Jump to content

நண்டு தக்காளி சூப் : செய்முறைகளுடன்...!


Recommended Posts

பதியப்பட்டது
 நண்டு தக்காளி சூப் : செய்முறைகளுடன்...!

 

 

nandurasam.jpg

தேவையான பொருட்கள் : 

  • பெரிய நண்டு - 2
  • தக்காளி விழுது - அரை கப்
  • வெங்காயம் - ஒன்று
  • இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • முட்டை - 2
  • சிக்கன் ஸ்டாக் - ஒரு கட்டி

    செய்முறை :
     
  • முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
     
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
     
  • வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும்.
     
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
     
  • வெந்நீரில் சிக்கன் ஸ்டாக் கட்டியை கரைத்துக் கொள்ளவும்.
     
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்.
     
  • பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தக்காளி விழுது, நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது, உதிர்த்த நண்டு கறி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
     
  • 5 நிமிடம் வெந்த பிறகு கரைத்த சிக்கன் ஸ்டாக், மிளகுத் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அதில் அடித்த முட்டையை மெதுவாக வடிகட்டி சேர்த்துக் கலக்கவும்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதிர்த்த சதையைப் போடுற சூப்பில  எப்படி முழு  நண்டு ஓடும், முன்னங்கால்களும் சட்டிக்குள் வந்தது....! ஒரே கொன்பியூஸாக் கிடக்கு...!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

உதிர்த்த சதையைப் போடுற சூப்பில  எப்படி முழு  நண்டு ஓடும், முன்னங்கால்களும் சட்டிக்குள் வந்தது....! ஒரே கொன்பியூஸாக் கிடக்கு...!!

நண்டுக்கோது சும்மா வடிவுக்கு வைச்சிருக்கெண்டு நினைக்கிறன்  lachende-smilies-0338.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

உதிர்த்த சதையைப் போடுற சூப்பில  எப்படி முழு  நண்டு ஓடும், முன்னங்கால்களும் சட்டிக்குள் வந்தது....! ஒரே கொன்பியூஸாக் கிடக்கு...!!

சுவியர்... பெரு நண்டுக் கறி !

டார்வின்..அல்லது குயின்ஸ்லாந்து பக்கமிருந்து வரும்!

வாங்கோ.. கறி வைச்சுத் தரலாம்! 

Easy-Crab-Curry.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, புங்கையூரன் said:

சுவியர்... பெரு நண்டுக் கறி !

டார்வின்..அல்லது குயின்ஸ்லாந்து பக்கமிருந்து வரும்!

வாங்கோ.. கறி வைச்சுத் தரலாம்! 

Easy-Crab-Curry.jpg

குயீன்ஸ்லாந்து யுனில படிக்கவும் இடம் கிடைச்சது. அப்ப அங்க வந்திருந்தா.. இப்ப நண்டா சாப்பிட்டிருக்கலாம். இங்க வந்து.. நாக்கில ருசியே வராத கோட் மீனும்.. சிப் சும்.. வினிகரும் தான் மிச்சம். tw_blush:

Posted
9 hours ago, புங்கையூரன் said:

சுவியர்... பெரு நண்டுக் கறி !

டார்வின்..அல்லது குயின்ஸ்லாந்து பக்கமிருந்து வரும்!

வாங்கோ.. கறி வைச்சுத் தரலாம்! 

வீட்டுக்குள்ள மணம் அந்தமாதிரி இருக்கும். சமைச்சு வைத்துவிட்டு 3 நாளைக்கு வீட்டு கதவு, யன்னல் எல்லாத்தையும் திறந்து வைச்சுப்போட்டு சுவியர கூப்பிடுங்கோ - பிளீஸ். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவியர் உந்த நடக்கிறது, ஊருறது, பறக்கிறது, நீந்திறது ஒன்டும் சாப்பிடுறதில்லை....! ஒன்லி காற்றில் அசைவனவும், நிலத்துள் விளைவனவும்தான்...!

நண்டு சூப்புக்கு கச்சாய் நண்டு என்டு சின்ன நண்டுகள் உண்டு. பொன்னாலை கடலில் எல்லாம் பறிக்குள் பிடிப்பார்கள். அவற்றை கொஞ்சம் இடிச்சுப் போட்டு சூப் வைத்துக் குடித்தால் நெஞ்சுத் தடிமனுக்கெல்லாம் அந்தமாதிரி இருக்கும்...!

பெருநண்டு முன்பே ஓட்டைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு அவித்த சதையை மசாலா போட்டுப் பிரட்டி மீன்டும் அதனுள் வைத்து மேசையில் பரிமாறலாம். சைட் டிஸ்சுக்கு சுப்பர்.

ஆனாலும் நம்மட நீலக்கால் நண்டின் சுவையே தனிதான்....!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.