Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமை தொடர்ந்து இறுதிப் போரில் வடக்கிற்கு வெளியே இருந்த புலிகளின் முன்னாள் தளபதி நகுலனும் கைது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி நகுலன் கைது

nagulanசிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான நகுலன் இன்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகுலன் என அழைக்கப்படும், கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி இன்று காலை, கோப்பாய் தெற்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து, சிவிலுடையில் சென்ற தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன், இறுதிக்கட்டப் போரின் போது, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராமுடன் இணைந்து செயற்பட்டவர்.

புலிகளின் முன்னாள் தளபதி ராம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், நகுலனும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இவர்கள், சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர், 2013ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

http://www.puthinappalakai.net/2016/04/26/news/15606

ராமை தொடர்ந்து இறுதிப் போரில் வடக்கிற்கு வெளியே இருந்த புலிகளின் முன்னாள் தளபதி நகுலனும் கைது:

 

புலிகளின் தளபதிகளும் - கைதுகளும் - தொடரும் மர்மங்களும் - விசேட தொகுப்பு - குளோபல் தமிழ்ச் செய்திகள்

ராமை தொடர்ந்து இறுதிப் போரில் வடக்கிற்கு வெளியே இருந்த  புலிகளின் முன்னாள் தளபதி நகுலனும் கைது:-


யாழ்ப்பாணம் – நீர்வேலி தெற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி தளபதி நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் சிவில் உடையில் சென்ற அடையாளம் தெரியாத நபர்களால் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


இவர் இன்று காலை விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளதுடன்,  இதனை நீர்வேலியில் உள்ள தரப்பினர் சிலரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.


நகுலனின்  வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை மாலை சென்ற அடையாளம் தெரியாதவர்கள், அவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


அதனைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் அவரது வீட்டிற்குச் சிவில் உடையில் சென்றவர்கள், தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அவரை விசாரணைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு, அவரின் தந்தையுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.


இந்நிலையிலேயே மேலதிக விசாரணைகளுக்காக நகுலன் என்ற கணபதிப்பிள்ளை சிவமூர்த்தியை கொழும்பிற்கு அனுப்பிவைப்பதாக சிவில் உடையில் சென்ற நபர்கள் அவரின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.


நகுலன் என்ற கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி திருமணம் முடித்து வாழ்ந்து வருவதுடன் அவர் ஒருபிள்ளையின் தந்தையுமாவர். எனினும் அவர் புனர்வாழ்வு பெறவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய அவரின் பெற்றோர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


இதேவேளை, புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம், வானொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட  நிலையில் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.


முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காலப் பகுதியில் ராம், மற்றும் நகுலன் ஆகிய இரு உயர் மட்டத் தளபதிகளே வடக்கிற்கு வெளியே  கிழக்கில் களத்தில் நின்றவர்கள். இவர்கள் இருவரும் கிழக்கின் முன்னாள் தளபதி கருணா என்ற வினாயகமூர்த்தி முரளீதரனுடன் தொடர்புகளை பேணி இராணுவத்துடன் இணைந்து செய்ற்பட்டார்கள் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருந்தன.

பின்னர் இவர்கள் இருவரையும் இராணுவத்தினர் வழிநடத்தி, புலிகளின் தலமைமைப் பொறுப்பை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், மாவீரர் தின உரைகளை இவர்கள் மூலம் வெளியிட்டதாகவும் பலமான தகவல்கள் வெளியாகி இருந்தன. இராணுவத்துடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகவே இவர்களின் விடுதலை சாத்தியமானது எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத, ஊகங்களின் அடிப்படையில் எழுந்த தகவல்களாகவே இருந்த நிலையில் இப்போ மீண்டும் ராம் அவரைத் தொடர்ந்து நகுலன் ஆகிய இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131510/language/ta-IN/article.aspx

 

 

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

கடும்போக்குச் சிங்கள இனவாதிகளின் கூச்சலுக்கு.... பலிக்கடாவாகிறார்கள் ... முன்னாள் புலிகள். இது தமிழ் மக்களை.. தமிழ் மக்களின் அரசியலை.. அச்சுறுத்தவும் பாவிக்கப்படும். மைத்திரி அரசின்.. கோரமுகம் எனிக் கொஞ்சம் கொஞ்சமா வெளிக்கும். மைத்திரி மகிந்தவின் முன்னாள் கூட்டாளி என்பதை தமிழர்கள் தான் மறந்து போயிருந்தனர். எல்லாச் சிங்களவனும் ஒன்று தான்.. தமிழர்கள்.. தமிழர்களின் உரிமை என்று வரும் போது. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நகுலனும் ராமும் 2009 இன் பின் மகிந்த + கோத்தாவின்

