Jump to content

கொங்கு முதலியார் மீன் குழம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13450805_1033334563380266_46907283344996

இந்த மீன் குழம்பை கொங்கு பகுதியில் வசிக்கும் முதலியார் சமுகத்து மக்கள் வீட்டில் மணக்க வைக்கும்.

அவர்கள் கூறுகையில் இந்த குழம்பு சாதத்துடன் கலந்து சாப்பிடுவதற்கு தேவாமிர்தம் போல் இருக்கும் என்றும் இன்னொரு தட்டு சாதம் சாப்பிடலாம் என்று தோன்றும்.

65 வயது உடைய ஆத்தா கூறுகையில் சூடான இட்லி வைத்து இந்த குழம்பை வைத்தால் இட்லி காலி ஆவதே தெரியாது.

இந்த குழம்பில் தேங்காய் இல்லாத காரணத்தால் அவ்வளவு சீக்கிரம் கெட்டு விடாது. குழம்பை சூடு செய்தாலே போதும்.

தேவையான பொருட்கள் 
மீன் 300 கிராம் 
எண்ணெய் 1/2 கப் 
கடுகு 1 தேக்கரண்டி 
சீரகம் 1 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி 
வெந்தயம் 1/4 தேக்கரண்டி 
பெருங்காயம் 1/4 தேக்கரண்டி 
கறிவேப்பிலை 1 கைப்பிடி 
தக்காளி 1 பெரியது ( பொடியாக நறுக்கியது )
கொத்தமல்லி தூள் 2 மேஜைக்கரண்டி 
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி 
பூண்டு 8 பற்கள் 
சின்ன வெங்காயம் 12
பச்சை மிளகாய் 5
காஷ்மீரி மிளகாய் தூள் 3 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி 
புளி 1 எலுமிச்சை அளவு 
உப்பு தேவையான அளவு 
தண்ணீர் 2 கப்

செய்முறை 
1. புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து புளி கரைசலை எடுக்கவும். நன்றாக பிழிந்து புளிச்சாற்றினை எடுக்கவும்.

2. இப்பொழுது மன் வடசட்டியை எடுத்து வைக்கவும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் , வெந்தயம் , கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

3. வடசட்டியில் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

4. பின்னர் வடசட்டியில் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அதில் மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு வதக்கவும்.

5. இந்த சமயத்தில் கழுவி வைத்துள்ள மீன் துண்டங்களை சேர்த்து இந்த மசாலா கலவையில் சேர்த்து கிளறவும்.

6. இப்பொழுது கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும் நன்கு கலக்கவும். பிறகு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

7. 5 நிமிடங்கள் கழித்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு சேர்த்து அரைத்து வடசட்டியில் இடவும். இப்பொழுது கொதிக்க விடவும்.

8. 15 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

 

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தா தோதாத்தான் சொல்லியிருக்கு...! ஆனால் இந்த மண்சட்டிதான் நெடுகிலும் இரவல் கேட்க சட்டியாலேயே அடிப்பாங்களோ என்னவோ...!  tw_blush:

Link to comment
Share on other sites

47 minutes ago, suvy said:

ஆத்தா தோதாத்தான் சொல்லியிருக்கு...! ஆனால் இந்த மண்சட்டிதான் நெடுகிலும் இரவல் கேட்க சட்டியாலேயே அடிப்பாங்களோ என்னவோ...!  tw_blush:

தெரிஞ்சவங்க யாராவது யாழ்பாண பக்கம் வந்தா சொல்லுங்கோ சொந்தமா ஒண்டு செய்விச்சே குடுத்து விடுறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஈரோப் குழம்பு மாதிரிக் கிடக்கே.

உங்க தேங்காய்பால் விடுறேல்ல. (சிலபேர் பால் விடுவினம்.)

மற்றப்படி உங்கத்தயான்தான். சட்டியும் இங்க இருக்கே இப்ப!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சுத்தமான,கலப்படமில்லாத தேன் வாங்கி அனுப்ப முடியுமா?

Link to comment
Share on other sites

6 minutes ago, ரதி said:

எனக்கு சுத்தமான,கலப்படமில்லாத தேன் வாங்கி அனுப்ப முடியுமா?

வன்னியில் இருக்கும் தெரிந்தவர்களை கேட்டு பார்க்கலாம். அப்படி எடுக்க முடிந்தால் சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜீவன்...இதற்கென மினக்கெட வேண்டாம்.கிடைத்தால் சொல்லவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

தெரிஞ்சவங்க யாராவது யாழ்பாண பக்கம் வந்தா சொல்லுங்கோ சொந்தமா ஒண்டு செய்விச்சே குடுத்து விடுறன்.

நன்றி ஜீவன். இங்கும் வாங்க முடியும். அதாவது காஸ் அடுப்பின் சூட்டையும் தாங்கக்கூடிய சட்டிகள்...! அது சும்மா சுமேயை இங்கு கூப்பிடத்தான் அப்படி...!! tw_blush:

 

Link to comment
Share on other sites

7 minutes ago, suvy said:

நன்றி ஜீவன். இங்கும் வாங்க முடியும். அதாவது காஸ் அடுப்பின் சூட்டையும் தாங்கக்கூடிய சட்டிகள்...! அது சும்மா சுமேயை இங்கு கூப்பிடத்தான் அப்படி...!! tw_blush:

 

நீங்கள் இன்னும் சட்டியில் நிற்கிறீர்கள்... சுமேரியர் பியர் வந்து இருக்காம்..:shocked: நான் நேற்று ஒரு பதிவு போட்டேன் பார்த்தீர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

நீங்கள் இன்னும் சட்டியில் நிற்கிறீர்கள்... சுமேரியர் பியர் வந்து இருக்காம்..:shocked: நான் நேற்று ஒரு பதிவு போட்டேன் பார்த்தீர்களா

இல்லையே...! எங்கு போட்டீர்கள்....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்...! அது பார்த்தனான்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எனக்கு சுத்தமான,கலப்படமில்லாத தேன் வாங்கி அனுப்ப முடியுமா?

