Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்மாந்துறையில் விசமிகளால் இந்து ஆலயம் உடைப்பு

Featured Replies

3936_1463169734_PhototasticCollage-2016-

சம்மாந்துறை கோரக்கர் கோயில் கிராமத்திலுள்ள அகோரமாரியம்மன் ஆலயமும் அதேவளாகத்திலுள்ள பழம்பெரும் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் ஆலயத்தில் சுற்றியிருந்த பரிவாரமூர்த்தி ஆலயங்களில் உள்ள சுவாமிகள் சுருவங்களை இனம் தெரியாத விசமிகளால் உடைத்து தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.

வழமைபோல இன்று வெள்ளிக்கிழமை ஆலயத்தின் பூஜைக்காக கதவைத்திறந்து உள்ளே சென்றபோது ஆலயத்தைச் சுற்றியுள்ள 9 பரிவாரமூர்த்தி ஆலயங்களில் 7 ஆலயங்கள் உடைக்கப்பட்டு இங்கு உள்ளிருந்த லிங்கங்கள், தகர்தெடுக்கப்பட்டு வெளியில் மணலில் தலைகீழாக புதைக்கப்பட்டுள்ளன அதேவேளை அங்கிருந்த சாமிபடங்கள் வெளியே எடுக்கப்பட்டு மணலினுள் புதைக்கப்படட்டு மண்மேடுபோன்று ஆக்கப்பட்டு அதில் தமிழ் எழுத்துக்கள் புரியாதவாறு சந்தேகமாக எழுதப்பட்டுள்ளதுடன் 999 என 9 தடவைகள் மணலில் எழுதப்பட்டுள்ளதுடன் மேலும் ஸ்ரார்ட் அதாவது ஆரம்பம் எனவும் எழுதப்பட்டுள்ளது

அதேவேளை அகோரமாரியம்மன் ஆலயத்திற்கு முன்னாலிருந்த பிரதான பெரிய திரிசூலம் தகர்கப்பட்டு வீழ்த்தகப்பட்டுள்ளது ஆலய மூலஸ்தானத்திற்கான பிரதான கதவை தகர்ப்பதற்கு முயற்சிசெய்யப்பட்டு அவை கைகூடாததையிட்டு கதவைகொத்தியுள்ளனர் திரைச்சீலை மற்றும் பெரிய குத்துவிளக்குகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளையார் ஆலயத்திலும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த நாகதம்பிரான் ஆலயத்தினுள் இருந்த 7 நாகதம்பிரான் வெணகல சிலைகளை அங்கிருந்து அகற்றி வெளியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் நடுவே பேனா ஒன்றும் காணப்படுகின்றது இவ்வாறு ஆலயத்தினை உடைத்து நாசப்படுத்தியுள்ளனர்

இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் விசேட தடவியல் பிரிவு மற்றும் மேப்பநாயுடன் தேடுதல் நடாத்தி விசாரணைகளை  மேற்கொண்டுவருகின்றனர் இதேவேளை ஆலயத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் அமைந்திருப்பதுடன் அருகில் கோரக்கர் தமிழ் வித்தியாலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
இதேவேளை .இச்சம்பவ இடத்திற்கு தமிழ். தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், மற்றும் தமிழரசு கட்சி முக்கியஸ்தகர் ஜெயசிறி, ஆகியோர் சென்று நிலமைகளை பார்வையிட்டுள்ளனர்

3936_1463169734_temple100-550x670.jpeg   

3936_1463169734_FB_IMG_1463128768561.jpg   

3936_1463169734_FB_IMG_1463128758987.jpg   

http://battinaatham.com/description.php?art=3936

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அவன் செயல்.......என்று சொன்னீங்கள் என்றால் உங்களது பிரசர் குறையும்......அந்தசமுகம் செய்திருக்கும் இந்த சமுகம் செய்திருக்கும் என்று நினைக்க வெளிக்கிட்டால் ......உங்களது மன அழுத்தம் கூடும் பின்பு டாக்குத்தரிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எல்லாம் அவன் செயல்.......என்று சொன்னீங்கள் என்றால் உங்களது பிரசர் குறையும்......அந்தசமுகம் செய்திருக்கும் இந்த சமுகம் செய்திருக்கும் என்று நினைக்க வெளிக்கிட்டால் ......உங்களது மன அழுத்தம் கூடும் பின்பு டாக்குத்தரிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

 செய்கிறவர்களுக்கும் பிறசர் குறையும்.

  • தொடங்கியவர்

 அகோர மாரியம்மன் ஆலயத்தைச் சேதப்படுத்தியது யார்?

