Jump to content

குட்டிக் கதைகள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் தொங்கு பாலத்தை கடக்க முயல்கின்றனர். தந்தை சொல்கிறார், என் கையை கெட்டியா புடிச்சிக்கோ"' மகள் சொல்கிறாள், "நீங்க என் கையை புடிச்சிக்கோங்க" 'ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்" என தந்தை கேட்கிறார். "நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் பதட்டத்தில் கையை விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. ஆனால் நீங்கள் பிடித்தால் எந்தவொரு நிலையிலும் என் கையை விட மாட்டிங்கப்பா" என்றாள் மகள்..'

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • Replies 226
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அன்புத்தம்பி

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

தமிழ் சிறி

இணையத்தில், ரசித்த...  குட்டிக் கதைகள். ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதா

தமிழ் சிறி

படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • கருத்துக்கள உறவுகள்

Elderly-couple GIFs - Get the best GIF on GIPHY

இதுதான்... கணவன், மனைவி தாம்பத்திய  உறவு.

#May be an image of slow loris and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

நான், உனக்கு... சொன்ன வேலையை மட்டும் நீ பார்.

ஒருவர் மூன்று அடிக்கு... ஒரு பள்ளம் என, தோண்டிக் கொண்டு வந்தார். 
பின்னாடி வந்தவர் அதை மூடிக் கொண்டே வந்தார்.
இதை ஒரு பெரியவர் வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்தார்.
இருவரையும் பார்த்து பெரியவர் கேட்டார் என்னப்பா செய்கிறீர்கள்  
எனக்கு எதுவும் புரியலை என்றார்.

அதற்கு அவர்கள் சொன்னார்கள்
அரசாங்க வேலை நடக்குது,

அதுதான் எனக்கு புரியலை புரியும்படியாக சொல்லுங்க என்றார்.
மரக்கன்று நடும் வேலை நடக்குது 

இதுக்கு  வேலை செய்ய நாங்க 3 பேர் இருந்தோம்
1நபர் பள்ளம் தோண்ட வேண்டும்
2நபர் செடி நட வேண்டும்
3நபர் பள்ளம் மூட வேண்டும்

இன்று செடி நடு பவர் வரவில்லை
நான் மேலதிகாரிகளிடம் சொன்னேன்
அதுக்கு அவர் சொன்ன பதில்...
"நான் உனக்கு சொன்ன வேலையை மட்டும் நீ பார் 
அடுத்தவர்களைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்" 

- தென்கச்சி கோ சுவாமிநாதன். -

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம் அந்தம்மாவுக்கு பூசணிக்காய்மேல வந்துச்சாம். வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் முற்றும்பார்த்திட்டு அந்த னக்காரர்பறிச்சுகிட் வீட்டுக்கு போய் குழம்பு வச்சு சாப்பிட்டாங்களாம் ஊரில் அரசால்புரசலாக ணக்காரர்பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் ககொள்ளஆரம்பித்தார்களாம் தைமறைக்க எல்லோரையும் அழைத்து வடைபாயசத்துடன்சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம்... Namma இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடிமிருப்பார் இருக்கவே இருக்காது" என்று பேசிக் கொண்டார்களாம் இதுதான் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை!!! සිහර’

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, suvy said:

ஓ... இதுவா.... முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதை. 😂

பூசனிக்காயா, பூசணிக்காயா... தமிழ் அறிஞர்களை மேடைக்கு அழைக்கின்றோம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ஓ... இதுவா.... முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதை. 😂

பூசனிக்காயா, பூசணிக்காயா... தமிழ் அறிஞர்களை மேடைக்கு அழைக்கின்றோம். 🙂

52,900+ Butternut Squash Or Pumpkin In Vegetable Garden Stock Photos,  Pictures & Royalty-Free Images - iStock

இது பூசனி .....!  😴

Pumpkin - Vegetable Seeds | Wild Roots

இது பூசணி .......!  (இதுதான் சரி..... 2க்கும் பாவிப்பது)........!   😂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள்.
"ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி.
"சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?" என கேட்டாள்.
"சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. முதல் வியாபாரம் உனக்குத்தான்மா, சரி தாறேன்......
கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்," என்றார் அவ் முதிர்ந்த பாட்டி.....
தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் வாழைப்பூக்களை வாங்கிக் கொண்டாள்.
பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள்.
அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர்.
சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
பில் தொகை ரூபாய் 1200/-, அவள் ரூபாய் 1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்," என்றாள்.
ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணம் விஷயம். ஆனால் வாழைப்பூ விற்ற பாட்டிக்கு வலி மிகுந்த விஷயம்.
இதில் உற்றுநோக்க வேண்டியது....
"நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தை காட்டுகிறோம். பணக்காரர்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்!!"
தயவு செய்து ஏழைகளிடம் பேரம் பேசாதீர்கள்.......
படித்ததில் பிடித்தது.......!

Peut être une image de 1 personne

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Raj Sathish  ·   · 
 
🌷 ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.
🌷 "இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!"
🌷 மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.
🌷 இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.
🌷 ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்..
🌷 ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’
🌷 இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.
🌷 ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,
🌷 ‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’
🌷 வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது.
🌷 டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம். சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.
🌷 நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம்.
🌷 ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...
‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’
🌷 எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும், சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்!!!.....!
Peut être une image de 1 personne et henné
  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Suggestions
 
