Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம் நடிகருடன் விரைவில் திருமணம்: நடிகை சமந்தா அறிவிப்பு

Featured Replies

இளம் நடிகருடன் விரைவில் திருமணம்: நடிகை சமந்தா அறிவிப்பு

 


 

  • samantha8.jpg

இளம் நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார்.

ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகமாட்டேன். என் வருங்கால கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பேன்.

எனக்குச் சமைக்கத் தெரியாது. ஆனால் என் காதலருக்கு நன்கு சமைக்கத் தெரியும். நான் கோபத்துடன் பேசுவேன். அதிகம் உணர்ச்சிவசப்படுவேன். ஆனால் அவர் மிகவும் சாந்தமாக இருப்பார். மிகவும் பொறுமைசாலி. சமூகசேவைகளில் ஆர்வமாக இருப்பார். அதனால்தான் நான் அவரைக் காதலித்தேன் என்று கூறியுள்ளார்.

http://www.dinamani.com/cinema/2016/05/23/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article3447153.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

சமூக சேவை - ஆ... சித்தார்த்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

சமூக சேவை - ஆ... சித்தார்த்

p86.jpg

சித்தார்த்துக்கு ஜாதகத்திலை ஏதோ தோஷமாம். அதுதான் இரண்டு பேருக்கும் சேர்த்து பூஜை நடக்குது.:cool:

  • தொடங்கியவர்
காதல் ஆசை சமந்தாவையும் விடவில்லை
 
24-05-2016 01:20 AM
Comments - 0       Views - 86

article_1464020856-2.jpg

'காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே அதை தட்டி கேக்க 
உன்னை விட்டால் யாரும் இல்லையே'

கடந்த சில நாட்களாக சமந்தா இவ்வாறான பாடல்களைதான் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாராம். என்னவென்று விசாரித்து பார்த்ததால் சமந்தா திருமணத்துக்கு தயாராகிவிட்டார் என்கிறார்கள்.

காதலில் விழுந்துள்ளதாக அவ்வப்போது வெளியாகிய செய்தியை தொடராக மறுத்து வந்த சமந்தா, தற்போது தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் உள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தனக்கு காதல் வந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.

சமந்தா அளித்த பேட்டியின் விவரம்,

கேள்வி:- யாராவது வந்து உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?
பதில்:- காதல் மனநிலையில் இருந்து மாறி திருமணம், குழந்தை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் முழு கவனமும் நடிப்பில்தான். சினிமாவிலேயே மூழ்கி விட்டேன்.

கேள்வி:- திருமண திகதியை முடிவு செய்து விட்டீர்களா?
பதில்:- அது இன்னும் இல்லை. ஆனால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன்.

கேள்வி:- ஒரு இளம் கதாநாயகனை நீங்கள் காதலிப்பதாக கிசுகிசு வந்துள்ளதே? உண்மையா?
பதில்:- உண்மைதான். எனக்கு காதல் வந்து இருக்கிறது. அவரை திருமணம் செய்து குடும்பம், குழந்தை என்று வாழ விரும்புகிறேன்.

கேள்வி:- உங்கள் வாழ்க்கையில் வந்த அந்த நிஜ கதாநாயகன் யார்? அவரை உங்களுக்கு பிடித்துப்போக என்ன காரணம்?

பதில்:- அவர் யார் என்பதை இப்போது சொல்லமாட்டேன். திருமண திகதியை அறிவிக்கும்போது சொல்வேன். எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். நான் விளையாட்டுப் பிள்ளைமாதிரி இருப்பேன். எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவேன். கோபம் வந்தாலும், சந்தோஷப்பட்டாலும் அதன் எல்லைக்கே போவேன். எப்படி பேச வேண்டும். யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.
ஆனால், நான் காதலிப்பவர் அதற்கு நேர்மாறானவர். அவர் எதையும் யோசித்தே பேசுவார். தீர்க்கமான முடிவுகளை எடுப்பார். மிகவும் பொறுமைசாலி. எனக்கு தேவையான விஷயங்கள் இவைதான்.

