Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராண்ட் கேனியன் பயணக்கட்டுரை

Featured Replies

— செம்புர் நீலு.

நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி “டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.” ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் கொலராடோ மலை பகுதிக்கு ஒரு சிறிய (20 பயணிகள் அமரக்கூடிய) விமான பயணம். ஜன்னலருகில் இடம் பிடித்தேன் – புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக. அமெரிக்க பாணீ ஆங்கிலத்தில் கைடு பெண்ணரசியின் நேர்முக வர்ணனை.

grand canyon1

லாஸ் விகாஸிலிருந்து தென் கிழக்கில் 30 மைல் தூரத்தில் ஓடும் கொலராடோ நதியின் மேல் கட்டப்பட்டிருக்கும் அணை. 1930 ஆண்டில் கட்டப்பட்டது. 1250 அடி நீளமும் 730 அடி உயரமும் உள்ள இந்த அணை கொலராடோ நதியின் வெள்ளப் பெருக்கை கட்டுபடுத்துவதற்கும் மின்சார உற்பத்திக்கும் வேண்டி கட்டப்பட்டது.

முதலில் இந்த அணை “பௌல்டர் அணை” என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1947ம் ஆண்டு, 31 வது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த “ஹெர்பர்ட் ஹூவர்” என்பவரின் ஞாபகார்த்தமாக “ஹுவர் டாம்” என்று பெயர் சூட்டப்பட்டது

மேலிருந்தவறே கொலராடொ நதியில் கட்டப்பட்டிருக்கும் “ஹூவர் அணை” யின் தரிசனம்.

                                                                                                                    ஹூவர் அணை

grand canyon2

அடுத்த இருபது நிமிடங்களில் விமானம் தறையிறங்கியது. வரிசையாக எல்லோரையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த ஷாப்பிங் செண்டர் கம் ரெஸ்டாரெண்டிற்கு அழைத்து சென்றார்.

grand canyon3

அடுத்த 15 நிமிடஙளில் ஹெலிகாப்டர் மூலமாக 3500 அடி கீழே ஒடிக் கொண்டிருக்கும் கொலராடொ நதிக்கரைக்கு பயணம். ஐவர்  அமரக்கூடிய ஹெலிகாப்டர். ஐந்து  நிமிடங்களில் நதிக்கரையில் ஹெலிகாப்டர் தறை இறங்கியது.

எங்களுடன் வந்த மற்ற சுற்றுலா நண்பர்களும் 3 ஹெலிகாப்டர்களில் வந்து சேர்ந்ந்தனர். அடுத்தது கொலராடொ நதியில் படகுப்பயணம். இரண்டு விசைப்படகுகளில். கரை புரண்டு வேகத்துடன் ஒடும் நதி. அதை எதிர்த்து விசைப்படகு அமைதியாக சென்றது. இரு மருங்கிலும் உயரமான மலைப்பகுதி.

grand canyon4

30 நிமிடங்களில் பயணம் முடிந்தது. படகோட்டி ஸ்பானிஷ் மொழியில் மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டிருந்தார். அவரே புகைப்படம் எடுப்பதற்கும் உதவியாக இருந்தார். மறுபடியும் ஹெலிகாப்டரில் பயணித்து புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தோம். விமான பயணத்திற்கு முன்னால் எல்லொருக்கும் ஒரு டிஃபன் பொட்டலம் கொடுத்தார்கள் அதில் காய்கறிகளுடன் கூடிய இரு பன் ரொட்டி, இரண்டு தடிமனான பிஸ்கட், ஒரு கொககோலா கேன். அதை ஒரு பிடிபிடித்துவிட்டு எல்லொரும் ஒரு வால்வோ பஸ்ஸில் 15 மைல் தொலைவிலுள்ள “கிராண்ட் கேனியன் ஸ்கைவாக்கிற்கு” 20 நிமிட பயணம்.

40 மில்லிய்ன டாலர் செலவில் இரும்பினாலும் கண்ணாடியாலும் உருவாக்கப்பட்ட இந்த ஸ்கை வாக்  (சுற்று சூழல் பாழாகிவிடும் என்ற பலமான எதிர்ப்புடன்) ஒரு எஞ்ஜினியரிங் அற்புதம். 2007ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. பிரபல அப்போலொ விண்வெளி ராக்கெட்டில் பயணித்து சந்திர மண்டலத்தை ஆராயிச்சி செய்த விஞ்ஞானி “பஸ் ஆல்டெரின்” 2007 மார்ச் மாதம் 20 ஆம் தேதி சுற்றுலா பயணிகளுடன் இதில் நடந்து துவக்கிவைத்தார். இதன் முக்கியமான சிறப்பு அம்சங்கள்

grand canyon5

grand canyon6

“ U ” வடிவமுள்ள கண்ணாடியாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட அமைப்பு மலை விளிம்பிலிருந்து 70 அடி முன்னாலும் மலை அடிவாரத்திலிருந்து 4000 அடி உயரத்தில் நிற்கிறது. அதன் எதிர்ப்பகுதி மலை மூன்று மைல் தொலைவிலிருக்கிறது.

