Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி உறுதியளித்த காலஅவகாசம் நிறைவு: இனி என்ன?

Featured Replies

ஜனாதிபதி உறுதியளித்த காலஅவகாசம் நிறைவு: இனி என்ன?
 
 

article_1466138721-maithripala120.jpg-எம்.றொசாந்த்

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதியன்று, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நலன்புரி முகாம் மக்களைச் சந்தித்து, 'உங்களை இன்னும் 6 மாத காலத்துக்குள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்வேன்' என உறுதியளித்த நிலையில், அந்த கால அவகாசம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் பூர்த்தியடைகின்றது.

இருப்பினும், வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றம், இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், 38 நலன்புரி நிலையங்களில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான காணிகளை, உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், முப்படையினர் தம்வசப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிசெம்பர் 20ஆம் திகதி நத்தார் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, நலன்புரி முகாம்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, 'முகாம் வாழ்க்கையை இன்னும் 6 மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து, உங்கள் அனைவரையும் சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுப்பேன்' என்று உறுதியளித்தார்.

அவர் கூறிச் சென்ற பின்னர் 701.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆனால் அவை, முகாம் மக்களின் காணிகள் இல்லையென்பதால் முகாம் மக்களின் வாழ்க்கை தொடர்ந்தும் நலன்புரி முகாம்களிலேயே தொடர்கின்றது.

இந்நிலையில், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள 38 நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்ற மக்கள், தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதை வலியுறுத்தி, கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் ஒவ்வொரு கிழமைக்கு ஒரு முகாம் என்ற ரீதியில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், முகாம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என மீண்டும் மார்ச் மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி அறிவித்தார். இதனையடுத்து, தங்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஜனாதிபதி உறுதியளித்த 6 மாதங்கள் வரையிலும் ஏற்பாட்டாளர்கள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், தங்கள் சொந்த நிலங்களுக்கு போக முடியாமல் போனால், தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வெள்ளைக் கொடிகளுடன் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் தங்கள் காணிகளுக்குச் செல்வோம் என முகாம் மக்கள் இதன்போது கூறினர்.

ஜனாதிபதி உறுதியளித்த 6 மாத காலம் முடிவடைகின்ற போதும், முகாம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் இன்னமும் மீளக்குடியேற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக நாளை 18ஆம் திகதி சனிக்கிழமையன்று ஜனாதிபதி, யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

இதன்போது, தனது 6 மாதகால அவகாசம் குறித்து கவனமெடுத்து, முகாம் மக்களுக்கு நியாயம் வழங்குவரா? என்பது தொடர்பில் முகாம் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கம் என்னும் இந்த அரசாங்கத்தின் காலத்தில், வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதுவரையில் 1739 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/174894/ஜன-த-பத-உற-த-யள-த-த-க-லஅவக-சம-ந-ற-வ-இன-என-ன-#sthash.1EcqdcqH.dpuf
  • தொடங்கியவர்

தேவதூதனாக கருதும் மக்களுக்கு, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவாரா ஜனாதிபதி ? மயூரப்பிரியன்:-

17 ஜூன் 2016
Bookmark and Share
 

 

தேவதூதனாக கருதும் மக்களுக்கு, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவாரா ஜனாதிபதி ? மயூரப்பிரியன்:-

 வலி.வடக்கில் இருந்து கடந்த 30 வருடகாலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப் படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனா வாக்குறுதி வழங்கி இருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி யாழில் தேசிய நத்தார் தின நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வுக்கு யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை அவர்களின் முகாமுக்கு சென்று சமையல் அறைக்கு சென்று அந்த மக்களை சந்தித்தார். அதன் போது அவர்களின் முகாம் வாழ்வு குறித்த கஷ்டங்களை கேட்டறிந்து கொண்டார்.

அதன் பின்னர் யாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற நத்தார் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் , தென்னிலங்கையில் விடுதிகளில் பத்திரிகையாளர் சந்திப்புகளை மேற்கொண்டு இனவாத கருத்துக்களை வெளியிடுவோர் இங்கு வந்து இந்த முகாம்களில் வாழும் மக்களின் அவலங்களை பார்க்க வேண்டும்.

அவர்கள் இங்கு வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். இந்த மக்கள் எதிர்வரும் ஆறு  மாத கால பகுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார்.

ஜனாதிபதி அந்த மக்களுக்கு கொடுத்த கால அவகாசம் எதிர்வரும் 20ம் திகதியுடன் முடிவடைகின்றன. அந்நிலையில் யாழில் உள்ள 38 நலன்புரி நிலையங்களில் இந்த ஆறுமாத கால பகுதியில் எந்த நலன்புரிநிலையமும் மூடப்படவில்லை.

