Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா குழுமீது அதிரடித் தாக்குதல்

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் அமைந்திருந்த சிங்களப் படைகளின் துணை ஆயுதக்குழுவான கருணா கும்பலின் இரு முகாம்கள் மீது இன்றிரவு 8.30 மணியளவில் அதிரடித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழைச்சேனையில் அமைந்திருந்த இரு முகாம்கள் மீதே இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது கருணா கும்பலிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நெட் இணையத் தளம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சங்கதி

அதிரடித் தாக்குதல் நடத்த வேண்டிய அளவிற்கு பலமாகவும் முக்கியத்துவமான எதிரி இலக்காகவும் கருணா குழு இருக்கிறது என்று சொல்லவாறியள்.

அதிரடித் தாக்குதல் நடத்த வேண்டிய அளவிற்கு பலமாகவும் முக்கியத்துவமான எதிரி இலக்காகவும் கருணா குழு இருக்கிறது என்று சொல்லவாறியள்.

27 Karuna group members died!

  • தொடங்கியவர்

ஐயோ குறுக்காலைபோவான்

நான் அதைச் சொல்லவில்லை. சங்கதியில் இருந்தததை சுட்டுப்போட்டிருக்கிறன். அவ்வளவே.

ஆனால் எதிரியை விட துரொகிகள் ஆபத்தானவர்கள், எதிரியைக் கூட மன்னிக்கலாம் துரோகிக்கு மன்னிப்பில்லை. என்ற கொள்கை நம்மவர்களிடம் இருக்கிறதே. கருணாகுழு பலமாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் முக்கியமாகத் தாக்கப்படவேண்டிய இலக்குகளில் ஒன்று.

  • தொடங்கியவர்

பொன்ட் 007

27 பலி என்று எப்படித்தெரியும்?? (எந்த ஊடகத்திலும் இழப்பு விபரம் வரவில்லையே)

எதிரியை விட துரோகிகள் ஆபத்தானவர்கள் மன்னிக்க முடியாதவர்கள் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் துரோகிகள் பற்றிய எமது ஊடகங்களின் நடத்தை தவறானது. அவர்களிற்கு அனாவசியமான முக்கியத்தை கொடுக்கிறது.

நாம் எந்தளவிற்கு துரோகிகளின் களையெடுப்பு அழிவுகள் பற்றி ஆரவாரப்படுகிறமோ அந்தளவிற்கு அவர்களை முக்கியப்படுத்தி எதிரிக்கு அவர்களின் பெறுமதி பற்றி எம்மை அறியாமலே அங்கீகாரம் கொடுக்கிறோம். இதன் உளவியல் தாக்கம் பற்றி சிந்தித்து உள்ளீர்களா?

எப்போ திருந்தப் போகிறோம்?

நாம் ஆரவாரப்பட வேண்டியது துரோகிகள் களையெடுக்கப்படும் பொழுது அல்ல. துரோகிகள் களையெடுக்கப்பட்டு காலப் போக்கில் அதனால் நிரப்ப முடியாத வெற்றிடம் வந்து எதிரியின் திட்டங்கள் பாழ் அடிக்கப்படு நிலை குலையும் பொழுது. எதிரி பயன் படுத்தும் துரோகிகள் என்ற துருப்புகள் கருவிகளின் களையெடுப்பில் இந்தளவிற்கு அங்கலாய்ப்பது துரோகத்தனத்தினால் நாம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறோம் பலவீனப்பட்டிருக்கிறோம் என்று நாமே....

எப்ப திருந்தப் போறியளோ :lol:

அதிரடித் தாக்குதல் நடத்த வேண்டிய அளவிற்கு பலமாகவும் முக்கியத்துவமான எதிரி இலக்காகவும் கருணா குழு இருக்கிறது என்று சொல்லவாறியள்.

பன்னாடைத்தனமாக செய்திகளை வாசித்தால் இப்படி தான் பன்னாடைத்தானமாக இருக்கும் போல?

