Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசிலாந்தில் விமானம் மூலம் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தில் விமானம் மூலம் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஏ-9, ஏ-15 பாதைகளை மூடி தமிழ் மக்களை பட்டினியால் சாகடிப்பதை கண்டித்து கடந்த சனிக்கிழமை (06.01.07) நியூசிலாந்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

20070110002pd6.jpg

நியூசிலாந்துக்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர், துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த போராட்டம் இடம்பெற்றது.

20070110001vy2.jpg

கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக விமானம் மூலம் "Sri Lanka stop killing Tamils" என்ற வாசகம் தாங்கிய கொடி மைதானத்தை சுற்றி வலம் வந்தது.

20070110004nn1.jpg

இதனிடையே வாசக அட்டைகளை தாங்கிய வண்ணம் ஒக்கிலாந்து நகரத்தின் மத்தியில் தமிழ்மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

20070110005bv6.jpg

சிறிலங்கா அரசாங்கம் தமிழ்மக்களுக்கு இழைக்கும் கொடுமைகள் பற்றிய துண்டுப்பிரசுரங்கள் நியூசிலாந்து நாட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன

http://www.eelampage.com/?cn=30445

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு சிட்னியில் இப்படி ஒரு கவனஈர்ப்பு நடந்தால் எத்தனை பேர் இலங்கை அணியின் ஜேர்சி போடாமல் போவீனம் உம்மை தவிர,சிங்களபைலா அடித்து கொண்டு விளையாட்டு வேறு அரசியல் வேறு என்பார்கள் நம்ம சிட்னிடமிழ்ஸ் இதில மட்டும் இவர்கள் சிறிலங்கன் டமிழ்ஸ் ஆகிவிடுவினம் அப்பு உம்ம நான் சொல்லவில்லை நீர் தான் ஒரிஜினல் தமிழன்.

:lol::lol::D:lol:

நல்லதோரு ஆரம்பம் எந்தெந்த நர்டுகளில் சிரிலங்காவின் பங்கெடுப்புகள் உள்ளதோ அது விளையாட்டானலும், அரசியல் ஆனாலும் சரி இப்படியான போராட்டங்களை நடத்தவதால் ஓரளவாவது உலக நாட்டரின் கவனத்தை எம் பக்கம் திருப்பலாம். போராட்டம் நடத்தியவர்களுக்கு நன்றிகள்.

ஈழத்திலிருந்து

ஜானா

நல்ல புதிய உத்தி. 1 லட்சம் தமிழர் உள்ள லண்டனில் 50ஆயிரம் சிங்களவர் அதிகாரம் செலுத்துகிறான். இங்கேயும் உந்த புதிய உத்தி தேவை.

ஸ்ரீலங்காவின் கோர முகத்தை எடுத்துக் காட்டி சிங்களவரின் முகத்தை இந்த நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். தமிழர்களை கொல்லும் நாசி இனம் என்று ஆங்கிலேயரும் அறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல புதிய உத்தி. 1 லட்சம் தமிழர் உள்ள லண்டனில் 50ஆயிரம் சிங்களவர் அதிகாரம் செலுத்துகிறான். இங்கேயும் உந்த புதிய உத்தி தேவை.

ஸ்ரீலங்காவின் கோர முகத்தை எடுத்துக் காட்டி சிங்களவரின் முகத்தை இந்த நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். தமிழர்களை கொல்லும் நாசி இனம் என்று ஆங்கிலேயரும் அறிய வேண்டும்.

என்ன செய்வது நேசன்.

ஊத்திக் கொடுத்தால் மானத்தை குடும்பத்தோடு அள்ளிக்கொடுக்கவும் தயாராக ஜெயதேவன் போன்றோரும் லண்டனில்தானே இருக்கிறான்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஸ்ரீலங்காவிற்கும் இங்கிலாந்திற்கும் நடந்த கிரிக்கட் போட்டியின்போது தமிழ்ப்பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சென்று தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்தமையையும் இவ்வேளையில் நினைவுகூரவேண்டும்.

