Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்: - அ. முத்துகிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான்.  முகாமில் இருப்பவர்களை CHECKING செய்கிறோம், ROLL CALL எடுக்கிறோம் என்கிற பெயரில் இங்கே வசிக்கும் 1600க்கும் மேற்பட்டவர்களை நினைத்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் ஒன்று கூடச் சொல்வது இந்த வழக்கங்களில் ஒன்று, அதற்கு ஒரு உறுதியான நாள், நேரம் கிடையாது. இவர்களில் வேலைக்கு செல்லும் ஆண்கள்/ பெண்கள், பள்ளி/கல்லூரியில் பயிலுபவர்கள் என அனைவரும் இவர்கள் அழைக்கும் போது எல்லாம் அந்த CHECKINGக்கு வந்து விட வேண்டும். இந்த CHEKCING என்பது மாதம் ஒருமுறையாக இருந்து பின்னர் 15 நாட்களுக்கு ஒரு முறையாக மாறி, இப்பொழுது வாரத்திற்கு மூன்று நாட்கள் வரை என அவர்கள் நினைத்த படியெல்லாம் வடிவம் எடுக்கும்.

மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான். முகாமில் இருப்பவர்களை CHECKING செய்கிறோம், ROLL CALL எடுக்கிறோம் என்கிற பெயரில் இங்கே வசிக்கும் 1600க்கும் மேற்பட்டவர்களை நினைத்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் ஒன்று கூடச் சொல்வது இந்த வழக்கங்களில் ஒன்று, அதற்கு ஒரு உறுதியான நாள், நேரம் கிடையாது. இவர்களில் வேலைக்கு செல்லும் ஆண்கள்/ பெண்கள், பள்ளி/கல்லூரியில் பயிலுபவர்கள் என அனைவரும் இவர்கள் அழைக்கும் போது எல்லாம் அந்த CHECKINGக்கு வந்து விட வேண்டும். இந்த CHEKCING என்பது மாதம் ஒருமுறையாக இருந்து பின்னர் 15 நாட்களுக்கு ஒரு முறையாக மாறி, இப்பொழுது வாரத்திற்கு மூன்று நாட்கள் வரை என அவர்கள் நினைத்த படியெல்லாம் வடிவம் எடுக்கும்.

   

கர்ப்பிணி பெண்கள் வந்து வரிசையில் நிற்க வேண்டும், கல்லூரி பெண்கள் வந்துவிட வேண்டும், வீட்டில் நடமாட முடியாத நிலையில் முதியவர்கள் இருந்தால் அவர்களை தூக்கிக் கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் வசிப்பவர்கள் எல்லாம் வசதிபடைத்தவர்கள் இல்லை மாறாக அனைவரும் தினக்கூலிகள், தினசரி வேலை செய்தால் தான் பட்டினி இல்லாமல் நித்திரைக்கு செல்ல முடியும் என்கிற நிலையில் 25 ஆண்டுகளாக அதே நிலையில் இருப்பவர்கள்.

இந்த CHECKINGக்கு நீங்கள் ஆஜராகாமல் தக்க காரணங்களை ஆவணங்களுடன் சமர்பிக்கலாம், அப்படி மூன்று முறை நீங்கள் ஆஜராகவில்லை என்றால் வருவாய் அதிகாரிகள் உங்களை பற்றி Q BRANCHல் புகார் அளிக்க வேண்டும் அவர்கள் விசாரித்து உங்களுக்கு விளக்கு அளிக்கலாம் அலல்து இந்த நடைமுறைகளுக்கு பின்னர் தான் உங்களை அதிகாரிகளால் நீக்கம் செய்ய இயலும்.

நேற்று மதியம் வழக்கமான CHECKING நடந்தது, அதில் ரவிச்சந்திரன் என்பவர் தன் மகன் கடந்த இருபது நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் முழங்காலில் ஏற்பட்ட வலிக்காக சிகிச்சை பெற்று வருவதாக ஆவணங்களுடன் தகவல் தெரிவித்தார். அதை ஏற்க வருவாய் அதிகாரி துரைப்பாண்டி மறுத்தார். உடன் அவரது மகனை மருத்துவமனையில் இருந்து அழைத்து வரவேண்டும் என்றார்.