Variety of images  · 
Rejoindre
 
Sriram Govind  ·   · 
 
நாகர்கோவிலிலிருந்து மெளன்டன்வியூ வந்து இன்றைக்கு இரண்டு மாதமாகிறது. ஆனால், இருபது வருடங்கள் ஆனதுபோல் மன இறுக்கம். அறுபதே நாளில் எப்படித் தலைகீழாக என் வாழ்க்கை மாறிவிட்டது?
பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல் ரசவடை, லட்சுமி தியேட்டர் தரை டிக்கெட் சினிமா என்று சிறுவயது வாழ்க்கை. அப்புறம் மணிமேடை ஜங்ஷனில் இருக்கும் போஸ்ட் ஆஃபீசில் கிளார்க் வேலை. மாமா மகள் சரோஜாவோடு கல்யாணம். கறிவேப்பிலைக் கொழுந்தாக மகன் மணி. படிப்பில் படு சுட்டி. சென்னை ஐ.ஐ.டி.யில் எஞ்சினீயரிங் படித்தான். அமெரிக்காவில் மேற்படிப்பு. அங்கேயே தங்கிவிட்டான். தங்கமான பையன். நாங்கள் பார்த்துவைத்த தூரத்து சொந்தக்காரப் பெண் கலாவோடு திருமணம். இரண்டு பேரும் கூகிள் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். ஆதித் என்று நான்கு வயது மகன், இரண்டு வயது மகள் ஆத்யா. இருவரும் டே கேர் போகிறார்கள்.
மணி குடும்பத்தோடு வருடாவருடம் எங்களைப் பார்க்க வருவான். ஒவ்வொரு தடவையும், அவனும், கலாவும் அமெரிக்காவுக்கு வரும்படி சொல்லுவார்கள். சரோஜா அழகாகப் பதில் சொல்லுவாள், "நீங்க செடியாக இருக்கறப்ப அமெரிக்கா போய்ட்டீங்க. அங்கே வேரூன்ற முடிஞ்சுது. நாங்க மரம்டா, அறுபது வயசு மரம். எங்களைப் பிடுங்கி நடாதே. இந்த ஊரைவிட்டு எங்களால் வரவே முடியாது."
மகராசி, சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அவளால் முடிந்தது. இந்த வருஷம், அவளுக்கு அறுபது வயசுப் பிறந்த நாள். நாகராஜா கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பினோம். அசதியாக இருக்கிறது என்று படுத்தாள். நெஞ்சு வலித்தது. என் மடியில் படுத்துக்கொண்டே போய்விட்டாள். "நாம் யாருக்குமே கெடுதல் நெனைச்சது கிடையாது. அதனால், நமக்கு அநாயச மரணம்தான் வரும் உங்களுக்கு அப்புறம்தான் நான் போகணும். ஏன் தெரியுமா? காப்பிகூட உங்களுக்குப் போடத் தெரியாது, திண்டாடித் திணறிடுவீங்க" என்று அடிக்கடி சொல்லுவாள். அவள் பாதிப் பிரார்த்தனை பலித்துவிட்டது. அநாயசமாகப் போய்விட்டாள். நான் மாட்டிக்கொண்டேன்.
மணி வந்தான். காரியங்கள் முடிந்தன.
"அப்பா, நீங்க எங்களோட அமெரிக்கா வர்றீங்க."
"நான் பக்கத்துத் திருவனந்தபுரம் தவிர, தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கேயும் போனதே கிடையாதே? எப்படிடா வருவேன்? என்னை விட்டுடு."
"உங்களைத் தனியா விட்டுப் போகமாட்டேன். நீங்க வந்தே ஆகணும்."
"ரெண்டு நாள் தா. ஆலோசிச்சுச் சொல்றேன்."
பால்ய சிநேகிதன் ஹரியோடு பேசினேன். அவன் சொன்னான், "நம்ம ஊர்ல என்னடா இருக்கு? நம்ம வயசுக்காரங்கள்லே நாமும், சாமிநாதனும்தான் மிச்சம். இந்தக் காலத்துல பசங்க அப்பா, அம்மாவை வெச்சுக் காப்பாத்தறதே ஆச்சரியம். உனக்கு, மகன், மருமகள் ரெண்டு பேருமே பிரியமாக் கூப்பிடறாங்க. தயங்காமப் போயிடு."
மணிக்கும், கலாவுக்கும் ஒரே சந்தோஷம். "யூ ஆர் கமிங் வித் அஸ் தாத்தா" என்று ஆதித் கட்டிக்கொண்டான். என்னவென்றே புரியாமல் குழந்தை ஆத்யாவும் Huggy தந்தாள்.
ஆமாம், அறுபத்து ஐந்து வயது மரம், தன் வேர்களைப் பெயர்த்துக்கொண்டு அமெரிக்காவில் வேரூன்ற முடிவெடுத்துவிட்டது. ஹரி, பழையாறு, நாகராஜா கோவில், மணிமேடை ஜங்ஷன் எல்லாத்துக்கும் டாட்டா சொன்னேன். நாகர்கோவிலுக்குத் திரும்பிவருவேன் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
அமெரிக்கா வந்துவிட்டேன். மணியும், கலாவும் எனக்காக லீவு எடுத்திருந்தார்கள். ஆதித், ஆத்யா டே கேர் போகவில்லை. நாள் முழுக்க அரட்டை, குழந்தைகளோடு விளையாட்டு. பெரிய வீடு. சுற்றிலும், சிகப்பு, வெள்ளை, மஞ்சள் எனப் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள். ஒவ்வொரு பூவும் பெரிசு பெரிசாய்… நாகர்கோவில் கலைவாணர் பூங்காவில்கூட இத்தனை தினுசு இத்தனை பெரிசு கிடையாது. வீட்டின் பின்புறம், பிள்ளைத்தாய்ச்சி போல் ஆரஞ்சு, ஆப்பிள் மரங்கள். ரோஜாக்களைத் தொட்டுத் தடவுவேன். ஆப்பிளை மரத்திலிருந்து பறித்துச் சாப்பிடுவேன். அனுபவம் புதுமை. அமெரிக்கா சொர்க்கமாக இருந்தது.
இரண்டு வாரங்கள் ஓடின. மணி சொன்னான், "அப்பா, நாளை முதல் நானும், கலாவும் ஆபீஸ் போகணும். ஆதித், ஆத்யாவுக்கும் கிரெஷ் ஸ்டார்ட்டிங்."
மறுநாள் காலை. ஆறு மணிக்கே வீடு அல்லோல கல்லோலப்பட்டது. பச்சைக் குழந்தைகளை அரைத் தூக்கத்தில் எழுப்பினார்கள். ஏழரை மணிக்கு எல்லோரும் ரெடி. காலையில் மணி குழந்தைகளை டே கேரில் விடுவானாம், மாலை ஆறு மணிக்குக் கலா கூட்டிக்கொண்டு வருவாளாம். இப்படிப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளும் ஏற்பாடு.
புறப்படும்போது மணி சொன்னான், "அப்பா, இந்த ஏரியா பத்திரமானதுதான். ஆனால், நாம் ஜாக்கிரதையா இருக்கணும்."
"அப்படீன்னா…!"
"யாராவது கதவைத் தட்டினா திறக்காதீங்க. நான் சன் டிவி, ஜெயா டிவி, ஹீரோ டாக்கீஸ் கனெக்‌ஷன் எல்லாம் வாங்கியிருக்கேன்."
எப்படி டி.வி. போடுவது, சினிமா பார்ப்பது என்றெல்லாம் விளக்கினான். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் போய்விட்டார்கள். நான் மட்டும் தனியாய். ஒரே நிசப்தம். என்னை அறியாமலே மனம்முழுக்கப் பயம். வாழ்க்கையில் இத்தனை நிசப்தத்தை நான் அனுபவித்ததே கிடையாது. ஒழுகினசேரியில், குழந்தைகள் விளையாட்டு, அக்கம் பக்கப் பெண்களின் அரட்டை, ஆண்களின் அரசியல் விவாதங்கள், டிவி அலறல் என்று கிராமமே அதிரும். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். ரோட்டில் கார்கள்கூட அதிகம் காணவில்லை. மனிதர்களே இல்லாத அத்துவானக் காட்டில் என்னை யாரோ விட்டுப்போனதுபோல் வெறுமை.
வயிறு பசித்தது. டேபிள்மேல் காலைக்கு இட்டிலி, மதிய உணவு, ஃபிளாஸ்க் நிறையக் காப்பி. மருமகள் கலா அன்போடு சமைத்துவைத்துப் போயிருந்தாள். எனக்கு ஒரு குணம். தானாகவே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடுவது நான் வெறுக்கும் சமாச்சாரம். இதற்கு முக்கிய காரணம் என் தர்மபத்தினி சரோஜாதான். கல்யாணம் ஆகும்வரை அம்மா பரிமாறுவாள். அப்புறம் அத்தனை நாளும் சரோஜாதான். சில கல்யாணங்களில் பஃபே விருந்து இருக்கும். அங்கேயெல்லாம் சரோஜாவே தட்டில் போட்டு எனக்குத் தந்துவிடுவாள்.
இட்டிலி சாப்பிடத் தொடங்கினேன். நானே எடுத்துச் சாப்பிடும்போது, ஒவ்வொரு விள்ளலும் தொண்டைக்குக் கீழ் இறங்க மறுத்தது. டிவி போட்டேன். அதுவும் போரடித்தது. படுத்தேன். என்னை அறியாமலே தூங்கிவிட்டேன். மதியம். கடனே என்று சாப்பாடு.
சாயந்தரம் வந்த கலா பதறிவிட்டாள்.
"மாமா, நீங்க சாப்பிடவேயில்லையே? உப்பு, காரம் ஏதாவது அதிகமாகப் போட்டுட்டேனா? உங்க உடம்பு சரியா இருக்கில்ல?"
"இல்லம்மா. உன் சமையல் சூப்பர். என் உடம்பும் நல்லாத்தான் இருக்குது. ஏதோ ஊர் நினைப்பு."
கலா அப்புறம் மணியோடு வந்து பேசினாள்.
"உங்களுக்கு போரடிக்குதுன்னு நினைக்கிறேன். ஸில்வன் பார்க் பக்கத்தில்தான் இருக்குது. நடக்கிற தூரம்தான். இந்தச் சனி, ஞாயிறு உங்களைக் கூட்டிட்டுப் போய்க் காட்டறேன். நீங்க தினமும் சாயந்தரம் போகலாம்."