கரி நாகம் கருணா குழு என்ன கோவில் மடத்திலா இருகிறார்கள்? பல ஆயிரம் சிங்கள அரசின் இரானுவத்தின் பாதுகாப்பில் கடும் கண்கானிப்போடும் இருகிறார்கள்

அது தான் செய்தியின் முக்கியத்துவம்...........

நல்ல செய்தி! .. களையெடுத்தலென்ன .... கருவறுக்கப்பட வேண்டும்!

செத்த பாம்பெனினும் கவனமாக அடிப்போம்... கருனா குழுவெனினும் கவனமாக இருப்போம்

  • தொடங்கியவர்

குறுக்காலைபோவான்

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். (உங்களைப் போன்று ஆழமாக என்னால் சிந்திக்க முடியாது)

வேரோடு பிடுங்கி எறிந்து அழித்தாப் பிறகு ஆராவாரப் படுங்கோ அதாலை பாதிப்பு இல்லை அர்த்தமும் இருக்கு. தனியே மேலலோட்டமாக வெட்டிவிட்டு மீண்டு துளிர்விட்டு அழிவை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலைகளில் எந்த மாற்றமும் இல்லாத பொழுதும் நாம் ஆர்ப்பரிப்பது அவர்களது பலத்தையும் எமது இயலாமையையும் மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இது வெட்ட வெட்ட வழரும் பத்தையை வேரோடு பிடுங்கி எறியாது மேலோட்டமாக கத்தரித்துப் போட்டு பற்றி அளவுக்கு அதிகமாக அங்கலாய்ப்பது போன்றது.

உண்மை! குறுக்ஸ்ஸின் கருத்துக்கு முற்றிலும் உடன் படுகிறேன்!!

கடந்த முறைக்கு முதல் முறை நடைபெற்ற சுவிஸ் பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு ஒட்டுக்குழுக்களுக்கு தேவையற்ற அதி முக்கியத்துவம் கொடுத்து விட்டது. ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் உடனடியாகக் களையப் பட வேண்டும் என்ற சுலோகத்துடனேயே அப்பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்தது.

அப்பேச்சுவார்த்தைக்கு பின்பு தான் சொறிநாய் கருணா கும்பலுக்கு பிள்ளை பிடியை இலங்கைப் புலனாய்வுத்துறை பன்மடங்கு அதிகரித்தது. நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு ஒட்டுக்குழு கருணாவை இலக்கு வைக்க, இலங்கை அரசோ அதனை ஆயுதமாக்கியது.

எது எப்படியோ, இன்று கருணா கும்பலும் தேவை போல் உள்ளது. கொழும்புக் குண்டு வெடிப்புக்கள் அதனுள் ஊடுருவியிருக்கும் சிலராலேயே நடத்தப்பட்டதாக கொழும்புத் தகவல்கள். கொழும்பில் சொறிநாய்களின் அலுவலகங்கள் இருப்பதால் தான் பல காரியங்கள் திரை மறைவில் நடை பெறுகிறதாம்.

.... என்ன குழப்புகிறேன் போல? அழிக்கவும் வேண்டுமென்கிறேன் ..... இருக்கவும் வேண்டுமென்கிறேன் .....

2006 ஆரம்பத்தில் நடந்த சுவிஸ் பேச்சுக்களில் தோலுரிக்கப்பட்டது கருணா குழு என்ற பெயரில் சிறீலங்காவின் அரசபடைகள் புலநாய்வுத்துறை நடத்தும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள் பற்றி. அதாவது கருணா குழு என்ற கோதாவில் சில துரோகிகளை முன்னுக்கு வைத்துக் கொண்டு சிறீலங்கா படைத்துறை தனது வளங்களை பயன்படுத்தி நிழல் யுத்தம் நடத்துகிறது என்றும் சிறீலங்காவின் படைத்துறையில் அவர்களை கைய்யாழுபவர்களின் பெயர் பதவிகள் இயங்கும் பிரதேசங்கள் முகாங்கள் தொiபேசி விபரங்களோடு ஆதாரப+ர்வமாக தோலுரிக்கப்பட்டது.