உங்களின் இந்த அராஜகத்திற்கு ஒரு எல்லையில்லையா என்று கோபத்தில் ரவிச்சந்திரன் தான் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்து விட்டு அருகாமையில் இருந்து உயர் மின் அழுத்தம் கொண்ட மின்சார கேபில் நோக்கி ஏறினார். இதனை அதிகாரி தடுக்கவில்லை, முகாமில் இருந்தவர்கள் உடன் அவரை தடுக்க முயற்சித்திருக்கிறார்கள், அவரை பின் தொடர்ந்து அந்த கம்பத்தில் ஏறியிருக்கிறார்கள், உடன் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்கள், யாரும் ஊரிய நேரத்தில் வரவில்லை.

1.20PM போல் ரவிச்சந்திரன் இறந்தார், அகதிகள் முகாமில் இருப்பவர்கள் தங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் பிரதேதத்தை எடுக்க அனுமதிப்பதில்லை என போராட்டத்தை தொடங்கினர். தகவல் அறிந்து அய்யா நெடுமாறன் மற்றும் மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திப்பேன் ஆகியோர் அங்கு மாலையில் விரைந்தனர். சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரி துரைப் பாண்டியன் மீது காவல் துறை FIR போட்ட பிறகு தான் ரவிச்சந்திரன் அவர்களின் சடலம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்கு எடுக்கவே அனுமதிப்பட்டது.

உலகின் உள்ள கொடிய வதை முகாம்கள் தமிழகத்திலும் உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். அகதிகளாக இவர்களின் படகுகள் வேறு நாடுகள் நோக்கி சென்று இருந்தால் இந்த நிலைமை நிச்சயம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. இந்த வதை முகாம்கள் நம் தேர்தல் முழக்கங்களாக மாறாத வரை இதற்கு தீர்வு இல்லை. தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கண்டனங்கள் தெரிவிக்காத வரை இதற்கு தீர்வு இல்லை, இதை சுற்று வாழும் நாமக்கும் இந்த வதையில் பங்கு இருக்குதானே, நம் மெளணம் எப்பொழுதுமே அதிகாரத்திற்கும் சம்மதம் தானே.

அ. முத்துகிருஷ்ணன், களப்பணியாளர்; எழுத்தாளர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=152935&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

விலங்குப் பண்ணையில் மற்றொரு ஈழ அகதி தற்கொலை!

raviஏறத்தாழ 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் விலங்குகள் போல எந்த உரிமையுமற்று கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் நாடு முழுவதும் தங்க வைக்கைப்பட்டுள்ளனர். ஏனைய நாடுகளில் அகதி உரிமை நிராகரிக்கப்பட்ட ஒருவருக்குக் கிடைக்கும் அடிப்படை உரிமைகள் கூட இந்த அகதிகளுக்குக் கிடைப்பதில்லை. இந்திய அரசும் அதன் தமிழ் நாட்டு ஏவலாளிகளும் மேற்கொண்டுவரும் சதி நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த ஈழ அகதி முகாம்கள் என்ற விலங்குப் பண்ணைகள். 1983 ஆம் ஆண்டு இலங்கை பேரினவாத அரச அதிகாரத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலையின் போதே தமிழ் நாட்டை நோக்கி முதல் தடவையாக ஆயிரக்கணக்கில் அகதிகள் படையெடுத்தனர்.

இலங்கை அரசைக் கையாள்வதற்கான ஒரு ஆயுதமாக அன்றைய இந்திராகாந்தி இந்திய அரசு அகதிகள் பிரச்சனையைக் கையாள ஆரம்பித்தது. தொடர்ச்சியாக நடைபெற்ற பேரினவாத ஒடுக்குமுறைகள் ஈழ அகதிகளை தமிழ் நாட்டை நோக்கி சாரிசாரியாக அனுப்பி வைத்தது.

