Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு தமிழர்கள் கதைக்க இருவர் ஒட்டுக்கேட்கிறார்கள்

Featured Replies

நல்லெண்ணை நிறம். நீண்ட ஆரோக்கியமான விரல்கள். கருமையான கேசம். உருண்டை விழிகள். கிளிச்சொண்டு மூக்கு. கழுத்தில் பெயர் பட்டி. பெயரை வாசிக்கு முன்னர் கைப்பை மறைத்துக்கொள்கிறது. ஜேர்மன் பொறியியல் போன்ற உடல் அசைவுகள். அவள் ஒரு சஞ்சிகையினைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

நல்லெண்ணைக்கும் கருமைக்கும் இடையில் ஒரு நிறம். குழந்தைக் கொழுப்பு வாலிபத்திலும் அவனோடு இருக்கிறது. மொழுமொழு கைகள். கொழுத்த கன்னங்கள். தலை நிறைய முடி. தலையினை இருக்கையில் சரித்து இருந்தபடி தூங்குகிறான். குறட்டை உரிமைக்குரல் போன்று ஒலிக்கிறது.

அவள் காதிற்குள் இசையில்லை. கண்கள் சஞ்சிகையில். அரை அடி தள்ளி அவன் இருக்கை. சமரசமற்ற அவன் குறட்டை. அவள் இருப்பை அவனோ அவன் குறட்டையினை அவளோ உணர்ந்ததற்கான அறிகுறிகளே இல்லை.

புகையிரதத்திற்குள் யாரிற்கோ நெஞ்சுவலி. ஆம்புலன்ஸ் வருகைக்காகப் புகையிரதம் காத்திருக்கிறது. ஜன்னல் வெளியே இரு புறாக்கள். ஒன்று ஆண் மற்றையது பெண். ஆண் பெண்ணின் ஒத்துழைப்பைப் பெறுதற்காய்ப் படாத பாடு படுகிறது. புறாவிற்கு மயிலாட்டம் வரும் என்பதைப் புகையிரதம் பார்க்கிறது. பத்து நிமிடங்கள் நாட்டிய நிகழ்ச்சி தொடர்கிறது. எத்தனையோ அடவுகள் எத்தனையோ உத்திகள். பெண் மசியவே இல்லை. ஆண் பெண்ணின் மண்டையில் இறுக்கி ஒருதரம் கொத்திவிட்டுப் பறந்து செல்கிறது.

ஆண் புகையிரதம் நின்றதே தெரியாது உறங்கிக் கிடக்கிறது. பெண் வைத்த கண் வாங்காது சஞ்சிகை படிக்கிறது.

காலைகள் சமன்பாட்டிற்குக் கட்டுப்பட்டே பிறக்கின்றன. விழித்தவாக்கில் பணி பற்றிக்கொள்கிறது. தனக்குள் நடப்பதைப் பார்;ப்பதற்கோ தனது சத்தங்கங்களைக் கேட்பதற்கோ அவகாசமில்லை. மூளையின் அனைத்து விசையும் சமன்பாடுகளின் பிரகாரம் உள்ளீடுகள் இடப்படுவதையும் வெளியீடுகள் அடையப்படுவதையும் உறுதி செய்வதிலேயே குவிகிறது. இரவு மணிக்கூட்டின் பிரகாரம் வந்து போகிறது.

பக்கத்தில் நான்கு இருக்கைகள். இன்றைக்கு அதில் நான்கு தமிழர்கள். எங்கோ வழமைக்கு மாறாய்ச் செல்கிறார்கள். அதனால் புகையிரதம் சார்ந்தும் அதன் ஒவ்வொரு அசைவுகள் சார்ந்தும் அவர்கள் விழிப்பாய் இருக்கிறார்கள். தாங்கள் இறங்கும் இடம் எப்போ வரும் என்று அவர்களிற்குத் தெரிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது. அதனால் அனைத்தையும் உணர்ந்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள். நாளாந்த பயணிகளிற் பலரிற்கு றெயில் பயணம் பலபத்தாண்டுகள் கழிந்த தாம்பத்தியம் போன்று ஆகிப்போகிறது. புதுப்பயணிகள் நால்வரும் பயணத்தைக் கொண்டாடுகிறார்கள். தமக்குள் சத்தமாய்த் தமிழில் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுள் ஒரு முதிய தம்பதி, ஒரு நடுத்தர வயது மனிதன் ஒரு இளைஞன். இளைஞனும் முதியவரும் சத்தமாய்ப் பேசிக் கொள்கிறார்கள் தமிழிழ்.

