Jump to content

இரண்டாம் கட்ட அகழ்வாய்வு; கீழடியில் 3,000-க்கும் மேற்பட்ட பொருள் கண்டெடுப்பு


Recommended Posts

மத்திய தொல்பொருள் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

sivagangai_2863584f.jpg
(படம்)கீழடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகள். (உள்படம்) பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தாணியை காண்பிக்கிறார் தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா.

பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில் கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணி ஜன.18-ல் தொடங்கியது. தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா `தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:

கீழடியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். தற்போது 52 குழிகள் தோண்டியுள்ளோம். சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் இதுவரை சுமார் 3,000-க்கும் மேற்பட்டவை கிடைத்துள்ளன. பழங்காலத் தமிழர்கள் பயன்ப டுத்திய உறுதியான எலும்பினால் ஆன எழுத்தாணி, இரும்பு ஆயுதங்கள் கிடைத்துள்ளன. பழங்காலத் தமிழர்களின் நகர, நாகரிகங் களுக்கான அடையாளங்கள் பல கிடைத்துள்ளன. பல கட்டிடங் களும் கிடைத்துள்ளன. பழங்கால தமிழர்களின் ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பண்டைய கலாச்சாரம், நகர, நாகரிகத்தை இந்த ஆதாரங்கள் மூலம் மெய்ப்பிக்கலாம் என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/இரண்டாம்-கட்ட-அகழ்வாய்வு-கீழடியில்-3000க்கும்-மேற்பட்ட-பொருள்-கண்டெடுப்பு/article8631563.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்


தொன்மையான இனமொன்று தனது இருப்பையும் பிடிமானங்களையும் இழந்து வருகின்றது.உலகத் தமிழினம்  சுயநலத்தேடல்களில் உலகினுள் அமிழ்ந்து தொலைந்தகொண்டிருக்கிறது என்பதை எப்போது உணரப்போகிறதோ!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.