ஏற்கனவே அகதி முகாம்கள் விலங்குப்பண்ணைகள் போன்று நடத்தப்படுகின்ற அதே வேளை ‘புலிகள்’ என்றும் புரட்சிக்காரர்கள் என்றும் சந்தேகிக்கப்படுகின்ற ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டனர். முகாம்களில் இல்லாமல் வெளியில் தங்கியிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அருகாமை போலீசு நிலையத்தில் ஆஜராகி, தமது முகவரியைப் பதிய வேண்டும் என்றும், இவ்வாறு செய்யத் தவறுபவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, பின்னர் கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் 25.9.92 அன்று ஜெயலலிதா அரசு உத்தரவிட்டது. இவ்வாறு போலீசு நிலையத்தில் பதிவு செய்து பதிவு எண் பெறாதவர்கள் யாரும், வேறு நாடுகளுக்கு செல்லவும் இயலாது என்றும் இந்த உத்தரவு கூறியது.

அகதி முகாமில் உள்ள குழந்தைகள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு சத்துணவு வழங்கி வந்த தன்னார்வ நிறுவனங்களும், இலவச மருத்துவ சேவை, இலவச பாடப் புத்தகங்கள், கல்விப் பயிற்சி, சுயதொழில்களில் பயிற்றுவித்தல் போன்றவற்றை செய்து வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அகதி முகாம்களுக்குள் நுழையக்கூடாது என்ற உத்தரவை 2.5.93 அன்று ‘ஈழத் தாய்’ ஜெயலலிதா அரசு அரசு பிறப்பித்தது.

முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகள் வேலைக்குச் செல்வதென்றால் காலை 8மணிக்குச் சென்று, மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. முகாம்களில் உள்ளவர்களை வேறு முகாம்களில் உள்ள அவர்களது உறவினர்கள் யாரும் சந்திக்க வேண்டுமென்றால், தாசில்தார் மற்றும் கியூ பிரிவு போலீசின் எழுத்து பூர்வமான அனுமதியைப் பெறவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

1991-96 காலத்திலான ‘சீமானின் ஈழத் தாய்’ ஜெயாவின் ஆட்சிதான் இந்தக் கணம் வரை தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், உரிமை பறிப்புகள் அனைத்துக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அதுதான் ஈழ அகதிகள் அனைவரையும் குற்றவாளிகளாகக் கருதி நடத்துவது என்பது அரசு நிர்வாகத்தின் இயல்பான நடைமுறையாகவே மாற்றப்பட்டு இன்று வரை தொடர்கிறது.

1996 – இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஈழ அகதிகளுக்கு மறுக்கப்பட்ட சில சலுகைகளை வழங்கிய போதிலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட போலீசு அடக்குமுறைகள், கண்காணிப்புகள் எதையும் அகற்றவில்லை. குறைக்கவுமில்லை. பார்ப்பன பாசிச அரசியலின் தாக்குதலால் நிலைகுலைந்து போன கருணாநிதி, “தான் ஈழ ஆதரவாளர் அல்ல” என்று நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் சந்திரிகா தொடங்கிய மூன்றாவது ஈழப்போரின் போது, கடற்கரையோரம் மிதவைச் சோதனைச் சாவடிகள் அமைத்து அகதிகள் தடுக்கப்பட்டனர். அகதிகளின் மீது அனுதாபம் கொண்டு அவர்களை அழைத்து வரும் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.இவ்வாறு தொடர்ச்சியாக ஈழ அகதிகள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்படுவதை இந்தியாவிலிருந்து ஈழம் பிடித்துத் தருவோம் என்ற கூச்சலிடும் அமைப்புக்கள் கண்டுகொள்வதில்லை. தமது முற்றத்திலேயே மனித குலத்தின் மீது நடத்தப்படும் மிருகத்தனமான தாக்குதல்களைக் கண்டுகொள்ளாத ஈழ ஆதரவாளர்களான சீமான், வை.கோ, நெடுமாறன் போன்ற வகயறாக்கள் கடல்கடந்து சென்று ஈழம் பிடித்துத் தருவதாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஈழ மக்களின் கண்ணீரையும் அவலங்களையும் வாக்குகளாகவும், சொத்துகளாகவும் மாற்றிக்கொள்ளும் ஈழ ஆதரவாளர்கள் போலி நம்பிக்கைகளை வழங்கி ஈழ மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தைப் பல ஆண்டுகள் பின் தள்ளினர்.

இன்று மற்றொரு ஈழ அகதி தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. வழமை போல ஈழ ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் போலிகள் ஆங்காங்கே முகம்காட்டி தமது இருப்பை உறுதி செய்துகொள்வார்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது.

இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அகதிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன் இன்று முகாமிற்கு சென்றுள்ளார். அப்போது ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவிச்சந்திரன் அங்கு வந்துள்ளார்.

தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அகதிகள் வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களை தடுக்க வந்த போலீசார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். தையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என்று கூறி, ரவிச்சந்திரன் உடலை எடுக்க மறுத்து, இலங்கை அகதிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

seemanதமிழின உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் என்ற தலையங்களில் உலாவும் அரசியல் வியாபாரிகள் தம்மை தேர்தலில் பேரம் பேசும் கருவிகளாக வளர்த்துக்கொண்டுள்ளனர். தவிர சீமான் போன்ற வியாபாரிகளின் பார்வை இப்போது புலம்பெயர் நாடுகளை நோக்கியும் திரும்பியுள்ளது. ராஜபக்சவுடன் நேரடி வியாபாரத்தில் ஈடுபட்ட லைக்காவின் செல்லப்பிள்ளையான சீமான் தென்னிந்தியத் தேர்தலில் இன்று முக்கிய ஈழ ஆதரவு வேட்பாளர். வைக்கோ தனது தமிழ் உணர்வு வியாபாரத்தை விரிவு படுத்துகிறார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்டு ஏழு வருடங்கள் முடிவடைகிறது. அப்பட்டமான களியாட்டமாக மாறிவிட்ட நினைவு தின நிகழ்வுகளைத் தவிர வாழ்விழந்த ஏழை அகதிகளின் வாழ்விலும், ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்விலும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.

 

http://inioru.com/an-eelam-refugee-committed-suicide-in-the-tamil-nadu-animal-farm/

  • கருத்துக்கள உறவுகள்

சீமான், ஈழத் தமிழருக்காக கதைக்கிறார் என்று இங்கே கொஞ்சப் பேர் குத்தி முறியினம்...அவர் என்டால் இந்த அகதி தமிழன் இறந்தது பற்றி வாயைத் திறந்து ஒரு மூச்சும் விடேல்ல

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சீமான், ஈழத் தமிழருக்காக கதைக்கிறார் என்று இங்கே கொஞ்சப் பேர் குத்தி முறியினம்...அவர் என்டால் இந்த அகதி தமிழன் இறந்தது பற்றி வாயைத் திறந்து ஒரு மூச்சும் விடேல்ல

உங்கள் கண்ணில் அது படவில்லை என்று சொல்வதே சாலப் பொருந்தும் ரதி அக்கா... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சசி, நான் இவரின்ட வீடியோக்களை பார்ப்பதோ அல்லது செய்திகளை வாசிப்பதோ இல்லை என்று எழுதினவுடன் எனக்கே கப்சா விடுறீங்களா?...முடிந்தால் அவர் இது தொடர்பாக கதைத்த செய்தியினை இணைத்து விடுங்கள் பார்ப்போம்...நாங்கள் ஒன்றும் எங்களுக்காக இவரைக் கதைக்க சொல்லவில்லை.ஆனால் தேவையில்லாமல் புலிக் கொடியைக் காட்டி பீலா விட வேண்டாம் என்று சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2016 at 7:36 AM, ரதி said:

ஓம் சசி, நான் இவரின்ட வீடியோக்களை பார்ப்பதோ அல்லது செய்திகளை வாசிப்பதோ இல்லை என்று எழுதினவுடன் எனக்கே கப்சா விடுறீங்களா?...முடிந்தால் அவர் இது தொடர்பாக கதைத்த செய்தியினை இணைத்து விடுங்கள் பார்ப்போம்...நாங்கள் ஒன்றும் எங்களுக்காக இவரைக் கதைக்க சொல்லவில்லை.ஆனால் தேவையில்லாமல் புலிக் கொடியைக் காட்டி பீலா விட வேண்டாம் என்று சொல்லுங்கள்.

pg1_zpsbyqwwqu6.jpg

 

 

pg2_zpsdf34osws.jpg

~ சீமான், ஈழத் தமிழருக்காக கதைக்கிறார் என்று இங்கே கொஞ்சப் பேர் குத்தி முறியினம்...அவர் என்டால் இந்த அகதி தமிழன் இறந்தது பற்றி வாயைத் திறந்து ஒரு மூச்சும் விடேல்ல

~ ஓம் சசி, நான் இவரின்ட வீடியோக்களை பார்ப்பதோ அல்லது செய்திகளை வாசிப்பதோ இல்லை என்று எழுதினவுடன் எனக்கே கப்சா விடுறீங்களா?...முடிந்தால் அவர் இது தொடர்பாக கதைத்த செய்தியினை இணைத்து விடுங்கள் பார்ப்போம்...நாங்கள் ஒன்றும் எங்களுக்காக இவரைக் கதைக்க சொல்லவில்லை.ஆனால் தேவையில்லாமல் புலிக் கொடியைக் காட்டி பீலா விட வேண்டாம் என்று சொல்லுங்கள்.