அதேவேளை வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தற்போதும் ஜனாதிபதி மீதான நம்பிக்கையை கைவிடவில்லை.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தாம்இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் நிலையில்,  மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்தவொரு   ஜனாதிபதியும் தம் மீது அக்கறை கொள்ளாத நிலையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனா மாத்திரமே எம்மை எமது இடத்திற்கு தேடி வந்து, எமது வீட்டு சமையல் அறையில் உட்கார்ந்து எமது இன்னல்களை பொறுமையாக இருந்து கேட்டறிந்து கொண்டார்.

நத்தார் தின நிகழ்வில் வைத்து எம்மை ஆறு மாத காலத்திற்குள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவேன் என எமக்கு வாக்குறுதி தந்தார். நத்தார் தின நிகழ்வில் அவர் எமக்கு வழங்கிய  வாக்குறுதியை தேவ தூதன் எமக்கு கொடுத்த வாக்குறுதி போன்றே நம்புகின்றோம்.

ஜனாதிபதி எமக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கை எம்மை விட்டு இன்னும் அகழவில்லை இன்று  வரை நம்புகின்றோம்.

நாளைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்து புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை ஜனாதிபதி  திறந்து வைக்க உள்ளார்.  அதன்  பின்னர் எமது மீள் குடியேற்றம் தொடர்பில் ஏதேனும் நம்பிக்கை தரும் சமிக்சையை வெளிப்படுத்துவார் என வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றனர்.

அதேவேளை கடந்த இரு வாரத்திற்கு முன் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது " இந்த அரசாங்கம் வடக்கிலே இதுவரை எந்த காணிகளையும் தாம்  ஆட்சிக்கு வந்த பின்னர் விடுவிக்கவில்லை எனவும் , இதுவரை வலி. வடக்கு மற்றும் கிழக்கில்  விடுவிக்கப்பட்ட 1739 ஏக்கர் காணியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் மக்கள் மீள் குடியேற்றத்திற்கு என விடுவிக்க என அடையாளம் காணப்பட்ட காணிகளை தான் விடுவித்து உள்ளது . " என குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கடந்த 2ம் திகதி காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா , " 12 ம் திகதி (கடந்த 12ம் திகதி ) கூட்டமைப்பினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் காணி விடுவிப்பு மற்றும்  மீள்குடியேற்றம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. அதில் நிச்சயமாக நல்ல முடிவு எட்டப்படும் எனும் நம்பிக்கை எமக்கு உண்டு. அவ்வாறு நல்ல முடிவு எட்டப்படவில்லை எனில் பாரிய போராட்டம் வெடிக்கும் " என உரையாற்றி இருந்தார்.

மாவை சேனாதிராஜா குறிப்பிட்ட 12ம் திகதி முடிவடைந்து ஐந்து நாட்களை கடந்து விட்ட நிலையிலும் குறித்த சந்திப்பு தொடர்பிலும், எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பிலும் எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ள ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா , இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு நல்லொதொரு  முடிவை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது.

தேவதூதனாக கருதி நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி நாளைய தினம்  காப்பாறுவாரா ?

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133203/language/ta-IN/article.aspx

தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குவதும், காலத்தை கடத்துவதும், மக்களை ஏமாற்றுவதும் சிங்கள-பௌத்தர்களின் இரத்தத்தில் ஊறிய குணம்.  

  • கருத்துக்கள உறவுகள்

கால அவகாசம் நிறைவடைந்தால் இன்னொரு கால அவகாசத்தை குடுக்கிறதுதானே..?! அதுதானே வாடிக்கை?!

  • கருத்துக்கள உறவுகள்

60 வருட கால அவகாசத்தை தமிழ் மக்கள் எடுத்தவர்கள் இன்னுமொரு கால அவகாசத்தை எடுப்பார்கள்.அப்புட்டு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, போல் said:

தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குவதும், காலத்தை கடத்துவதும், மக்களை ஏமாற்றுவதும் சிங்கள-பௌத்தர்களின் இரத்தத்தில் ஊறிய குணம்.  

ஏன் எங்கடை எம்பிமார் ஏதோ பெரிய திறமே? எதுக்கெடுத்தாலும் சும்மா அனுங்கிக்கொண்டு திரியுங்களே தவிர அங்கை ஒரு கோதாரியும் இல்லை.கொஞ்ச நஞ்சமில்லை....அறுபது வருசமாய் உதுதானே நடக்குது  schimpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.