அதாவது கருணா குழு என்பது ஒரு மாயை அதன் பின் இருந்து இயக்குவது திட்டமிடுவது போக்குவரத்து வசதிகள் வழங்கல்கள், பாதுகாப்பு, ஆதரவுச் சூட்டுவலு, புலநாய்வு, பிரச்சாரங்கள் என்பவற்றை செய்பவர்கள் சிறீலங்கா அரபடைகள் தான் என்று தோலுரிக்கப்பட்டது. இன்று கருணா குழுவின் உயர்பாதுகாப்பு வலைய முகாமை தாக்கிவிட்டோம் என்றோ 27 உறுப்பினர்கள் பலி என்றோ ஆராவாரப்பட்டு என்னத்தை சொல்ல வாறியள்? 2006 ஆரம்பத்தில் ஜெனிவாவில் சர்வதேசத்தின் முன் நீங்கள் நிறுவியது தவறு அவர்கள் உண்மையில் பலமானவர்கள் இண்டைக்கு ஒரு மாதிரி கஷ்டப்பட்டு கெட்டித்தனமாக அடிச்சுப்போட்டம் என்றா?

நன்பர்களே செத்தவர்கள் வேறு யாரும் இல்லை..கருனாவால் கட்டாயமாக் பிடித்து செல்லப்பட்ட எமது உறவுகள் தான்..எதிரியின் தந்திரப்பொறிக்குள் அகப்பட்டு விட்டோம்.. எமக்குள் எம்மை அடிபட விடுவதுதான் அவனது திட்டம்...தந்திரமாக இதிலிருந்த்து தப்ப வேண்டும்...இது சந்தோசப்பட வேண்டிய த்ருனம் இல்லை நன்பர்களே சிந்த்திக்க வேண்டிய தருனம்... குறுக்ஸ் உன்மையானவை உங்கள் கருத்துக்கள்....

  • தொடங்கியவர்

10பேர் பலியென தமிழ்நெட்டின் பிந்திய செய்தி தெரிவிக்கிறது.

2ND LEAD

Paramilitary installations attacked in Valaichenai

[TamilNet, Tuesday, 09 January 2007, 16:35 GMT]

Two paramilitary installations have been attacked in Valaichenai in Batticaloa district around 8:30 p.m. Tuesday. At least 10 paramilitary members were killed and four wounded, according to initial reports. A house at Puthukudiyiruppu and another at Vinayagapuram, both located in distance of 400 meters, were ambushed by armed men who came in three wheelers, Police sources said.

Three wounded paramilitary members were rushed to Valaichenai hospital and a wounded operative was taken to Polonnaruwa hospital.

Sri Lanka Army transferred the three wounded paramilitary members from Valaichenai hospital to Polonnaruwa in military ambulance, medical sources said.

More than 25 paramilitary members were stationed in both the installations, according to Valaichenai residents.

வாளைச்சேனையில் கருணா குழுவினர் முகாம்காம் தாக்குதல்: இருவர் பலி: இருவர் காயம்

மட்டக்களப்பு வாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள கருணா ஒட்டுக்குழுவினர் தங்கியிருந்து முகாம் இனம் தெரியாத ஆயுதாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இன்றிரவு 8.30 மணியளவில் அரச படைகளின் பாதுகாப்புக்கு மத்தியில் இரு வீடுகளில் தங்கியிருந்து கருணா குழுவினர் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது.

