Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணத்தில் இயங்கவுள்ள மூன்று பெரும் தொழிற்சாலைகள்!

Featured Replies

வட மாகாணத்தில் இயங்கவுள்ள மூன்று பெரும் தொழிற்சாலைகள்!

வடமாகாணத்திலுள்ள மூன்று முக்கிய தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையின்கீழ் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுறவுத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், ஆனையிறவு உப்பளத் தொழிற்சாலை ஆகியவற்றையே மீண்டும் இயக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நாளை யாழ்ப்பாணக் கச்சேரியில் நடைபெறவுள்ளதுடன், இதில் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் வேதநாயகன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் போன்றோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

வடக்கின் முக்கிய தொழிற்சாலைகளான இந்த மூன்று தொழிற்சாலைகளும் யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு மூடப்பட்டன. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் ஆனையிறவு உப்பளம் மாத்திரம் பகுதியளவில் இயங்கி வருகின்றது.

இதனை முழுமையாக இயக்குவதற்கும் மற்ற

இதனை முழுமையாக இயக்குவதற்கும் மற்றய இரண்டு தொழிற்சாலைகளையும் பழையபடி இயங்க வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதனால் வடமாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தொழிற்சாலைகளையும் பழையபடி இயங்க வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதனால் வடமாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://tamilleader.com/

இது ரிசாதின் கைதில் இருக்கும் அணைச்சு என்பதால் முஸ்லிம்களுக்கும், இஸ்லாம் மதம் மாறுபவர்களுக்கு மட்டும் தான் வேலை வழங்க்கப்படும், அப்படிபட்டவர்க்ச்ள் கிடைக்கா விட்டால் மீள் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டு வேலை வழங்க்கப்படும்.

புலம்பெயர் மடையர்கள் சாமத்திய வீடும் சுப்ப்ச்ர் சிங்கருக்கும், நடிகர் சங்க நிதிக்கு  தேவைபட்டால் பணமும் தான் வழங்க்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Dash said:

இது ரிசாதின் கைதில் இருக்கும் அணைச்சு என்பதால் முஸ்லிம்களுக்கும், இஸ்லாம் மதம் மாறுபவர்களுக்கு மட்டும் தான் வேலை வழங்க்கப்படும், அப்படிபட்டவர்க்ச்ள் கிடைக்கா விட்டால் மீள் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டு வேலை வழங்க்கப்படும்.]

இந்து அமைச்சர் கையில் இந்த பொறுப்பு இருந்தால் நீங்கள் இந்துக்களுக்கு மட்டும் வேலை கொடுப்பது போலவே இஸ்லாமிய அமைச்சர்களும் செய்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் செய்வது போல அவர்களும் செய்வது தானே நியாயம்?

1 hour ago, Jude said:

முதலில் உங்கள் காணியை இன்னொரு தமிழருக்கு கொடுங்கள் பார்ப்பம் ....யாருடைய நிலத்தில் யாரை இருத்துவது ......

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மின்னல் நிகழ்ச்சியில் ரங்கா கூறியது, இ.போ.ச அதிகாரியாக ரிஷாத் முஸ்லிம் ஒருவரை நியமிக்க கூட்டமைப்பு அதை ரணில் இடம் முறையிட ரணிலோ சிங்களவர் ஒருவரை நியமித்துவிட்டு "இஞ்சால நீங்கள் முறையிடுகிறீர்கள் அங்கால ரிஷாத் முறையிடுகிறார்" என்றுவிட்டார். கூட்டமைப்பு தலையை தொங்க போட்டதுதான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு கட்டாயம் திருத்தி தர வேண்டும், அது அரசாங்கத்தின் கடமை.

9 minutes ago, MEERA said:

உண்மையாகவே ரிஷாத்தின் அடாவடிகள் உங்களுக்கு தெரியாதா? 

தெரியும்

இங்கு யாராவது ஒருவரை அதாவது அரசியல்வாதியை சுத்தம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் -  கிடைப்பதை வைத்து எதோ வாழலாம் என்ற மன நிலையில் மக்கள் - அதையும் கெடுக்க புலம் பெயர்ந்தவர்கள் கொஞ்சமாவது நடக்குதில்ல விட்டுப்பிடியுங்கோ எண்டுதானே நான் கேட்கிறேன் 

4 minutes ago, MEERA said:

அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு கட்டாயம் திருத்தி தர வேண்டும், அது அரசாங்கத்தின் கடமை.

