Jump to content

சிவகங்கை அருகே கீழடி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தோண்டத் தோண்ட வெளிவரும் பழந்தமிழர் நாகரிகம்: வெளிநாடுகளோடு பண்ட மாற்று இருந்ததற்கான ஆதாரம்!


Recommended Posts

சிவகங்கை மாவட்டம், கீழடியில் இந்திய தொல்பொருள் துறையின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச் சியில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 18 மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும் வெளிநாடுகளுடன் பண்ட மாற்று இருந்ததற்கான ஆதாரங் களும் கிடைத்துள்ளன.

Sivagangai_04.jpg

(மேலே: சுடுமண் காதணிகள் | கீழே: தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள்.| வலது: இறக்குமதி செய்யப்பட்ட அணிகலன்கள்)

இந்திய தொல்பொருள் துறை யின் பெங்களூரு மத்திய தொல் பொருள் அகழ்வாய்வு பிரிவு சார்பில் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் கீழடியில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் ஈடுபட் டுள்ளனர்.

இது குறித்து தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

கீழடியில் நடைபெறம் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை எங்கும் கிடைத்திராத அரிய வகை தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன. கடந்த ஆண்டு தந்தத்தால் ஆன தாயக் கட்டை கிடைத்தது. தற்போது தந்தத்தாலான காதணிகள் கிடைத் துள்ளன.

அதேபோல சுடுமண் காதணி களும் கிடைத்துள்ளன. வெளிநாட் டோடு வாணிபத் தொடர்பு இருந்த தற்கான ஆதாரங்களும் கிடைத் துள்ளன. பலுசிஸ்தானில் கிடைக் கும் சால்சிடோனி, கார்னீலியன், அகேட் போன்ற அரிய வகை மணிகள், அணிகலன்கள் கீழடியில் கிடைத்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்து பண்ட மாற்று முறையில் அந்த அணி கலன்கள் இங்கு வந்திருக்கலாம். வசதி படைத்தவர்கள் வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காதணிகளையும், வசதி குறைவாக உள்ளவர்கள் சுடுமண் காதணிகளையும் பயன் படுத்தியுள்ளனர்.

மேலும், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 18 மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. இதில் சேந்தன்அவதி, மடைசி, வணிக பெரு மூவர் உண்கலம், சந்தன், எரவாதன், சாத்தன் போன்ற பெயர்கள் கொண்ட எழுத்துக்கள் உள்ளன. இதன் மூலம் மதுரையை ஒட்டிய பெருநகரமாக கீழடி இருந்தது தெரிய வந்துள்ளது. இவையெல்லாம் சங்கக்காலத்தை குறிப்பிடும் முக்கிய ஆதாரங்கள் என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சிவகங்கை-அருகே-கீழடி-2ம்-கட்ட-அகழ்வாராய்ச்சியில்-தோண்டத்-தோண்ட-வெளிவரும்-பழந்தமிழர்-நாகரிகம்-வெளிநாடுகளோடு-பண்ட-மாற்று-இருந்ததற்கான-ஆதாரம்/article8665904.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி போல்...! நல்ல பதிவு....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி போல் tw_thumbsup:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.