இதன் போது கருணா குழு தரப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வாழைச்சேனை விவேகானந்தா வீதியிலுள்ள கருணா குழுவினரது அலுவலகம் மீது இனம் தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலில் ஏற்பட்ட மேலதிக சேதங்கள் பற்றி அறிய முடியவில்லையாயினும் இத் தாக்குதல் குறித்தகருத்து வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் கருணா தரப்பினரின் ஊடகப் பேச்சாளர் (அசாத் மௌலானா) நிராயுத பாணிகளாக அரச கட்டப்பாட்டுப் பகுதியில் அரசியல் பணியில் ஈடுபட்டுள்ள தமது அரசியல் போரளிகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் இரண்டுபேர் உயிரிழந்ததாகவும் இருவர் காயமடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் மட்டக்ளப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தமது மருத்துவப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நால்வர் காயமடைந்ததனை வாழைச்சேனைப் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர். 20 பேர் வரை கருணா தரப்பினரின் அலுவலகத்தில் இருந்ததை வாளைச்சேனைப் பொலிசார் உறுதி செய்துள்ளனர். தாக்குதலில் அதிகமானவர்கள் பலியானதாகவும் தெரிகிறது இருப்பினும் இதனை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

வாழைச்சேனையில் கருணா கும்பலின் முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் - 10 பேர் பலி.

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் அமைந்திருந்த சிங்களப் படைகளின் துணை ஆயுதக்குழுவான கருணா கும்பலின் இரு முகாம்கள் மீது இன்றிரவு 8.30 மணியளவில் அதிரடித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முச்சக்கர வண்டிகளில் வந்தவர்களே கருணா கும்பலின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது.

வாழைச்சேனை விநாயகபுரத்தில் உள்ள முகாம் ஒன்றும் அதற்கு 400 மீற்றர்கள் தொலைவில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த முகாமுமே தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றன.

இத்தாக்குதலில் 10 கருணா கும்பலின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டும், நால்வர் காயமடைந்துமுள்ளதாக தமிழ்நெட் இணையம் தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்தவர்களில் மூவர் முதலில் வாழைச்சேனை மருத்தவமனையிலும் ஒருவர் பொலநறுவை மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டிருந்தனர். வாழைச்சேனை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மூவரும் சிறிலங்கா படையினரால் இராணுவ மருத்துவக்காவு வண்டி மூலம் பொல நறுவை மருத்துமனையில் சேர்த்துள்ளனர்.

-Sankathi-

குறூக்ஸ் சொல்வது சரிதான்.......

இப்படி கண்டமாதிரி எழுதுவதுக்கு எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்?

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடித் தாக்குதல் நடத்த வேண்டிய அளவிற்கு பலமாகவும் முக்கியத்துவமான எதிரி இலக்காகவும் கருணா குழு இருக்கிறது என்று சொல்லவாறியள்.

தலைவர் சொன்னது போல் சிறு பாம்பனெனும் பெரியதடி கொண்டு அடி என்பதுக்கு இணங்க இத்தாக்குதலை எடுத்துக்கொள்ளலாமே குருக்ஸ்.அத்தோடு கருணா அணியினர் கூலிப்படையுடன் இருப்பதால் இத்தாக்குதலை அதிரடி என்று குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.துரதிஸ்ட்டவச

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்தின் இரண்டாவது இணைப்பு

2 ஆம் இணைப்பு) வாழைச்சேனையில் துணை இராணுவக்குழுவினரின் முகாம்கள் மீது தாக்குதல்: 10 பேர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினர் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியான வாழைச்சேனையில் இயங்கி வந்த துணை இராணுவக்குழுவினரின் இரு முகாம்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் துணை இராணுவக்குழுவினரான கருணா குழுவினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பு மற்றும் விநாயகபுரம் பகுதியில் 400 மீற்றர் இடைவெளியில் அமைந்திருந்த துணை இராணுவக்குழுவினரின் இரு முகாம்கள் மீது முச்சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த துணை இராணுவக்குழுவினர்களில் மூவர் வாழைச்சேனை மருத்துவமனைக்கும் ஒருவர் பொலநறுவை மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்ட போதும் பின்னர் வாழைச்சேனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரையும் இராணுவத்தினர், பொலநறுவை மருத்துவமனைக்கு நோயாளர் காவு வாகனத்தில் எடுத்து கொண்டு சென்றனர்.