4 இன்ச் கடினமான கண்ணாடி படிமங்களை இதில் உபயோகபடுத்தியிருக்கிறார்கள், 70 டன் எடையை தாங்கும் சக்திகொண்ட்து. அதாவது சராசரி 175 பவுண்ட் எடையுள்ள 800 மனிதர்கள் ஒரே சமயத்தல் இதில் நடக்கலாம். இந்த அமைப்பு 8 மாக்னிட்யூட் பூகம்பத்தை தாங்கவும் 8 திசையிலிருந்து 80 முதல் 100 மைல் வேகத்தில் அடிக்கும் புயலை தாங்கும் சக்தியும் கொண்ட்து. ஆனாலும் ஸேஃப்டியை கணக்கில்கொண்டு ஒரு சமயத்தில் 120 மனிதர்களை மட்டும் இதில் நடக்க அனுமதிக்கின்றனர்..

grand canyon0

கண்ணாடி படிவங்களில் கீறல் மற்றும் சிராய்ப்பு வரமாலிருப்பதற்காக சுற்றுலா பயணிகள் செருப்பு / ஷூ அணிந்த கால்களில் ஸ்பெஷல் காலுறைகள் அணிந்து செல்லவேண்டும். காமிராக்கள் / மொபைல் போன்கள் அனுமதியில்லை.

கிராண்ட் கேனியன் இலாக்காவை சேர்ந்த பழங்குடி மக்களான “ஹுஅலாபைஸ்” செவ்விந்தியர் இனத்தவரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக வேண்டி லாஸ் விகாஸை சேர்ந்த தொழிலதிபர் டேவிட் ஜின் என்பவர் லோக்ஸா எஞ்ஜினீரிங் கம்பெனியின் துணையுடன் இந்த “கிராண்ட் கேனியன் ஸ்கைவாக்கை” உருவாக்கினார்

சுற்றுலா குழுவினருடன் செக்யூரிட்டி சோதனக்கு ப்பிறகு ஸ்கை வாக்கின் உள்ளே சென்றேன். ஆஹா!!!  என்ன ஒரு காட்சி. கண்ணாடி படிவங்கள் வழியாக 4000 அடி கீழேயுள்ள மலை பள்ளத்தாக்கை பார்கும்போது உடல் புல்லரிக்கிறது.  சுற்றி வந்து மூன்று பக்கஙளில் உள்ள மலை பள்ளத்தாக்கை காண கண் கோடி வேண்டும். என்ன ஒரு அருமையான காட்சி. மனத்தில் ஒரு பயம் தோன்றுகிற பயங்கரமான மலை பள்ளத்தாக்கு. ஒரு மணி நேரம் இருந்துவிட்டு அருகில் இருக்கும் செவ்விந்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அற்புதமாக சித்தரிக்கும் ஒரு கண்காட்சியும் பார்த்தோம். .

                                                                                       செவ்விந்தியர்கள் வாழ்ந்த குடிசைகள்

grand canyon7

இரண்டு மணி நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை. இதற்கிடையில் அமெரிக்க கைட் பெண் அவசரபடுத்தினாள். எல்லோரும் பஸ்ஸில் அமர்ந்து   ஷாப்பிங் செண்டர் கம் ரெஸ்டாரெண்டிற்கு வந்தோம். அடுத்த 15 நிமிடஙளில் காலையில் வந்த சிறிய விமானத்தில் பயணித்து லாஸ் விகாஸ் வந்து சேர்ந்தோம். இந்த கிராண்ட் கேனியன் சுற்றுலா பயணம் மறக்க முடியாத ஒன்று.

செம்புர் நீலு ( நீலகண்டன்)
ஃப்ரீமாண்ட் காலிஃபோர்னியா

http://www.vallamai.com/?p=47560

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Athavan CH said:

                                                                                                                    ஹூவர் அணை

grand canyon2

http://www.vallamai.com/?p=47560

'வில்' அமைப்பிலான அணை வடிவமைப்பும் .. பாலமும்.. அருமை!

கேரளாவில் இடுக்கி அணையும் இதே வடிவமைப்புதான்..

பகிர்விற்கு நன்றி ஆதவன். .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி....ஆதவன்!

grand-canyon7.jpg

 

இந்தப் படத்திலுள்ள குடிசைகளைப் பார்க்கக் கொஞ்சம் கவலையைக் கிடக்கு!

இழந்தவர்களின் ஆன்மாக்கள் இங்கே தான் சுத்திகொண்டிருக்க்ம் என்று நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

“டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.”  தந்தைக்கு... மகன் செய்த உபதேசம் நன்றாக இருக்கு. Smiley
இணைப்பிற்கு... நன்றி ஆதவன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, தமிழ் சிறி said:

“டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.”  தந்தைக்கு... மகன் செய்த உபதேசம் நன்றாக இருக்கு. Smiley
இணைப்பிற்கு... நன்றி ஆதவன்.

இவர் கொலிடேயை விபரிப்பதை வைத்துப் பார்த்தால், (சிறு விமானம், கெலி, லாஸ்வகாஸ்) பசைப்பாட்டி மகன் சொல்லியிருப்பார் தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.