'....அந்தக் காலத்தில, ஏ.எல் பெயிலானோண்ண அப்பர் பிடிச்சு கொம்பனியில சேத்து விட்டிட்டார். அப்பரிட்ட படிச்ச பெடியன் தான் அங்க எம்.டி. போனா பீல்ட் வேர்க். அப்ப காரிற்க எப்பவும் போத்தில் இருக்கும். கடனிற்குச் தையல் மெசின் அப்பிடி வாங்கிப்போட்டு கட்டுக்காசு கட்டமுடியாத சனத்திட்ட காசு வாங்கிற உத்தியோகம். கஸ்ரப்பட்ட சனங்களோட தான் வாழ்க்கை. அதுகள் ராச மரியாதை தருங்கள். பதினஞ்சு ரூபா கட்டுக்காசாய் இருக்கும் அதுகள் தாற அரிசி, கோளி அது இது அதுக்கு மேலால இருக்கும். என்ர ஒரு நாள் பேட்டாவே முப்பது ரூபா. அப்ப நான் அங்க ரெண்டு மூண்டு நாள் நிண்டு அதுகளோட பம்பலடிச்சுப் போட்டு இஞ்ச வந்து நான் போட்ட எக்ஸ்ற்றா பேட்டாவை வச்சு அதுகளின்ர கட்டுக்காசைக் கட்டுவன். அப்பிடி ஒரு வாழ்க்கை அது. இனி வராது. சிங்களம், மட்டக்களப்பு நுவரேலியா என்டு அது நினைக்க முடியாது'

'அப்ப இவவை எங்க சந்திச்சனீங்கள்'

'இவளையோ—நானெங்க சந்திச்சது. அங்க காவாலிக்கு ஒருத்தனும் பொம்பிளை தர மாட்டாங்கள். கஸ்ரப்பட்ட ஆக்கள், தரங்குறைஞ்ச ஆக்கள் இப்பிடி ஏதாவது வந்தா தான். ஆனா எனக்கு ஒரு பெட்டை இருந்தவள். இப்ப அவளும் வெளிநாட்டில தான் இருக்கிறாள்'

'அப்ப என்ன பேஸ்புக்கில அவவோட தொடர்பில இருக்கிறீங்களே'



'அவள் கிழவி, எனக்கு வேற வேலையில்லையே அந்தக் கிழவியோட கதைக்க'

 

'எப்பிடி இவ்வளவு இளமையா இருக்கிறியள்?'

 

'நாங்கள் ரெண்டு பேரும் ஒவ்வொருநாளும் நிறைய தூரம் நடக்கிறனாங்கள். வின்ரர் சமறெண்டில்ல. எக்கச்சக்கமாக நடக்கிறனாங்கள்.'

 

'ஏன் தனிய இருக்கிறீங்கள். மகள் பேரப்பிள்ளையளளோட பம்பலாய்ப் போய் இருக்கலாமே'

 

'ச்ச்சீ.. ஒரு நாளும் கூடாது. நாங்கள் இவளிற்கு வேற கோப்பை எனக்கு வேற கோப்பை எண்டு வச்சுத் தான் சாப்பிடுறநாங்கள். எலி வளை எண்டாலும் தனி வளை வேணும். நான் நடந்து போட்டு வந்தால் ஜட்டியோட கதிரையில ஒரு பத்து நிமிசம் கிடப்பன். ஒரு கவலை இல்லை. பிள்ளை வீடெண்டால் மருமோன் வந்தால் ஒதுக்கோணும். பேத்தி வழந்திட்டாள் எண்டு பாக்கோணும். வேற வேலையில்லையே'

 

'எத்தினை வருசம் நீங்கள் வெளிக்கிட்டு'

 

'எண்பதில வந்தனான். முதல் ஜேர்மன் போய், பிறகு ஓப்பிண் விசாவில வந்தன். அப்ப ஒருநாயும் ஒருத்தனுக்கும் இந்த முறையள சொல்லிக்குடுக்கிறேல்ல. எனக்கு ஒரு கரிபியன் காரன் தான் சொல்லித்தந்தவன்'

 

'ஊரிற்குப் போனனீங்களே'

 

'நானேன் போறன். அங்க நான் போய் என்னத்தைச் செய்யிறது. ஒருத்தரும் எனக்கு அங்க இல்லை'

 

'உங்கட கொம்பனியில உங்களோட பம்பல் அடிச்ச ஆக்கள் இல்லையே'



'அவங்கள் எல்லாம் செத்துப் போனாங்கள். நான் குடியை விட்டிட்டு, ஆரோக்கியமா வாழுறதால இருக்கிறன். ஆனால் இப்ப இஞ்ச இருந்து நாலு பிள்ளைக் காரன் கூட அங்க போய் ஏழை எழியதுகளைக் களியாணம் கட்டிப்போட்டு வந்து இங்க இருந்து மாசாமாசம் காசனுப்பிக்கொண்டிருக்கிறாங்கள். அதால அதுகளும் நல்லா வாழுதுகள் தானே'

 

'இங்க நாலு பிள்ளை உள்ளவன், ஏன் அங்க கலியாணம் கட்டோணும். காசனுப்பேலும் எண்டா சும்மா அனுப்ப வேண்டியது தானே?'

 

'அவளின்ர வியாதிக்கு யார் நீயே போய் மருந்து குடுக்கப்போறாய்..?'