கலப்படமில்லாத தேனுக்கு ஏன் அங்க போக வேணும்?

கூகிளில, உங்கட ஏரியாவில, தேனி வளர்ப்போர் அமைப்பு குறித்து தேடுங்கள்.

அவர்களது விபரத்தை எடுத்து, தொலைபேசியில் பேசி, நேரே போய் அவர்களது வீட்டிலே வாங்கலாம்.

விலை கூட.. ஆனால் கலப்படம் இல்லை. ஏனெனில் அவர்கள், சங்கத்தாலும், கவுண்சிலாலும் கண் காணிக்கப்படுபவர்கள்.

இலங்கையில்... கலப்படமில்லாமல் பெறுவது மிக, மிக கடினம்.

http://beefarmers.co.uk

British Bee Keepers Asociation: http://www.bbka.org.uk

வாங்கி, ஊருக்கும் அனுப்பலாம்.

Link to comment
Share on other sites

26 minutes ago, Nathamuni said:

இலங்கையில்... கலப்படமில்லாமல் பெறுவது மிக, மிக கடினம்.

உண்மை முனி சார். ஸ்கண்டிநேவிய நாடுகளில் சுத்தமான தேன் வாங்க முடியும். அங்கு கட்டுப்பாடுகள் அதிகமாகையால் இலங்கையில் வாங்குவதை விட நல்ல தேன் வாங்கலாம். ஆனாலும் சுவை வேறுபாடு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது உண்மை தான் நாதமுனி. ஆனால் இங்கு விலை கூட.அது தான் யோசிக்கிறேன்...நான் என்ன உங்கள மாதிரி பணக்காரியா £30,£40 சின்னப் போத்தல் தேன் வாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மை முனி சார். ஸ்கண்டிநேவிய நாடுகளில் சுத்தமான தேன் வாங்க முடியும். அங்கு கட்டுப்பாடுகள் அதிகமாகையால் இலங்கையில் வாங்குவதை விட நல்ல தேன் வாங்கலாம். ஆனாலும் சுவை வேறுபாடு உள்ளது.

சுவை வேறுபாடு எல்லாத்திலும் உள்ளது தானே.. ஊர் வெள்ளாடு, ஊர்க்கோழி... ஊர்மீன்..

1 minute ago, ரதி said:

நீங்கள் சொல்வது உண்மை தான் நாதமுனி. ஆனால் இங்கு விலை கூட.அது தான் யோசிக்கிறேன்...நான் என்ன உங்கள மாதிரி பணக்காரியா £30,£40 சின்னப் போத்தல் தேன் வாங்க

£30,£40 ??ஆ? 

அய்யோ கடவுளே... சும்மா அடிச்சு விடுறியளே அக்கோய்.

£6 £7 தான் வரும்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஹொலன்ட் அன்ட் பானட்டில் தான் பார்த்தேன்...நீங்கள் சொல்லுகின்ற மாதிரி உள் ஊர் வியாபாரிகளீடன் விசாரித்து விட்டு சொல்கிறேன்.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

நன்றி ஜீவன்...இதற்கென மினக்கெட வேண்டாம்.கிடைத்தால் சொல்லவும்.


ரதி தேனை இங்கு கொண்டுவர முடியாது. 

பிரித்தானியாவுக்கு வெளியில் இருந்து தேனை எடுத்துவர முடியாது. எனது நண்பர் ஒருவர் ஊரில் இருந்து தேனும் அங்கர் மாவும் கருவாடும் கொண்டுவந்தவர் அவரை வழிமறித்த சுங்க அதிகாரி இங்கு இவற்றை கொண்டுவரமுடியாது என்று கூறி ஒரு படிவத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டு தேன், அங்கர்மா, கருவாடு ,ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கின்றார்கள் அதுமட்டுமன்றி மீண்டும் இந்தகைய பொருட்கள் எடுத்துவந்தால் அவரதாமோ தண்டனையோ வழங்கப்படும் என எச்சரித்தும் விட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழரசு said:


ரதி தேனை இங்கு கொண்டுவர முடியாது. 

பிரித்தானியாவுக்கு வெளியில் இருந்து தேனை எடுத்துவர முடியாது. எனது நண்பர் ஒருவர் ஊரில் இருந்து தேனும் அங்கர் மாவும் கருவாடும் கொண்டுவந்தவர் அவரை வழிமறித்த சுங்க அதிகாரி இங்கு இவற்றை கொண்டுவரமுடியாது என்று கூறி ஒரு படிவத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டு தேன், அங்கர்மா, கருவாடு ,ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கின்றார்கள் அதுமட்டுமன்றி மீண்டும் இந்தகைய பொருட்கள் எடுத்துவந்தால் அவரதாமோ தண்டனையோ வழங்கப்படும் என எச்சரித்தும் விட்டனர்.

அப்படி தேனில்  என்ன இருக்கும் என்பதனை யோசித்துப் பார்ப்பான் வெள்ளைக்காரன் 

இலங்கையில் எங்கே இப்ப தேன் எடுக்கிற ஒரு காட்டு மரத்தில்

 நார் உரித்ததற்க்காக பொலிஸ் விசாரணைக்கு கூட்டி சென்ற தாக படித்த ஞாபகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி தமிழரசு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.