவரும் அல்ல.

உமது பதிவுகளின் ஆரம்பத்திலேயே அதன் தவறான நடத்தைபற்றிய எனது கருத்துக்களை அப்போதே தந்திருந்தேன். பதிலை தனிமடலிலேயே நீர் அனுப்பி இருந்தீர்.

குருவிகளை அறிய; 20,000 க்கும் அதிகமான பதிவுகள் தேவையாய் இருந்தது களத்துக்கு அதன் குணம் அறிய,

ஆனால் அதன் ஒரு சில கருத்துக்களிலேயே களவாசகர்கள் புரிந்திருப்பர் அதன் அடிமனதின் வஞ்சங்கள் என்ன என்று அறிவதற்கு.

என்னடா ராசா சமாதானத்தின் துன்பங்கள் உமதென்று பாவித்து வக்காலத்துக்கு வருகிறதோ உமது மனிதாபிமானம்.

சமாதனத்தின் பதிவுகளின் வஞ்சகத்தனம் யாவராலும் புரிந்து கொள்ள இலகுவாக இருந்தும்,

சாணக்கியத்துக்கோ, நெடுக்குக்கோ புரியமுடியாமையின் இரகசியம் என்னவாம்?

அந்தக்கருத்துவாதம் தான், உங்கள் மனங்களுக்கு பிடித்தமானவையோ?

தன்மானத்தின் வாழ்வு செருப்பாகிப் போனாலும், உயிரை வயிற்றுக்குள்ளே வைத்து காக்கின்ற அந்த இரகசியம் தானோ?

  • தொடங்கியவர்

There are also alarming threats to the economy in that the record of human rights are leading to the suspension of aid and an imminent possibility that the trend begun by some countries may be adopted by others. The mismanagement of the economy, as evident in the bludgeoning fiscal deficit and the inflationary trends, are resulting in the withholding of concessionary aid by multilateral agencies with a consequent resort to higher-cost commercial borrowing. The foreign debt is rising as a result.

The domestic debt too is increasing with the increasing government expenditure. This is in an international economic environment where oil prices are likely to commence a further upward movement after the short respite of the last couple of months.

Further depreciation of the currency is inevitable. This would feed the inflationary trends further and heap burdens on the population that is hard pressed to meet their basic needs of food.

Economic considerations alone demand a quick end to the war and a control of the escalating war expenditure.

http://www.sundaytimes.lk/061224/Columns/eco.html

Edited by narathar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கான சர்வதேச உதவிகள் நீரும் நானும் பேசி முடிவெடுக்கும் காரியம் அல்ல. யாழ் களத்தில் என்னை இலங்கை அரசின் கையாள் என நீர் இரண்டுவரி எழுதியவுடன் உலக நாடுகள் அதை வாசித்து தமது வெளியுறவுக்கொள்கையை தீர்மானிப்பது போல் நீர் மட்டும் அல்ல நாரதர் இன்னும் சிலர் கற்றுக்குட்டி தனமாக கருத்து எழுதி வருகிறீர்கள். முதலில் இந்த கோமாளித்தனதை நிறுத்துகள். அப்போதுதான் பயனுள்ள கருத்துகள் யாழ் களத்துக்கு பலர் வந்து எழுதுவார்கள்.

ஆமாம் உண்மைதான்!!

பயன் உள்ள பதிவுகளை யாள்களம் பெறுபதற்கு; அரசவாததின் கூலிக்கு எழுதும் பதிவுதாரரிடம்தான் செல்ல வேண்டுமாக்கும்.

முன்பு ஒருகாலத்தில் அரச கூலிகள்; அரசபடையின் ஆள்பலம், ஆயுதபலம், வானாதிக்கப்பலம், கடலாதிக்கப்பலம் என்றெல்லாம் மிகைப்பட்ட வார்த்தைச் சோடினகளால், போராட்டத்தில் குதித்த மக்களின் மனங்களை அதைரியபடுத்த முனைந்தது ஒருகாலம்.

புலிகள் கொடுத்த பதிலடிகளும், அரசவாதம் வாங்கிக் கட்டிய பெரும், பெரும் தோல்வி வரலாறுகளாலும்,

அந்த பொய்க் கூச்சல்களை எல்லாம். எமதுபலத்தின் வெற்றிகள் சாமானிய அறிவின் நம்பிக்கைக்கே அவை அருகதை அற்றவை ஆக்கின.