அப்ப நாங்கள் எதை வேணுமெண்டாலும் அழிப்பம். அரசாங்கம் திருத்தி தர வேண்டும்  - நல்லா இருக்கே இது 

நீங்கள் இருக்கும் நாட்டிலும் இதை முயற்சி பண்ணலாமே

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

தெரியும்

இங்கு யாராவது ஒருவரை அதாவது அரசியல்வாதியை சுத்தம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் -  கிடைப்பதை வைத்து எதோ வாழலாம் என்ற மன நிலையில் மக்கள் - அதையும் கெடுக்க புலம் பெயர்ந்தவர்கள் கொஞ்சமாவது நடக்குதில்ல விட்டுப்பிடியுங்கோ எண்டுதானே நான் கேட்கிறேன் 

இல்லை ஜீவன் ரிஷாத்தின் நடவடிக்கைகளை விட்டுப்பிடித்தால் வடக்கும் கைவிட்டுப் போகும். முஸ்லிம்களின் குடிப்பரம்பலை கட்டுப்படுத்த வேண்டும். 

6 minutes ago, MEERA said:

இல்லை ஜீவன் ரிஷாத்தின் நடவடிக்கைகளை விட்டுப்பிடித்தால் வடக்கும் கைவிட்டுப் போகும். முஸ்லிம்களின் குடிப்பரம்பலை கட்டுப்படுத்த வேண்டும். 

உண்மையில்  ரிஷாத்தினால் வட மாகாணத்தில் குடி பரம்பலில் எதையும் வெட்டி புடுங்க முடியாது. ஆனால் இந்த தொழிற்சாலைகள் எமக்கு தேவை - கெட்டுப் போகும் எமது இளைய சமுதாயம் உழைத்து முன்னேற இவை நிச்சயமாக தேவை. இதை ஒரு பேய் முயற்சி செய்திருந்தாலும் எனது ஆதரவு அதுக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் இன்று மன்னாரில் இருந்து முல்லைத்தீவு யாழ் வரை ரிஷாத்தின் குளறுபடி. 

இங்கு நான் கவலைப்படுவது ரிஷாத்தின் கைகளில் இந்த தொழிற்சாலைகள், வடமாகாண சபையின் கீழ் இருந்தால் கவலை இல்லை.

3 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மையில்  ரிஷாத்தினால் வட மாகாணத்தில் குடி பரம்பலில் எதையும் வெட்டி புடுங்க முடியாது. ஆனால் இந்த தொழிற்சாலைகள் எமக்கு தேவை - கெட்டுப் போகும் எமது இளைய சமுதாயம் உழைத்து முன்னேற இவை நிச்சயமாக தேவை. இதை ஒரு பேய் முயற்சி செய்திருந்தாலும் எனது ஆதரவு அதுக்கே.

14 minutes ago, MEERA said:

ஜீவன் இன்று மன்னாரில் இருந்து முல்லைத்தீவு யாழ் வரை ரிஷாத்தின் குளறுபடி. 

இங்கு நான் கவலைப்படுவது ரிஷாத்தின் கைகளில் இந்த தொழிற்சாலைகள், வடமாகாண சபையின் கீழ் இருந்தால் கவலை இல்லை.

இந்த தொழிற்சாலைகள் வடமாகாண சபையின் கீழ் வருவதில் எனக்கு இப்போது உடன்பாடில்லை. அவர்களுக்கு இவற்றை நிர்வாகிக்கும் திறன் அறவே இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இந்த தொழிற்சாலைகள் வடமாகாண சபையின் கீழ் வருவதில் எனக்கு இப்போது உடன்பாடில்லை. அவர்களுக்கு இவற்றை நிர்வாகிக்கும் திறன் அறவே இல்லை 

ஆம் இது சரியே

  • தொடங்கியவர்

இந்த செய்தியில் எனது 
பெரிய கவலை எல்லாம் .......... சுற்றுச் சூழல் தொடர்பானதே. சீமெந்துத் தொழிற்சாலையை சூழ இருந்த மரங்கள் எல்லாம் ஒரு வித தூசியின் நிறமாகவே முன்னர் இருந்ததைக் கண்டதாக ஒரு நினைவு....., ஒரு சிறிய சுன்னாகம் மின் நிலையத்தினை வைத்தே பெரிய அழிவைத் தந்தவர்கள் இவர்கள்....
 