சனி, ஞாயிறு போனேன். நிறைய இந்தியக் குடும்பங்கள். ஆதித், ஆத்யாவோடு பந்தைத் தூக்கிப்போட்டு விளையாடினேன். ஜாலியான நேரங்கள்.
தினமும் ஸில்வன் பார்க் போகத் தொடங்கினேன். ஒரே ஒரு பிரச்சனை. வீட்டைப் பூட்டினோமா என்று சந்தேகம். இழுத்து, இழுத்துப் பார்ப்பேன். சாவியைப் பத்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறோமா என்று மனசு வேகமாக லப், டப் அடிக்கும். அடிக்கடி சட்டைப் பாக்கெட்டைச் செக் பண்ணிக்கொள்வேன். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன், டென்ஷன்.
அமெரிக்காவில் காலெடுத்து வைத்தாலே வாழ்க்கை எந்திரகதி ஆகிவிடும் போலிருக்கிறது. திங்கள் டு வெள்ளி டிவி, ஸில்வன் பார்க்: சனி, ஞாயிறு சன்னிவேல் கோவில், காஸ்ட்கோ போய் மளிகைச் சாமான்கள், நம்மூர் ஹோட்டலில் சாப்பாடு.
இரண்டு மாதத்தில் அமெரிக்கா வெறுத்துவிட்டது. அதிலும், ஸில்வன் பார்க்கில் பெரும்பாலும் வருபவர்கள் இந்தி, தெலுங்குக்காரர்கள். ஆங்கிலம் தெரிந்தாலும், இந்தி, தெலுங்கு பேசினார்கள். எனக்கு இரண்டுமே சுட்டுப்போட்டாலும் புரியாது, வராது. ஒரு வயதான தமிழ்த் தம்பதியைப் பார்த்தேன். சிரித்தேன். பதிலுக்குச் சிரித்தார்கள். ஹலோ சொன்னேன். ஹலோ சொன்னார்கள். அப்புறம், நான் பக்கத்தில் நிற்பதையே மறந்துவிட்டு, அவர்களுக்குள் பேசத் தொடங்கினார்கள். நான் நகர்ந்தேன்.
பார்க் கிரவுண்டில் நான் போகும்போதெல்லாம் சின்னப் பையன்கள் ஸாக்கர் விளையாடுகிறார்கள். அதைப் பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு. அதேநேரம், மனக்குரங்கு எங்கெங்கோ அலைபாயும். வேலை வெட்டி இல்லாத மூளை சாத்தானின் கூடாரமாகும். அமெரிக்கா வந்ததே தப்போ, நாகர்கோவிலிலேயே இருந்திருக்கலாமோ, மணியும், கலாவும் என்னைக் கூட்டிக்கொண்டு வந்தது உண்மையாகவே என்மீது இருக்கும் பாசத்தாலா, அல்லது ஆதித், ஆத்யாவுக்கு விளையாட்டுப் பொம்மையாகவா? இப்படி நினைத்த சில நிமிடங்களிலேயே, இப்படிக் கீழ்த்தரமாகச் சிந்திக்கிறோமே என்று என்னையே திட்டிக்கொள்வேன்.
ஒரு வாரமாக ஒரு புதுப்பையன் வருகிறான். ஒன்பது, பத்து வயசு இருக்கலாம். பளிச் முகம். சூம்பிப்போன கால்கள். போலியோ பாதிப்பு. ஊன்றுகோல்களோடு மெள்ள நடந்து வருவான். உடையைப் பார்த்தால், அதிகம் வசதி உள்ளவனாகத் தெரியவில்லை. ஸாக்கர் மைதானம் அருகே ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். தன்னால் விளையாட முடியவில்லையே என்னும் சோகம் அவனுக்குள் நிச்சயம் இருக்கவேண்டும். அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்ப்பான். ஆனால், ஏதோ தயக்கம் தெரியும். என்னிடம் பண உதவி எதிர்பார்க்கிறானோ? எதற்கும், கவனமாக இருப்பது நல்லது.
இன்று அந்தப் பையன் என்னருகே வந்தான்.
"தாத்தா, நீங்க தமிழா?"
"ஆமாம். ஏன்? நீ தமிழா?"
"ஆமாம். நான் உங்க பக்கத்திலே உட்காரலாமா? உங்ககூடக் கொஞ்சம் பேசணும்."
என் மனக்குறளி சொன்னது, "இந்தப் பயல் டாலர்தான் கேட்கப் போறான்."
"தாத்தா, என் பேரு கண்ணன். எங்க ஊரு தர்மபுரி."
"சேலம் பக்கத்தில் இருக்கிற ஊர்தானே?"
"ஆமாம். எங்க அப்பா ரொம்பக் குடிப்பாரு. என் மூணு வயசுலேயே இறந்து போயிட்டாரு. அம்மாதான் என்னை வளத்தாங்க. போன வருஷம், ஒரு கார் விபத்தில் அவங்க உயிர் போயிடிச்சு. ராமகிருஷ்ண மடம் சாமிகள் என்னைக் கூட்டிட்டுப் போய்ப் படிக்கவெச்சாங்க. அங்கே சாமிக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா வந்தாங்க. அரசாங்க அனுமதி வாங்கி என்னைக் கூட்டிட்டு வந்திருக்காங்க. நல்லாப் பாத்துக்கறாங்க. வீட்டிலே இங்கிலீஷ் சொல்லித் தர்றாங்க. சீக்கிரமே ஸ்கூல்லே சேப்பாங்க. நான் நல்லாப் படிச்சுப் பெரிய ஆளா வருவேன்."
"ஆசீர்வாதம் தம்பி."
"நன்றி தாத்தா. எனக்கு உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும். தப்பா நினைக்க மாட்டிங்களே?"
ஒருவழியாப் பயல் பணந்தான் கேட்கப் போறான்.
"சொல்லுப்பா."
"நீங்க எப்பவும் ஏன் சோகமா உட்கார்ந்திருக்கீங்க?"
"ஏதோ நெனைப்புகள் தம்பி."
"தாத்தா. நான் அநாதை. கால் நடக்கமுடியாது. ஆனால், ராமகிருஷ்ண மடம் சாமியார் என்னைக் கிராமத்திலிருந்து கூட்டிட்டுப் போனது என் அதிர்ஷ்டம். சாந்தி அம்மா அமெரிக்காவுக்கு அழைச்சு வந்தது என் அதிர்ஷ்டம். இதை நெனச்சு, நெனச்சு, நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?"
"நெஜமாவா? எப்படிடா?"
அந்தப் பொடியன் என் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். அவனை, என்னிடம் காசுக்குக் கையேந்தி வருகிறவனா நெனைச்ச நானெல்லாம் ஒரு மனுஷனா!
"ராமகிருஷ்ண மடம் சுவாமிஜி எனக்கு ஒரு கதை சொன்னார். மனசுலே வருத்தம் வர்றப்போ எல்லாம், அந்தக் கதையை நினைவுபடுத்திக்கச் சொன்னார்."
"என்னப்பா கதை அது?"
"ரொம்ப நாள் முன்னாடி, ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தீராத தலைவலி. வைத்தியர்கள் வகை வகையா மருந்து கொடுத்தும் குணமாகலே. ஒரு ஜோசியர் வந்தார். ராஜா பச்சை நிறத்தை மட்டும் பாத்துக்கிட்டேயிருந்தா தலைவலி போயிடும்ன்னு சொன்னார். நாடு முழுக்கப் பச்சைப் பெயிண்ட் அடிச்சாங்க. நாட்டில் எல்லோரும் பச்சை டிரெஸ் மட்டுமே போடலாம்னு கட்டளையிட்டாங்க. ஆனா, குதிரை யானை, வானம் நிறங்களை மாற்ற முடியுமா? இவற்றை ராஜா சிலசமயம் பார்த்துவிடுவார். தலைவலியால் துடிப்பார். ராஜாவுக்குத் தெனாலிராமன் மாதிரி ஒரு விகடகவி. ஒரு சுலபவழி சொன்னார், நீங்க பச்சைநிறக் கண்ணாடி அணியுங்க. அப்புறம் நீங்க எதைப் பாத்தாலும், தலைவலி வராது. ராஜா அதைப் பின்பற்றினார். அவர் தலைவலி போயே போச்."
நான் பிரமிப்பில். சந்தோஷம் வெளியில் இருந்து வருவதில்லை. நமக்குள்தான் இருக்கிறது. நம் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால், இனியெல்லாம் சுகமே என்னும் தத்துவம் இந்தக் குட்டிக்கதைக்குள்ளா?
"தாத்தா. லேட் ஆகுது. சாந்தி அம்மா தேடுவாங்க. வீட்டுக்குப் போறேன். நாளைக்குக் கட்டாயம் உங்க கதையைச் சொல்லுங்க."
ஊன்றுகோல்களின் டொக் டொக் சப்தம். திரும்பிப் பார்த்துக்கொண்டே போகிறான். எனக்குள் பிரம்மாண்டக் கேள்வி - இவன், வெறும் தர்மபுரிக் கண்ணனா, அல்லது கீதோபதேசக்காரரின் மறுபிறவியா?
வீட்டுக்கு வருகிறேன். என் நடையில் என்னை அறியாமலே, ஒரு துள்ளல். மணி வந்தவுடன், கலா அவனிடம் மெள்ளச் சொல்கிறாள், "ரொம்ப நாளைக்கு அப்புறம், மாமா இன்றைக்குச் சந்தோஷமா இருக்கார்."
நான் மகனிடம் போகிறேன்.
"மணி, பொழுதை வீணாக் கழிக்க எனக்குப் பிடிக்கலே. எங்கேயாவது பார்ட் டைம் வாலன்டியரா ஒர்க் பண்ண முடியுமா?"
"என் ஃபிரண்ட் முகுந்த் நிறைய சோஷியல் ஒர்க் பண்றான். அவன்கிட்டே சொன்னா, உடனே ஏற்பாடு பண்ணுவான். அது சரி, திடீர்னு ஏன் உங்களுக்கு இந்த யோசனை?"
சத்தியமான பதில் என்னை அறியாமலே வரத் துடிக்கிறது, 'நான் கண்ணாடியை மாத்திட்டேன்!'
இதைச் சொன்னால் மணிக்குப் புரியாது. வெளியே வரத்துடிக்கும் வார்த்தைகளை விழுங்குகிறேன். சிரிக்கிறேன். அப்பனுக்கும், மகனுக்குமிடையே புன்முறுவல்கள் ஆயிரமாயிரம் சேதிகள் சொல்லும்......!
 