எனவேதான்; வெளிஉலகம் என்ற புதிய பூச்சாண்டியை, அரச உழவியல்போர் கையில் எடுத்தது.

என்னையா?

இந்த புதிய சூழல் அரசுக்கு தோள் கொடுக்கும் தோள்களுக்கு புலிவாதத்தின் அரசியல் எந்தவிதமாகத்தான் இருந்தாலும், மாற்ற முடியாம கொண்ட தோளமை பேணும் நாடுகள் எவை, எவை என்று உமக்குத்தெரியாதோ?

பாலஸ்தீனம் அனைத்தையும் துறந்து அம்மணமாகவே வந்தாலும் யூதர்களையே ஆரத்தளுவுகின்ற அமரிக்கை தேசியக் கொள்கையின் பண்பையா எம்மால் மாற்ற முடியும்.

அல்ல இதுவரைப் போரில், அமரிக்கா; என்ன குறைதான் வைத்தது அரசவாதத்துக்கு, இனிமேல் புதிதான பலம் ஒன்றை ஊசிஏற்றுவதற்கு?

  • தொடங்கியவர்

சிறிலங்கா அரசின் செயற்பாட்டால் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

http://www.eelampage.com/?cn=30232

சிற்றி வங்கியிடம் இருந்து சிறிலங்கா அரசாங்கம் மேலும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக எதிர்வரும் 2007 ஆம் ஆண்டின் முதல் கால் ஆண்டு பகுதிக்கு கோரியிருப்பதால் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் ஆண்டு ஏப்பிரல் மாதமளவில் ரூபாயின் பெறுமதி டொலர் ஒன்றிற்கு 115 தொடக்கம் 120 ரூபாய்களாக உயர்வடையும் என கணிக்கப்படுகின்றது. இது சிறிலங்காவின் ஏற்றுமதி வர்த்தகம் முற்றாக வீழ்ச்சியடைந்து போனதையே காட்டுவதாக வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடன்களின் உதவியில் வர்த்தகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை நிரப்பவும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும், சிறிலங்காப் படையினருக்கான கொள்வனவை அதிகரிப்பதற்கும் அரசு முயல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருட பிற்பகுதியில் அரசு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற முயற்சி செய்ததாகவும் எனினும் அது கைகூடாததால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரியிருந்ததாகவும் தெரியவருகிறது.

இது தொடர்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டிற்கு 300 முதலீட்டாளர்ளை சிற்றி வங்கி அழைந்திருந்தது. இந்த மாநாட்டிற்கு சிறிலங்காவின் மத்திய வங்கியின் பணிப்பாளர் அஜித் நவாட் காவலும் சென்றிருந்தார். ஆனால் அங்கு 8 முதலீட்டாளர்களே பிரசன்னமாகியிருந்ததாகவும் அதிலும் இருவர் கோத்தபாய ராஜபக்ச மீதான குண்டுத்தாக்குதலின் பின் காணாமல் போய் விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறுதியில் 72.5 மில்லியன் அமெரிக்க டொலர்களே கடனாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு வருட இறுதிப்பகுதியில் சிறிலங்காவில் வாழ்க்கைச் செலவு 20 சத விகிதத்தால் அதிகரித்து உள்ளதாகவும். இந்தியா, சீனா, கொங்கோங், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வினால் வாடிக்கையாளர்களின் நுகர்வுச் சுட்டென் 5 விகிதத்தால் அதிகரித்து இருந்ததாகவும். அதனுடன் ஒப்பிடும் போது சிறிலங்காவில் ஏற்பட்ட அதிகரிப்பு மிக அதிகம் எனவும் கூறப்படுகின்றது.

  • தொடங்கியவர்

இலங்கைக்கு உதவி செய்ய வேண்டாம்: மேற்குலகிடம் ஜேர்மன் கோரிக்கை

[ஞாயிற்றுக்கிழமை, 24 டிசெம்பர் 2006, 14:15 ஈழம்] [ந.ரகுராம்]

சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் வரை இலங்கைக்கான உதவிகள் அனைத்தையும் இடைநிறுத்துமாறு ஜேர்மனியின் அபிவிருத்தி அமைச்சர் கெடிமாரி வியொக்சொரெக் சியோல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டி:

ஆழிப்பேரலை பேரழிவு தொடர்பாக ஆசியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பலியாகினர். அதில் இலங்கையும் பாரிய பாதிப்பை அடைந்தது.

