Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமியை தாயாக்கிய வயோதிபர் சாவு!

Featured Replies

சிறுமியை தாயாக்கிய வயோதிபர் சாவு!
 
 
சிறுமியை தாயாக்கிய வயோதிபர் சாவு!
பதினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வயோதிபரான கந்தையா சித்திவிநாயகம் என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
 
குறித்த வயோதிபருக்கு நேற்று முன்தினம் 15 ஆண்டுகள் கடூழியச் சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்சம் ரூபா நட்டயீடு செலுத்துமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி இந்த வல்லுறவு சம்பவம் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் 14 வயது பாடசாலை மாணவியாக இருந்தார். அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய எதிரி 62 வயதுடைய வயோதிபராக இருந்தார்.
 
இதில் 16வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவியைக் கடத்தியமை, அவருடன் பாலியல் வல்லுறவு கொண்டமை என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் வயோதிபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கில், வழக்குத் தொடுனர் தரப்பில் பெண் அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி சாட்சிகளை நெறிப்படுத்தினார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்த குழந்தையாகிய ஹம்சிக்காவின் விஞ்ஞான ரீதியான தாய் பாதிக்கப்பட்ட பெண் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. விஞ்ஞான ரீதியான தந்தை எதிரியான கந்தை சித்திவிநாயகம் எனவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
 
இது டி.என்.ஏ ஆய்வின் மூலம் 99.99 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எதிரியாகிய சித்திவிநாயகமே தந்தையாவார் என தனது சாட்சியத்தில் உறுதிப்படுத்தினார்.
 
இதேவேளை  கடந்த புதன்கிழமை எதிரியின் உடல் நிலை குறித்து நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியமளித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எதிரி இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சில மணி நேரங்களில் கூட மரணம் ஏற்படலாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

முதலில் தீர்ப்பு திகதியிட்ட போது நஞ்சருந்தி தற்கொலை முயற்சி செய்த எதிரி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதான வைத்தியசாலையில் கடந்த 15 நாட்களாக் சிகச்சை பெற்று வருகின்றார்.

இரண்டாவது முறையாக தீர்ப்பு வழங்குவதற்கான திகதியாக இன்றைய தினம் நிர்ணயிக்கப்பட்ட போதும், எதிரிக்கு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிரியின் உடல் நிலை குறித்து நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியமளித்த யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எதிரி இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சில மணி நேரங்களில் கூட மரணம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.

எனவே எதிரி மரண படுக்கையில் இருக்கின்ற நிலையையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று எதரியின் சட்டத்தரணி கருணை விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார். இதனையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.


14 வயதில் மாணவியாக இருந்து போது மானம் பறிபோன நிலையில் பாதிக்கப்பட்ட பெண், குழந்தையுடன் நீதிகோரி நீதிமன்றில் நிற்கின்றார்.
 

இவ்வாறான  காமுகனுக்கு இவ்வளவு சீக்கிரம் சாவு வந்திருக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சம்பவங்களுக்கு எமது சமூகம் விதைக்கும் தவறான எண்ணங்களும் தான் காரணம்.

வயதான ஆணும் பெண்ணும் சமன் என்பது போலவும் வயதான ஆண் பாலியல் செயற்பாடு அற்றவன் என்பது போலவும் ஒரு போலி எண்ணத்தை வளர்க்கும் எம்மவர்களே சிறுவர்.. சிறுமிகள் அவர்களை நம்பி ஏமாற இடமளிக்கிறது.

வயதானால் என்ன இளைஞன் ஆனால் என்ன சிறுவன் ஆனால் என்ன பாலியல் தொழிற்பாடு ஒரு ஆணுக்கு குறித்த ஒரு வயதின் பின் எப்போதும் சாத்தியம்.. (சுகதேகியாக இருப்பின்).. என்ற அடிப்படையில்.. பெண்பிள்ளைகளுக்கு ஆண்கள் பற்றிய போதிய பாலியல் அறிவை ஊட்டி வளர்க்க வேண்டும்.

வயதான ஒரு பெண்ணின் பாலியல் செயற்பாடும்.. வயதான ஒரு ஆணின் பாலியல் செயற்பாடும் ஒன்றல்ல. இயற்கையிலேயே அது மாறுபட்டிருக்க.. எம் சமூகம் வளர்க்கும் தவறான சிந்தனை ஓட்டங்களும்.. இப்படியான சம்பவங்களுக்கு காரணமாகும்.

பாடசாலைகளில் சரியான பாலியல் கல்வி அளிப்பதன் ஊடாக பள்ளிப்பிள்ளைகள் பாலியல் பலிக்கடா ஆவதில் இருந்து அவர்களை அவர்களின் சுயசிந்தனையின் பால் செயற்படச் செய்து தடுக்கலாம்.

ஓரிருவருக்கு அளிக்கும் கடும் தண்டனைகளால் இந்த சமூக அசிங்கத்தை துப்பரவு செய்ய முடியாது.

இதே காரணத்திற்காகத்தான் தமிழினியின்.. கணவரின் தந்தை தண்டிக்கப்பட்டார் என்றும் தெரிகிறது. ஆனாலும் சமூகம் திருந்தினதா..???! அது இன்னொரு வடிவில் சமூகத்தைப் பழிவாங்கிறது.  :rolleyes:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போட்டாச்சா 

  • கருத்துக்கள உறவுகள்

தாமதிக்கப்பட்ட நீதி குற்றவாளி வெகு எளிதாக தப்பிக்கவே வழிவகுக்கும் என்பதற்கு இவ்வழக்கே சான்று.

பாவி, இவ்வளவு எளிதாக தண்டனையிலிருந்து தப்பிவிட்டானே? குற்றம் நடந்த அன்றே அவனை 'கைமா' பண்ணியிருக்கனும்!

பாவம் அச்சிறுமியும், கைக்குழந்தையும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.