அதேவேளையில் இங்கு தமிழினத் தலைவர் என்று இருக்கும் ஒருவர் "எனக்கும் இந்த கிரிக்கட் விளையாட்டுப் போட்டிக்கு வரும்படி அழைப்பும், அதற்கான ரிக்கட்டுக்களும் இருக்கின்றன" என்று புன்சிரிப்புடன் கூறினார். இதனைக் கேட்க ஆச்சரியமும், அதேவேளை அதிர்ச்சியுமாகவே இருந்தது. என்ன, இவரும் அவர்களது வலைக்குள் வீழ்ந்துவிட்டாரா? என்ற கேள்விதான் இதனை அறிந்தவர்களுடைய மனங்களில் எழுந்தது. இப்போதும் சில விடயங்களை அறியும்போதும், அவர்களது சில செயல்களைப் பார்க்கும்போதும் சந்தேகம் எழாமலில்லை. இப்படியானவர்கள் தலைமைப்பீடங்களில் இருக்கும்வரை எம்மினத்திற்கு விடிவு கிடைக்கும் என்பது சந்தேகம்தான்.

Edited by Selvamuthu

நல்ல விடையம். இது போன்று நாம் வாழும் நாடுகள் நடக்கும் நிகழ்வுகள் சூழலுக்கு ஏற்ப எமது பிரச்சார வடிவங்களை ஒழுங்கமைக்க வேண்டும்.

எனவே ஒரே ஒரு முறை தான் பாரம்பரியமான முறை தான் என்று இருக்காது.

இது போலவே நிதி திரட்டல் பற்றி அண்மைக்காலங்களில் பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. இவற்றிலும் இன்றய எதிர்கால தேவைகளிற்கு ஏற்ப புதிய வழிமுறைகள் பயன்படுத்தப்பட வேண்டிய தேவை வருகிறது. நாம் எந்தளவிற்கு சுதந்திர தனியரசை நோக்கி சிறீலங்காவின் ஆட்சியில் இருந்து விலகிச் செல்கிறோமோ அந்தளவிற்கு எம்மை நாமே பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்புகள் அதிகரிக்கிறது. அதனால் எமக்கு தேவையான நிதியும் பல மடங்குகளாக அதிகரித்துக் கொண்டே செல்லும். எனவே திரட்ட வேண்டிய தொகை இலக்கு என்பது பல மடங்காக அதிகரிக்கும். வழமையான உண்டியல், வீடு வீடாக சென்று ஆதரவாளர்கள் அனுதாபிகள் இடம் கேட்பதோ ஏற்கனவே போதிய அளவை பெற்றுத்தராது என்ற நிலமையை அடைந்துவிட்டது. அதே போலவே தமிழர் மத்தியில் இசை நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதால் வரும் நிதியின் அளவும் போதியதாக இல்லாத நிலை அடுத்த 2 வருடங்களிற்குள் எதிர்பார்க்கலாம்.

இவை பற்றிய கருத்துப்பரிமாற்றங்கள் தேவை புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில். இதற்கு ஒரு தனிப்பகுதியை யாழில் ஒதுக்க வேண்டும்.

பாராட்டுக்கள்! அருமையான பரப்புரை முயற்சி. இது போன்ற வித்தியாசமான, மேற்கத்திய ஊடகங்களை இலகுவாக கவர கூடிய உத்திகளை புலம்பெயர் தமிழர்கள் சிந்திக்க, இது ஒரு நல்ல ஆரம்பம். தொடரட்டும் இது போன்ற முயற்சிகள்

இதில ம்கவனிக்கப்படக்குடியது என்னவென்றால் கிரிக்கட் போட்டியை ஒலி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி நிறுவணம் இதையும் காட்டி விவரங்களையும் வளங்கியது இது பல கோடி மக்களின் மனதை அடைந்திருக்கும் ஆக சில ஆயிரம் தமிழனினத்தை கொண்ட நியுஸிலாந்தில் இப்படி திரமை யாக செயற்பட்டதுக்கு அங்கத்தய நியுஸிலாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர்.. ஒஸ்ரேலியாவிலும் இதுபோன்று செய்து காட்டப்பட்டது. கவனத்தை பெற நல்ல விடயம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம். இப்படி ஒரு பிரச்சார முறைக்குள் இறங்கிவிட்டால் தொடர்ந்து ஓரு சில முறை செய்தால் மட்டுமே அதன் தாக்கம் உணரப்படும். சிங்களவனும் பதிலுக்கு இம்முறையில் பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடும். அதற்கும் எதிர்ப் பிரச்சாரங்கள் அவசியம்.