சிறிலங்கா அரசுக்கு புதிய வாக்குறுதிகளை வழங்குவதை ஜேர்மன் அரசு நிறுத்தியுள்ளது. இதனையே ஏனைய மேற்குலக அரசுகள் கடைப்பிடித்தால் நல்லது. மீண்டும் ஆரம்பித்துள்ள உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் பிரதேசங்களில் சண்டை இடம்பெறுகின்றது. இதனால் புதிய நிதி ஒதுக்கீடு எவையும் செய்யப்படவில்லை.

வீடமைப்பு மற்றும் கல்வி திட்டங்களுக்காக சிறிலங்காவுக்கு வழங்க திட்டமிட்டிருந்த 19 மில்லியன் யூரோவை இந்தேனோசியாவின் ஆச்சே மாகாணத்திற்கு வழங்கியுள்ளோம் என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=30227

Germany freezes aid pledges to Sri Lanka to push peace talks 1 hour, 8 minutes ago

BERLIN (AFP) - Germany said it will not offer the Sri Lankan government new aid until the peace process in the country advances and called on other nations to increase the pressure on Colombo.

ADVERTISEMENT

Overseas Development Minister Heidemarie Wieczorek-Zeul told Berlin's daily Tagesspiegel that Germany had been frustrated that its aid to Sri Lanka was not being used effectively due to ongoing ethnic violence.

But she said that Berlin had no plans to cut off financial transfers entirely when asked if aid should be dependent on a lasting peace deal between the Sri Lankan government and the Tamil Tiger rebels.

"We will not do that (cut off aid) because the tsunami victims would suffer," she said, referring to the Asian disaster two years ago that killed an estimated 31,000 people in Sri Lanka alone while another million were left homeless.

"However we have stopped making new pledges to the government until the peace process gets back into gear. It would be good if other Western governments did the same."

Wieczorek-Zeul said that because much of the aid to Sri Lanka was not reaching the people for whom it was intended, her ministry had redirected 19 million euros (25 million dollars) originally earmarked for Sri Lanka to Indonesia, the country hardest hit by the tsunami.

She said the funds, which will go towards construction of housing as well as education and training, will bring German aid for Indonesia through 2009 to 186 million euros.

Wieczorek-Zeul said that despite the civil war, Germany was continuing its aid projects in areas of Sri Lanka relief workers could still safely reach.

Reconstruction in Sri Lanka's northeast -- the part of the island worst affected by the tsunami -- has suffered with the escalation of fighting between government troops and the Tamil Tigers since early this year.

Some parts of the region are controlled by the rebels and efforts by peacebrokers to get Colombo and the Tigers to work together last year ended in failure, leading to more bloodshed

http://news.yahoo.com/s/afp/20061224/wl_st...ia_061224113046

Germany freezes aid pledges to Sri Lanka to push peace talks 1 hour, 8 minutes ago

BERLIN (AFP) - Germany said it will not offer the Sri Lankan government new aid until the peace process in the country advances and called on other nations to increase the pressure on Colombo.

ஆக, AFP க்கும் மொழி பெயர்ப்பு பிரச்சனை வந்திட்டு போல. அபத்தமாக மொழி பெயர்திருக்கு. :P :)

Edited by mooki

வாகரை ‘கிழக்கின் வன்னியாக’ உருவெடுக்கும்

வாகரை, கிழக்கின் திருகோணமலைத் துறைமுகத்தின் தொலைதூரக் கடற்பிராந்தியத்தினைக் கொண்ட ஒரு முக்கிய பிரதேசம். மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லையினை நிர்ணயிக்கும் கடற்கரை பிரதேசம் மட்டுமல்லாமல் பயன்தரும் விளைநிலங்கள் மற்றும் இயற்கையுடன் கூடிய பசுமையான காட்டுப் பிரதேசத்தை உள்ளடக்கியது தான் இந்த வாகரைப் பிரதேசம்.

கடந்த இரண்டு தசாப்பத காலத்திற்கும் மேலாக, ஸ்ரீலங்கா இராணுவ அடக்கமுறைகளுக்குஇந்தப் பிரதேச மக்கள் முகம் கொடுத்து வந்துள்ளனர்........

இந்த வகையில், வாகரையை இருபத்து ஓராம் நூற்றாண்டின் புதிய சிங்கள கிராமமாக மாற்ற எத்தனிக்கின்றது. அத்துடன், வாகரையை அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்படி, ஸ்ரீலங்கா அரசிற்கு இராணுவ மற்றும் நிதியுதவிகள் அளித்துவரும் சர்வதேச நாடுகள், ஆலொசனைகளையும் வழங்கியுள்ளனர்.