Peut être une image de 2 personnes, personnes souriantes et temple
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சுவி அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
Wife:- :ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்..
Husband ்:::எவ்வளவு வேணும்?..
Wife:- 10000 ரூவா வேணும்..
Husband :- - இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி..
Wife:- சொல்லுங்க..
Husband :- - ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..
Wife:- போட்டேங்க..
Husband :- - உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
Wife:- ம்..போட்டேங்க..
Husband : - உடம்பு சரியில்லாம இருக்க உன் சொந்தக்காரன்,வர
ுஷக்கணக்கா இழுத்துட்டு கெடக்குற உன் தாத்தானுக்கு எல்லாம் ஆப்பிள்,ஆரஞ்சுனு கலர் கலரா அடிக்கடி வாங்கிட்டு போயி கொடுக்குறீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..
Wife:- ம்ம்..போட்டேங்க..
Husband :- - உன் மொகர கட்டைக்கு பேஷியல் பண்றேன்,தலைக்கு கலரிங் அடிக்கிறேன்னு மாசம் ரெண்டு தடவை பியூட்டி பார்லர் போறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
Wife:- ம்ம்ம்..போட்டேங்க..
Husband : - நீ பார்க்கு,பீச்சு,சினிமானு சுத்தனும்கிறதுக்காக நம்ம பையனை உசுப்பி விட்டு வீக்கெண்ட் ஆனா என்னை கூட்டிட்டு போயி அங்க தண்டம் வெக்குறீல்ல..அந்த வகைல ஒரு 4000 ரூவா போடு..
Wife:- ம்ம்ம்ம்..போட்டேங்க..
Husband :- - எங்க அம்மா கூட உனக்கு சண்டை வர்றப்ப எல்லாம் உப்பையும்,காரத்தையும் அதிகமா போட்டு அவங்களை அப்பப்போ ஹாஸ்பிட்டல் அனுப்புறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
wife :- ம்ம்ம்ம்ம்..போட்டேங்க..
Husband : - பத்து பைசா பிராயஜனம் இல்லாத பிரச்சனைக்கு எல்லாம் தாம்தூம்னு குதிச்சு என்னை டென்ஷன் பண்ணி டாஸ்மாக் பக்கம் தலை தெறிக்க ஓட விடுறீல்ல.. அந்த வகைல ஒரு 2500 ரூவா போடு..
Wife:- ம்ம்ம்ம்ம்ம்..போட்டேங்க..
Husband : - மொத்தம் எவ்வளவு ஆச்சு?..
Wife:- 15000 ரூவா..
Husband :- நீ என்ன சம்பளம் எதிர்பார்த்த?..
wife:- 10000 ரூவா..
Husband :- - இப்போ அந்த மீதி 5000 ரூவாய கரெக்ட்டா 1 ந்தேதிலருந்து 5 ந்தேதிக்குள்ள உங்கொப்பன் வீட்டுலருந்து வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுக்குற..
😂😂😂😜😜😜
ஆத்தி great escape டா சாமி
 