அகோர மாரியம்மன் ஆலயத்தைச் சேதப்படுத்தியது யார்?

சம்பாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த அகோர மாரியம்மன் ஆலயம் மற்றும் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் ஆகியவற்றை சேதமாக்கியவர்கள் யார் என்பதை உடனடியாகக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனோ கணேசன் சம்பாந்துறை காவல்துறை அதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சம்பாந்துறை காவல்துறை பொறுப்பதிகாரி உபுல் பிரியலால் மற்றும் சம்பாந்துறை பிரிவுக்குட்பட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் டி.ஆர். ரணவீர ஆகியோருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அவர் குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்திருப்பதாவது,

கடந்த காலங்களில் மதத் தலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இந்தச் சம்பவம் மூலம் தொடரக்கூடாது என்பதில் நான் கவனமாக உள்ளேன்.

பல மதத்தவர், இனத்தவர் வாழும் இந்தப் பிரதேசத்தில் இப்படியான சம்பவங்கள் நடப்பது தேவையற்ற பதட்ட நிலையை உருவாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கும்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை விரைவில் இனம்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

http://tamilleader.com/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Athavan CH said:

 அகோர மாரியம்மன் ஆலயத்தைச் சேதப்படுத்தியது யார்?

அகோர மாரியம்மன் ஆலயத்தைச் சேதப்படுத்தியது யார்?

சம்பாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த அகோர மாரியம்மன் ஆலயம் மற்றும் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் ஆகியவற்றை சேதமாக்கியவர்கள் யார் என்பதை உடனடியாகக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனோ கணேசன் சம்பாந்துறை காவல்துறை அதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மனோ கணேசனுக்கு உள்ள அக்கறையில்..... ஒரு துளியாவது எதிர்க்கட்சி  தலைவர் பதவியில் இருக்கும் சம்பந்தனுக்கு இல்லாதது..... 
மிகவும் வெட்கப் பட வேண்டிய  விடயம். இப்படி.... "கோமாவில்" இருக்கும் ஒரு தலைவர் இருப்பது, தமிழினத்தின் சாபக்கேடு.:mellow:

எங்கட மக்களுக்கு என்ன பிரசனை எண்டு விளங்குதில்லை. உண்டு கொளுத்தவைக்கு அடையாளப் பிரச்சனை. வழி  இல்லாதவனுக்கு சாப்பாடே பிரச்சனை. உண்டு கொளுத்தவை தங்கடை பிரச்சனை சாப்பாட்டுக்கே வழி இல்லாதவனை கொண்டு தீர்க்க்கப் பாக்கினம். அவை வெளி நாடுகளிலை ஏப்பம் விட்டுகொண்டு வாழ வழி இல்லாதவனை உசுப்பிவிடுகினம். இந்த ஏப்பம் விடிகிற கோமாளிகளிடமிருந்து ஏமாளிகள் தப்புவது எப்படி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, hasan said:

உண்டு கொளுத்தவை திண்டது செமிக்கவே அடுத்தவருடைய ஆலயத்தை சேதப்படுத்தி உள்ளனர்.

ஆலயத்தை சேதப்படுத்தி ஏப்பம் விடும் கோமாளிகள் அந்த நேரத்தை ஹசன் குறிப்பிடும் வாழ வழி இல்லதவனுக்கு உதவி செய்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இனசுத்திகரிப்பு என்பது இது தான். எங்கே சம் சும் கும்பல்.. பேப்பர் படிக்குதோ..??! :rolleyes:tw_angry:

3 hours ago, hasan said:

எங்கட மக்களுக்கு என்ன பிரசனை எண்டு விளங்குதில்லை. உண்டு கொளுத்தவைக்கு அடையாளப் பிரச்சனை. வழி  இல்லாதவனுக்கு சாப்பாடே பிரச்சனை. உண்டு கொளுத்தவை தங்கடை பிரச்சனை சாப்பாட்டுக்கே வழி இல்லாதவனை கொண்டு தீர்க்க்கப் பாக்கினம். அவை வெளி நாடுகளிலை ஏப்பம் விட்டுகொண்டு வாழ வழி இல்லாதவனை உசுப்பிவிடுகினம். இந்த ஏப்பம் விடிகிற கோமாளிகளிடமிருந்து ஏமாளிகள் தப்புவது எப்படி

மதக் கோமாளிகள் இதற்கு மேலும் செய்வார்கள்

மதக் கோமாளிகள் இப்ப தமிழ் ஏமாளிகளின் வளங்களை ஏப்பமிடுவதில் வலு தீவிரமா நிக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Athavan CH said:

யாருக்கோ பாம்பு கண்ணைக் கொத்தப்போகின்றது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.