வாகரையும் சர்வதேச நாடுகளும்

வாகரை ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதை சர்வதேச மற்றும் பிராந்திய வல்லரசுகள் மிக ஆவல் கொண்டுள்ளனர்.

திருகோணமலைத் துறைமுகத்திற்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாகக் காரணம்காட்டி விடுதலைப்புலிகளை மூதூரில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு இந்தியா மற்றும் அமெரிக்க பாரிய உதவிகளையும் ஒத்தாசைகளையும் ஸ்ரீலங்காவுக்கு வழங்கியிருந்தனர்.

காரணம், இந்தியப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முதலீடுகளை பாதுகாப்பதற்கு இந்திய அரசும், தமிழர் பிரதேசத்தின் வளங்களை சுரண்டி இலகுவான கடற்பாதையூடாக அவற்றை கொண்டு செல்வதற்கு ஏற்றவகையில் ஒரு கடற்பாதையை அமைப்பதற்கு அமெரிக்காவும் முனைப்புக்கொண்டுள்ளனர்.

இதில் இன்னுமொன்றையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும், வாகரை – சிறந்த இறால் உற்பத்திக்கான உட்கட்டமைப்பு வசதிகளகை; கொண்ட பிரதேசம் மட்டுமல்லாமல,; மென்மையானதும் சிறந்த நண்டுகளை கொண்ட நீரேரிகளை உள்ளடக்கிய பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.......

புலம்பெயர்ந்தோர் ஏக்கம்

இன்று புலம்பெயர்ந்தோர் மக்கள் மத்தியில் விடை தெரியாத கேள்விகள் எழுந்துள்ளது.

விடுதலைப் புலிகள் ஏன் இன்னும் மௌனம் காத்துவருகின்றனர் ?

விடுதலைப் புலிகளின் படைபல ஆற்றல் அழிக்கப்பட்டு விட்டதா ?

இவற்றை விளங்குவது அல்லது விடைகாண முயலவேண்டுமாயின், புலம்பெயர் மக்கள் தமது அரசியல் மற்றும் விடுதலைப்புலிகள் குறித்து மிக ஆழமாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர், எண்பது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் மேற்கத்தைய நாடுகளுக்கு வந்தவர்கள். இவர்களின் சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் இந்தத்தக் காலகட்டத்திலேயே தற்போதும் உள்ளனர்.

ஆனால,; விடுதலைப் புலிகளோ, எமது விடுதலைப் போராட்டத்தை வெற்றிகொண்டு அடுத்துவரும் பத்தாண்டுகளுக்குள், உருவாகப்போகும் நாடு, எவ்வாறான கட்டமைப்பை உருக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் நிற்பதை நாம் கவனத்தில் எடுத்தல் நல்லது.

எனவே, எமக்கான தேசத்தின் போராட்டத்தினை எமது தலைமை நுட்பமாக செயற்படுத்தும் அதேவேளை, புலம்பெயர் மக்கள் அந்த மகோன்னத சந்தர்ப்பத்திற்கான அரசியல் மற்றும் தார்மீகக் கடமைகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்.

http://www.battieezhanatham.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சமாதானம்!!!

என்கேள்விக்கு எங்கே பதில்.

அரசவாதத்தின் இடுக்கண்ணுக்கு மட்டுமே, உடுக்கை இழந்தவனின் கையைப்போல பறந்தோடி வருகிறதே உமது பணி. அது எதற்காகவோ? மாறுபேர்களில் வந்து வக்காளத்து வேண்டாம்.

அட இதுவரை புலிகளிடம் இருந்த பிரதேசங்கள் இராணுவத்தின் கரங்களுக்கு வர அமரிக்காவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததனால் தானோ இராணுவம் அதை விட்டு வைத்தது.

அட என்ன அறிவுபூர்வமான சிந்தனைகள் நீங்கள் இருக்கவேண்டிய இடமே வேற.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறந்துட்டன் இன்னுமொரு காரணம் அமரிக்காவுக்கு இலங்கையில் நாட்டத்துக்கு.

புஸ் அங்கிளுக்கு வாகரை நண்டு என்றால் உயிராம் கண்டியளோ சமாதானம்.