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தில் இயங்கவுள்ள அல்ல.. சுரண்ட உள்ள தொழிற்சாலைகள். இவை இன்றைய நிலையில் வடமாகாணத்துக்கு அவசியமா.. என்று நோக்க வேண்டியுள்ளது. எமது வளத்தை பிறர் சுரண்டவும்.. வீணடிக்கவும்.. இடமளிக்கக் கூடாது. வடக்கு மாகாண சபை இதில் காத்திரமான நிலைப்பாடு எடுக்கனும். இயற்கை பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கனும். 

அஷ்ரப் கப்பல்துறை அமைச்சில் இருந்து.. கொழும்பு துறைமுகத்தில் முஸ்லீம்களுக்கு பெருவாரி தொழில்பெற்றுக் கொடுத்தார். காசு வாங்கிக் கொண்டு தான். அதுபோல்.. நீதி அமைச்சராக ஹக்கிம் இருந்த போது சட்டக் கல்லூரியில் எல்லாரையும் விட முஸ்லீம்கள் இடம்பிடித்தனர்... இன்று கிழக்கில் போல் நாளை வடக்கும் இவரால்.. முஸ்லீம் மயமாக இவை பயன்படுத்தப்பட அனுமதிக்கக் கூடாது. கோட்டாமுறை.. விகிதாசாரப் படியான பணிநிலைகள் உருவாக்கப்படுவது அவசியம். 

14 hours ago, ஜீவன் சிவா said:

 அப்ப நாங்கள் எதை வேணுமெண்டாலும் அழிப்பம். அரசாங்கம் திருத்தி தர வேண்டும்  - நல்லா இருக்கே இது 

நீங்கள் இருக்கும் நாட்டிலும் இதை முயற்சி பண்ணலாமே

ஜீவன்  நாங்க இருக்கிற நாட்டு அரசாங்கங்கள் சொந்த மக்கள் மீது குண்டு போடவில்லை. சொந்த நாட்டு மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை அழிக்கவுல்லை. ஆனால் ஶ்ரீலங்கா அரசாங்கம்  மோசமாக அதை 1958 ம  ஆண்டிலிருந்து செய்துவருகிறது. ஒரு குற்றவாளி அரசாங்கத்துற்கு எதிராக ஒரு சிறு முணுமுப்பு யாழ்களத்தில் கேட்டாலும் வேலையை விட்டு விட்டு ஓடோடி வந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் நீங்கள் எமது உயிர்கொடுத்து போராடிய எமது போராளி விட்ட தவறுகளை மட்டும் பூதாகரமாக காட்டவும் அவர்களை கொச்சைப்படுத்தவும் என்றும் தயங்கியதில்லை. மனசந்தோசத்துடன் அதை செய்துவருகின்றீர்கள். இந்த இடத்தில் தான் நீங்கள்  ஒரு பாரம்பரிய தமிழன் என்பதை நிரூபிக்கின்றீர்கள். 

14 hours ago, ஜீவன் சிவா said:

இந்த தொழிற்சாலைகள் வடமாகாண சபையின் கீழ் வருவதில் எனக்கு இப்போது உடன்பாடில்லை. அவர்களுக்கு இவற்றை நிர்வாகிக்கும் திறன் அறவே இல்லை 

மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள். போதாது என்பது மக்களின் நீண்ட நாள் மனக்குறை.  எமக்கு தன்னாட்சி உரிமை உள்ள சமஸ்டி வேண்டும் என்று தமிழரசுக்கட்சி மேடைகளில் சம்பந்தர்  வீரவசனம் பேசு வாக்கு வேட்டை அரசியல் செய்ய  வடமாகாணசபை உங்கள் கட்சியில் உஙகள் கோஷ்டி வசம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக மாகாணசபைக்கு தொழிற்சாலை நிர்வாக உரிமைகள் இப்போதைக்கு வேண்டாம் என்கிறீர்கள். உங்களுக்கு பிடித்த முதலமைச்சர் வந்தாமட்டும் அதிக அதிகாரங்கள் அல்லது வேண்டாம் என்பது பாரம்பரிய தமிழனாக உங்கள் நிலைப்பாடு. கிடைக்கும் போது பெற்றுவிட வேண்டும். என்று எமக்கு வேதம். ஓதும் நீங்க இதில் மட்டும் பக்கா அரசியல். இப்படிப்பட்ட ராஜதந்திரமே பாரம்பரிய தமிழரின். ராஜதந்திரம். மற்றைய இனத்தவர்கள் இதை பக்கா சுயநலம் என்று அழைப்பார்கள்.