கேள்வி:- திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா?
பதில்:- சினிமாவை விட்டு விலக மாட்டேன். என் வயதுக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பேன். எனது குடும்ப கௌரவத்தை காப்பாற்றுகிற மாதிரியான வேடங்களை மட்டுமே செய்வேன். நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் கூட திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்.

கேள்வி:- உங்கள் காதல் திருமணத்துக்கு பெற்றோரிடம் சம்மதம் கிடைத்து விட்டதா?
பதில்:- எங்கள் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சுமுகமாக நடக்கும். பெற்றோர்கள் சம்மதம் சொல்லி விட்டனர்.

கேள்வி:- நீங்கள் சமூக சேவை பணிகளுக்காக நிறைய பணத்தை செலவிடுகிறீர்களே? அவர் எப்படி?
பதில்:- அவருக்கும் சமூக சேவைகளில் ஈடுபாடு உண்டு. என்னைப்போல் உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது. எனது சமூக சேவை பணிகளை அவர் உற்சாகப்படுத்துகிறார்.
இல்லாதவர்களுக்கு உதவும் சேவை குணம் அவருக்கு இல்லாமல் இருந்து இருந்தால், நான் காதலித்து இருக்கமாட்டேன். எனக்கு சமைக்க தெரியாது. ஆனால் அவர் நன்றாக சமைப்பார். அசைவ உணவுகளையும் ருசியாக சமைப்பார். எனவே நான் விரைவில் சமையல் கற்றுக்கொள்ள இருக்கிறேன். இவ்வாறு சமந்தா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

தங்கமகன், தெறி திரைப்படங்களில் சமந்தா குடும்ப பொண்ணா அவ்வளவு அழகா நடித்த போதே சந்தேகம் வந்தது..ம்.. நடக்கட்டும்.. டும் டும்..

- See more at: http://www.tamilmirror.lk/172898/%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B2-#sthash.kCZcy6Lk.dpuf
  • தொடங்கியவர்

’எனக்கு கல்யாணம்னா நான்தான் சொல்வேன்... Mind It..!' - கறார் சமந்தா

600samantha-ruth-prabhu145855702700.jpg

சமந்தாவுக்கு விரைவில் திருமணம்!

இந்தச் செய்திதான் இப்போது கோலிவுட்டில் வைரலோ வைரலாகியுள்ளது. சமந்தாவைத் திருமணம் செய்யப்போகிறவர் சினிமாத் துறையைச் சேர்ந்தவர், மூன்றெழுத்து நடிகர் எனத் துவங்கி திருமணம் இந்த மாதம் என்னும் வரையில் பரவிக்கொண்டிருக்கிறது. அதுவும் இவற்றையெல்லாம் சமந்தாவே சொன்னதாகவும் செய்திகள் வந்தன.

 

சமந்தாவின் நெருங்கிய வட்டாரத்தில்   இதுகுறித்து விசாரித்தால், சமந்தாவின் திருமணம் குறித்துப் பரவி வரும் அத்தனை செய்திகளும் வதந்தியே, எந்த மீடியாவிலும் சமந்தா தனது திருமணம் குறித்து பேசவில்லை. தற்சமயம் சமந்தா தனது பட வேலைகளில் பிசியாக இருக்கிறார்.   திருமணம் இவ்வளவு சீக்கிரம் இல்லை. அப்படி திருமணம் எனில் அதிகாரப்பூர்வமாக அவரே அறிவிப்பார் என தெரிவித்துள்ளனர். 