Peut être une image de 1 personne, sourire et texte
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2023 at 10:30, suvy said:
Suggestions
 
Variety of images  · 
Rejoindre
 
Sriram Govind  ·   · 
 
நாகர்கோவிலிலிருந்து மெளன்டன்வியூ வந்து இன்றைக்கு இரண்டு மாதமாகிறது. ஆனால், இருபது வருடங்கள் ஆனதுபோல் மன இறுக்கம். அறுபதே நாளில் எப்படித் தலைகீழாக என் வாழ்க்கை மாறிவிட்டது?

இது குட்டிக் கதையா பாஸ்.😆ஆனாலும் நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Variety of images  · 
Rejoindre
 
Reena Mayekar  ·   · 
 
தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...
திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...
மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..
சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.
புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..
''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.''.கத்துகிறாள் மனைவி.
''என்னது எதிர்த்தா பேசுகிறாய்.''அவள் மேல் துப்புகிறான்
''என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..''அலற துவங்குகிறாள் மனைவி..
தெனாலி ராமன் வீட்டீல் என்ன பிரச்சனை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..
''என்ன தெனாலிராமா இது '' கேட்கிறார்க்ள..
''பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ''எனகிறான்தெனாலிராமன்...
திருடன் பிடிபடுகிறான்....
சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை....
திருடன் பிடிபட்டது இருக்கட்டும் ...
அவன் போனதுக்கு அப்புறம்
தெனாலிராமன் அலறத் துவுங்குகிறான்
யாரும் கண்டுக்கல....
எனவே சமயோசித புத்தி சம்மசாரத்திடம் செல்லாது என்று காலங் காலமாய் உணர்த்துகிறது இந்தக் கதை...😛😛......
 
Peut être une image de 2 personnes et personnes souriantes
 
இதில் யார் தென்னாலிராமனின் மனைவி என்று கேட்கக் கூடாது........!  😂
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:
 
இதில் யார் தென்னாலிராமனின் மனைவி என்று கேட்கக் கூடாது........!  😂

இரண்டு பேரும் இருக்கச் சந்தர்ப்பம் இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2023 at 12:56, suvy said:

இப்போ அந்த மீதி 5000 ரூவாய கரெக்ட்டா 1 ந்தேதிலருந்து 5 ந்தேதிக்குள்ள உங்கொப்பன் வீட்டுலருந்து வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுக்குற..