3 hours ago, trinco said:

யாழ்மாவட்டத்திற்கு 2015 இல் 3,123 திட்டங்களிற்க்காக 24,709  மில்லியன்  ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது . இதில் 9,270 மில்லியன் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. மிகுதி 15,439 மில்லியன் மிச்சம் பிடித்து திறைசேரிக்கு வழங்கியுள்ளார்கள்.

அதுவும் மக்களின் மீள் குடியேற்றம் சம்மந்தமான 577 திட்டங்களிற்கு  வழங்கப்பட்ட 15,743 மில்லியன் ரூபாயில் 3,563 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன் படுத்தப்பட்டுள்ளது 

திட்டங்கள் வாரியான தரவுகள் தேவை என்றால் தரலாம். இங்கு என்னிடம் scanner இல்லை . நேரம் கிடைக்கும் போது இணைக்கலாம் .

இந்த லட்சணத்தில்தான் இயங்குது.

உங்களுக்கு மறந்திருக்கலாம் - யாழ் களத்தில் தேர்தல் காலத்தில் விக்கியருக்காக குத்தி முறிஞ்சதில் நானும் அடக்கம். அதற்காக அவரது நிர்வாகத்திறன்  பிழை என்னும் போதும் கண்ணை மூடிக்கொண்டிருக்க நான் தயாரில்லை. 

Edited by ஜீவன் சிவா
கடைசி வசனம் சேர்க்கப்பட்டுள்ளது

29 minutes ago, ஜீவன் சிவா said:

யாழ்மாவட்டத்திற்கு 2015 இல் 3,123 திட்டங்களிற்க்காக 24,709  மில்லியன்  ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது . இதில் 9,270 மில்லியன் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. மிகுதி 15,439 மில்லியன் மிச்சம் பிடித்து திறைசேரிக்கு வழங்கியுள்ளார்கள்.

அதுவும் மக்களின் மீள் குடியேற்றம் சம்மந்தமான 577 திட்டங்களிற்கு  வழங்கப்பட்ட 15,743 மில்லியன் ரூபாயில் 3,563 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன் படுத்தப்பட்டுள்ளது 

திட்டங்கள் வாரியான தரவுகள் தேவை என்றால் தரலாம். இங்கு என்னிடம் scanner இல்லை . நேரம் கிடைக்கும் போது இணைக்கலாம் .

இந்த லட்சணத்தில்தான் இயங்குது.

உங்களுக்கு மறந்திருக்கலாம் - யாழ் களத்தில் தேர்தல் காலத்தில் விக்கியருக்காக குத்தி முறிஞ்சதில் நானும் அடக்கம். அதற்காக அவரது நிர்வாகத்திறன்  பிழை என்னும் போதும் கண்ணை மூடிக்கொண்டிருக்க நான் தயாரில்லை. 

விக்கியருக்கும்சம்பந்தருக்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்காவிடின் விக்கிரையும் வட மாகாணசபையையும் இப்போதும் பாராட்டியிருப்பீர்கள். நீங்கள்இணைத்த இந்த தரவுகளை பொய் தரவு என்று கூறியிருப்பீரகள்   இதெல்லாம் அரசியலில் சகஜம் தானே. எல்லோருக்குமே இது புரியும்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தாயகப்பகுதியை மாசு படுத்துதல்

மற்றும் தமிழரின் இயற்கை வளங்களை அழவுக்கதிகமாக பாவித்தல் தவிர்க்கப்படணும்

உடன் தேவை கருதி

நீண்டகாலத்தில் தீமை தரும் திட்டங்களை தவிர்க்கணும்..

1 minute ago, விசுகு said:

தமிழரின் தாயகப்பகுதியை மாசு படுத்துதல்

மற்றும் தமிழரின் இயற்கை வளங்களை அழவுக்கதிகமாக பாவித்தல் தவிர்க்கப்படணும்

உடன் தேவை கருதி

நீண்டகாலத்தில் தீமை தரும் திட்டங்களை தவிர்க்கணும்..

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

இத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும்  போது நிச்சயமாக இவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். வெறுமனே சுன்னாகம் மின் நிலையம் போன்று ஆரம்பிக்க விடக்கூடாது. அதற்கேற்ற ஆய்வுகள் செய்யப்பட்டு அதனடிப்படையில் ஆரம்பிக்கலாம். 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.