samantha.png

இதனையடுத்து தன்னைப் பற்றிப் பரவி வரும் வதந்திகளைத் தடுக்க ட்விட்டரில் சமந்தாவே இதற்கு பதில் அளித்துள்ளார். அதில் “ நானாக சொல்லும் முன் என் திருமணம் குறித்துப் பேச வேண்டாம். நான் நான் நான் சமந்தாவாகிய நானே சொல்கிறேன். நன்றி” என கூறியுள்ளார். கடந்த மாதம் (ஏப்ரல் 28) பிறந்தநாள் கொண்டாடிய சமந்தாவின் நடிப்பில் தற்சமயம் தமிழில் 24,  தெலுங்கில் பிரம்மோத்சவம் ஆகிய படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அ. ஆ, ஜனதா கேரேஜ் ஆகிய தெலுங்குப் படங்களிலும் தமிழில் வட சென்னை படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/64490-samantha-tweet-about-her-marriage.art

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ற கனவு நாயகியே என்னடி இப்படி குண்டை போடுற?

கீர்த்தி சுரேஷ் பற்றி தகவல் தாங்கள் அடுத்த எனது கனவு கன்னி  ?

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா சமந்தா.. காலி ஆகுதா. பெரிய ரோதனை தீர்ந்திச்சு. உந்த இடத்துக்கு.. ஏதாவது நல்ல பிகரா அறிமுகம் செய்வாங்கல்ல...! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சமந்தாவிடம் அப்படியென்ன விசேடமா கிடக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

அங்க ஒன்னும் விசேசமா இல்லை என்பது தான் பிரச்சனையே. கல்யாணம் கட்டிப் போயிட்டுன்னா.. உந்த இடத்துக்கு விசேசமுள்ளதுங்க வரலாமில்ல. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அங்க ஒன்னும் விசேசமா இல்லை என்பது தான் பிரச்சனையே. கல்யாணம் கட்டிப் போயிட்டுன்னா.. உந்த இடத்துக்கு விசேசமுள்ளதுங்க வரலாமில்ல. tw_blush:

 

ராசா நெடுக்ஸ், தனுஷ் இந்த இடத்தின் சிறப்பு பற்றி இப்படி பாடுகின்றார்.

இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கிவ‌ச்சே....
இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கிவச்சே....
என் உலகத்தை அதுக்குள்ள பதுக்கி வைச்சேன்..

ராசா..ராசா.. ராசா..மன்மதராசா...
லேசா..லேசா...லேசா.. ஆகுது லேசா......

நீங்க ஒரு விசேடமும் இல்லைன்னு சொல்லுறீங்க..  :grin:  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:

 

ராசா நெடுக்ஸ், தனுஷ் இந்த இடத்தின் சிறப்பு பற்றி இப்படி பாடுகின்றார்.

இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கிவ‌ச்சே....
இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கிவச்சே....
என் உலகத்தை அதுக்குள்ள பதுக்கி வைச்சேன்..

ராசா..ராசா.. ராசா..மன்மதராசா...
லேசா..லேசா...லேசா.. ஆகுது லேசா......

நீங்க ஒரு விசேடமும் இல்லைன்னு சொல்லுறீங்க..  :grin:  :grin:

அடப்பாவி.. அவன் சாயா சிங்குக்குப் பாட.. இவன் பய..சமந்தாவுக்கு லிங் கொடுக்கிறாய்யா. என்ன பண்ண... நிலைமை அப்படியாச்சுப் போல. tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image.raw?view=image&type=orig&id=9984

எனக்கும் சமந்தாவை பார்க்க பல்லு நெருடுறதுதான்....:love:

என்ரை வீட்டிலையும் இதேமாதிரி சோபாதான் இருக்கு.....அவ்  t4826.gif

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

image.raw?view=image&type=orig&id=9984

எனக்கும் சமந்தாவை பார்க்க பல்லு நெருடுறதுதான்....:love:

என்ரை வீட்டிலையும் இதேமாதிரி சோபாதான் இருக்கு.....அவ்  t4826.gif

ம்கும் இந்த வயது... .. ல உது தேவையா??

