Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன்

Featured Replies

Quote

 

இவையெல்லாம் வெறுமனே சம்பவங்களோ மறுபடி இரைமீட்பதற்கான வரலாற்றுப் பதிவுகளோ அல்ல. நமது தவறுகள் ஒரு சுழற்சி போல ஒரு எல்லைக்குள்ளேயே மீண்டு வருகின்ற போது மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியவை.

அதிலும், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான் ஒடுக்குமுறை திட்டமிட்டு இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான போர் என்ற விம்பம் உருவமைக்கப்பட்ட நாளிலிருந்து மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டிய கற்கைகள். இந்த விம்பத்தின் ஒருபகுதியான புலிகளுக்கு எதிரன அரசியலெல்லாம் இலங்கை அரச சார்பானதாக மாற்றமடைந்து விடுமோ என்ற அச்சம் எழுவது இயல்பானது.

இவற்றிலிருந்து வெளியேறி, தவறுகளை சுயவிமர்சம் செய்துகொள்ளவும், அதன் வெளிச்சத்தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சரியான திசைவழியை நோக்கிச் செல்லவேண்டும் என்பதுவும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் அவா.

தவறுகளைக சாவகாசமாகக் கடந்து சென்று மனிதாபிமானமற்ற கோரத்தனமான சமூகத்தைத் தோற்றுவிக்க நாம் காரணமாகிவிடக்கூடாது.

ஒவ்வொரு தவறுகளையும் எமது எதிரிகள் பயன்படுத்திக்கொண்டு முழுப் போராட்டமும் தவறு என நியாயப்படுத்துவதற்கான வழிகளை நாமே ஏற்படுத்திக்கொடுக்கிறோம்.

புலிகளுக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் நூலிடை இடைவெளி தான் காணப்படுகிறது. இரு பிரிவினருமே குறைந்தபட்ச சமூக அக்கறை கூட இல்லாமல் தமது சொந்த நலன் சார்ந்த உணர்ச்சி அரசியலையே முன்வைக்கின்றனர். ஏதாவது ஒரு வகையில் இவ்விரு பிரிவினருமே எங்காவது ஒரு அதிகாரவர்க்கத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவு நிலைப்பாட்டையே வரித்துக்கொள்கின்றனர். தாம் சார்ந்த குறுகிய நலன்களை நோக்கி அரசியல் தலைமையற்ற ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணையக் கோருகின்றனர். இறந்துபோன காலத்தின் அவலங்களை மறுபடி பேசுவதெல்லாம் இந்த இரண்டுக்கும் அப்பாலான புதிய அரசியல் சிந்தனையை உருவாக்குமானால் தெற்காசியாவின் தென் மூலையிலிருந்து புரட்சிக்கான வேர்கள் படர வாய்ப்புக்களுண்டுபளள

 

தவறுகளை சுயவிமர்சனம் செய்து அதன் வெளிச்சத்தில் போராட்டத்தை சரியான திசையில் கொண்டு செல்வது சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் அவா என்று கட்டுரையாளர் குறிப்பிடுவது அறிவார்ந்த சிந்தனை. ஆனால் அப்படியான சிந்தனை முறைக்கும் எமது சமூகத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி உண்டு. எமக்குள் நாமே இரைதேடும் சாதியமரபில் உருவான சமூகத்தில் இவ்வாறான சிந்தனைகள் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதே யதார்த்தம்.அவ்வாறான சிந்தனை ஒரு அறிவான அழகிய கனவு தவிர அது நிஜமாகமுடியாது.

கொலைகள் ஏன் நடந்தது என்ற கேள்வியே அவசியமானது. அக்கேள்வியை யாரைநோக்கி கேட்கின்றோம் என்பதுபிரதானமானது. புலியை நோக்கி கேட்டு மற்றவர்கள் யோக்கியராகமுடியாது காரணம் ஏனைய இயக்கங்களுக்குள் நடந்த உட்படுகொலைகளை தவிர்த்துப்பார்க்க முடியாது. முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் முன்னால் சிங்களப்பேரினவாதம் என்ற அழுத்தத்தின் பிரகாரமாவது ஒன்றுபடமுடியாத நிலையானது கொலைகளுக்கு முதற்படியாக உள்ளது. எமது தேடலானது ஒன்றுபட முடியாததற்கு முதற்படி என்ன , ஒருவனை ஒருவன் ஏற்க முடியாத அடிப்படை ஜனநாயக விரோத பண்பு எங்கிருந்து ஊற்றெடுக்கின்றது என்ற பல கேள்விகளுக்கான விடைகளை தேடி கொலைகளைக் கடந்து ரெம்ப தூரம் பின்நோக்கிப்போகவேண்டியுள்ளது. இல்லாத பட்சத்தில் இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னரும் இனி ஒரு போராட்டம் தொடங்கப்பட்டால் அதிலும் ஆளையாள் மண்டையில் போட்டுக்கொண்டிருப்பார்கள். 