நீதிபதி என்னவோ இங்கே சொல்லியிரிக்கிறார்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
நடிகர் நாகேஷ்
தத்துவ மொழிகள்...
ரம்மி சீட்டுக்கட்டில் வெளிப்பக்கம் ஒரே மாதிரி டிசைன்கள் போல தான் மனிதர்கள்.
சீட்டை திருப்பி உள்ளே பார்த்தால் தான் தெரியும்....கிளாவர் எது ,ஹாட்டின் எது, ஸ்பேடு எது ,டைமண்ட் எது, ஜோக்கர் எது என்று....அது போல தான் மனிதர்களின் சுயரூபங்களும்.!
தேவை இல்லாத விஷயங்களில் தலையிட்டால் ஆட்டத்தில் 14வது சீட்டைப் போல தூக்கி எறியப்படுவீர்கள்...!
பிறருக்காக வாழ்பவன் வாழ்க்கை மெதுவாகத்தான் போகும்.ரோடு ரோலர் வண்டி போல.!
சுயநலம் உள்ளவன் வாழ்க்கை மிக வேகமாக போகும்.ஆடி கார் போல.!
வேகமாக செல்லும் ஆடி காரினால் மற்றவர்களுக்கு எந்த பயனும் இல்லை.!
மெதுவாக செல்லும் ரோடு ரோலர் தான் மக்கள் அன்றாடம் செல்லும் பாதையை சரி செய்கிறது.!
ஒருவன் ரோடில் நடந்து போய்க் கொண்டிருந்தான்.போகும் வழியில்
காலில் ஏதோ தட்டுப்பட்டது.!
அது ஒரு முழு தேங்காய்.அவன் அதை
எட்டி உதைத்து விட்டு போய்க்கொண்டு இருந்தான்.!
அவனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு புத்திசாலியின் காலில் அதே தேங்காய் தட்டுப்பட்டது. அவன் தேங்காயை எடுத்து இரண்டாக உடைத்து இளநீரை குடித்தான். !
அந்த தேங்காயை நன்றாக துருவி வீட்டில் பாயாசத்தில் போட்டு விட்டு இரண்டு தேங்காய் ஓடுகளையும் ரோட்டில் தூக்கி எறிந்தான்.!
அந்த இரண்டு தேங்காய் ஓடுகளும் இன்னொரு அதி புத்திசாலியின் கையில் கிடைத்தது.!
அவன் அந்த இரண்டு தேங்காய் ஓடுகளையும் இரண்டு அகப்பைகளாக செய்து பத்து ரூபாய் பெறுமானமுள்ள தேங்காயை 20 ரூபாயக்கு விற்று முதலீடு ஆக்கிக் கொண்டான்.!
இப்போது தன்னைப் பிரிந்த தேங்காயை இந்த பாயாசத்தில் முக்கி எடுக்கும் போது அகப்பை சந்தித்துக் கொண்டது.!
இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
நடிகர் நாகேஷ்.
Voir la traduction
Peut être une image de 2 personnes, flûte et texte
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2023 at 09:46, suvy said:

இதில் யார் தென்னாலிராமனின் மனைவி என்று கேட்கக் கூடாது

ஓம் கேட்கமாட்டோம்.  ஆனால் தெ.  .....ராமன்   நீங்கள் தான்    🤣 சரியா..?...பிழையா  ? நல்ல கதை   வாழ்த்துக்கள்  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Suggestions
ஸ்ராத்தச்சாப்பாடு நாளும் வந்தது.
விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார்.
பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.
1008 காய்கறிகள் இல்லை.*
*விஸ்வாமித்திரர் கோபத்துடன்
"என்ன இது?
1008 வகை காய்கள் எங்கே?"
என்று வஸிஷ்டரை வினவினார்.
அவரோ
"நான் அருந்ததியிடம் சொல்லி விட்டேனே!
அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்"
என்றார்.*
*இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த உலகம்போற்றும் உத்தமி அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு,
"இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே!" என்றாள்.*
*விஸ்வாமித்திரர் வாயடைத்துப் போனார்.
பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி விட்டுப்போனார்.
அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன?
*காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்*
*பனஸம் ஷட் ஸதம்சைவ* *ஸ்ரார்த்தகாலே விதீயதே*
*कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं*
*पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते*
*"ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம்,
பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம்,
பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் என்று பாடல் கூறுகிறது.*
*ஆயிரம் காய்கள் ஆயிற்றா?
மீதி இலையில் எண்ணிப்பாருங்கள்,
எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன்.
ஆக மொத்தம் 1008! " என்றாள்......!
Peut être une image de 1 personne et temple
 
பண்டைய காலத்து மனைவியரும் இன்றைய காலத்து மனைவியர் போல் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்திருக்கிறார்கள்.......!  😂
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி அருந்ததி பார்க்க விடக் கூடாது.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே வியந்து பொறாமைப் பட்டு பொருளாதாரத்தில் உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜோப்ஸ் உடல்நலம் குன்றி தனது 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி:
வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.
நோயுற்று மரண படுக்கையில் இருக்கும் நான் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன்.
பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. அதனால் எந்த வித பயனும் இல்லை.
உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க, உங்கள் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் செய்ய எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.
ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வேதனைகளையும் வலிகளையும் பயத்தையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம், உடல் நலம் தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது.
வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று உறுதி சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு திரை விழலாம். அழைப்பு வரலாம்.
நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முடிந்தால் அதற்குள் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள், அதற்கும் இறைவன் அருள் வேண்டும்.
செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆறடி நிலம் கிடைக்காமல் நாறிப்போனவர்கள் எத்தனையோ.
ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மன மகிழ்ச்சி , மன நிம்மதி.
தங்கத்தை பூட்டி வைத்தாய்
வைரத்தை பூட்டி வைத்தாய்
உயிரை பூட்ட ஏது பூட்டு ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Variety of images  · 
Rejoindre
 