எங்கேயாவது புடிச்சுக்க போகுது??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

image.raw?view=image&type=orig&id=9984

எனக்கும் சமந்தாவை பார்க்க பல்லு நெருடுறதுதான்....:love:

என்ரை வீட்டிலையும் இதேமாதிரி சோபாதான் இருக்கு.....அவ்  t4826.gif

இதெல்லாம் சும்மா பலூனு பலூனு... இது தான் நிஜம். tw_blush:

samantha-ruth-prabhu-is-an-indian-film-a

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, முனிவர் ஜீ said:

ம்கும் இந்த வயது... .. ல உது தேவையா??

எங்கேயாவது புடிச்சுக்க போகுது??

நான் இப்பவும் அந்தமாதிரித்தான்.....ஒருத்தனும் அசைக்கேலாது...tw_blush:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nedukkalapoovan said:

இதெல்லாம் சும்மா பலூனு பலூனு... இது தான் நிஜம். tw_blush:

samantha-ruth-prabhu-is-an-indian-film-a

image.raw?view=image&type=orig&id=9984

பக்கத்திலையிருந்து கடிச்சு கடிச்சு (கையிலை வைச்சிருக்கிற அப்பிளை சொன்னன்) ரிவி பாக்கிற சந்தோசம் இருக்கெல்லே....சொல்லி வேலையில்லை tw_lol:

நெடுக்கர்! எங்கை,எதை,எப்பிடி,என்ன மாதிரி,என்ன நேரம் சாப்பிடோணும் எண்டதெல்லாம் அனுபவ ரீதியாய் படிச்சிட்டம். சாப்பிட்டவனுக்குத்தான் அதின்ரை சுவை தெரியும்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

image.raw?view=image&type=orig&id=9984

பக்கத்திலையிருந்து கடிச்சு கடிச்சு (கையிலை வைச்சிருக்கிற அப்பிளை சொன்னன்) ரிவி பாக்கிற சந்தோசம் இருக்கெல்லே....சொல்லி வேலையில்லை tw_lol:

நெடுக்கர்! எங்கை,எதை,எப்பிடி,என்ன மாதிரி,என்ன நேரம் சாப்பிடோணும் எண்டதெல்லாம் அனுபவ ரீதியாய் படிச்சிட்டம். சாப்பிட்டவனுக்குத்தான் அதின்ரை சுவை தெரியும்.tw_blush:

நெடுக்கர் பாவம் எந்த பலூன்களை கவ்விக்கொண்டு திரியுறாறோ சமந்தா நினைப்புல??

  • கருத்துக்கள உறவுகள்
On 25/05/2016 at 11:39 PM, நிழலி said:

நான் கொஞ்சம் லேட்டாக வந்துட்டன் போல இருக்கு

ம்கும் வந்ததே லேட்டு இதுக்குள்ள

உங்க வெட்டுகத்தி கவனம் ??

நடிகை சமந்தா - நாக சைதன்யா காதல்?

samanatha_naga.jpg

இளம் நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தான் சமீபத்தில் பேட்டியளித்தார் நடிகை சமந்தா. இப்போது அவருடைய காதலர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு சமந்தா அளித்த பேட்டியில், தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று கூறியிருந்ததாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்தப் பேட்டி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகை சமந்தா விளக்கம் அளித்தார் அதில், நான் சொல்லும்வரை திருமணம் பற்றிய பேச்சே கிடையாது என்று கூறியிருந்தார்.

தற்போது, சமந்தாவின் காதலர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன், நாக சைதன்யா தான் சமந்தாவின் காதலர் என்று சொல்லப்படுகிறது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். விரைவில் இருவரும் திருமணம் பற்றிய தகவலை வெளியிடுவார்கள் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.dinamani.com/cinema/2016/05/27/நடிகை-சமந்தா---நாக-சைதன்யா-காத/article3453640.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.