Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மன் பெர்லின் நகரில் காரில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Featured Replies

பெர்லின் நகரில் காரில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

 

பெர்லினில் காரில் இருந்த வெடிபொருள் வெடித்ததில், ஒட்டுனர் பலியானார் என ஜெர்மன் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

160315105949_car_blast_berlin_640x360_ep
வெடிப்பு ஏற்பட்டபோது கார் தூக்கியெறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு மாவட்டமான சர்லட்டன்பர்கில் நகர மையத்தை நோக்கி இந்தக் கார் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வெடிப்பு ஏற்பட்டது.

கார் தூக்கியெறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

160315104932_berlin_blast_640x360_ap_nocI விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதால், காரணம் இன்னும் தெரியவில்லையென காவல்துறை தெரிவித்திருக்கிறது.

அந்தக் காரில் வேறு ஏதும் வெடிபொருட்கள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதித்துவருகின்றனர்.

விசாரணைகள் முதற்கட்டத்தில் இருப்பதால், இதற்கான காரணம் குறித்து ஏதும் சொல்ல முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/global/2016/03/160315_berlin

 

  • கருத்துக்கள உறவுகள்

பெரியதொரு இலக்கு தப்பியிருக்கிறது போலுள்ளது....

இல்லை விசுகு அண்ணா.

சிதறல்கள், காரின் சேதத்தை பார்க்கும்போது இது அவ்வளவு சேதத்தை ஏற்படுத்த கூடிய வெடிபொருள் அல்ல.

எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த கட்ட விசாரணை வரை. 

  • தொடங்கியவர்

Das Wrack eines VW Passat steht auf der Bismarckstraße in Berlin: Der Wagen...

Der Fahrer des Autos starb durch die Explosion.

Die Polizei sperrte den Tatort weiträumig ab und forderte Anwohner auf, in...

Der Sprengsatz explodierte gegen 8 Uhr am Dienstagmorgen. Zu der Zeit war das...

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பகலவன் said:

இல்லை விசுகு அண்ணா.

சிதறல்கள், காரின் சேதத்தை பார்க்கும்போது இது அவ்வளவு சேதத்தை ஏற்படுத்த கூடிய வெடிபொருள் அல்ல.

எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த கட்ட விசாரணை வரை. 

நன்றி  பகலவன்...

 

  • தொடங்கியவர்

இவர் 43 வயது ஆன ஒருவர் என்றும், ஏற்கனவே குற்றசெயல்களில் ஈடுபட்டவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணை தகவல்கள் தெரியவந்துள்ளது.

 

தனி நபரை இலக்கு வைத்து தான் தாக்குதல் நடாத்தபட்டிருக்கிறது. சாரதி அல்லது பக்கத்து இருக்கை நபர். 

நெரிசல் நிறைந்த சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதும் ஏனைய வாகனங்களுக்கோ நபர்களுக்கோ எந்தவித சேதமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பெர்லினில் காரில் இருந்த வெடிபொருள் வெடித்ததில், ஒட்டுனர் பலியானார் என ஜெர்மன் காவல்துறை தெரிவித்திருக்கிறது. வெடிப்பு ஏற்பட்டபோது கார் தூக்கியெறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு மாவட்டமான சர்லட்டன்பர்கில் நகர மையத்தை நோக்கி இந்தக் கார் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வெடிப்பு ஏற்பட்டது.கார் தூக்கியெறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.   விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதால், காரணம் இன்னும் தெரியவில்லையென காவல்துறை தெரிவித்திருக்கிறது. அந்தக் காரில் வேறு ஏதும் வெடிபொருட்கள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதித்துவருகின்றனர்.விசாரணைகள் முதற்கட்டத்தில் இருப்பதால், இதற்கான காரணம் குறித்து ஏதும் சொல்ல முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

பெர்லினில் காரில் இருந்த வெடிபொருள் வெடித்ததில், ஒட்டுனர் பலியானார் என ஜெர்மன் காவல்துறை தெரிவித்திருக்கிறது. வெடிப்பு ஏற்பட்டபோது கார் தூக்கியெறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு மாவட்டமான சர்லட்டன்பர்கில் நகர மையத்தை நோக்கி இந்தக் கார் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வெடிப்பு ஏற்பட்டது.கார் தூக்கியெறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதால், காரணம் இன்னும் தெரியவில்லையென காவல்துறை தெரிவித்திருக்கிறது. அந்தக் காரில் வேறு ஏதும் வெடிபொருட்கள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதித்துவருகின்றனர்.விசாரணைகள் முதற்கட்டத்தில் இருப்பதால், இதற்கான காரணம் குறித்து ஏதும் சொல்ல முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=153494&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தையோ மூடி மறைக்கிற மாதிரித்தான் எனக்கு தெரியுது. உண்மையும் அதுதான்.:cool:

கடத்தல் கும்பல் தலைவனுக்கு மர்ம நபர்கள் வைத்த குறி: தவறுதலாக உயிரிழந்த கார் ஓட்டுனர்

 

ஜேர்மனி நாட்டில் போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய முக்கிய தலைவன் ஒருவனை அழிக்க வைக்கப்பட்ட வெடிகுண்டில் கார் ஓட்டுனர் தவறுதலாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஜேர்மனியில் தலைநகரான பெர்லினில் கடந்த செவ்வாக்கிழமை அன்று சாலையில் சென்றுகொண்டு இருந்த கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் அதை ஓட்டிச் சென்ற Mesut T என்ற ஓட்டுனர் உடல் சிதைந்து பலியாயினர்.

தலைநகரில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் பொலிசாரை நிலைகுலைய வைத்ததை தொடர்ந்து, ‘இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமா’? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

ஆனால், நேற்று பொலிசார் முற்றிலும் ஒரு மாறுப்பட்ட காரணத்தை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘இது தீவிரவாத தாக்குதலாக இருக்க முடியாது. வெடித்து சிதறிய காரில் இருந்து ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு நபரின் ஆவணங்கள் சிக்கியுள்ளது.

இந்த கும்பல் போதை பொருள்களை விலைபேசுவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த ரஷ்ய நபரை தீர்த்துக்கட்ட மர்ம நபர்கள் சிலர் காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், இந்த வெடிகுண்டு தாக்குதலில் எந்த தவறும் செய்யாத கார் ஓட்டுனர் பலியாகியுள்ளார். ஓட்டுனரும் ஒரு காலத்தில் போதை பொருள் கடத்திலில் தொடர்பில் இருந்துள்ளார்.

ஆனால் 2008ம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த குற்றங்களிலும் ஈடுப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த போதை பொருள் கடத்தல் சம்வங்கள் 2015ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்று இருக்கலாம்.

இதில் முக்கிய கடத்தல் தலைவன் ஏமாற்றவோ அல்லது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை கொலை செய்ய இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் என்பதால் அந்த கோணத்தில் விசாரணையை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

http://world.lankasri.com/view.php?22UMC203lOy4e2BnBcb280Mdd308Cbc3nBpe43OlR023qAS3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.