எமக்குள் பல கொலைகள், மோதல்கள், மத பிரதேசவாதப்பிரிவினைகள் எல்லாம் ஏற்பட்டது. அது ஒவ்வொரு தனி மனிதனது முடிவு என்று சிந்திப்பதை கடந்து அந்த தனிமனிதனை இந்தச் சமூகமே உருவாக்கியுள்ளது. இந்த முரண்பட்ட சமூகமே தனி மனிதனூடாகவோ அல்லது அமைப்புரீதியாகவோ தனது முரண்பாட்டை கால மாற்றத்திற்கேப்ப முன்நகர்த்துகின்றது என்ற புரிதல் அவசியமானது. நாம் புலி புலி எதிர்ப்பு தரப்பு என்பதையே கடந்து செல்ல வக்கற்றவர்களாக இருக்கும் நிலையில் மாற்றம் என்பது நடமுறைக்குச் சாத்தியமில்லை. 

 

 

  • Replies 53
  • Views 3.5k
  • Created
  • Last Reply

"நாம் புலி புலி எதிர்ப்பு தரப்பு என்பதையே கடந்து செல்ல வக்கற்றவர்களாக இருக்கும் நிலையில் மாற்றம் என்பது நடமுறைக்குச் சாத்தியமில்லை. "

இந்த விடயம் தான் எனக்கு விளங்காதது .

அது என்ன புலி எதிர்ப்பு தரப்பு என்பதையே கடந்து செல்லுதல் ?

புலி எதிர்ப்பு தரப்பு மட்டுமா அதை மறந்து கடந்து செல்லவேண்டும் ?

 

டெலோ இயக்க தலைவர் இன்று நினைவு கூரப்படுகின்றார் அதுதான் இந்த திரியில் இணைக்கபட்ட செய்தி ,

அதை கூட ஏற்றுகொள்ளும் பக்குவமற்றவர்களின் அத்தனை பதிவுகளும் கண்ணில் படாமல் புலி எதிர்ப்பு மட்டுமே கண்ணில் படுகின்றததுதான் விந்தையிலும் விந்தை .

பிழை செய்தவர்களை குற்றம் சொல்லாமல் அதை பிழை என்று சொல்பவர்களில் தானாம் பிழை 

இந்த ஒரு பட்ச நிலைபாட்டில் இருந்து நீங்கள் மாறாதவரை எவருமே அடுத்த கட்ட அரசியலுக்கு செல்ல வக்கற்றவர்கள் தான் . 

 

On 30/04/2016 at 5:33 PM, Sasi_varnam said:

வாசிக்கும் போது இதயம் கனக்கின்றது. ஈழ விடுதலை போராட்டத்தை ஆச்சரியத்தோடும், சாகசச் செயல்கலாகவும் மட்டுமே பார்க்கத் தெரிந்த வயது அது.
மண்ணில் சாய்க்கப்பட்ட அணைத்து போராளிகளுக்கும் மனதுக்குள் அழுது அவர்களின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
நம் போராட்ட காலத்தில் கரை படிந்த துயர நாட்கள் இவை.

சில காரணங்களுக்காக மாற்று இயக்கங்களை போற்றமுடியாமலும்
பல காரணங்களுக்காக புலிகள் இயக்கத்தை தூற்ற முடியாமலும் கடந்த, கடக்கின்டற காலங்கள்...

 

 

 

இதற்கு பெயர் தான் விஷம் விதைப்பது .

இதைதான் புலிகள் கடந்த முப்பது வருடங்களாக விதைத்துவிட்டு  சென்றார்கள் .

உலகம் முழுக்க தமிழ்இனம் இந்தளவிற்கு பிரிந்து கிடந்து எதையும் ஒன்று சேர்ந்து சாதிக்கமுடியாமல் இருப்பதற்கு ஒரே காரணம் இந்த விஷவிதைதான் .

அதை தமிழர்களுக்குள்  விதைத்தவர் ஒருவர் தான் அது தான் ஆலமரமாக வளர்ந்து விழுதுவிட்டது .நாட்டிற்காக போராடபோனவர்களை எதிரியாக துரோகியாக பார்த்தவர் அவர் மட்டுமே .

ஆலமரம் சரிய மாற்றங்கள் படிப்படியாக வந்துகொண்டு இருப்பது இன்று கண்கூடாக தெரிகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிற்கு போராடப் போனவர்களையும் அவர் உறவுகளையும் அப்பாவி பொதுமக்களையும் எதிரியாக துரோகியாக 87 களிலும் வவுனியாவிலும் அன்பாக உபசரித்தவர்கள் தானே மற்றவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை தவிர, மற்ற போராளிக்குழுக்களை போராட விட்டிருந்தால் சிங்களவர்கள் இப்ப ஈழத்தை கொடுத்திருப்பார்கள். மக்கள்,புரட்சி,ஜனநாய‌கம்  போன்றவை இந்த குழுக்களால் தான் தமிழ்  மக்களுக்கு எடுத்து கொடுக்க முடியும் என சிங்கள தோழர்கள்  உணர்ந்து தமிழ்மக்களுக்கு ஈழ‌த்தை கொடுத்திருப்பார்கள்.....புலிகள் கெடுத்து போட்டார்கள்

3 hours ago, arjun said:

"நாம் புலி............ புலி எதிர்ப்பு தரப்பு என்பதையே கடந்து செல்ல வக்கற்றவர்களாக இருக்கும் நிலையில் மாற்றம் என்பது நடமுறைக்குச் சாத்தியமில்லை. "

.

இப்ப வாசியுங்கோ அவர் இரு பகுதியினரையும் குறை சொல்லியுள்ளார் என்பது  புரியும்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.