குறுக்காலபோவானின் நிதித்திரட்டல் பற்றிய கருத்துக்களும் மிகச் சரி. வீடுவீடாக மணியடிப்பதைவிட மக்களுக்கு ஆர்வமுள்ள விடையங்களில் அதிக முதலீடு செய்வது உசிதம். எமது மக்களிடம் மட்டும் பணம் சேகரித்து குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டாமல் பல்வேறு இனங்களின் வளமைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு, கனடாவில் property development போன்ற துறைகள் நல்ல இலாபம் கொடுப்பவை. இதில் ஈடுபடும் பிற நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல், Mortgager ஆக செயல்படவும் முடியும். இதற்கான தனியார் நிறுவனங்கள் உள்ளன. குறைந்தது $500,000 உடன் ஒரு முதலீட்டாளராகச் செயல்பட முடியும்.

இவையனைத்தும் சத்தமில்லாமல் நடக்குது ஆனால் மக்களின் பணம் மக்களை போராட்டத்துடன் இணைத்து வைத்திருக்கவென நான் நம்புகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர்.. ஒஸ்ரேலியாவிலும் இதுபோன்று செய்து காட்டப்பட்டது. கவனத்தை பெற நல்ல விடயம் தான்.

இதே போல 99ம் ஆண்டு உலகக் கிண்ண துடுப்பாட்டத்தின் போதும் தென்னாபிரிக்காவில் விமானம் மூலம் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.அதை விட விளையாட்டு மைதானத்துக்கு வெளியே இலங்கை அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன.ஆனால் தொலைக்காட்சியில் அச்சமயம் காட்டப்படவில்லை. இதில் இலங்கைத்தமிழர்களுடன், தென்னிந்தியத் தமிழர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து தமிழர்களுக்கு பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New Zealand Peace Lovers say-Sri Lanka must stop killing Tamil in Sky Paint at Cricket Test Match

New Zealand Peace Lovers say's - Sri Lanka must stop killing Tamil in a Sky Painting, during last Cricket Test Match on Saturday, observers say. Sri Lanka, headed by Mahinda Rajapakse is adament is adopting its genocidial policy towards tamils to eradicate them from the Island and not even listening calls from UN, an angry 15 year old particinat said. She further said that, New Zealand should stop all the assistance to Sri Lanka and pressurise it from using cluster shells ( Multi Barrel Artilaries ) and internationally banned Kfir Bomber Aircrafts, which recently killed hundreds of tamils.

Peace loving New Zealander from all walks of life extended their support to this vigil and it attracted huge support from people in the city & around cricket stadium. Vigil organisers issued photographic evidence of Sri Lankan genocide and people showed their shockness by witnessing the other face of Sri Lanka Government, sources said.

Sri Lankan Cricket Team comprised of 100% Sinhala ethinic majority except one Muttiah Muralitharan, who born and raised up with Sinhalese in South, couldnt respond to the protest and felt ashamed of their President Mahinda Rajapaksa's coward tactics to genocide tamils, sources said.

http://www.tamilbrisbane.com/content/view/356/1/

கட்டாயம் இப்படியான பிரச்சாரங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடிகளை கொடுக்கும்....

ஜரோப்பாவிலும் இப்படியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

அடிக்கடி 10.000 பேர் கூடி இலங்கை அரசுக்க்கு எதிராக ஊர்வலம் நடத்துவதை விட இப்படியான வித்தியாசமான பிரச்சாரங்கள் மக்கள் மனதை வெகுவாக போய் சேரும்.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.