இலங்கைக்கான உதவியை ஜேர்மனி நிறுத்தியுள்ளது

bbc241206nv5.png

இலங்கை அரசாங்கத்துக்கான உதவிகளை நிறுத்தியுள்ள ஜேர்மனி அரசாங்கம் சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஏனைய மேற்கு நாடுகளைக் கேட்டுள்ளது.

தொடரும் வன்செயல்கள் காரணமாக இலங்கைக்கான பெரும்பாலான ஜேர்மனிய உதவிகள் குறிப்பாக விடுதலைப்புலிகளின் பகுதிகளுக்கான உதவிகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதில்லை என்று ஜேர்மனியின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் கூறியுள்ளார்.

இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக முன்னர் அறிவிக்கப்பட்ட 25 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகள் தற்போது இந்தோனேசியாவின் அச்சே பிராந்தியத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நன்றி பிபிசி தமிழ்ச்சேவை

படுகொலைகள்,ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம்

[sunday December 24 2006 09:43:58 PM GMT], [virakesari.lk]

Tamilwin.com படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பாக இலங்கையில் இருந்து வெளிவரும் அறிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த அவதானத்தைச் செலுத்தியுள்ளது. என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆணையாளர் பெனிற்றா பெஃரேரோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிறஸில்ஸ் நகரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மனித உரிமைகள் பாரியளவில் மீறப்படுவது, இலங்கையில் நிலவி வரும் பிரச்சினையின் பிரதிபலிப்பாகவும், முரண்பாடுகளினால் ஏற்பட்டுள்ள தாக்கமுமாக இருக்கின்றது.

ஆயினும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மதிக்கப்பட்டு காப்பாற்றப்படும் நிலையை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கை பிரச்சினைக்கு சமாதான தீர்வொன்றைக் காண்பதற்கான முக்கிய விடயமாகும்.

இணைத்தøலமை நாடுகளின் முக்கிய பிரதிநிதி என்ற வகையில் இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய தொடர்ந்தும் எமது ஆதரவை நாம் வழங்குவோம். அத்தோடு இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எமது அவதானத்தை தொடர்ந்தும் செலுத்தி வருவோம்.

இதேவேளை இலங்கையில் இடம் பெற்று வரும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஜனாதிபதி நியமித்துள்ள விசாரணை ஆணைக்குழுவிற்கு சுதந்திரமான சர்வதேச நிபுணர்களை நியமிக்க இலங்கை அரசு மேற்கொண்ட கோரிக்கைக்கமைய பிரான்ஸின் முன்னாள் அமைச்சரான பேர்னாட் கௌச்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

புலிகளுக்கு உதவிகள் புரிவதாக குற்றஞ்சாட்டப்பட்டு, இலங்கை அரசாங்கத்தினரால் அண்மையில் பணி நிறுத்தம் செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டின் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனமான மெடிசின் சன் ஃபுரென்டியர்ஸ் என்னும் அமைப்பின் ஸ்தாபகர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கொசோவாவில் யுத்த நிலைமைகளை தணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னர் அனுப்பப்பட்ட விசேட ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்கியதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

வாகரை ‘கிழக்கின் வன்னியாக’ உருவெடுக்கும்

...

விடுதலைப் புலிகள் ஏன் இன்னும் மௌனம் காத்துவருகின்றனர் ?

விடுதலைப் புலிகளின் படைபல ஆற்றல் அழிக்கப்பட்டு விட்டதா ?

...

... ஆனால,; விடுதலைப் புலிகளோ, எமது விடுதலைப் போராட்டத்தை வெற்றிகொண்டு அடுத்துவரும் பத்தாண்டுகளுக்குள், உருவாகப்போகும் நாடு, எவ்வாறான கட்டமைப்பை உருக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் நிற்பதை நாம் கவனத்தில் எடுத்தல் நல்லது.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தெரியாமல்தான் சிங்கள இராணுவம் தான் குழப்பத்தில் உள்ளது. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், விடுதலைப் புலிகளின் வரலாறு தெரிந்தவர்கள் விடுதலைப் புலிகளின் மௌனம் பற்றி சந்தேகப்பட மாட்டார்கள்.

அதென்ன பத்தாண்டுக் கணக்கு ?

பத்தாண்டுகள் கூடிப்போச்சோ குறைஞ்சு போச்சோ?

ஏன் 54 அகவைக்கு முதல் ஈழத்தை பிடிச்சு தரவேணும் என்று வான்அலைகளில் வாழ்த்தினனீங்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.