நீண்ட திட்டம் ஒன்றிற்காக பகடைக் காயாக ஆக்கப்பட்ட

கருவேப்பிலைகள்

 

நகுலனால் காட்டிக் கொடுக்கப்பட்ட பல முன்னால்

போராளிகள் பலர்

கிழக்கில், ஆயுதம் மெளனிக்கப்பட்ட பின் எஞ்சி இருந்த பல போராளிகளை

கைது செய்ய இவர்கள் ஆற்றிய பங்கு கொஞ்ச நஞ்சம் அல்ல

 

இன்று எழுத்துப் போக்கிரி

 சாத்திரி போன்றோர் பல நூறு முன்னால் போரளிகள்

கைது செய்ப்பப்படும் போது அமைதி காத்து

இன்று இவர்கள் இருவருக்குமாக மூஞ்சிப் புத்தகத்தில்

அழுது வடிகின்றனர்

 

மகிந்த அணியில் எத்தனையோ சமூக விரோதிகள் இருக்கும் போதும்

இவர்களை மகிந்த ஆதரவு என்பதற்காக பந்தாட நினைக்கின்றது

மைத்திரி அரசு

இதன் மூலம் சிங்கள தீவிர அணியை அமைதிப் படுத்துகின்றேன் என்று காட்டி

முன்னால் போராளிகளை வதம் செய்ய தொடங்கி விட்டது

 

கருவேப்பிலைகள் என்றுமே

கருவேப்பிலைகள் தான்

 

சிங்களம் சப்பித் துப்ப தொடங்கி விட்டது

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உயிரினங்களையும் அடையாளம் கண்டுகொள்ளும் அறிவையும், ஆற்றலையும் மனிதனுக்கு அளித்துள்ள இறைவன், தன்னினத்தை அறிந்துகொள்ளும் ஆற்றலை மனிதனுக்கு அளிக்கத் தவறியது ஏனோ?? :(    

புலிகளின் முன்னாள் தளபதி நகுலனிடம் தொடர்நது வைத்து விசாரணை

 

கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டளையிடும் அதிகாரியாக இருந்த கணபதிபிள்ளை சிவமூர்த்தி என்றழைக்கப்படும் நகுலனிடம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் வைத்து அவர், நேற்று (26) மாலை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரான ராம் வழங்கிய தகவல்களையடுத்து நகுலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணபதிபிள்ளை சிவமூர்த்தி என்றழைக்கப்படும் நகுலன் இறுதி யுத்த காலத்தில் நாட்டில் இருந்து தப்பிச் சென்று பின்னர் புதுமாத்தலன் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் நலன்புரி முகாமில் சில ஆண்டுகள் இரகசியமான முறையில் வாழ்ந்துள்ளதுடன், அங்கு இவர் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகுலன் கைது: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
 
27-04-2016 12:46 PM
Comments - 0       Views - 1

-எம்.றொசாந்த்

விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதியாக இருந்த நகுலன் என்று அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிறிசிவமூர்த்தி, பயங்கரவாதத் குற்றத்தடுப்புப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை (26) கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைக்குழுவின் யாழ்;ப்பாண அலுவலகத்தில்  இன்று புதன்கிழமை (27) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/170800/%E0%AE%A8%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-#sthash.ZPppxJh2.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ புதிசாக நடப்பது போல.. எதையோ மறைக்க.. அச்சத்தை உண்டு பண்ண.. இந்த நடவடிக்கைகள். அந்த நோக்கம் என்ன என்று ஆராய்வதும்.. கைதிகள் பாதுக்காப்படுவது உறுதி செய்யப்படுவதுமே முக்கியம்.

இறுதிப் போரில் சரணடையும் எல்லோருக்கும் மன்னிப்பு அளிக்கப்படும் என்ற வாக்குறுதி நோர்வேயால் அளிக்கப்பட்டிருந்தும்.. இன்று வரை முன்னாள் போராளிகள் சரணடைந்தும்.. அடையாமலும் சிரமங்களையே சந்திப்பதால்.. இந்த விவகாரங்கள் சர்வதேச மயப்படுத்தப்படுதல் வேண்டும்.. இவர்களின் மனித உரிமைகள் பேணப்பட. இப்படித்தான் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பலர் இப்போ இல்லாதோர்.. இறந்தோர் பட்டியலில் ராணிலால் இணைக்கப்பட்டுள்ளனர். மகிந்தவை விட ரணில் பலே கில்லாடித்தனமாக தமிழர்களை சீரழிக்க வல்லவர். :rolleyes:

இரண்டு கோஷ்டியும் திருந்தாது போல .

முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்காகத்தான் சில வேலைத்திட்டங்கள் முன்னே நடந்துள்ளது போல் தெரிகிறது. அதைவிடவும் வைரவனின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டியுமுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.