 

சமன்பாட்டிற்குக் கட்டுப்பட்டுப் புகையிரதத்தில் பயணிப்போரைக் குலுக்கிப் போடும் சம்பாசனை. பாசை புரியாததால் பலர் றோபோட்டுக்களாய்க் கிடந்தார்கள். மூன்று இருக்கைள் தள்ளி பாதையோரம் இருந்த இருக்கையில் கோபுரத்தில் வேலைக்கேற்ற ஆடையணிந்திருந்த ஒரு தமிழ் தெரிந்த பெண் இந்த நால்வர் திசை நோக்கி நெருப்பைக் கொட்டுப் பார்வையினைச் செலுத்தினாள். கிழவர் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. ஆம்புலன்ஸ் வந்ததால் நெஞ்சுவலி நீங்க, புகையிரதம் நகர்ந்தது.


 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை வாசித்தவுடனே புரிந்து கொண்டேன் ...வழமையாக உங்களது கதைகளை இரண்டு மூன்று தடவைகள்   வாசித்தால் தான்எனக்கு  புரியும்.....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...நல்ல யதார்த்தமான கதை...70,80 களில் லண்டன் வந்தவர்களது அலப்பறை தாங்க முடிகிறதில்லை...அது சரி கோளி என்டால் என்ன?

அண்மையில் ஒரு வெள்ளை நீ இலங்கையா என்று கேட்டார்.நான் ஆம்,ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார் இலங்கையர்களுக்கு அழகான ஸ்கின்னாம்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

அண்மையில் ஒரு வெள்ளை நீ இலங்கையா என்று கேட்டார்.நான் ஆம்,ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார் இலங்கையர்களுக்கு அழகான ஸ்கின்னாம்

கேட்டவருக்கு யாருக்கு எப்படிச் சொல்லிக் குளிரவைக்கலாம் என்று தெரிந்திருக்கின்றதுtw_blush:

 

கதையில் வரும் வயது முதிர்ந்தவர் விடுப்புக் கேட்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனது வாழ்வின் அடிப்படைகளைச் சொல்லுவது பிடித்திருக்கின்றது.

  • தொடங்கியவர்

நன்றி புத்தன்,  ரதி, கிருபன் புங்கையூரான் மற்றும் நுணாவிலான். கோழியில் இருந்த எழுத்துப்பிழையினைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ரதி. 'ள',  'ழ' எத்தனை முயன்றும் சரிப்படுத்தமுடியாத ஒரு பிரச்சினை எனக்கு.

அந்த முதியவர் கதைத்த பல விடயங்கள் வடிகட்டிய அயோக்கியத்தனம் அல்லது மடைமை போன்று வெளிப்படைக்கு எடுத்த எடுப்பில் தோன்றினும் அந்த சம்பாசனையில் பல சுவாரசியமான விடயங்கள் தோன்றின. ஒரு வகையில் பார்த்தால், ஜன்னல் வெளியே தெரிந்த புறாக்களின் அளவிற்கு மனிதத்தை அதன் அத்தனை பகட்டுக்கள், பித்தலாட்டங்கள், இட்டுக்கட்டிய கற்பிதங்களில்களில் எல்லாம்இருந்து பிரித்தெடுத்து அடிப்படை விலங்கு நிலைக்கு இட்டுவந்ததாய்த் தோன்றியது. எந்த ஒரு அதிர்ச்சியும் எதைச் சார்ந்தும் அடையாத ஒரு பேர்வழியாக, முன்முடிவுகள் இன்றி இயற்கையினை அதன் இயல்பில் பார்க்கக்கூடியவராக வெளிப்பட்டமை சுவாரசியமாக இருந்தது. அதனால் பகிhந்துகொண்டேன். 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நோயாளியை அவசர ஊர்தி வந்து கூட்டிப் போவதற்குள் நடந்த ஒரு யதார்த்தமான சம்பாஷனையை அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள்...! இன்றைய காலகட்டத்தில் வயதானவர்களானாலும் தனிய இருப்பதுதான் வசதியென்பதை அந்த வயசானவர் சொல்வது நிஜம்....!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் கொஞ்சம் குழப்பமாக இருந்து எரிச்சலைத் தந்தது. மனைவி வேற்று இனத்தவரா என்ற குழப்பம் வேறு?? முடிவு ஓகே :mellow:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் ஆக்கமென்றால் வாசிக்காமல் கடந்து செல்வதில்லை. நல்ல யதாா்த்தமான சொல்லாடல். வந்தமண்ணில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் சொந்தமண்ணின் வாசனை எம்மில் மணந்து கொண்டுதான் இருபு்பதை அந்த முதியவாின் உரையாடல் விளக்குகிறது, என்றாலும் பக்கம் பாா்த்து உரையாடும் நாகாிகத்தை எம்மவா் படிப்பது அவசியம் என்பதை இவ் ஆக்கம் எடுத்து சொல்கிறது,பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.