Venkatesan Lakshmi  ·   · 
 
இல்லம் - சுஜாதா சிறுகதை
அம்மா போய் எட்டு வருஷமாகி விட்டது. அப்பாவுக்கு வயது எழுபத்து ஐந்து நெருங்கி விட்டது. அவரை யார் வைத்துக் கொள்வது என்பதில்தான் எங்களுக்குள் முரண்பாடு. நான் ராஜாராமன். இருப்பது அஷோக் நகர். இரண்டு ரூம் ஃப்ளாட்டில். இரண்டு குழந்தைகள். மனைவி. அவள் அப்பா வேறு. அப்பாவுக்கு ஒத்து வரவில்லை.
அண்ணா சாமாவிடம் அப்பா தாராளமாக இருக்கலாம். ஆனால் அண்ணா தினம் தினம் தண்ணியடித்துவிட்டு வருவதும், வீட்டுக்குள்ளேயே சிகரெட் பிடிப்பதும், சிக்கன் சாப்பிடுவதும், குழந்தைகளின் பாப் சங்கீதமும், கணவன் மனைவிக்குள் சதா சண்டை வருவதும் , இதை விட தினம் மன்னி அப்பாவிடம் " இந்த மாதிரி பிள்ளையை வளர்த்திருக்கேளே " என்று சொல்லிக் காட்டுவதும் அப்பாவுக்குப் பிடிக்கலே !
தம்பியிடம் இருக்கலாம். அவனுக்கு இப்போதுதான் கல்யாணமாயிருக்கிறது. அவன் இருப்பது ஆர்மி குவார்ட்டர்ஸ்ல.
அந்தப் பெண் பஞ்சாபிப் பெண். தினம் இருவருக்கும் ஊர் சுற்ற வேண்டும். அந்தப் பெண் பேல் பூரி பாவ் பாஜி , பானி பூரி , பிட்ஸாவிலேயே உயிர் வாழ்பவள். அவளைப் போய் ரஸம் வை , சாம்பார் வை , தொகையல் அரை என்று சொன்னால் சரிப்பட்டு வரவில்லை.
அதோடு அப்பாவுக்குக் கட்டில் சப்தம் தாங்காது.
இதனால் என்ன செய்வது என்று நாங்கள் யோசித்ததில் அப்பாவே எங்களைக் கூப்பிட்டு "எத்தனை நாள் நான் இருப்பேன் என்று தெரியாது. ( அப்படியெல்லாம் சொல்லாதீங்க அப்பா ) . உடல் ஆரோக்கியமா இருக்கற வரை நான் ஒரு நல்ல ஹோமில் சேர்ந்துகொள்கிறேன். எனக்கு வரும் பென்ஷனில் வட்டிப் பணம் என் செலவுகளுக்குப் போதும். இதைப் பற்றி உங்களுக்கு எந்த விதக் குற்ற உணர்வும் வேண்டாம். உங்கள் மேல் எனக்கு எந்தவித வருத்தமோ வெறுப்போ கிடையாது " என்றார்.
அப்பாவுக்கு ஊருக்கு வெளியே ஒரு எஸ்டேட் இருந்தது. அதை விற்று விடுவதைப் பற்றிப் பேச்செடுத்தோம். அது பற்றி அப்புறம் பேசுவோம் என்றார்.
அப்பா சுக சாந்தி என்னும் ஹைகிளாஸ் முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். ஊருக்கு வெளியே தாம்பரம் தள்ளி இருந்தது. அடிக்கடி போய்ப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அதைத் தவிர அவருக்கு ஏகப்பட்ட வசதிகள் அங்கே. 15 நாட்களுக்கு ஒரு முறை அவரிடமிருந்து கடிதம் வரும். அண்மையில் வருவதில்லை.
தற்செயலாக அண்ணா சாமா அப்பாவின் நிலம் பற்றி விசாரித்தான். அங்கே ஏதோ ஃபாக்டரி வருவதால் கோடிக்கணக்கில் போகும் என்றான்.
மேலும் அவன் "என்ன அப்பாவைப் போய்ப் பார்க்க வேண்டாமா ராஜா? இப்படி முதியோர் இல்லத்தில் கேட்பாரற்று விட்டுவைத்தால் எப்படி? மயிலாப்பூரிலே நான் இருக்கும் கட்டடத்திலேயெ ஒரு ஃப்ளாட் விலைக்கு வரது. அதை வாங்கி அப்பாவை அங்கே வைத்துக் கொள்வதுதான் உசிதம். கடைசி காலத்தில் தாம்பரத்தில் அவருக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிவிட்டால்? சில நாளா லெட்டர் வேற வரவில்லை. அந்த நிலத்தை என்ன பண்ணப் போறார்னும் தெரியவில்லை " என்றான்.
கடைசியில் நாங்கள் எல்லோரும் கால் டாக்ஸி எடுத்துக் கொண்டு அப்பாவைப் பார்க்கப் போனோம்.
பாதை கரடு முரடாய் இருந்தது. டாக்ஸி போய்க்கொண்டே இருந்தது.
குதித்துக் குதித்து ஒரு வழியாய்ப் போய்ச் சேர்ந்தோம்.
அப்பாவைச் சேர்க்கும்போது இருந்ததை விட இப்போது ரொம்ப மாறியிருந்தது. நிறைய மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன. காம்பவுண்டுக்குள் ரோடு சுத்தமாக இருந்தது. உபதேச வாசகங்கள் கம்பத்துக்குக் கம்பம் எழுதி வைத்திருந்தார்கள். ( ஆரோக்கியம்தான் ஆனந்தத்தின் அடிப்படை. )
நிசப்தமாக இருந்தது. கதவை மூடினதும் காலம் நின்று போனது போல் இருந்தது. டாக்ஸியை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம். உள்ளே நெருங்கியபோது இல்லத்தில் ஒரு விழாப் போல எங்கும் தோரணம் கட்டி , டேப்பில் இனிமையாக, சப்தம் குறைவாக நாயனம் வாசித்துக் கொண்டிருக்க......
அப்பாவின் அறைக்குச் சென்றபோது அவருக்கு ஒரு பெண்மணி புது வேஷ்டி அணிவித்துக் கொண்டிருந்தாள்.
அப்பா எங்களைப் பார்த்துப் புன்னகைத்தார். "வந்துட்டாங்களா ? லோச்சு , தீஸ் ஆர் மை சன்ஸ்....லெட்டர் கிடைச்சுதா ?"
"என்ன லெட்டர் ?"
"நான் கொடுத்த லெட்டரைப் போஸ்ட் பண்ணினியோ? லெட்டர் போட்டிருந்தேனே கிடைக்கலை? என்ன தபால் இலாகாவோ ? போன் வேறு ஒரு வாரமா வேலை செய்யல."
பட்டு வேஷ்டியை இடுப்பில் மூன்று சுற்று சுற்றிக் கட்டிக் கொண்டு இருந்தார். மூஞ்சி தெளிந்து இன்னும் 15 வருஷத்துக்குத் தாக்குப் பிடிப்பார் போல் தெம்பாக இருந்தார்.
"என்ன லெட்டர்ப்பா ?"
"என்னை இந்த இல்லத்திலே பரிவாப் பார்த்துண்ட சுலோசனாவை இன்னிக்கிக் கல்யாணம் பண்ணிக்கிறேன். இவளுக்கும் மூணு பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கா. இனிமே இவதான் எல்லாம். இவளுக்குத்தான் எல்லாம்."
எங்கள் திறந்த வாயில் " ஸ்வீட் சாப்பிடுங்க " என்று ஆளுக்கொரு ஜிலேபி விள்ளலை லோசனா செலுத்தினாள்......!
Peut être une image de 1 personne et sourire
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Pushpa Rani  ·   · 
 
#கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........
#கணவன் பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி.
#பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரைத் தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை.
#பாலைத் தனியே காட்டும் குணம் தண்ணீருக்கும் இல்லை.
#தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும்.
#பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் ஊற்ற தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.
#ஒரு_வேளை அப்படித் தண்ணீர் தெளிக்கப் படவில்லை எனில் பால் பொங்கி எழுந்து எரிந்து கொண்டிருக்கும் அடுப்பையே அனைத்துவிடும்.
#கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.
#புரிந்து கொள்ளும் காலம் தான் வாழ்க்கையின் வசந்தகாலம்.....
#எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.❤️🌹❤️🌹
Peut être une image de 2 personnes et fleur
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nadigarthilagam Fans  · 
Rejoindre
 
Baskaran Rajarethinam  ·   · 
 
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
ஒருநாள் நாகேஷூடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு பற்றி பேச்சு வந்தது.
“யோவ் ராஜேஷ், சிவாஜி வீடு மாதிரி ருசியா நான் எங்கேயுமே சாப்பிட்டதில்லையா? அவர் மனைவி கமலாம்மாவுக்கு சமையலில் ஓர் பி.எச்டி. பட்டமே கொடுக்கலாம்” என்று சிலாகித்தார்.
“அப்படி என்ன நடந்தது?” என்று கேட்டேன்.
ஒருநாள் சிவாஜியும், நாகேஷூம் ஷூட்டிங் முடிந்து புறப்பட்டபோது, அதிகாலை 3 மணி. அப்போது சிவாஜி, “நாகேஷ், நீ மிகவும் சோர்வாக இருப்பது போல் தெரிகிறது. எங்க வீட்டிற்கு வந்து சூடா இரண்டு தோசை சாப்பிட்டு போ” என்று அழைத்தார்.
“எப்படி பார்த்தாலும் சிவாஜி வீட்டிற்கு செல்ல 4.30 மணி ஆகும். ரெண்டும்கெட்டான் நேரத்தில் எப்படி சாப்பிடுவது?” என்று நினைத்தாலும், சிவாஜி அழைத்ததால் மறுக்காமல் சென்றார் நாகேஷ்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து புறப்படும்போதே மனைவிக்கு போன் செய்து, நாகேஷூடன் வருவதாக சிவாஜி சொல்லிவிட்டார்.
காலை 4.30 மணிக்கு இருவரும் சாப்பிட அமர்ந்தனர். கமலாம்மா சூடான தோசையை பரிமாற, அதை ரசித்து ருசித்து சாப்பிட்டிருக்கிறார் நாகேஷ்.
இதை அவர் என்னிடம் சொல்லும் போது,
“ராஜேஷ்.. அந்தம்மா அந்த நேரத்தில் எழுந்து சட்னி அரைத்து, திருநெல்வேலி தோசை என்று சொல்லுவோமே.. அதுபோல குட்டி தோசைகள் இரண்டு வைத்து தேங்காய் சட்டினியை ஊற்றினார்கள்.
சட்டினியைத் தொட்டு வாயில் வைத்தேன். என்னய்யா ருசி. இரண்டுங்கெட்டான் நேரம்.. பசியே இல்லாத சமயம்.. ஆனாலும் ஐந்தாறு தோசைகள் சாப்பிட்டேன். அப்படியொரு சட்னியின் சுவையை நான் எங்கேயும் சாப்பிட்டதில்லை” என்றார்!
நன்றி: நடிகர் ராஜேஷின் ‘மனதில் நின்ற மனிதர்கள்’ என்ற நூலிலிருந்து......!
 
May be an image of 2 people and people smiling
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Velocity S  ·   · 
 
குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார்.
அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.
இப்போதெல்லாம் *அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை !
*அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !*
நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.
பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள்.
ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார்.
எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.
குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.
உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள்.
எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.
*எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்!*
*பெரிய தொகைதான்,
இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.
இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.*
இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது.
10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை.
இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான்.
பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள்.
அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான்.
வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார்.
போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.
*புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் .
அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான்.*
அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.
*அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான்.
அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார்.
வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?
பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே.
கல்லு மாதிரி இருந்தீங்களே !
உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.*
"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " .
*அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.*
மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.
*" ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் .
நான் உங்க தீவிர ரசிகன்.
இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.
அதுல சந்தேகமே இல்லை.
ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? "* என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.
*'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது.*
போட்டி துவங்கும் நேரம் வந்தது.
பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர்.
அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.
*" என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? "* என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் .
அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.
போட்டி துவங்கியது .
அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும்
*இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.*
இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.
எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் .
*அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.*
பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது.
*பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால் !*
*உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில்
மிருகபலத்தோடு இருப்போம்.!*
*பிறரின் வார்த்தைகளால்
பயப்படவும் வேண்டாம்
பலவீனப்படவேண்டாம் .......!
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.