நான் கருத்து எழுதிய திரிக்குள் மீண்டும் மீண்டும் போய் கருத்துக்களை வாசிப்பது குறைவு ரதி அக்கா.
அதானால் தான் இந்த தாமதம்.
சரி ... நீங்கள் கேட்டபடி ஆதாரம் இணைத்து விட்டேன்.   
இனி அதிலும் ஏதாவது குறையை சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
உங்களுக்கு கப்சா விடுற அளவுக்கு எனக்கு மனதில் விகாரமோ, விவகாரமோ இல்லை அக்கா.

புலிக்கொடி எமக்கான மட்டுமானதாக இல்லாமல் உலகத்தமிழரின் அடையாளமாக மாறிவிட்டது.
அதன் மவுசு அப்படி. அதை பாவிக்க வேண்டாம் என்று யாருக்கும் சொல்லும் அளவுக்கு நிலை இன்று இல்லை.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9.3.2016 at 10:53 PM, ரதி said:

சீமான், ஈழத் தமிழருக்காக கதைக்கிறார் என்று இங்கே கொஞ்சப் பேர் குத்தி முறியினம்...அவர் என்டால் இந்த அகதி தமிழன் இறந்தது பற்றி வாயைத் திறந்து ஒரு மூச்சும் விடேல்ல

இன்றைய தேதியில்............. 
தமிழ்நாட்டில் பேரம்பேசி கூட்டணி சேர்க்கும் கட்சிகளை/தலைவர்களை விட சீமான் எவ்வளவோ மேல்.

யாரும் அவரை கூப்பிட்டால் தானே ?

உள்ளதையும் கெடுத்து குட்டி சுவர் ஆக்கிவிடுவார் என்று அவர்களுக்கு நன்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இப்படி நாதியற்றுப் போவதற்கு பதில் எம்மக்கள் நாடு திரும்ப வேண்டும். 

50 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் இப்படி நாதியற்றுப் போவதற்கு பதில் எம்மக்கள் நாடு திரும்ப வேண்டும். 

இதைத்தான் மறைமுகமாக சுவாமிநாதனும் சொல்கிறார் - ஆனாலும் எங்கோ ஒரு தடை இருக்கிறது. அது இந்தியாவாகவே இருக்குமென்று நினைக்கின்றேன். எம்மீதான பிடியை தக்க வைக்க இவர்களை பகடைக் காய்களாக்குகிறதா இந்தியா?

இவ்விடயத்தில் பல விடயங்களில் ஏன் எனும் கேள்வி, விடையில்லாமல் தொக்கி நிக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் மறைமுகமாக சுவாமிநாதனும் சொல்கிறார் - ஆனாலும் எங்கோ ஒரு தடை இருக்கிறது. அது இந்தியாவாகவே இருக்குமென்று நினைக்கின்றேன். எம்மீதான பிடியை தக்க வைக்க இவர்களை பகடைக் காய்களாக்குகிறதா இந்தியா?

இவ்விடயத்தில் பல விடயங்களில் ஏன் எனும் கேள்வி, விடையில்லாமல் தொக்கி நிக்குது.

நான்  இதுக்கு  பதில் சொன்னால் புலி எண்டுவினம்......பள்ளிக்கூடம் போகேல்லை எண்டுவினம்.....வடலி கேஸ் எண்டுவினம்....ஓடிவந்த காகங்கள் எண்டுவினம்.....:cool:

Edited by குமாரசாமி
நான்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடி!ஒரு மாதிரி இணைப்பை தேடி எடுத்து விட்டீர்களா சசி...இனி வேறென்ன போய் பிள்ளை,குட்டியை படிக்க வையுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.