தாக்குதல்களுக்கு உள்ள இரு முகாம்களிலும் 25-க்கும் மேற்பட்ட துணை இராணுவக் குழுவினர் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

  • தொடங்கியவர்

பதிவு ஒட்டுக்குழவின் உயிரிழப்பு கனக்கவாகச் சொல்லுது. அதுவும் சீராளனை மேற்கோள் காட்டி

வாளைச்சேனையில் கருணா குழுவினர் மூன்று முகாம்கள் தாக்கியழிப்பு: 20க்கு மேற்பட்டோர் பலி! பலர் காயம்.

மட்டக்களப்பு வாழைச்சேனையில் அமைந்துள்ள கருணா ஒட்டுக்குழுவினரின் மூன்று முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் எம்மிடம் கருத்துரைத்துள்ளார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்.......

நேற்றிரவு (செவ்வாய்) 8.30 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 20 தொடக்கம் 25 வரையிலான ஒட்டுக்குழுவினர் பலியாகியதோடு மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவித்த அவர் இது தொடர்பில் முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அழிப்பதுவும் நாமே அழிக்கப்படுவதுவும் நாமே!

இது எதிரியின் சூழ்ச்சிக்கு கிடைத்த அதிரடி வெற்றியன்றி வேறொன்றுமல்ல!

சூழ்ச்சியை சூழ்சியால் வென்று தமிழ் இளைஞர்கள் காக்கப்பட வேண்டும்!

எதிரியை விட துரோகிகள் ஆபத்தானவர்கள் மன்னிக்க முடியாதவர்கள் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் துரோகிகள் பற்றிய எமது ஊடகங்களின் நடத்தை தவறானது. அவர்களிற்கு அனாவசியமான முக்கியத்தை கொடுக்கிறது.

நாம் எந்தளவிற்கு துரோகிகளின் களையெடுப்பு அழிவுகள் பற்றி ஆரவாரப்படுகிறமோ அந்தளவிற்கு அவர்களை முக்கியப்படுத்தி எதிரிக்கு அவர்களின் பெறுமதி பற்றி எம்மை அறியாமலே அங்கீகாரம் கொடுக்கிறோம். இதன் உளவியல் தாக்கம் பற்றி சிந்தித்து உள்ளீர்களா?

எப்போ திருந்தப் போகிறோம்?

நாம் ஆரவாரப்பட வேண்டியது துரோகிகள் களையெடுக்கப்படும் பொழுது அல்ல. துரோகிகள் களையெடுக்கப்பட்டு காலப் போக்கில் அதனால் நிரப்ப முடியாத வெற்றிடம் வந்து எதிரியின் திட்டங்கள் பாழ் அடிக்கப்படு நிலை குலையும் பொழுது. எதிரி பயன் படுத்தும் துரோகிகள் என்ற துருப்புகள் கருவிகளின் களையெடுப்பில் இந்தளவிற்கு அங்கலாய்ப்பது துரோகத்தனத்தினால் நாம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறோம் பலவீனப்பட்டிருக்கிறோம் என்று நாமே....

எப்ப திருந்தப் போறியளோ :lol:

well said. our medias should stop headline news on these disgusting traitor called karuna

பயிர் வளர வேண்டும் என்றால் களை பிடுங்கத்தான் வேண்டும். களை பிடுங்குவதை பரபரப்பு செய்தியாக்காதீர்கள். அடுத்து வரும் "காலங்களில்" சிங்க வயல்களில் அறுவடை நடக்கும். அப்போது உங்கள் செய்தி பசிக்கு நல்ல விருந்து கிடைக்கும். pls wait.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.